என் மலர்
நீங்கள் தேடியது "Teenager arrested வாலிபர் கைது"
- நேற்று முன்தினம் மாலை தனது மொபட்டில் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் உள்ள பேக்கரி கடையில் திண்பண்டங்கள் வாங்க சென்றனர்.
- திண்பண்டங்கள் வாங்கி விட்டு திரும்பி வந்து பார்த்தபோது வண்டியை காணவில்லை.
அன்னதானப்பட்டி:
சேலம் மாவட்டம் மல்லூர் தாசநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் நேற்று முன்தினம் மாலை தனது மொபட்டில் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் உள்ள பேக்கரி கடையில் திண்பண்டங்கள் வாங்க சென்றனர். அப்போது கடை முன்பு மொபட்டை நிறுத்தி இருந்தார். திண்பண்டங்கள் வாங்கி விட்டு திரும்பி வந்து பார்த்தபோது வண்டியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கம், அருகில் உள்ள இடங்களில் தேடியும் எங்கும் வண்டி கிடைக்கவில்லை. யாரோ மர்ம நபர்கள் நோட்டமிட்டு வண்டியை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து வசந்தகுமார் மனைவி புவனா ( 35) அளித்த புகாரின் பேரில் அன்ன தானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சூரமங்கலம், பனங்காடு அருகே உள்ள ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (38) என்பவர் மொபட்டை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். போலீசார் விசாரணையில் அவர் மாநகரில் பல்வேறு மோட்டார் சைக்கிள், மொபட்டுகளை திருடி விற்று, அதில் கிடைக்கும் பணத்தில் மது குடித்து விட்டு, ஊர் சுற்றி வந்தது தெரியவந்தது.
- குகை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
- இவரை கடந்த 7-ந் தேதி அதே பகுதியைச் சேர்ந்த அங்குராஜ் மகன் சூர்யா (வயது 21) என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியைச் சேர்ந்த தம்பதியின் 16 வயது மகள், இவர் குகை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவரை கடந்த 7-ந் தேதி அதே பகுதியைச் சேர்ந்த அங்குராஜ் மகன் சூர்யா (வயது 21) என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த சிறுமியின் தாயார் சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியை மீட்டதுடன் சூர்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேற்று முன்தினம் இரவு வேலை விஷயமாக வெளியே சென்று விட்டு வந்து வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார்.
- சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை அங்கு காணவில்லை.
அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி, சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் குமார் ( வயது 35). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை விஷயமாக வெளியே சென்று விட்டு வந்து வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை அங்கு காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கம், அருகில் உள்ள இடங்களில் தேடியும் எங்கும் வண்டி கிடைக்கவில்லை. யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் நோட்டமிட்டு வண்டியை திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.அதில் தாதகாப்பட்டி, திருச்சி மெயின் ரோடு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். இதையடுத்து விரட்டி சென்ற போலீசார் அவரைப் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். போலீசார் தீவிர விசாரணையில், அவர் தாதகாப்பட்டி கேட், அம்மாள் ஏரி ரோடு பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் (19) என்பதும், மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
- நேற்று மாலை சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
- மணிகண்டன் (வயது 27) என்பவர், மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்து கொண்டிருந்தார்.
சேலம்:
சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவார் கோகிலா. இவர் நேற்று மாலை சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது சேலம் பொன்னம்மாப்பேட்டை தாண்டவம் நகர் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி மகன் மணிகண்டன் (வயது 27) என்பவர், மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணி–யாமல் வந்து கொண்டிருந்தார். இதைக்கண்ட சப்-இன்ஸ்பெக்–டர் கோகிலா, அவரை நிறுத்தி ஏன் ஹெல்மெட் அணியவில்லை என்று கேட்டுள்ளார்.
இதற்கு மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் கோகிலாவுடன் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அரசு ஊழியரை பணி செய்யப்படாமல் தடுத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், மணி–கண்டனை கைது செய்தனர்.
- கோவிந்தன் என்பவரின் குடும்பத்திற்கும் நிலபிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
- மாற்றுதிறனாளி தங்கையை கோவிந்தனின் மகன் செல்வமணி (24) தகாத வார்த்தையால் திட்டி அடித்து காயப்படுத்தியதாக தெரிகிறது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள செம்மண் கூடல் காலனி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பொண்ணு (வயது 44). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் குடும்பத்திற்கும் நிலபிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று சின்னபொண்ணுவின் மாற்றுதிறனாளி தங்கையை கோவிந்தனின் மகன் செல்வமணி (24) தகாத வார்த்தையால் திட்டி அடித்து காயப்படுத்தியதாக தெரிகிறது.
இதுபற்றி செல்வமணி மீது சின்னபொண்ணு தாரமங்கலம் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வமணியை கைது செய்தனர்.
- நாமகிரிப்பேட்டை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட அழியாக்குழந்தைபுதூர் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மனைவி நல்லம்மாள் (வயது 85). இவர் தனியாக வசித்து வருகிறார்.
- நித்திய ராஜவேலன் (27) என்ற கூலித் தொழிலாளி, மூதாட்டி நல்லம்மாளிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட அழியாக்கு ழந்தைபுதூர் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மனைவி நல்லம்மாள் (வயது 85). இவர் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சம்ப வத்தன்று, அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் நித்திய ராஜவேலன் (27) என்ற கூலித் தொழிலாளி, மூதாட்டி நல்லம்மாளிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு மூதாட்டி மறுக்கவே நித்திய ராஜவேலன் மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததார். காயம் அடைந்த நல்லம்மாள், நாமக்கல் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் இது பற்றி நல்லம்மாள் நாமகிரிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீ சார், நித்திய ராஜவேலன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பிறகு அவரை ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ராசிபுரம் கிளை சிறைச்சா லையில் அடைத்தனர்.
- சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே நாயக்கம்பட்டி கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது.
- இந்த முகாமில் உள்ள வாலிபர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே நாயக்கம்பட்டி கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் உள்ள வாலிபர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அகதிகள் முகாமில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அதே முகாமை சேர்ந்த சிவராஜா என்பவரது மகன் செந்தூரன்(வயது 21) கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.






