என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த வாலிபர் கைது
- நேற்று மாலை சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
- மணிகண்டன் (வயது 27) என்பவர், மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்து கொண்டிருந்தார்.
சேலம்:
சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவார் கோகிலா. இவர் நேற்று மாலை சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது சேலம் பொன்னம்மாப்பேட்டை தாண்டவம் நகர் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி மகன் மணிகண்டன் (வயது 27) என்பவர், மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணி–யாமல் வந்து கொண்டிருந்தார். இதைக்கண்ட சப்-இன்ஸ்பெக்–டர் கோகிலா, அவரை நிறுத்தி ஏன் ஹெல்மெட் அணியவில்லை என்று கேட்டுள்ளார்.
இதற்கு மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் கோகிலாவுடன் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அரசு ஊழியரை பணி செய்யப்படாமல் தடுத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், மணி–கண்டனை கைது செய்தனர்.






