என் மலர்
உள்ளூர் செய்திகள்

மொபட் திருடிய வாலிபர் கைது
- நேற்று முன்தினம் மாலை தனது மொபட்டில் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் உள்ள பேக்கரி கடையில் திண்பண்டங்கள் வாங்க சென்றனர்.
- திண்பண்டங்கள் வாங்கி விட்டு திரும்பி வந்து பார்த்தபோது வண்டியை காணவில்லை.
அன்னதானப்பட்டி:
சேலம் மாவட்டம் மல்லூர் தாசநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் நேற்று முன்தினம் மாலை தனது மொபட்டில் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் உள்ள பேக்கரி கடையில் திண்பண்டங்கள் வாங்க சென்றனர். அப்போது கடை முன்பு மொபட்டை நிறுத்தி இருந்தார். திண்பண்டங்கள் வாங்கி விட்டு திரும்பி வந்து பார்த்தபோது வண்டியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கம், அருகில் உள்ள இடங்களில் தேடியும் எங்கும் வண்டி கிடைக்கவில்லை. யாரோ மர்ம நபர்கள் நோட்டமிட்டு வண்டியை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து வசந்தகுமார் மனைவி புவனா ( 35) அளித்த புகாரின் பேரில் அன்ன தானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சூரமங்கலம், பனங்காடு அருகே உள்ள ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (38) என்பவர் மொபட்டை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். போலீசார் விசாரணையில் அவர் மாநகரில் பல்வேறு மோட்டார் சைக்கிள், மொபட்டுகளை திருடி விற்று, அதில் கிடைக்கும் பணத்தில் மது குடித்து விட்டு, ஊர் சுற்றி வந்தது தெரியவந்தது.






