என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
- அணையின் நீர்மட்டம் இன்றும் 103.52 அடியாக நீடிக்கிறது. தற்போது 239 நாளாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக உள்ளது.
சேலம்:
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. தொடர் மழை காரணமாக அணை நிரம்பியது. பின்னர் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்ததால் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 1,500 கன அடியாக நீடிக்கிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1224 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 1373 கன அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் இன்றும் 103.52 அடியாக நீடிக்கிறது. தற்போது 239 நாளாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக உள்ளது.






