என் மலர்
உள்ளூர் செய்திகள்

45 சென்ட் அரசு நிலம் மீட்புஅதிகாரிகள் நடவடிக்கை
- வாய்க்கால் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக, வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
- பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 45 சென்ட் அரசு நிலத்தை மீட்டனர்.
எடப்பாடி:
எடப்பாடி அருகே அரசிராமணி ஒடசக்கரை பகுதியில் பொதுப்பணித்துறை வாய்க்கால் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக, வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சங்ககிரி தாசில்தார் பானுமதி உத்தரவின் பேரில் தேவூர் வருவாய் ஆய்வாளர் சத்தியராஜ் தலைமையில் கிராம நிர்வாக அலுவலகர் ஸ்ரீதர், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் விஜயராகவன் உள்ளிட்டோர் அங்கு சென்று, பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 45 சென்ட் அரசு நிலத்தை மீட்டனர்.
Next Story






