அம்மன் கோவிலில் திருட்டுமர்ம நபர்கள் கைவரிசை

அம்மாப்பேட்டையில் பிரசித்தி பெற்ற குஞ்சு காளியம்மன் கோவில் உள்ளது. நள்ளிரவில் நோட்டம் போட்டு அவற்றை மர்ம நபர்கள் திருடியிருப்பது தெரிய வந்தது.
அம்மன் கோவிலில் திருட்டுமர்ம நபர்கள் கைவரிசை
Published on

சேலம்:

சேலம் அம்மாப்பேட்டையில் பிரசித்தி பெற்ற குஞ்சு காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரி நேற்று கோவிலில் பூஜை முடித்து விட்டு கதவை பூட்டி விட்டு சென்றார். பின்னர் இன்று காலை வந்து பார்த்தபோது அம்மனின் சூலாயுதம், கலசம் திருடு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நள்ளிரவில் நோட்டம் போட்டு அவற்றை மர்ம நபர்கள் திருடியிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து பூசாரி, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார். அம்மாப்பேட்டை சுப்பிரமணிசாமி கோவில் அறநிலைய துறை செயல் அதிகாரி விமலா, அங்கு வந்து கோவிலில் நடந்த ெகாள்ளை குறித்து விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com