என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 74 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை
- மிட்டாய் தருகிறேன் என்று கூறி செல்வராஜ், சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.
- சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் செல்வராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் மேட்டுப்பாளையம் லத்துவாடி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 74). இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை வைத்து உள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி 8 வயது சிறுமி மிட்டாய் வாங்க பெட்டிக்கடைக்கு சென்றாள்.
அப்போது மிட்டாய் தருகிறேன் என்று கூறி செல்வராஜ், சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதுகுறித்து ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் செல்வராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கு சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் செல்வராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.
மேலும் ஆயுள் தண்டனை பெற்ற செல்வராஜை கோவை மத்திய ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி போலீசார், அவரை அழைத்துச் சென்று கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.






