கடன் தொல்லையால் டீ மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை

சேலம் லைன்மேடு மெகபூப் நகர் பகுதியில் டீ மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கடனை கட்ட முடியததால் மனமுடைந்த காதர்கான் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடன் தொல்லையால் டீ மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

சேலம்:

சேலம் லைன்மேடு மெகபூப் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பஷீர்கான். இவரது மகன் காதர்கான் (வயது 23). இவர் லைன்மேடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். வேலை முடிந்து டீக்கடை மாடியில் இருக்கும் அறையில் தங்குவது வழக்கம்.

நேற்று வழக்கம் போல் வேலை முடிந்து அறைக்கு சென்று தங்கி உள்ளார். இன்று காலை வெகு நேரம் ஆகியும் கடைக்கு வராததால் சந்தேகம் அடைந்த கடையின் உரிமையாளர் அறைக்கு சென்று பார்த்த போது அங்கு காதர்கான் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது பற்றி அவர், உடனடியாக அன்ன தானப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் காதர்கானுக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள், பணத்தை அடிக்கடி கேட்டு, தொல்லை கொடுத்தனர். கடனை கட்ட முடியததால் மனமுடைந்த காதர்கான் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com