என் மலர்tooltip icon

    சேலம்

    • சேலம் அம்மாப்பேட்டை மற்றும் ஆட்டையாம்பட்டி பகுதியில் முத்ரா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடைகள் செயல்பட்டு வந்தன.
    • சேலம் பொரு ளாதார குற்றப்பிரிவு அலு வலகத்தில் புகார் கொடுக்க லாம் என போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை மற்றும் ஆட்டையாம்பட்டி பகுதியில் முத்ரா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த 2 கடைகளிலும் நகைகள் வாங்குவதற்கு சுலப மாத தவணை ரூ.500 முதல் ரூ.2 லட்சம் வரை கட்டும் திட்டம், பழசுக்கு புதுசு திட்டம் மற்றும் தங்க முன்பதிவு திட்டங்கள் இருப்பதாகவும், முதிர்வு காலங்கள் முடிந்தவுடன் தங்க நகைகள் திருப்பி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    புகார்

    இந்த திட்டத்தில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மரப்பரை தென்னமரத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 52) என்பவர் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். ஆனால் முதிர்வு காலம் முடிந்த பிறகு முதலீடு ரூபாய், அல்லது அதற்கான தங்க நகை கொடுக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த விஜயகுமார் சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

    தங்க நகை திட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந்தேதி எனது பெயரில் முதல் மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் 9 மாதங்கள் ரூ.90 ஆயிரம் முத்ரா ஜூவல்லர்ஸ் கடை உரிமையாளர் முருகவேல் கணக்கில் செலுத்தினேன். மேலும் 2 மாதம் ரூ.20 ஆயிரம் நேரடியாக கட்டினேன்.

    மேலும் நான் திருச்செங்கோட்டில் வைத்திருந்த வீட்டு மனை நிலத்தை விற்று அந்த பணத்தை எஸ்.எம். கோல்டு ஸ்வர்ண விருட்ஷா தங்க முன்பதிவு திட்டத்தில் சேர்ந்து அதில் மாதம் மாதம் ரூ. 2 லட்சம் வீதம் 10 மாதங்களுக்கு ரூ. 20 லட்சம் கட்டினேன். தொடர்ந்து நெக்லஸ் செய்வதற்காக ரூ.10 லட்சம் கட்டினேன். ஆனால் முதலீடு செய்த பணத்தையும், நகையையும் திருப்பி தரவில்லை.

    இதனால் விஜயகுமார் ஆட்டையாம்பட்டியில் முத்ரா நகைக்கடையில் சென்றபோது, அந்த நகைக்கடை பூட்டப்பட்டு இருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது கடை உரிமையாளர்கள் முருக வேல், அவரது மனைவி கலைவாணி இருவரும் உன்னைப்போல் பல பேர்க ளிடம் நகை சீட்டில் பணத்தை வாங்கி ஏமாற்றி விட்டு ஓடி விட்டார்கள் என கூறி னார்கள். இதனால் நான், முருகவேல் வசிக்கும் அம்மாப்பேட்டையில் உள்ள வீட்டிற்கு சென்றேன். அங்கும் அவர் வீடு பூட்டியிருந்தது.

    பிறகு நான் தொலை பேசியில் அவர்களை தொடர்பு கொண்டபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு பல இடங்களில் தேடி பார்த்தபோது அவர்களை கண்டுபிடிக்க முடிய வில்லை. முருகவேல், கலை வாணி ஆகியோர் தலை மறைவாகி விட்டார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.

    அதன்பேரில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், முத்ரா ஜூவல்லர்ஸ் நகைக்கடை உரிமையாளர்கள் முருக வேல் மற்றும் இவரது கலைவாணி ஆகியோர் மீது 120 (பி), 420 ஐ.பி.சி. மற்றும் டி.என்.பி.ஐ.டி. சட்ட பிரிவு 5 உள்ளிட்ட பிரிவுகளின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட பொது மக்கள் சம்பந்தப்பட்ட அனைத்து அசல் ஆவ ணங்கள், அடையாள அட்டையுடன் சேலம் பொரு ளாதார குற்றப்பிரிவு அலு வலகத்தில் புகார் கொடுக்க லாம் என போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.

    • நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு சாகுபடி நேரத்தில் உதவும் வகையில் பிரதமரின் விவசாய உதவித் தொகை திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
    • இத்திட்டத்தின் கீழ் 3 தவணையாக தலா 2000 வீதம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

    சேலம்:

    நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு சாகுபடி நேரத்தில் உதவும் வகையில் பிரதமரின் விவசாய உதவித் தொகை திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 3 தவணையாக தலா 2000 வீதம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

    இதற்கென தனி இணைய தளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதில், முறையான ஆவணங்களு டன் விண்ணப்பிப்பவர் களுக்கு உதவித்தொகை நேரடியாக வங்கி கணக்கில் விடுவிக்கப்படுகிறது.

    தமிழகத்தில் மொத்தம் 48.9 லட்சம் விவசாயிகள் உதவித்தொகை கேட்டு பதிவு செய்துள்ளனர். ஆனால் 13-வது தவணை யில் 20.29 லட்சம் விவசாயிகளுக்கு மட்டும் உதவித்தொகை கிடைத்தது. ஆதார், வங்கி கணக்கு உள்ளிட்ட ஆவணங்களை முறையாக பதிவேற்றம் செய்யாததால் தகுதியுள்ள விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் 14-வது தவணை உதவித்தொகை வருகிற 30-ந்தேதி மத்திய அரசு விடுவிக்க உள்ளது. இந்த தவணையில் தமிழகத்தை சேர்ந்த 63,233 விவசாயிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சேலத்தில்...

    பிரதம மந்திரியின் இந்த திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 10-ந் தேதி மோட்டார் சைக்கிளில் பள்ளப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, நிலை தடுமாறு கீழே விழுந்தார்.
    • இதில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ண மூர்த்தியை அக்கம் பக்கத்தி னர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் செவ்வாய் பேட்டை நாகையன் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 65). இவர் கடந்த 10-ந் தேதி மோட்டார் சைக்கிளில் பள்ளப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, நிலை தடுமாறு கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ண மூர்த்தியை அக்கம் பக்கத்தி னர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ண மூர்த்தி, நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாப மாக உள்ளிருந்தார். இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம் சூரமங்கலம் அருகே சேலத்தாம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ரஞ்சித் குமார் (32). இவர் ஒரு விபத்தில் அடிபட்டு சேலம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் கொண்ட லாம்பட்டி பி.நாட்டாமங்க லம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தை கள் உள்ளனர்.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு குடல் இறக்கம் தொடர்பாக இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் கொண்ட லாம்பட்டி பி.நாட்டாமங்க லம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தை கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குடல் இறக்கம் தொடர்பாக இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் அவருக்கு உடல் பூரண குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த அவர் கடந்த 4-ந் தேதி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இன்று காலை சக்திவேல் பரிதாபமாக இருந்தார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் ஓம லூர் அருகேயுள்ள சங்கீதப் பட்டி ஊராட்சியில் வெத்த லைக்கரனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • கல் குவாரியை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். ஆபத் தான முறையில் பறைகளை வெடி வைத்து தகர்க்கக் கூடாது என்று குவாரி நிர்வாகத்திடம் கூறினர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓம லூர் அருகேயுள்ள சங்கீதப் பட்டி ஊராட்சியில் வெத்த லைக்கரனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அனைவரும் விவசாய கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

    குடியிருப்புகள் மற்றும் மக்கள் நெருக்கம் நிறைந் துள்ள இந்த பகுதியில் கல் குவாரி செயல்பட்டு வரு கிறது. இந்த குவாரியில் எந்தவித பாதுகாப்பு விதி முறைகளையும் கடைபிடிக் காமல் வெடி வைத்து பாறைகளை தகர்த்து எடுக்கின்றனர். அவ்வாறு வெடி வைக்கும்போது சிதறும் பாறை கற்கள் குடி யிருப்பு பகுதிகளை தாக்கி வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. மேலும், கால் நடைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு களும் ஏற்பட்டுள்ளது.

    கல் குவாரியில் வைக்கப் படும் வெடியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பாதிக் கப்பட்டு வரும் கிராம மக்கள், அரசு அதிகாரி களிடம் தொடர்ந்து பல முறை புகரளித்தும், இது வரை எந்தவித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. அதி காரிகள் சிறு விசாரணை கூட செய்ய வரவில்லை என்று மக்கள் வேதனை யுடன் கூறுகின்றனர். இந்த நிலையில், நேற்று மாலை கல் குவாரியில் பாறைக்கு வெடி வைத்து தகர்த்துள்ள னர்.

    அப்போது சிதறிய கற்கள் குடியிருப்பு பகு திக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தியது. மேலும், அங்குள்ள இரண்டு சிறுவர்கள், கால்நடைகளை தாக்கி காயப்படுத்தியது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் கல் குவாரியை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். ஆபத் தான முறையில் பறைகளை வெடி வைத்து தகர்க்கக் கூடாது என்று குவாரி நிர்வாகத்திடம் கூறினர். இங்கு வைக்கப்படும் வெடி எங்கள் உயிருக்கு பாது காப்பு இல்லாத நிலையை ஏற்படுத்துகிறது.

    பகல் நேரத்தில் கற்கள் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே விழுகிறது. அப் போது யாராவது வீட்டில் இருந்திருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று ஆதங்கத்துடன் கூறினர். அப்போது அங்கு வந்த ஊராட்சி தலைவர் ராஜா மணி ராஜா பொது மக்க ளுக்கு ஆதரவாக, சுற்றிலும் குடியிருப்புகள் நிறைந் துள்ள பகுதியில் பாதுகாப்பு இல்லாமல் பாறைகளுக்கு வெடி வைத்து குவாரி செயல்படுவதால் மக்கள் அச்சத்துடனேயே உள்ளனர்.

    அதனால், இங்குள்ள மக்களின் உயிரை காக்க அதிகாரிகள் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், மாவட்ட ஆட்சியர், கனிமவள துறை அதி காரிகள், சுற்றுசூழல் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    • சேலம் மாவட்டம் ஏற்காட்டில், சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
    • ஏற்காடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் இயங்கி வரும் தமிழ்நாடு ஓட்டலில் உள்ள தங்கும் அறைகள், உணவகம் போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில், சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று ஆய்வு மேற்கொண்டார். ஏற்காடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் இயங்கி வரும் தமிழ்நாடு ஓட்டலில் உள்ள தங்கும் அறைகள், உணவகம் போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்பு படகு இல்லத்தில் உள்ள படகுகளை ஆய்வு மேற்கொண்டு அவர், அங்குள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அன்புராஜ், வட்டாச்சியர் தாமோதரன், தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் கோபி மற்றும் ஒன்றிய கழக ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். 

    • சேலதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமி தாக்கப்பட்டதை கண்டித்து மேச்சேரி பேருந்து நிலையத்தில் கம்யூனிஸ்டு கட்சி, வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ஆர்ப்பாட்டத்தில் ஏராலமானோர் பங்கேற்றனர்.

    நங்கவள்ளி:

    சேலதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமி தாக்கப்பட்டதை கண்டித்து மேச்சேரி பேருந்து நிலையத்தில் கம்யூனிஸ்டு கட்சி, வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்துக்கு பேரூராட்சி கவுன்சிலர் பழனி தலைமை தாங்கினார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் ஜி.மணிமுத்து, சி.ஐ.டி.யூ. சேலம் மாவட்ட நிர்வாகி திருப்பதி, மாவட்ட விவசாய சங்க துணை தலைவர் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராலமானோர் பங்கேற்றனர்.

    சேலத்தில் பெரியசாமியை தாக்கியவர்களை கண்டித் தும், அவர்களை கைது செய்ய கோரியும் கோஷங் கள் எழுப்பப்பட்டன.

    • தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக மேட்டூர் அணை பூங்கா விளங்கி வருகிறது.
    • பூங்கா முன்பு உள்ள சுற்றுலாத் துறைக்கு சொந்தமான தமிழ்நாடு ஓட்டல் இயங்கி வருகிறது.

    நங்கவள்ளி:

    தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக மேட்டூர் அணை பூங்கா விளங்கி வருகிறது. இந்த பூங்காவிற்கு சேலம், ஈரோடு ,நாமக்கல், தர்மபு ரியை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    பூங்கா முன்பு உள்ள சுற்றுலாத் துறைக்கு சொந்தமான தமிழ்நாடு ஓட்டல் இயங்கி வருகிறது. பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த ஓட்டலில் உணவு அருந்திவிட்டு ஓய்வெடுத்து செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று மேட்டூருக்கு வந்தார்.

    தமிழ்நாடு ஓட்டலில் அவர் ஆய்வு மேற்கொண்டார். ஓட்டலில் அறைகள் ஒவ்வொன்றாக திறந்து பார்த்த அமைச்சர் பராமரிப்பு பணிகள் மற்றும் வருவாய் குறித்து உடன் வந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து தூக்கணாம் பட்டி காவிரி ஆற்றில் படகு சவாரி செய்வதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர் களிடம் கூறியதாவது:-

    ஏற்காட்டில் சுற்றுலா துறையை மேம்படுத்த 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு அனைத்து துறைகளிலும் முதல் இடத்தை கைப்பற்ற வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

    மருத்துவத் துறையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிக அளவில் கோவில்கள் உள்ளன. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்திற்கு 20 லட்சம் பேர் சுற்றுலா பயணிகளாக வந்துள்ளனர்.

    தற்போது மூன்று மாதத்தில் 30 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர். தமிழகத்தில் 300 சுற்றுளா தலங்களை தேர்வு செய்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது சுற்றுலாத்துறை இயக்குனர் சந்திப்பு நந்தூரி, முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான டி.எம். செல்வகணபதி, மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம். வருவாய் துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புல னாய்வுத்துறை அலுவலகத்தை ஆய்வு செய்தனர்.
    • அத்தியாவசியப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக சேமித்து வைக்கக்கூடாது என்று அறிவுரைகள் வழங்கினர்.

    சேலம்:

    தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் துறை தலைவர் காமினி, கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி ஆகியோர் சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புல னாய்வுத்துறை அலுவலகத்தை ஆய்வு செய்தனர்.

    அப்போது அத்தியா வசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், வெளிமாநிலங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல்கள் ஏதும் நடைபெறக் கூடாது என்றும், தொடர்ந்து வாகன தணிக்கைகள் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    மேலும் அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்மந்தமாக சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் சேமிப்பு கிடங்குகள் மற்றும் உற்பத்தி ஆலைகள் ஆகியவைகளை கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.

    தொடர்ந்து நேற்று கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ராஜா, காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி ஆகியோர் குழு தனியார் கிடங்கு உரிமையாளர்களிடம் அத்தியாவசியப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக சேமித்து வைக்கக்கூடாது என்று அறிவுரைகள் வழங்கினர். மீறினால் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

    • தொழிலை நம்பி டிரைவர், கிளீனர் புக்கிங் ஏஜென்டுகள், லாரிகளின் உதிரி பாகங்கள், பஞ்சர் கடைகள், பெட்ரோல் டீசல் பங்குகள் என லட்சக்கணக்கானோர் உள்ளனர்.
    • லாரிகள் லோடு கிடைக்காமலும், வட மாநிலத்திற்கு செல்ல முடியாமலும் தமிழகத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    சேலம்:

    நாடு முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குகிறது . இதில் தமிழகத்தில் மட்டும் 6 லட்சத்திற்கும் அதிகமான லாரிகள் இயக்கப்படுகின்றன. இதில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த தொழிலை நம்பி டிரைவர், கிளீனர் புக்கிங் ஏஜென்டுகள், லாரிகளின் உதிரி பாகங்கள், பஞ்சர் கடைகள், பெட்ரோல் டீசல் பங்குகள் என லட்சக்கணக்கானோர் உள்ளனர்.

    தமிழகத்திலிருந்து வட மாநிலங்களுக்கு குறிப்பாக ஜவுளி, முட்டை, இரும்பு தளவாடங்கள், சிமெண்ட், எலக்ட்ரானிக் பொருட்கள், கெமிக்கல், கல் மாவு, ஜவ்வரிசி, வெல்லம் தேங்காய், காய்கறிகள் உள்பட பல் வேறு பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன .

    இதே போல வட மாநிலங்களில் இருந்து வெங்காயம், பூண்டு, பருப்பு ஆப்பிள் மற்றும் ஜவுளிகள் உட்பட பல்வேறு பொருட்கள் தமிழகத்துக்கும் கொண்டு வரப்படுகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு லாரி உரிமையாளர்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் வருவாய் கிடைத்து வருகிறது.

    சமீபகாலமாக டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம், லாரிகளுக்கான பொருட்கள் விலை பன்மடங்கு உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் லாரி தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், கர்நாடகா, இமாச்சல் பிரதேஷ் உட்பட வடமாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது .

    இதனால் வட மாநிலங்களில் பெரும்பாலான தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் முடங்கி உள்ளன. மேலும் பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் தமிழகத்திலிருந்து வட மாநிலத்திற்கு செல்லும் லாரிகளில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் லோடு கிடைக்காமலும், வட மாநிலத்திற்கு செல்ல முடியாமலும் தமிழகத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இதன் காரணமாக லாரி தொழில் மற்றும் அதனை நம்பியுள்ள தொழில்களும் முற்றிலும் முடங்கியுள்ளன. மேலும் வட மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படும் ஜவுளி, பட்டாசு, இரும்பு தளவாடங்கள், கெமிக்கல், கல்மாவு, ஜவ்வரிசி, தேங்காய், வெல்லம், மஞ்சள், அரிசி, எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை தேங்கியுள்ளன.

    வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்படும் பொருட்களும் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் தமிழகத்தில் மட்டும் கடந்த 10 நாட்களில் ஆயிரம் கோடிக்கும் மேலான பொருட்கள் தேங்கியுள்ளன. ஏற்கனவே காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது. லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் லாரி உரிமையாளர்களுக்கும் கடந்த 10 நாட்களில் மட்டும் 20 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது டிரைவர், கிளீனர்களும் வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள்.

    • ஓமலூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
    • அ.தி.மு.க. உறுப்பினர்கள் தீர்மானத்தில் கையெழுத்திட்டதால் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஓமலூர்:

    ஓமலூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் செல்வி ராமசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 18-வது வார்டு த.மா.கா. உறுப்பினர் பாப்பா சின்னையன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது பச்சனம்பட்டியில் உள்ள நூலக நிலத்தை மீட்க 2 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், ஒன்றிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணையாக இருப்பதாக கூறினார்.

    அதேபோல ஒரு தனி நபர் எந்தவித அனுமதியும் இல்லாமல் ஜல் ஜீவன் பைப்லைனில் மோட்டார் வைத்து தண்ணீர் உருஞ்சுகிறார். தனிப்பட்ட முறையில் அவரே பைப்லைன் போட்டுள்ளார். இதற்கும் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். இதற்கு அதிகாரிகள் தரப்பில் முறையான நடவடிக்கை இல்லை என்றார்.

    அப்போது திடீரென அவர் பையில் எடுத்து வந்த மண்ணெண்ணையை கூட்ட அரங்கிலேயே உடலில் ஊற்றி கொண்டு தீக் குளிக்க முயன்றார். இதனால், மன்ற கூட்டத்தில் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த ஊழியர்கள் த்ண்ணீரை அவர் மீது ஊற்றினர். தொடர்ந்து அதிகாரிகள் கவுன்சிலர் பாப்பாவின் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    ஆனால், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, உறுப்பினர் பாப்பா, அவரது கணவர் சின்னையன் ஆகியோர் ஒன்றிய அலுவலகம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பாப்பாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், ஓமலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே 100 நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விட கூடுதலாக தங்களுக்கு தேவையான தீர்மானத்தை பொய்யாக ஒட்டி பல மோசடி வேலைகளை அதிகாரிகள் செய்துள்ளனர். அதனால், கடந்த கால தீர்மான நகல்களை வழங்க வேண்டும் என்று தி.மு.க. உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மேலும், 100நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். அதேபோல பட்டா இல்லாத அரசு புறம்போக்கு நிலத்தில் அரசு வீடுகள் கட்ட ஊராட்சி தலைவர்கள் அனுமதி வழங்கி வீடுகள் கட்டி வருகின்றனர். அதிகாரிளும் இதுபோன்ற முறைகேடுகளுக்கு துணையாக உள்ளதாக புகார் தெரிவித்தனர்.

    அதனால் கூட்டத்தில் எந்தவித தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது, கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும். தீர்மான நகல்களை வழங்கிய பின்னர் முறையாக கூட்டம் நடத்தலாம் என்று கூறி கூட்டத்தை புறக்கணித்து சென்றனர். அ.தி.மு.க. உறுப்பினர்கள் தீர்மானத்தில் கையெழுத்திட்டதால் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 107 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 130 கன அடியாக அதிகரித்தது.
    • அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் கடந்த சில நாட்களாக விநாடிக்கு 400 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1000 கன அடியாக அதிகரித்துள்ளது.

    அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 107 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 130 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 78.51 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 77.61 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 39.61 டி.எம்.சி.யாக உள்ளது.

    ×