அரசு பள்ளி விடுதியில் மரத்தில் இருந்து தவறி விழுந்து மாணவன் பலி

பாஸ்கர் (வயது 17). இம்மாணவன், இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான்.நாவல் மரத்தில் ஏறி பழம் பறிக்கும்போது பாஸ்கர் தவறி கீழே விழுந்தான் இதில் பலத்த அடிபட்ட மாணவனை ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு ெகாண்டு சேர்த்தனர்.
அரசு பள்ளி விடுதியில் மரத்தில் இருந்து தவறி விழுந்து மாணவன் பலி
Published on

காகாபாளையம்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள நெய்யமலை பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் பாஸ்கர் (வயது 17). இம்மாணவன், இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான். பள்ளி அருகே உள்ள மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்தான். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் பள்ளி வளாகம் அருகே உள்ள நாவல் மரத்தில் ஏறி பழம் பறிக்கும்போது பாஸ்கர் தவறி கீழே விழுந்தான் இதில் பலத்த அடிபட்ட மாணவனை ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு ெகாண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கர் உயிரிழந்தான். மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com