என் மலர்tooltip icon

    சேலம்

    • சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே பிரபல போட்டோ ஸ்டுடியோ இயங்கி வருகிறது.
    • இந்த போட்டோ ஸ்டுடியோவில் இன்று காலை திடீரென புகை வருவதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே பிரபல போட்டோ ஸ்டுடியோ இயங்கி வருகிறது. இந்த போட்டோ ஸ்டுடியோவில் இன்று காலை திடீரென புகை வருவதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதியே புகை மூட்டமாக காட்சியளித்தது. சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருந்த போதிலும் ஸ்டுடியோவில் இருந்த புகைப்படங்கள், புகைப்பட கருவிகள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.

    இந்த சம்பவம் குறித்து அழகாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • குறிப்பாக தலைவாசல் பகுதியில் ½ மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை ெபய்தது.

    கன மழை

    குறிப்பாக தலைவாசல் பகுதியில் ½ மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது . தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைவாக இருந்தது. ேமலும் ஏற்காட்டில் வசிக்கும் மக்களும் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    31 மி.மீ. மழை

    மாவட்டத்தில் அதிக பட்சமாக தலைவாசலில் 17 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. கரியகோவில் 5, பெத்தநாயக்கன்பாளையம் 5, ஆனைமடுவு 4, கரியகோவில்1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 31 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. 

    • கிராமப்புற விளைநிலங்களில் மழைக் காலங்களில் இயற்கையாகவே காளான்கள் ஏராளமாக விளைந்திருக்கும்.
    • இயற்கையாக விளையும் காளான்கள் சுவை மிகுதியாக இருக்கும் என்பதோடு, உடலுக்கு உறுதியும் ஊட்டச்சத்தும் அளிக்கும்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமப்புற விளைநிலங்களில் மழைக் காலங்களில் இயற்கையாகவே காளான்கள் ஏராளமாக விளைந்திருக்கும். பல்வேறு வகை காளான்கள் முளைத்திருக்கும் என்பதால் காளான் வகை, தன்மைகளை அறிந்த விவசாயிகள், உண்பதற்கு உகந்த காளான்களை கண்டறிந்து பறித்து, உப்பு, காரம் சேர்த்து சமைத்து உண்பார்கள். இயற்கையாக விளையும் காளான்கள் சுவை மிகுதியாக இருக்கும் என்பதோடு, உடலுக்கு உறுதியும் ஊட்டச்சத்தும் அளிக்கும்.

    அண்மைக்காலமாக விளை நிலங்களில் ரசாயன உரங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள், களைக்கொல்லிகள் தெளிப்பது அதிகரித்து வருவதால் விளைநிலங்களின் தன்மை மாறுபட்டு மழைக்காலங்களில் கூட இயற்கையாக காளான்கள் விளைவது அரிதாகிவிட்டது.

    மழைக்காலங்களில்

    வாழப்பாடி பகுதியில் கல்வராயன்மலை, அருநூற்று மலை, ஜம்பூத்து மலை, சந்து மலை கிராமங்களில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாடு குறைவாக காணப்படுவதால் இன்றளவிலும் மழைக்கா லங்களில் இயற்கையாக காளான்கள் விளைந்து வருகிறது.

    வாழப்பாடி பகுதியில் கடந்த சில தினங்களாக பருவ மழை பெய்து வருகிறது. காளான் விளைவதற்கு ஏற்ற ஈரப்பதமான, குளுமையான சூழ்நிலை நிலவுவதால் வாழப்பாடி அடுத்த கல்யா ணகிரி, இடையப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விளை நிலங்களில் ஆங்காங்கே உண்பதற்கு உகந்த காளான்கள் விளைந்துள்ளன. இந்த காளான்களை இனங்கண்ட றிந்து அவற்றைப் பறித்து சமைத்து உண்பதில் கிராம மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இயற்கை முறையில்...

    இயற்கை காளான்கள் அரி தாகி வருவதால் கிராமப்புற மக்களும் செயற்கையாக விளை விக்கப்படும் காளான்களை விலை கொடுத்து வாங்கி சமைத்து உண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கையாக காளான்கள் விளைவதற்கு விவசாயிகள் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதை தவிர்த்து, அங்கக இயற்கை முறை சாகுபடியில் ஈடுபட வேண்டும்.

    விளைநிலத்தில் தானாக விளையும் கிடக்கும் அனைத்து காளான்களும் உண்பதற்கு உகந்ததாக இருக்காது. எனவே காளான்களின் தன்மை அறிந்து உண்பதற்கு ஏற்ற காளான்களை மட்டுமே பறித்து உண்ண வேண்டும். விஷத்தன்மையுடைய காளான்களை பறித்து உண்டால் உடலுக்கு தீமை ஏற்படும் என வேளாண்மை துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருச்செங்கோடு, நாமக்கல் மார்க்கத்தில் செல்லும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சங்ககிரி ஆர்.எஸ். வழியாக சென்று வருகின்றன.
    • போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு திருச்செங்கோடு – சங்ககிரி - ஈரோடு செல்லும் சாலையில் பாலத்தில் இருந்து இருபுறமும் 2 கி.மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    சங்ககிரி:

    சங்ககிரி, எடப்பாடி, மகுடஞ்சாவடியில் இருந்து திருச்செங்கோடு, நாமக்கல் மார்க்கத்தில் செல்லும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சங்ககிரி ஆர்.எஸ். வழியாக சென்று வருகின்றன. குறிப்பாக விசேஷ நாட்களில் வழக்கத்தை விட அதிக வாகனங்கள் சென்று வருகின்றன.

    போக்குவரத்து பாதிப்பு

    இந்த நிலையில் ஆர்.எஸ். பஸ் நிறுத்தம் பகுதியில் ெரயில்வே மேம்பாலத்தில் ஒரு வாகனம் மட்டும் செல்லும் அளவில் சாலை உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு திருச்செங்கோடு – சங்ககிரி - ஈரோடு செல்லும் சாலையில் பாலத்தில் இருந்து இருபுறமும் 2 கி.மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    போலீசார் இல்லாததால் பொதுமக்கள் நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் வெளியூர் செல்லும் பஸ் பயணிகள், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். எனவே இந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் நியமித்து நெரிசல் இல்லாமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நவராத்திரி சிறப்பு பூஜை வழிபாடு நேற்று கோலாகலமாக தொடங்கியது.
    • சிறப்பு பூஜை நடத்தியும் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. ஆர்ய வைஸ்ய மகிளா சபா பெண் பக்தர்கள் அம்மனுக்கு துதி பாடி வழிபாடு செய்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் வீடுகள், கோவில்களில் கொலு வைத்து, நவராத்திரி சிறப்பு பூஜை வழிபாடு நேற்று கோலாகலமாக தொடங்கியது. நடப்பாண்டு வாழப்பாடி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் பெரியசாமி நகர் விநாயகர் கோவில்களில் கொலு வைத்தும், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவியரின் அலங்காரம் செய்தும், சிறப்பு பூஜை நடத்தியும் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. ஆர்ய வைஸ்ய மகிளா சபா பெண் பக்தர்கள் அம்மனுக்கு துதி பாடி வழிபாடு செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
    • அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து வேகமாக உயர்ந்து வருகிறது.

    சேலம்:

    தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஒகேனக்கல், அஞ்செட்டி, நட்ராம்பாளையம், அடிபாலாறு உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று மழை குறைந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் சரிய தொடங்கி உள்ளது. நேற்று 15 ஆயிரத்து 433 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று பாதியாக சரிந்து 8 ஆயிரத்து 893 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து வேகமாக உயர்ந்து வருகிறது.

    கடந்த 10-ந் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30.99 அடியாக இருந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 42.44 அடியாக உயர்ந்தது. இதனால் கடந்த 6 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் 11.45 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சேலம் மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம். நெத்திமேட்டில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
    • இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் தலைமை தாங்கி பேசினார்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம். நெத்திமேட்டில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    சேலம் மாவட்டத்தில் ரவுடி பட்டியலில் உள்ள நபர்களை கண்காணித்து வருவாய் கோட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அவர்களிடம் உறுதி மொழி பத்திரம் எழுதி வாங்க வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு எதிராக குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து தண்டனையை விரைவாக பெற்றுத் தர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    காணாமல் போன நபர்கள் குறித்த வழக்குகளை விரைந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கண்ணன், செல்வம், துணை சூப்பிரண்டு சங்கீதா, நாகராஜன், ராஜா, மரியமுத்து, ஹரிசங்கரி, அமல்அட்வின், தமிழ்வாணன், சின்னசாமி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவை சர்க்கார் சாமகுளம் அடுத்த லட்சுமி ஜோதி கார்டன் பகுதியில் வசித்து வரும் மகனுடன் தற்போது ஒன்றாக குடியிருந்து வருகிறார்கள்.
    • பஸ் சேலம் அரசு மருத்துவமனை அருகே வந்தபோது இவர்களது பையில் வைத்திருந்த 15 பவுன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 61).

    இவரும், இவரது மனைவியும் கோவை சர்க்கார் சாமகுளம் அடுத்த லட்சுமி ஜோதி கார்டன் பகுதியில் வசித்து வரும் மகனுடன் தற்போது ஒன்றாக குடியிருந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தனபால், தனது மனைவியுடன் சேலம் குகை கருங்கல்பட்டியில் வசிக்கும் தனது மகளை பார்க்க வந்தனர். மகளை பார்த்துவிட்டு தனபாலும் அவரது மனைவியும் கோவை செல்வதற்காக சேலம் பழைய பஸ் நிலையத்திலிருந்து அரசு டவுன் பஸ்சில் புதிய பஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

    பஸ் சேலம் அரசு மருத்துவமனை அருகே வந்தபோது இவர்களது பையில் வைத்திருந்த 15 பவுன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது.

    இது குறித்து செவ்வாய்ப் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சாரின் முதற்கட்ட விசாரணையில் பஸ்சில் வரும் போது தனபாலின் அருகில் இருந்த தம்பதிகள் பையை நகர்த்தி வைப்பது போல் பாசாங்கு செய்து நகையை திருடியிருப்பது தெரியவந்தது.

    அதை தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து பஸ்சில் நூதன முறையில் நகைகளை கொள்ளை அடித்து சென்ற தம்பதிகளை தேடி வருகிறார்கள்.

    • தங்கராஜ். (வயது 54). இவரது சொந்த ஊர் ஓசூர் ஆகும். இவர் ஆணைக்கவுண்டம் பட்டியில் வாடகை வீட்டில் தங்கி சேலம் குரங்கு சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார்.
    • வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.20,000, மற்றும் 3 பவுன் தங்கசெயின் திருடு போயிருந்தன. இதனால் செல்வராஜ் அதிர்ச்சி அடைந்தார்.

    கருப்பூர்:

    சேலம் கருப்பூர் அடுத்த உள்ள ஆணைக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் என்கிற தங்கராஜ். (வயது 54). இவரது சொந்த ஊர் ஓசூர் ஆகும். இவர் ஆணைக்கவுண்டம் பட்டியில் வாடகை வீட்டில் தங்கி சேலம் குரங்கு சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று குடும்பத்துடன் தனது சொந்த ஊரான ஓசூருக்கு சென்றுள்ளார். 2 நாட்களுக்கு பின்னர் அவர் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.20,000, மற்றும் 3 பவுன் தங்கசெயின் திருடு போயிருந்தன. இதனால் செல்வராஜ் அதிர்ச்சி அடைந்தார்.

    மற்றொரு சம்பவம்

    அதேபோன்று பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சுபாஷ் (33). இவர் தனது மனைவியை பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தி ருந்தார். மனைவியை பார்த்து விட்டு சுபாஷ் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    இந்த அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் மனோன்மணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி, விற்பனை சங்க மகாசபை கூட்டம் நடந்தது.
    • தனி மருத்துவ சேவை திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி கூட்டுறவு கைத்தறி நெசவாளர் குடும்பத்தினர் ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்ய வேண்டும்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி, விற்பனை சங்க மகாசபை கூட்டம் நடந்தது. இதில் சங்க உறுப்பினர்கள் குமாரசாமி தலைமையில் கைத்தறி துறை உயரதிகாரியிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    கூட்டுறவு கைத்தறி நெசவாளர் குடும்பத்திற்கு தனியாக தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆண்டுக்கு ரூ.15,000 வீதம் புற நோயாளி, உள் நோயாளி மருத்துவ சிகிச்சை பெற அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கடந்த காலத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பிறகு தொகை ஆண்டுக்கு ரூ.37,500 என்ற விகிதத்தில் மருத்துவ சிகிச்சையை கூட்டுறவு கைத்தறி நெசவாளர் குடும்பத்தினர் பெற்று வந்தனர்.

    பிறகு இந்த திட்டம் அடியோடு நிறுத்தப்பட்டதால் நெசவாளர் குடும்பத்தினர் நோய்வாய் படும் நேரத்தில் பொருளாதார வசதி இல்லாத காரணத்தினால் எம்ஆர்ஐ, ஸ்கேன், அல்ட்ரா ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் செய்து மருந்து மாத்திரைகளை பெற்று ஆரோக்கியமான வாழ்வுக்கு வழியற்ற நிலையில் உள்ள கூட்டுறவு கைத்தறி நெசவாளர் குடும்பத்திற்கு தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் மருத்துவ சேவை பெற கடந்த காலத்தை போல தனி மருத்துவ சேவை திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி கூட்டுறவு கைத்தறி நெசவாளர் குடும்பத்தினர் ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர். மனு கொடுத்தபோது சங்க உறுப்பினர்கள் கிருஷ்ணன், பழனிசாமி, மாணிக்கம், ராமசாமி, செங்கோடன், சங்க நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • நெடுஞ்சாலை துறை மூலமாக நிதி பெற்று அங்கு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.
    • நேரில் சென்று பணி நடைபெறும் இடத்தை அருள் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களை சந்தித்து பேசினார்.

    சேலம்:

    சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட 22-வது கோட்டம் சிவதாபுரத்தில் பெரு மழை காலங்களில் சேலத்தாம்பட்டி ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் மழை நீர் ஒரு சொட்டு கூட ஊருக்குள் தேங்காமல் வெளியேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பிரச்சனை குறித்து பா.ம.க. அருள் எம்.எல்.ஏ. எடுத்துக் கூறினார்.

    இதையடுத்து நெடுஞ்சாலை துறை மூலமாக நிதி பெற்று அங்கு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.

    ஆய்வு

    இந்த நிலையில் சித்தர் கோவில் மெயின் ரோட்டில் நடைபெற்று வரும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி மிகவும் தொய்வு ஏற்பட்ட காரணத்தினால் சாக்கடை கால்வாய் அருகில் உள்ள வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி செய்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்து உடனடியாக நேரில் சென்று பணி நடைபெறும் இடத்தை அருள் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களை சந்தித்து பேசினார்.

    நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக பணியினை தொடங்க வேண்டும். இல்லை என்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்க ளுடன் சேர்ந்து நானும் சாலை மறியல் ஈடுபடுவேன் கூறினார். அதன் அடிப்படையில் உடனடியாக அதிகாரிகள் பணியை தொடங்கினார்கள்.

    அப்போது அவருடன் மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார், மாவட்ட துணைச் செயலாளர் சேகர், பகுதி செயலாளர் சமயவேல், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் அருண், கோட்டச் செயலாளர் குமார், கோட்ட தலைவர் சுரேஷ், பகுதி அமைப்புச் செயலாளர் கோவிந்தன், மாணவரணி சஞ்சய், ஸ்ரீகாந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மேட்டூரில் உள்ள முனியப்பன் கோவிலுக்கு செல்வதற்காக காரை தரும்படி கிட்டா மணிகண்டனிடம் கேட்டார்.
    • கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றி உள்ளனர்.

    சேலம்:

    சேலம் கோரிமேடு ஜல்லிக்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற கிட்டா மணிகண்டன் (வயது 30), பிரபல ரவுடி. திருமணமாகாத இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.

    இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மகாவிஷ்ணு (32). இவர் மேட்டூரில் உள்ள முனியப்பன் கோவிலுக்கு செல்வதற்காக காரை தரும்படி கிட்டா மணிகண்டனிடம் கேட்டார்.

    அதற்கு அவர் கார் இப்போது தான் வாங்கியிருக்கிறேன், நானே ஓட்டி கொண்டு வருகிறேன் என்று கூறினார். இதனால் வேறு ஒரு காரில் மேட்டூர் சென்ற மகாவிஷ்ணு நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது ரவுடி கிட்டா மணிகண்டன் என்னிடம் காரை கேட்டு விட்டு எதுவுமே சொல்லாமல் போய் விட்டாயே வண்டிக்கு டீசலை போட்டு கொண்டு காத்திருக்கிறேன் என கூறினார்.

    முன்னதாக மகாவிஷ்ணுவின் அக்காவிடமும் இவ்வாறு கேட்டு அவர் தகராறு செய்தார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மகாவிஷ்ணு அங்கிருந்த இரும்பு ராடால் ரவுடி கிட்டா மணிகண்டன் மண்டையில் ஓங்கி அடித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்ற மகாவிஷ்ணுவை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரவுடி கிட்டா மணிகண்டன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றி உள்ளனர்.

    ×