என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7ஆயிரத்து 355 கனஅடியாக அதிகரிப்பு
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7ஆயிரத்து 355 கனஅடியாக அதிகரிப்பு

    • கடந்த 17-ந் தேதி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 8ஆயிரத்து 223 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
    • அணையில் இருந்து குடிநீருக்கு தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நீர்மட்டம் குறைந்ததால் கடந்த 10-ந் தேதி காலை 6 மணியுடன் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    மேலும் மழை இல்லாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறக்காததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.

    இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. கடந்த 17-ந் தேதி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 8ஆயிரத்து 223 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று அது 6 ஆயிரத்து 846 கனஅடியாக குறைந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து மீண்டும் அதிகரித்து உள்ளது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 45.62 அடியை எட்டி இருந்தது. அதேபோல் அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 355 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீருக்கு தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 101 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4ஆயிரத்து 218 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 1691 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் கபினி அணையின் நீர்மட்டம் 75.06 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1055 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் 1991 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    Next Story
    ×