search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coconut Coir"

    • வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விவசாயிகள் உற்பத்தி செய்திடும் பருத்தி, நிலக்கடலை மற்றும் சிறுதானியங்கள், கொப்பரை தேங்காய் உள்ளிட்டவை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
    • நிலக்கடலைக்கான பொது ஏலத்தில் ரூ.78 ஆயிரத்து 398 மதிப்பிலான நிலக்கடலை விற்பனை நடைபெற்றது. இதில் ஒரு குவிண்டால் நிலக்கடலை குறைந்தபட்சமாக ரூ.2,728 முதல் அதிகபட்சமாக ரூ.4,415 வரை விற்பனையானது

    எடப்பாடி:

    சங்ககிரி - ஓமலூர் பிரதான சாலையில், கொங்கணா புரத்தை அடுத்த கருங்காடு பகுதியில் செயல்பட்டு வரும், தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விவசாயிகள் உற்பத்தி செய்திடும் பருத்தி, நிலக்கடலை மற்றும் சிறுதானியங்கள், கொப்பரை தேங்காய் உள்ளிட்டவை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக நேற்று இம்மையத்தில் நடைபெற்ற பொது ஏலத்தில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த சுமார் 145 மூட்டை தேங்காய் கொப்பரைகள் பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டது. இதில் முதல் ரக தேங்காய் கொப்பரைகள் குவிண்டால் ஒன்று ரூ.7,880 முதல் 8,255 வரை விலைபோனது. இதேபோல் இரண்டாம் தர தேங்காய் கொப்பரைகள் குவிண்டால் ஒன்று ரூ.5,085 முதல் ரூ.7,381 வரை விலைபோனது, ஏலத்தில் ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான தேங்காய் கொப்பரைகள் விற்பனையானது.

    தொடர்ந்து நடைபெற்ற நிலக்கடலைக்கான பொது ஏலத்தில் ரூ.78 ஆயிரத்து 398 மதிப்பிலான நிலக்கடலை விற்பனை நடைபெற்றது. இதில் ஒரு குவிண்டால் நிலக்கடலை குறைந்தபட்சமாக ரூ.2,728 முதல் அதிகபட்சமாக ரூ.4,415 வரை விற்பனையானது. தற்போது இப்பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி தொடங்கி உள்ளதால், வரும் நாட்களில் இம்மையத்தில் நிலக்கடலை விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.

    • சங்க உறுப்பினர்களின் கருத்துக்களும் கேட்டறியப்பட்டது.
    • சங்கத்தின் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும், தொழில் முன்னேற்றம் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் தாலுகா தேங்காய் கொப்பரை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் காங்கயம் - சென்னிமலை சாலையில் உள்ள காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்க கூடாரங்களில் நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கயம் தாலுகா தேங்காய் கொப்பரை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.கே.பி.சண்முகம் தலைமை தாங்கினார். சங்கத்தின்கவுரவ ஆலோசகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ் முன்னிலை வகித்தார்.

    இதில் சங்கத்தின் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும், தொழில் முன்னேற்றம் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட சங்க உறுப்பினர்களின் கருத்துக்களும் கேட்டறியப்பட்டது. இந்த கூட்டத்தில் சங்கத்தின் செயலாளர் ஜி.எஸ்.கவுரிசங்கர், பொருளாளர் ஏ.டி.சி.பழனிச்சாமி, காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.எஸ்.என்.தனபால், செயலாளர் கங்கா எஸ்.சக்திவேல், பொருளாளர் பாலாஜி ஜி.ஆர்.ரவிச்சந்திரன் உள்பட சங்கத்தின் கவுரவ ஆலோசகர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்ய தங்களது பெயர்களை பதிவு செய்திடலாம்.
    • கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    விளைபொருளின் விலை குறைந்தபட்ச ஆதார விலைக்கு கீழ் செல்லும் போது, ஆதார விலை திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஆதார விலையில் விளைபொருட்கள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் மூலம் நேரடி கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைத்திட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

    தற்போது தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில், விலை ஆதரவு திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

    விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து விவசாயிகளை பாதுகாத்து, விவசாயி களின் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்திடும் பொருட்டு விவசாயிகளிடமிருந்து தேங்காய் கொப்பரை எளிதில் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியம் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் 75 மெட்ரிக் டன் அரவைக் கொப்பரை ஆதார விலைத் திட்டத்தில் கொள்முதல் செய்திட அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசினால் 2023-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையான கொப்பரைக்கு கிலோ ரூ.108.60 என்ற விலையில் ராமநாதபுரம் ஒழுங்குமுறை அரவைக் விற்பனை கூடத்தில் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கொள்முதல் செய்யப்படும்.

    ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் விற்பனைக்கூட பொறுப்பாளரை அணுகி தங்களது பெயர்களை பதிவு செய்திடலாம். பெயர்களை பதிவு செய்யும் போது, நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    மத்திய அரசின் கொள்முதல் நிறுவனமான நாபெட் நிறுவனம் பரிந்து ரைக்கும் குறைந்தபட்ச தரத்தில் விளைபொருள் இருத்தல் அவசியமாகும். விவசாயிகள் தரத்தினை உறுதி செய்து குறைந்தபட்ச ஆதார விலை பெற்றிடலாம்.

    தமிழகத்தில் கொப்பரை கொள்முதலுக்கு தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியம் மாநில முகமையாக செயல்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் தேங்காய் கொப்பரைக்கான தொகையினை விரைவில் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்திட அனைத்து நடவடிக்கை களையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.

    சேமிப்பு கிடங்குகளில் கொப்பரை குவியல்கள் சேர்க்கப்பட்ட நாளிலிருந்து 3 நாட்களுக்குள் அதற்குரிய தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×