என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படைப்புழுக்கள் தாக்குதல்"

    • வாழப்பாடி வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிர்களை படைப்புழுக்கள் தாக்கி சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
    • மக்காச்சோள இலையின் பச்சையத்தை படைப்புழுக்கள் சுரண்டி உண்பதால் இலை வெளிர்த்து விடுகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிர்களை படைப்புழுக்கள் தாக்கி சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. மக்காச்சோள இலையின் பச்சையத்தை படைப்புழுக்கள் சுரண்டி உண்பதால் இலை வெளிர்த்து விடுகிறது. இந்த புழுக்கள் இளம்செடியின் இலையுறை மற்றும் முதிர்ந்த செடியின் கதிர் நுாலிழைகளையும் இரவு நேரத்தில் அதிகமாக சேதப்படுத்துகின்றன.

    கோரிக்கை

    புழுக்கள் இலையுறைனுள் சென்று பாதிப்பை உண்டாக்கி இலைகள் விரிவடையும் போது அதில் வரிசையாக துளைகளை ஏற்படுத்துவதால் மக்காச்சோளம் மகசூல் பாதிக்கும் என்பதோடு தரமும் குறையும் என்பதால் மக்காச்சோளத்தை தாக்கி அளிக்கும் படைப்புழுக்களை கட்டுப்படுத்த தகுந்த ஆலோசனையும், படைப்புழுக்களை அழிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளை மானிய விலையில் வழங்கவும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகளிடையே கோரிக்கை எழுந்தது.

    ஆய்வு

    இதனையடுத்து ஏத்தாப்பூர் மரவள்ளி ஆமணக்கு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி சரவணன், வேளாண்மை அலுவலர் கலாசித்ரா, உதவி வேளாண்மை அலுவலர் வான்மதி, உதவி தொழில்நுட்ப மேலாளர் திலகவதி, பயிர் அறுவடை ஒருங்கிணைப்பாளர் சுதா, ஒன்றிய குழு உறுப்பினர் உழவன் முருகன் ஆகியோர் துக்கியாம் பாளையம், மேலூர், பறவைக்குட்டை பகுதிகளில் மக்காசோளம் வயல்களில் படைப்புழுக்கள் தாக்குதல் குறித்து ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் அடிப்படையில் விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படுமென இக்குழுவினர் விவசாயிகளிடம் தெரிவித்துள்ளனர்.

    ×