என் மலர்
ராமநாதபுரம்
- மகளிர் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி தொடங்குகிறது.
- பாசிமணிமாலைகள் முதலியன விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண் காட்சி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தேசிய நினைவி டத்தில் வருகிற 27-ந்தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 6-ந்தேதி வரை நடை பெற உள்ளது.
இக்கண்காட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்க ளால் தயாரிக்கப்பட்ட பனை ஓலை பொருட்கள், கடல் சிப்பி அலங்கார பொருட்கள், மசாலா பொருட்கள், சணல் பைகள், வீட்டு உபயோக பொருட்கள், சிறு தானிய உணவுகள் மற்றும் தின்பண்டங்கள், சேலைகள், நைட்டிகள், வயர் கூடைகள், உணவு பொருட்கள், பொம்மைகள், பேன்சி பொருட்கள், மண்பானைப்பொருட்கள், பனங்கருப்பட்டிகள், அப்பளம், வடகம், சோப் ஆயில், பினாயில் மற்றும் பாசிமணிமாலைகள் முதலியன விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.
பொதுமக்கள் இநத கண்காட்சியை பார்வை யிட்டு மகளிர் சுய உதவிக் குழு உற்பத்தி பொருட்களை வாங்கி அவர்களின் வாழ் வாதாரத்தை உயர்த்துமாறு கேட்்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
- அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது.
- விடுமுறை நாளை முன்னிட்டு ராமேசுவரத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது.
ராமேசுவரம்:
தென்னகரத்து காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு நாள் தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.
இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது. இதன் காரணமாக வார விடுமுறை நாட்களில் ராமேசுவரத்துக்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.
அதன்படி விடுமுறை நாளை முன்னிட்டு நேற்று இரவு முதல் தமிழகம் முதல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரெயில், பஸ், வேன், கார் மூலம் ராமேசுவரம் வந்த வண்ணம் இருந்தனர். குறிப்பாக வடமாநில பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது.
இன்று அதிகாலை அக்னி தீர்த்த கடலில் நீராடிய பக்தர்கள் பின்னர் கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடினர். தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாத சுவாமியையும், பர்வத வர்த்தினி அம்பாளையும் தரிசனம் செய்தனர்.
விடுமுறை நாளை முன்னிட்டு ராமேசுவரத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது. அக்னி தீர்த்த கடற்கரை, கோவில், பஸ் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று அதிகளவில் பக்தர்கள் வருகை தந்ததால் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் வணிக நிறுவனங்கள், கடைகளில் வியாபாரம் விறுவிறுப்புடன் நடைபெற்றது.
- கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் 7 ரோந்து கப்பல்களை நிறுத்தி கண்காணிப்பது தெரியவந்தது.
- ஒரு தரப்பினர் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது இலங்கை கடற்படை அவர்களை தாக்கி சிறை பிடிப்பதும், விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் காரணமாக ராமேசுவரம் மீனவர்களின் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு செல்ல 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்வளத்துறையிடம் இருந்து அனுமதி டோக்கன் பெற்றிருந்தது. நேற்று காலை முதல் 100-க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு புறப்பட்டு சென்றன.
அப்போது கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் 7 ரோந்து கப்பல்களை நிறுத்தி கண்காணிப்பது தெரியவந்தது. இதுகுறித்து கரையில் இருந்து கடலுக்கு செல்ல தயாராக இருந்த மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனால் 300 படகுகள் செல்ல வேண்டிய நிலையில் 50 விசைப்படகுகளில் மட்டுமே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்களை தாக்கி விரட்டியடித்தனர். அதோடு மட்டுமல்லாமல் படகுகளில் இறங்கிய கடற்படை வீரர்கள் வலைகளை வெட்டி சேதப்படுத்தினர். தொடர்ந்து இந்த பகுதியில் மீன்பிடித்தால் சிறைபிடிப்போம் என இலங்கை கடற்படை எச்சரித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் மீன்பிடிப்பதை பாதியிலேயே நிறுத்தி விட்டு இன்று அதிகாலை ராமேசுவரத்திற்கு திரும்பினர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக இலங்கை கடற்படை தாக்குதல் அதிகமாக உள்ளன. இதனால் மீன்பிடிக்க செல்ல அச்சுறுத்தல் ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்ல குறைந்தது ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்கிறோம். ஆனால் அதற்கு போதுமான பலன் கிடைப்பதில்லை.
பல நேரங்களில் இலங்கை கடற்படை விரட்டியடிப்பதால் பாதியிலேயே திரும்ப வேண்டி உள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என வேதனையுடன் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படை துப்பாக்கியால் சுட்டு மீனவர்களை விரட்டிய நிலையில் இன்று 2-வது முறையாக ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கமுதியில் நடந்த வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்றனர்.
- பாலங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
பசும்பொன்
தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. ராமநாத புரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் பருவ மழையை யொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு கள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
வட்டாட்சியர் சேது ராமன் தலைமை தாங்கி னார். கூட்டத்தில் பருவ மழை காலத்தில் மழைநீர் ஊருக்குள் புகுவதை தடுக்க தேவையான அளவு மணல் மூட்டைகளை தயார்படுத்த வேண்டும். ரேசன் கடைக ளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட் களை இருப்பு வைக்க வேண்டும்.
மழை தொடங்கும் முன் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைத்தும், சேதமடைந்த மின் கம்பங் களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மின்வயர்கள் அறுந்து விழுந்தால் உடனடி யாக மின்சாரத்தை துண்டித்து சீரமைப்பு பணி களை மேற்கொள்ள வேண்டும்.
மழை கால நோய்கள் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பேரிடர் மேலாண்மை சார்பில் தீயணைப்பு துறை அதிகாரிகள் தண்ணீர், வாகனங்கள் போன்றவற்றை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
பாக்குவெட்டி, மண்டல மாணிக்கம், பேரையூர், செய்யமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள தரைப் பாலங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக் கப்பட்டது.
இந்த கூட்டத்தில் போலீ சார், ஊரக வளர்ச்சி துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, உணவு பொருள் வழங்கல் அதிகாரிகள், சுகா தாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரம் செய்யது அம்மாள் கல்லூரி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
- கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே யுள்ள செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்ப ணித்திட்டம், யூத் ரெட் கிராஸ் மற்றும் செஞ்சுருள் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகா மிற்கு கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
கல்லூரி தாளாளர் செல் லதுரை அப்துல்லா, ராமநாதபுரம் செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப் துல்லா ஆகியோர் ரத்த தானம் வழங்கிய கொடையா ளர்களை பாராட்டினர்.
இதில் விலங்கியல் துறை தலைவர் தயாளன், உதவி பேராசிரியர் முருகானந்தம், வட்டார மருத்துவ அலுவலர் ஜன்னத்து யாஸ்மின், மருத் துவ அலுவலர் நிலோபர் நிஷா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வீரபெருமாள், சுகாதார ஆய் வாளர்கள் இளங்கோ–வன், நம்பிக்கை மைய ஆலோசகர் பாலமுருகன், நடமாடும் மருத்துவ குழுவினர் ராமநா–தபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் குழு வினர் கலந்துகொண்டனர்.
இதில் 44 மாணவர்கள் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கினர். நிகழ்ச் சியை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வள்ளிநாய கம், ராஜமகேந்திரன், சேக் அயாஸ் அகமது மற்றும் செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர்கள், ஒருங்கி ணைப்பாளர்கள் ஒருங்கி ணைத்து நடத்தினர். இதற் கான ஏற்பாடுகளை கல் லூரி நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வை யாளர் சபியுல்லா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
- கமுதி அருகே நத்தம் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது.
- வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிகிறது.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதி யில் ஒவ்வொரு திங்கட் கிழமையும் வாரச்சந்தை நடைபெற்று வந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நேரடியாக கலந்து கொண்டு காய்கறி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வந்தனர். இந்தவாரச்சந்தை கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாரச்சந்தை வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய கடைகள் கட்டப்பட்டது. ஆனால் பேரூராட்சி நிர்வா கம் அதனை வியாபாரி களுக்கு வழங்குவதில் பார பட்சம் காட்டியதாக தெரிகி றது. மேலும் கடைகளுக்கு அரசு நிர்ணயித்த கட்ட ணத்தைவிட கூடுதல் கட்ட ணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.
ஒப்பந்ததாரர்கள் வியாபாரிகளை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்தனர். இதுதொடர்பாக கலெக்டர், அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. பல்வேறு இன்னல்கள் கார ணமாக அபிராமம் பகுதியில் வாரச்சந்தை நடத்துவதில் வியாபாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.
இதன் காரண மாக அபிராமம் அருகே உள்ள நத்தம் ஊராட் சிக்குட்பட்ட அபிராமம்-மதுரை சாலையில் வாரச் சந்தை நடத்த வியாபாரிகள் முடிவு செய்தனர்.
இதற்கு நத்தம் ஊராட்சி மன்ற கூட்டத்தில் உறுப்பினர்க ளின் ஆதரவோடு தீர்மான மும் நிறைவேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து இனிவரும் காலங்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழ மையும் நத்தம் ஊராட்சியில் வாரச்சந்தை நடைபெறும் என ஊராட்சி மன்ற தலை வர் போத்தி தெரிவித்து உள்ளார்.
அபிராமம் பேரூராட்சி யில் வாரச்சந்தை நிறுத்தப் பட்டதால் வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிகிறது.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்மாய், கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
- கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் எடுத்துரைத்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விவசாயி கள் வேளாண்மை சார்ந்த கோரிக்கைகள், பயிர்க்கடன் தள்ளுபடி, கண்மாய்கள் தூர்வாருதல், வயல்வெளி களில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதை சரி செய்தல், ஊரணி தூர்வாரு தல், தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் எடுத்துரைத்த னர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை மூலமாக பல்வேறு திட்டங் களை அறிவித்து அதன் மூலம் விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகின்றது. மேலும் விவசாயிகளின் குறைகளையும், கோரிக்கை களையும் கேட்டறியும் வகை யில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு விவசாயி களின் கோரிக்கைகள் நிறை வேற்றப்பட்டு வருகின்றன.
மேலும் வறட்சி நிவாரண மாக நமது மாவட்டத்திற்கு வரப்பெற்ற ரூ.132 கோடி விவசாயிகளுக்கு வழங்கப் பட்டு வருகிறது. ஓரிரு தினங்களில் மீதமுள்ள பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு உரிய நிவாரணம் கிடைத்திட உரிய நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றது.
வடகிழக்கு பருவ மழையையொட்டி கண்மாய்களை தூர்வாருதல், கால்வாய்களை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் வழியாக செல்லக்கூடிய தாழ்வான மின் கம்பங்களை சரி செய்யவும், சேதமான மின் கம்பங்களை சரி செய்திட வும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசி னார்.முன்னதாக கடந்த வாரம் நடைபெற்ற தென்னை மற்றும் கரும்பு விவசாயிக ளுக்கான ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் வைத்த கோரிக்கையை பரிசீலனை செய்யப்பட்டு 3 விவசாயிகளுக்கு கரும்பு பயிர் கடனாக ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 457-ஐ மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.
இக்கூட்டத்தில் ராமநாத புரம் வருவாய் கோட்டாட்சி யர் கோபு, வேளாண்மை துறை இணை இயக்குநர் (பொ) தனுஷ்கோடி, கூட்டு றவு சங்க மண்டல இணை பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கல்யாணசுந்தரம் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
- ராமேசுவரத்தில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய நகர்மன்ற தலைவர் நடவடிக்கை எடுத்தார்.
- போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சிக்கு நாள் தோறும் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் குடிநீர் தேவை உள்ளது. ஆனால் காவேரி கூட்டுகுடிநீர் திட்டத்தில் மூலம் தற்போது 5 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் முழுமையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்தி நகராட்சி நிர்வாகம் சார்பில் நம்புநாயகி அம்மன் கோவில் பகுதியில் 10 கிணறுகள் அமைக்கப்பட்டு அங்கிருந்த தண்ணீர் எடுக்கப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நகராட்சி குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குழாய் திட்டகுடி கார்னர் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியே றியது. இதனால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த நகர்மன்ற தலைவர் நாசர்கான், கவுன்சிலர் சத்தியமூர்த்தி மற்றும் நக ராட்சி ஊழியர்கள் நீருற்று நிலையத்தில் தண்ணீர் வெளியேற்ற குழாய் அடைக்கப்பட்டு சாலையில் தேங்கிய தண்ணீரை கழிவு நீர் கால்வாய் வழியாக வெளியேற்றினர். இதன் பின்னர் சேதமடைந்துள்ள குழாய் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- விருதுநகரில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டையை கண்காணிப்பு அலுவலர் வழங்கினார்.
- வட்டார அளவில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் மாற்றுத்திறனாளி கள் நல அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை இணைந்து பிறப்பு முதல் 18 வயது மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு வட்டார அளவில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் மாவட்ட கண்கா ணிப்பு அலுவலர் ஆனந்த் குமார் மாற்றுத்திறனாளிக் கான தேசிய அடையாள அட்டைகளை மாற்றுத்திற னுடைய குழந்தைகளுக்கு வழங்கினார்.
இம்முகாமில் மாற்றுத் திறன் கொண்ட 60 குழந்தை கள் கலந்து கொண்டனர். இதில் உதவி உபகரணங்கள் வேண்டி 7 மனுக்களும், இலவச பேருந்து அட்டை வேண்டி 20 மனுக்களும் பெறப்பட்டது. இதில் 18 குழந்தைகளுக்கு மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வருகிற 26-ந்தேதி நரிக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 29-ந்தேதி கல்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத் தில் 3.10.2023-ந்தேதி எம்.ரெட்டியபட்டி அரசு மேல்நிலை ப்பள்ளியிலும், அருப்புக்கோ ட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 5-ந்தேதி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியிலும், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 10-ந்தேதி எஸ்.எஸ்.அரசு மேல்நிலைப் பள்ளியிலும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 13-ந்தேதி எட்வர்ட் நடுநிலைப்பள்ளியிலும்.
வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 17-ந்தேதி அரசு மேல்நிலைப்பள்ளி யிலும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் 19-ந்தேதி மகாராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 21-ந்தேதி ஆர்.சி மேல்நிலைப்பள்ளி யிலும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 26-ந்தேதி நகராட்சி ஏ.வி.டி.உயர்நிலைப்பள்ளியிலும் பிறப்பு முதல் 18 வயது மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு ஒன்றிய அளவில் மருத்துவ முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடை பெற உள்ளது.
எனவே மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அடையாள அட்டை பெறுவ தற்கு தேவையான ஆவ ணங்களுடனும் (ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப் படம்-4) மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இம்முகாமில் மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் பிரமநாயகம் உட்பட பள்ளிக்கல்வித்துறை அலுவ லர்கள், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், பணியாளர் கள் கலந்து கொண்டனர்.
- கடலாடி ஒன்றியத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும்.
- ஒன்றிய மேலாளர் முனியசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.
சாயல்குடி
கடலாடியில் ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமையில் நடந்தது. ஆணையாளர் ஜெய ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, துணை சேர்மன் ஆத்தி, ஒன்றிய கவுன்சிலர் குமரையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மேலாளர் முனியசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். உதவியாளர் கணேசன் அறிக்கை சமர்ப்பித்தார்.
கூட்டத்தில் பனைக்குளம், மாரந்தை, ஓரிவயல், ஆகிய கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மழைக்காலம் வரும் முன் மழைநீர் தேங்கும் இடங்களை தேர்வு செய்து மழைநீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரத்து கால்வாய்களை சரி செய்து மழை நீர் கண்மாய்களுக்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆண்டிச்சிகுளம், களநீர்மங்களம், தொட்டியபட்டி கிராமங்களில் பெண்கள் குளிப்பதற்கு படித்துறை அமைக்க வேண்டும், சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி முதல் கிழக்கு கடற்கரை சாலை வரை தார்ச்சாலை அமைக்க வேண்டும், ஏர்வாடி 9-வது வார்டு பகுதியில் குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனங்குடி, கருங்குளம் ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும்.
சிறைக்குளம் கவுன்சிலுக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை களை சீரமைக்க வேண்டும், மடத்தா குளம் கிராமத்தில் அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கவுன்சிலர்கள் முன் வைத்தனர். இதில் கவுன்சிலர்கள் மாயகிருஷ்ணன், முனியசாமி பாண்டியன், அம்மாவாசி, பிச்சை, ஜெயச்சந்திரன், ராஜேந்திரன், வசந்தா கதிரேசன், ராமலட்சுமி, பெரோஸ் பானு ஜலில், குஞ்சரம் முருகன், பானுமதி ராமமூர்த்தி, செய்யதுஅலி பாத்திமா, முருகன் வள்ளி மலை ராஜ் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.
- பாம்பன் பாலத்தில் பழுதான மின்விளக்குகளை மாற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- இதனால் பாம்பன் பாலத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
ராமேசுவரம்
பாம்பன் கடலில் 100 அடி உயரத்தில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் பாலம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த பாலம் வழியாக அரசு வாகனங்கள், லாரிகள், சுற்றுலா பஸ், கார், வேன், உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் என நாள் தோறும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் ராமேசுவரத்திற்கு சென்று வருகின்றன.
ராமேசுவரம் புன்னிய தலமாக உள்ளதால் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இதனால் இரவு நேரங்களிலும் பாம்பன் பாலத்திலும் போக்குவரத்து அதிகமாக உள்ளது. பலரும் பாலத்தில் இறங்கி நின்று கடலை ரசிக்கின்றனர். மேலும் புகைப்படம் எடுத்து கொள்கின்றனர்.
இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பாலத்தில் ரூ. பல கோடி மதிப்பிட்டில் புனர மைப்பு பணிகள் நடை பெற்று வருகிறது. நீண்ட தொலைவில் வரும் போதே பாலத்தில் அழகை சிறப்பாக காணும் வகையில் 350-க்கும் மேற்பட்ட எல்.இ.டி மின் விளக்குகள் பொருத்தப் பட்டுள்ளது.இதற்கு பல லட்சம் செலவிடப்பட்டுள் ளது.
ஆனால் பல விளக்கு கள் சரிவர எரியாமல் உள்ளது. குறிப்பாக பாலம் ஏறும் மற்றும் இறங்கும் இடங்களில் உள்ள 100 க்கும் மேற்பட்ட விளக்குகள் முழுமையாக சரியாக எரியாமல் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனால் பாம்பன் பாலத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இந்த நிலையில் பக்தர்கள், பயணிகள், வாகன ஓட்டிகளின் நலனை கருதி பாம்பன் பாலத்தில் இரவு நேரங்களில் அனைத்து விளக்குகளும் எரியும் வகையில், பழுதடைந்த மற்றும் சரிவர எரியாத விளக்குகளை சீரமைத்து மாற்றியும் தர வேண்டும் என்றும், இரவு நேரத்தில் பாலத்தின் அனைத்து பகுதிகளிலும் போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொது மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் வேளாண் அலுவலகங்களில் விதை நெல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
- விதைநெல் கேட்டு வரும் அனைத்து விவசாயிகளுக்கு விதை நெல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பசும்பொன்
கமுதி, கடலாடி, முது குளத்தூர் ஒரு உள்ளிட்ட 3 தாலுகா வேளாண்மை அலுவலகங்களிலும் விதை நெல் பற்றாக்குறையால் விவசாயிகள் கூடுதல் விலை கொடுத்து வெளி சந்தையில் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, கடலாடி, முதுகுளத் தூர் உள்ளிட்ட 3 வட்டார வேளாண்மை அலுவல கங்களில் விவசாயி களுக்கான விதை நெல் 50 கிலோ எடையுள்ள மூடை மானிய விலையில் ரூ.1500க்கு வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக மேற்கண்ட 3 தாலுகாக்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில விவசாயிகள் விளை நிலங்களில் உழவு பணி களை மேற்கொண்டு வேளாண்மை அலுவல கங்களில் விதை நெல்லை வாங்கு விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கிடையே போதுமான அளவு விதை நெல் வட்டார வேளாண்மை அலுவல கங்களில் இருப்பு வைக்கப்படாததால் தாமதமாக சென்ற விவசாயி களுக்கு விதைநெல் இல்லை என வட்டார வேளாண் அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். இதனால் விவசாயிகள் வேறு வழியின்றி வெளிச்சந்தை யில் மற்றும் கடைகளில் 30 கிலோ எடையுள்ள நெல் மூடை ரூ.1200க்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை பெய்ய தொடங்கிய ஓரிரு நாளிலேயே விவசாயி களுக்கான விதை நெல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள தால், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வட்டார வேளாண்மை அலுவல கங்களில் விதை நெல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என 3 தாலுகா விவசாயிகள் கோரிக்கை வைத்து ள்ளனர்.
இதுகுறித்து கமுதி வட்டார வேளாண்மை உதவி இயக்கநர் சிவராணி கூறியதாவது:-
கமுதி தாலுகாவில் கடந்த 2 மாதங்களாக 30 டன் விதை நெல் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
'தற்போது விதை நெல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள தால் வெளி சந்தையில் வேளாண்மைத் துறை சார்பில் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்க முயற்சி செய்து வருகிறோம். கூடிய விரைவில் விதைநெல் கேட்டு வரும் அனைத்து விவசாயி களுக்கு விதை நெல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






