search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "City council president"

    • ராமேசுவரத்தில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய நகர்மன்ற தலைவர் நடவடிக்கை எடுத்தார்.
    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சிக்கு நாள் தோறும் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் குடிநீர் தேவை உள்ளது. ஆனால் காவேரி கூட்டுகுடிநீர் திட்டத்தில் மூலம் தற்போது 5 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

    இதனால் முழுமையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்தி நகராட்சி நிர்வாகம் சார்பில் நம்புநாயகி அம்மன் கோவில் பகுதியில் 10 கிணறுகள் அமைக்கப்பட்டு அங்கிருந்த தண்ணீர் எடுக்கப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நகராட்சி குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குழாய் திட்டகுடி கார்னர் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியே றியது. இதனால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த நகர்மன்ற தலைவர் நாசர்கான், கவுன்சிலர் சத்தியமூர்த்தி மற்றும் நக ராட்சி ஊழியர்கள் நீருற்று நிலையத்தில் தண்ணீர் வெளியேற்ற குழாய் அடைக்கப்பட்டு சாலையில் தேங்கிய தண்ணீரை கழிவு நீர் கால்வாய் வழியாக வெளியேற்றினர். இதன் பின்னர் சேதமடைந்துள்ள குழாய் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ×