என் மலர்
ராமநாதபுரம்
- கமுதி அருகே இயற்கை பேரிடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்தது.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பூக்குளம் கிராமத்தில் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இயற்கை பேரிடர் விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. தலைமை ஆசிரியை செல்வின் சாக்ரோஸ் முன்னிலை வகித்தார். கமுதி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் இயற்கை பேரிடர் கள் குறித்தும், மாணவ- மாணவிகள் தங்களை எப்படி தற்காத்து கொள்ள வேண்டும், பொதுமக்களை எப்படி காப்பாற்ற வேண்டும், எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கமளித்தனர்.
இதில் தீயணைப்பு வீரர்கள் உத்தண்ட சாமி, நாகச்சந்திரன், காந்தி, தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதே போல் சின்ன உடப்பங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியிலும் மாணவர்களுக்கு பேரிடர் விழிப்புணர்வு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
- கிரிக்கெட் போட்டியில் கீழக்கரை செய்யது ஹமிதா கலை, அறிவியல் கல்லூரி வெற்றி பெற்றது.
- அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற சுமார் 10 கல்லூரிகள் இப்போட்டியில் பங்கேற்றன.
கீழக்கரை
காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் பவள விழா ஆண்டினை முன்னிட்டு அழகப்பா பல் கலைக்கழக இணைப்பு கல்லூரி ஆசிரியர்களுக்கு இடையேயான பவள விழா ஆண்டு கிரிக்கெட் போட்டி வெகு சிறப்பாக நடைபெற் றது.
அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற சுமார் 10 கல்லூரிகள் இப்போட்டியில் பங்கேற்றன.
போட்டிகள் கடந்த இரண்டு நாட்களாக அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வித்துறை விளையாட்டு மைதானத்திலும் அழகப்பா பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்திலும் நடைபெற்றது. அரை இறுதிப் போட்டிகளில் விளையாட கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி, ராம நாதபுரம் சேதுபதி அரசினர் கலைக் கல்லூரி மற்றும் அழகப்பா பல்கலைக்கழகம் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றன.
இறுதிப்போட்டியில் கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ராமநாதபுரம் சேதுபதி அரசினர் கலைக் கல்லூரியை எளிதில் வீழ்த்தி வெற்றி கோப்பையை தட்டி சென்றது. முதலிடம் பெற்ற கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் ரவி பரிசு கோப்பையை வழங்கி பாராட்டினார்.
இப்பரிசளிப்பு விழாவில் கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனை வர் ராஜசேகர், அழகப்பா அரசு கலைக்கல்லூரி பொருளியல் துறை தலைவர் செல்வராஜ் உடற்கல்வி இயக்குனர் அசோக்குமார் அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமரன் உயிர் தகவ லியல் துறை பேராசி ரியர் ஜெயகாந்தன் மற்றும் சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க புரவலர் வரதராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
இப்போட்டிகளின் சிறந்த ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகனுக்கான விருது கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர்கள் தவசலிங் கம் மற்றும் ஜெபராஜ் ஆகி யோருக்கு வழங்கப்பட்டது.
காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் பவள விழா ஆண்டு கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசி ரியர்களுக்கு முகமது சதக் அறக்கட்டளையின் செயல் இயக்குனர் ஹாமிது இப்ராஹிம் மற்றும் இயக்குனர் ஹபீப் முகமது ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டினையும் தெரிவித்தனர்.
- வாரச்சந்தை நடத்த போலீசார் தற்காலிக தடையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் திங்கள் தோறும் வாரச்சந்தை நடைபெறும். இதன் மூலம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்வார்கள்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அபிராமம் பேரூ ராட்சி அலுவலகம் அருகே ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் வாகனம் நிறுத்துமிடம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் வாரச்சந்தை கட்டிட கட்டுமான பணி தொடங்கியது.
3 மாதங்களுக்கு முன்பு இந்த பணிகள் முடிந்த நிலையில் தற்போது வரை புதிய வாரச்சந்தை வளாகம் திறக்கப்படாமல் உள்ளது. புதிய கட்டிடத்தில் கடை களை ஒதுக்குவதில் பேரூ ராட்சி நிர்வாகம் பாரபட்சம் காட்டுவதாக வியாபாரிகள் புகார் தெரி வித்தனர்.
இது தொடர்பாக பரமக்குடி கோட்டாட்சியர் வாரச்சந்தையை ஆய்வு செய்தார். அப்போது புதிய வாரச்சந்தை கட்டிடத்தில் 180 கடைகள் உள்ளதாகவும், அதில் வாரச்சந்தை வியா பாரிகள், சங்க வியா பாரிகளுக்கு 120 கடை களும், புது வியா பாரிக ளுக்கு 60 கடைகளும் வழங்கப்பட உள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் இதற்கு வாரச்சந்தை வியா பாரிகள் எதிர்ப்பு தெரி வித்தனர்.
300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்ள நிலையில் 120 கடைகள் மட்டும் ஒதுக்கினால் பிரச்சினை உருவாகும். எனவே அபிராமத்தில் வாரச்சந்தையை நடத்த போதுமான இட வசதி இல்லை எனக்கூறி அருகில் உள்ள நத்தம் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடத்த வியாபாரிகள் முடிவு செய்தனர். இதனால் பொதுமக்கள் வாரச்சந்தை எங்கு நடைபெறும்? என குழப்பமடைந்தனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக கமுதி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் உத்தரவின் பேரில் இரு தரப்பினரையும் போலீசார் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்பட வில்லை. இதையடுத்து இந்த பிரச்சினையில் மாவட்ட கலெக்டர் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அபிராமத்தில் வாரச்சந்தை நடத்த அனுமதி கிடையாது என தற்காலிக தடை விதித்து போலீசார் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் உத்தரவிடப் பட்டுள்ளது.
இதன் காரணமாக அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 10 கி.மீ. தொலைவில் உள்ள கமுதிக்கு சென்று காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள் ளனர்.
எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
- இலங்கையில் இருந்து படகு மூலம் 2 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர்.
- கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரம் தேடி தமிழகம் வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
ராமேசுவரம்:
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெடுக்கடி காரணமாக உணவுப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை சேர்ந்த தமிழர்கள் அகதிகளாக தொடர்ந்து தனுஷ்கோடி வந்துள்ளனர்.
தற்போது வரை 250-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக படகு மூலம் தனுஷ்கோடி வந்தனர். அனைவரையும் பாதுகாப்புடன் அழைத்து சென்று உரிய விசாரணைக்கு பின் மண்டபம் கேம்ப் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மையத்தில் தனித்தனி வீடுகள் வழங்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இலங்கையில் இருந்து படகு மூலம் 2 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அவர்கள் இலங்கை வவுனியா பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது58), தலைமன்னார் பகுதியை சேர்ந்த நேச பெருமாள் (60) என்பதும் தெரியவந்தது.
கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரம் தேடி தமிழகம் வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மண்டபம் கடலோர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைக்கு பின் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- முதுகுளத்தூரில் புதிய வாரச்சந்தை வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
- கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதற்கான டெண்டர் விடப்பட்டு வாரச்சந்தை கட்டி முடிக்கப்பட்டது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பஸ் நிலையம் அருகே ரூ.2.42 கோடி மதிப்பீட்டில் புதிய வாரச்சந்தை வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதற்கான டெண்டர் விடப்பட்டு வார சந்தை கட்டி முடிக்கப்பட்டது.
ஆனால் 6 மாதங்கள் ஆன பின்பும் வாரச்சந்தை திறக்கப்படாமல் உள்ளது. முதுகுளத்தூரை சுற்றி 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் காய்கறிகளை வாங்குவதற்கு வார சந்தைக்கு வருவது வழக்கம். இதனால் முதுகுளத்தூர், அபிராமம், கமுதி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பயனடைந்து வருகின்றனர்.
தற்போது முதுகுளத்தூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் வியாழக் கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் வாடகை கொடுக்கப்படு வதாகவும், இதனால் அரசின் நிதி வீணடிக்கப் படுவதாகவும் மழைக் காலங்களில் இந்த வாரச்சந்தைைய பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும், மேலும் அடிப்படை வசதிகள் இல்லாததால் சிரமப்பட்டு வருவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் புதிய வாரச் சந்தை வளாகத்தை உடன டியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வரு கின்றனர்.இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும், பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் இதுகுறித்து எடுத்துக்கூறியும் நடவடிக்கை எடுக்கப்படா மல் உள்ளதாகவும், மழைக் காலம் தொடங்க உள்ளதால் வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடன டியாக புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வாரச்சந்தை வளாகத்தை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மண்டபம் அருகே மானாங்குடியில் 10 ஆயிரம் பனை விதை நடும் பணி தொடங்கியது.
- காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
மண்டபம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் மானாங்குடி ஊராட்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பில் 10 ஆயிரம் பனை விதை நடும் பணி தொடங்கியது.
காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பனை மர விதைகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் முஹமது சலாவுதீன், மாவட்ட தலைவர் ராஜ கோபால், துணை தலைவர் பத்ம நாபன், ராமநாதபுரம் நக ராட்சி தலைவர் கார்மே கம், துணை தலைவர் பிர வீன், புதுமடம் ஊராட்சி தலைவர் காமில் உசேன், இருமேனி ஊராட்சி தலை வர் சிவக்குமார், மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரவீன், ராம நாதபுரம் நகராட்சி கவுன்சி லர் ஜஹாங்கீர் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதைதொடர்ந்து மானாங்குடி ஊராட்சி நாக நாதர்கோவில்- சின்னுடை யார்வலசை வரை ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலையை மக்கள் பயன் பாட்டிற்கு காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
இதில் ஊராட்சி தலைவர் பரமேஸ்வரி பத்மநாபன், துணை தலைவர் புஷ்பம் மேகநாதன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழ்குமார், உஷா நந்தினி, ரஞ்சிதம், ஜோதி, நித்யா, ஊராட்சி செயலர் கருணாமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
- ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கழிவறை காட்சி பொருளானது.
- பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்
பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது.
ஆனால் முறையாக பராமரிப்பு இன்றி அக்னி தீர்த்த கடற்கரைக்கு செல்லும் வழியில் கழிவறை ஆண்டுக்கணக்கில் மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தனியார் கழிவறைக்கு ரூ.10 முதல் 20 வரை செலவு செய்கின்றனர்.
இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக வடக்கு ராஜகோபுரம் செல்லும் வழியில் ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் வகையில் ரூ.50 லட்சம் மதிப்பிட்டில் கழிவறை கட்டிடம் கட்டப் பட்டது.
பணிகள் முடிந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் காட்சி பொருளாக மாறி உள்ளது. மேலும் அங்கு முட்புதர்கள் வளர்த்து காணப்படுகிறது.
இதனால் கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராட வரும் பெண் பக்தர்கள், குழந்தைகள், முதியவர்கள் அவதிக்குள் ளாகி வருகின்றனர். இந்து அறநிலைத்துறையினர் ரூ.50 லட்சம் மதிப்பிட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கழிவறையை திறக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மண்டபம் முகாமில் இலங்கை அகதி தற்கொலை செய்து கொண்டார்.
- மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மண்டபம்
திருவண்ணாமலை மாவட்டம் கஸ்தம்பாடி இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் கணேசன். இவ ரது மகன் ரிசாந்தன் (வயது 34). இவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமை சேர்ந்த பவானி என்பவரை திருமணம் செய்து கொண்டு முல்லை நகரில் வசித்து வந்தார்.
அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்த ரிசாந்தன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவரது தாய் புவனேஸ்வரியிடம் செல்போனில் விரக்தியுடன் பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 23-ந் தேதி வீட்டின் அருகே ரிசாந்தன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக மருமகள் செல்போனில் புவனேசுவரிக்கு தகவல் தெரி வித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த புவனேசுவரி மற்றும் குடும்பத்தினர் மண்டபத்திற்கு விரைந்து வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ரிசாந்தனின் சகோதரர் சிவனேசன் கொடுத்த புகாரின் பேரில் மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கமுதி அருகே மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
- ஒவ்வோர் காளைக்கும் தலா 25 நிமிடங்கள் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நெறிஞ்சிபட்டி கிராமத்தில் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றறாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்றற வடமாடு மஞ்சு விரட்டு போட்டிக்கு ராமநாதபுரம் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன், துணைத் தலைவர் துரைப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங் களிலிருந்து 20-க்கும் மேற்பட்ட காளைகளும், 100-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
ஒவ்வோர் காளைக்கும் தலா 25 நிமிடங்கள் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன. இதில் பிடிபடாத காளை களின் உரிமையாளர்க ளுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்க ளுக்கும் ரொக்க பணம், நினைவு பரிசு வழங்கப்பட்டது.கமுதி மத்திய ஒன்றியச் செயலர் எஸ்.கே.சண்முகநாதன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ் செல்வி போஸ், துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- ராமேசுவரத்தில் கோவில் குளம் தூர்வாரும் பணி நடந்தது.
- இந்த குளம் வறண்டு துர்நாற்றம் வீசியது.
ராமேசுவரம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் முத்துராமலிங்கத்தேவர் நகர் பகுதியில் அங்காளபரமேஸ்வரி கோவில் குளம் வறண்டு துர்நாற்றம் வீசியது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிடும் முன்பு குளங்களை தூர் வரி தண்ணீர் சேமிக்கும் வகையில் குளம் தூர் வாரும் பணியை நகர்மன்ற தலைவர் நாசர்கான் தொடங்கி வைத்தார். இதில் ஆணையர் கண்ணன், துணைத்தலைவர் தட்சிணமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர் அர்ச்சணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கருணாநிதி நூற்றாண்டு விழா ஆலோசனை நடக்கிறது.
- ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் வருகிற 14-ந்தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவ லகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.கோவிந்தராஜூலு தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு பின் அவர் கூறியதாவது:-
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி வருகிற 14-ந்தேதி கருத்தரங்கு, பட்டிமன்றம் மற்றும் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற உள்ளன. இதில் அமைச் சர்கள் ராஜகண்ணப்பன், அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கலை போட்டிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டு சான்று வழங்கப்படும். மேலும் திண்டுக்கல் லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடைபெற உள்ளது.
விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணா கருப்பையா, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- முதுகுளத்தூர் அருகே கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
- அரசு பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே புஷ்பவனம் கிராமம் உள்ளது. இங்கிருந்து வளநாடு, செங்கப்படை வழியாக முதுகுளத்தூர் மற்றும் சத்திரக்குடி செல்வதற்கு 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க முடிவு செய்யப்ட்டது. இதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு டெண்டர் விடப் பட்டது.
இதை தொடர்ந்து மண் சாலை ஜே.சி.பி. எந்திரம் மூலம் தோண்டப்பட்டு சாலையின் இரு புறங்க ளிலும் ஜல்லிக்கற்கள் குவிக்கப்பட் டுள்ளன. ஆனால் பணிகள் தொடங்கப்படாமல் கி டப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூ ரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், அன்றாட வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அவதியடைந் துள்ளனர்.
சாலையில் ஜல்லிக் கற்கள் குவியலாக கிடப்ப தால் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. வளநாட்டில் இருந்து செங்கப்படை வழியாக புஷ்பவனம் கிராமத்திற்கு செல்லும் அரசு பஸ் கடந்த 3 மாதங்களாக இயக்கப்பட வில்லை. இதனால் அந்த பகுதியில் வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி மாணவர்கள், இரு சக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருவதாக அந்த பகுதி பொதுமக்கள் கூறுகின்ற னர். அவசர தேவைகளுக்கு கூட ஆம்புலன்ஸ், ஆட்டோக்கள் வர மறுப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மழை பெய்தால் சாலை சேறு, சகதியாகி நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது என்றும் அவர்கள் வேதனை தெரி விக்கின்றனர்.
இதுகுறித்து அதிகாரி களிடம் பலமுறை புகார் அளித்தும் நடவ டிக்கை எடுக்கப்படாமல் உள்ளதாகவும், இந்த சாலை பணியை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் சாலையில் ஜல்லிக்கற்கள் சிதறி கிடப்பதால் புஷ்பவனம் கிரா மத்திற்கு செல்லும் அரசு பஸ் செங்கப்படை கிராமத்தோடு திரும்பி விடுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக சாலையை சீரமைத்து புஷ்பவனம் கிராமம் வரை அரசு பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






