search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாரச்சந்தை நடத்த போலீசார் தற்காலிக தடை பொதுமக்கள் பாதிப்பு
    X

    புதிதாக கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை கட்டிடம்.

    வாரச்சந்தை நடத்த போலீசார் தற்காலிக தடை பொதுமக்கள் பாதிப்பு

    • வாரச்சந்தை நடத்த போலீசார் தற்காலிக தடையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் திங்கள் தோறும் வாரச்சந்தை நடைபெறும். இதன் மூலம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்வார்கள்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அபிராமம் பேரூ ராட்சி அலுவலகம் அருகே ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் வாகனம் நிறுத்துமிடம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் வாரச்சந்தை கட்டிட கட்டுமான பணி தொடங்கியது.

    3 மாதங்களுக்கு முன்பு இந்த பணிகள் முடிந்த நிலையில் தற்போது வரை புதிய வாரச்சந்தை வளாகம் திறக்கப்படாமல் உள்ளது. புதிய கட்டிடத்தில் கடை களை ஒதுக்குவதில் பேரூ ராட்சி நிர்வாகம் பாரபட்சம் காட்டுவதாக வியாபாரிகள் புகார் தெரி வித்தனர்.

    இது தொடர்பாக பரமக்குடி கோட்டாட்சியர் வாரச்சந்தையை ஆய்வு செய்தார். அப்போது புதிய வாரச்சந்தை கட்டிடத்தில் 180 கடைகள் உள்ளதாகவும், அதில் வாரச்சந்தை வியா பாரிகள், சங்க வியா பாரிகளுக்கு 120 கடை களும், புது வியா பாரிக ளுக்கு 60 கடைகளும் வழங்கப்பட உள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் இதற்கு வாரச்சந்தை வியா பாரிகள் எதிர்ப்பு தெரி வித்தனர்.

    300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்ள நிலையில் 120 கடைகள் மட்டும் ஒதுக்கினால் பிரச்சினை உருவாகும். எனவே அபிராமத்தில் வாரச்சந்தையை நடத்த போதுமான இட வசதி இல்லை எனக்கூறி அருகில் உள்ள நத்தம் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடத்த வியாபாரிகள் முடிவு செய்தனர். இதனால் பொதுமக்கள் வாரச்சந்தை எங்கு நடைபெறும்? என குழப்பமடைந்தனர்.

    இந்த பிரச்சினை தொடர்பாக கமுதி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் உத்தரவின் பேரில் இரு தரப்பினரையும் போலீசார் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்பட வில்லை. இதையடுத்து இந்த பிரச்சினையில் மாவட்ட கலெக்டர் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அபிராமத்தில் வாரச்சந்தை நடத்த அனுமதி கிடையாது என தற்காலிக தடை விதித்து போலீசார் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் உத்தரவிடப் பட்டுள்ளது.

    இதன் காரணமாக அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 10 கி.மீ. தொலைவில் உள்ள கமுதிக்கு சென்று காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள் ளனர்.

    எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×