என் மலர்
ராமநாதபுரம்
- கார்த்திகை தீப திருவிழாவில் ராமேசுவரம் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
- திருச்சுழியில் திருமேனிநாதர் துணைமாலை அம்மன் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
ராமேசுவரம்
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் கார்த்திகை பவுர்ணமியை யொட்டி சிவபெருமான் திரிபுரம் எரித்த புரா ணத்தின் அடிப்படையில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி சிறப்பாக நடை பெறும். அதன்படி நேற்று கோவில் முன்பு மிகப்பெரிய சொக்கப்பனை உருவாக்கப்பட்டு கொளுத்தப்பட்டது.
தொடர்ந்து கோவிலில் சுவாமி-அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு பூஜை, தீபாரதணை நடந்தது. இதன் பின் கிழக்கு கோபுரம் முன்புள்ள மண்ட பத்திற்கு சுவாமி-அம்மன் எழுந்தருளினர். கிழக்கு கோபுர வாசல் முன்பு அமைக்கப்பட்டிருந்த சொக்கபனைக்கு கோவில் தலைமை குருக்கள் உதய குமார் தலைமையில் பூஜைகள் நடைபெற்றது.
சொக்கப்பனை கொளுத் தப்பட்ட பின்னர் சுவாமி அம்பாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டு 3-ம் பிர காரத்தில் வீதி உலா நடந்தது.
ஏற்பாடுகளை துணை ஆணையர் சிவராம் குமார், உதவி ஆணையர் பாஸ்கரன், ஆய்வர் பிரபாகரன் செய்தி ருந்தனர். போலீஸ் துணை சூப்பிரண்டு உமாதேவி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் வனத்துறை கட்டுப் பாட்டில் இருக்கும் சஞ்சீவி மலையில் குமாரசாமி கோவிலில் உள்ள மூலவர், உற்சவர் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தது. மாலை 6 மணிக்கு மேல் மலை உச்சியில் அமைக் கப்பட்டிருந்த தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து சந்தான கிருஷ்ணன் கோயில் உச்சியிலும் மகா தீபம் ஏற்றப் பட்டது. இன்று மாலை 6 மணிக்கு மேல் முருகன், சந்தான கிருஷ்ணன் மற்றும் கம்பத்து பெருமாள் கோயில்களிலும் மகா தீபம் ஏற்றப் பட உள்ளது.

கார்த்திகை மகா தீபத்தையொட்டி திருச்சுழி திருமேனிநாதர்- துைண மாலை அம்மன் கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்ததையும், திடியன் மலை மீது கொப்பரையில் ஏற்றப்பட்ட மகா தீபத்தையும் படத்தில் காணலாம்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் திருமேனிநாதர் துணைமாலை அம்மன் கோவிலில் கார்த்திகையை முன்னிட்டு கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருமேனிநாதர், துணை மாலையம்மன் உட்பட பஞ்சமூர்த்தி உற்சவ சிலை களுக்கு மஞ்சணை, மஞ்சள், சந்தனம், விபூதி, பால், பன்னீர், இளநீர் உள்பட 18-க்கும் மேற்பட்ட வாசனை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. பின்னர் சுவாமி, அம்ம னுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
தொடர்ந்து சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 15 அடி உயரத்திற்கு கோபுர வடிவில் சொக்கப்பனை உருவாக்கப்பட்டு அதற்கு தீபாராதனைகள் காட்டப்பட்டு பின்பு கொளுத்தப்பட்டது. திருச்சுழி, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சுழி சரக போலீஸ் இன்ஸ்பெக்டர் மணி கண்டன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மானாமதுரை
மானாமதுரை அருகே குறிச்சியில் உள்ள வழிவிடு பெரியநாச்சி அம்மன் கோவிலில் உள்ள செந்தில் ஆண்டவர் சன்னதியில் கார்த்திகை மகாதீப விழா நடந்தது. இதில் பாலா பிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் முருக பெருமான் காட்சியளித்தார். மானாமதுரை வைகைஆற்று கரையில் உள்ள ஆனந்த வல்லி சோமநாதர் கோவில், சுந்தரபுரம் தெருவில் உள்ள சுந்தர விநாயகர் கோவில், பைபாஸ் சாலையில் உள்ள வழிவிடு முருகன் கோவில் வேம்பத்தூர் கைலாசநாதர் கோவில், இடைக்காட்டூர் பாலமுருகன் கோவில், கட்டிக்குளம் ராமலிங்கம் சுவாமி கோவில்,
தாய மங்கலம் அருகே உள்ள அலங்காரகுளம் சோனையா சுவாமி வைகைகரை அய்யனார் கோவில் ஆகிய கோவில்களி லும் கார்த்திகை மகா தீபத்தையொட்டி சொக்கபனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் திடியன் மலையில் 2 ஆயிரம் அடி உயரத்தில் 100 மீட்டர் திரி, நெய் கொண்டு தயாரிக்கப்பட்ட பெரிய கொப்பரையில் கார்த் திகை மகாதீபம் ஏற்றப் பட்டது. தொடர்ந்து மலை ே மல் உள்ள தங்கமலை ராமர் கோவில், அடி வாரத்தில் உள்ள கைலாச நாதர் சமேத பெரிய நாயகி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்றனர்.
- கமுதி அருகே மருதங்கநல்லூரில் நடந்த வாக்காளர் திருத்த சிறப்பு முகாமை தி.மு.க. தொகுதி பொறுப்பாளர் ஆய்வு செய்தார்.
- வாக்காளர் சரிபார்ப்பு பணியை விரைந்து முடித்திட ஆலோசனை வழங்கினார்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மருதங்க நல்லூர் கிராமத்தில், வாக் காளர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் குறித்த சிறப்பு முகாம் நேற்று நடை பெற்றது. இந்த முகாமினை முதுகுளத்தூர் தொகுதி தி.மு.க. பொறுப்பாளரும், கட்சியின் உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினருமான குழந்தைவேலு நேரில் பார் வையிட்டார்.
மேலும் வாக்காளர் சரி பார்ப்பு பணியை விரைந்து முடித்திட ஆலோசனை வழங்கினார். இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் வாசு தேவன், நகரச் செயலாளர் பாலமுருகன், ஊராட்சி மன்ற தலைவர் காவடி முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 1,028 பயனாளிகளுக்கு இ-பட்டாவை கலெக்டர் விஷ்ணுசந்திரன் வழங்கினார்.
- பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், புல்லங்குடி ஊராட்சி, அண்ணா பல்க லைக்கழக பொறியியல் கல் லூரி கூட்டரங்கில் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை துறை யின் மூலம் டாக்டர் கலை ஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பயனாளிகளுக்கு இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
எம்.எல்.ஏ.க்கள் ராமநாத புரம் காதர்பாட்சா முத்து ராமலிங்கம், பரமக்குடி செ. முருகேசன், திருவா டானை ராம.கருமாணிக்கம் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு இ-பட்டா வழங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-
டாக்டர் கலைஞரின் நூற் றாண்டு விழாவையொட்டி பல்வேறு கட்டங்களாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் ராமநா தபுரம் வருவாய் கோட்டத் திற்கு உட்பட்ட ராமநாதபுரம், கீழக்கரை, ஆர்.எஸ்.மங்க லம், திருவாடனை, ராமேசுவ ரம் ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட 1028 பயனாளிக ளுக்கு இ-பட்டா வழங்கப்ப டுகிறது.
இதில் பயன்பெறும் பய னாளிகளில் ஒரு பகுதியினர் தங்கள் குடியிருந்து வரும் வீடுகளுக்கு இதுவரை பட்டா கிடைக்காமல் இருந்து இன்று கிடைக்கப் பெற்று இருப்பீர்கள். மேலும் இதுவரை பட்டா கிடைக்காமல் வாடகை குடி யிருப்பில் இருந்தவர்க ளுக்கு இன்று பட்டா கிடைக் கப்பெற்று இருக்கும். இப்படி பல்வேறு நிலைக ளில் பட்டா பெறாமல் இருந்த பயனாளிகளுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத் தில் முதலமைச்சர் மீனவர் மாநாட்டிற்கு வருகை தந்த பொழுது சுமார் 4,000 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் நலத்துறையின் மூலம் 5,375 பேருக்கும், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் மூலம் 1,808 பேருக்கும் பட்டா வழங்கப் பட்டுள்ளது. நத்த பட்டா 1,086 பேருக்கு வழங்கப்பட் டுள்ளது. அதுமட்டுமின்றி மாவட்டத்தில் இதுவரை வீட்டுமனை பட்டா வேண்டி சுமார் 4000 மனுக்கள் வரப் பெற்றுள்ளது. அவர்களுக் கும் விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
சட்டமன்ற உறுப்பினர் கள் வேண்டுகோளுக்கி ணங்க பொதுமக்களின் கோரிக்கைகளை தங்கள் பகுதிக்கு சென்று சிறப்பு முகாம் நடத்தி கோரிக்கை களை நிறைவேற்றிட கேட் டுக்கொண்டுள்ளார். அதே போல் ஊராட்சி பகுதிக ளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொது மக்க ளின் கோரிக்கைகள் நிறை வேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
தொடர்ந்து 1,028 பயனா ளிகளுக்கு இ-பட்டாவினை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வரு வாய் அலுவலர் கோவிந்த ராஜலு, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் திசைவீரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, ராம நாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரபாகரன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவன்னி, ராமநாதபுரம் நகர்மன்ற துணைத் தலைவர் பிரவீன் தங்கம், புல்லங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் முனியம்மாள் மற்றும் வட் டாட்சியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தொண்டி அன்ன பூரணேஸ்வரி சமேத நம்பு ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.
- பக்தர்களுக்கு அபிஷேக பால், பஞ்சாமிர்தம், சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.
தொண்டி
தொண்டி அருகே நம்புதாளையில் மிகவும் பழமையான சிவாலயமான அன்ன பூரணேஸ்வரி சமேத நம்பு ஈஸ்வரர் கோவிலில் பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு பால், பழம், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், அரிசி மாவு, பழங்களால் சிறப்பு அபிேஷகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்தி வீதி உலா நடைபெற்றது. வாசு, சுவாமிநாதன் ஆகியோர் பூஜை ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
அதே போல் தொண்டி சிதம்பரேஸ்வரர், திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வரர், தளிர் மருங்கூர் உலகேஸ்வரர் தீர்த்தாண்டதானம் சர்வ தீர்த்தேஸ்வரர் எஸ்.பி.பட்டிணம் ஏகாம்பரேஸ்வரர், ஓரியூர் சேயுமானவர் ஆகிய சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அபிஷேக பால், பஞ்சாமிர்தம் மற்றும் சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.
- ராமநாதபுரத்தில் குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு வாகன பேரணி நடந்தது.
- இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் குடும்ப நலத்துறையின் மூலம் ஆண்களுக்கான நிரந்தர குடும்பநல அறுவை சிகிச்சைக்கான விழிப்பு ணர்வு வாகனம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறையின் மூலம் ஆண்களுக்கான நிரந்தர குடும்பநல அறுவை சிகிச்சை (நவீன வாசக்டமி) வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சைக்கான சிறப்பு முகாம் ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 4-ந்தேதி வரை அனைத்து வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறுகின்றன.
இம்முகாமில் ஆண்க ளுக்கான குடும்பநல அறுவை (நவீன வாசக்டமி) சிகிச்சை வழங்கப்படுகிறது. இதுவரை தற்காலிக மற்றும் நிரந்தர குடும்பநல அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் உயர்வரிசை குழந்தை பட்டியலில் ஏராளமான தாய்மார்கள் உள்ளனர். சிலருக்கு குடும்பநல அறுவை சிகிச்சை ஏற்று கொள்ள முடியாத வகையில் உடல்நிலை பிரச்சினைகள் இருக்கும். இதனால் 49 வயது வரை குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உண்டு.
இப்படிப்பட்ட நிலையில் மருத்துவ சிக்கல் ஏற்பட்டு பிரசவத்தின்போது உயிர் இழக்கும் ஆபத்து ஏற்படு கின்றன. இதை தவிர்த்திடும் வகையில் ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படு வதுடன் இத்தகைய சிறப்பு முகாம் தற்பொழுது நடை பெற்று வருகிறது. தகுதி யானவர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் குடும்ப நலத்துறை துணை இயக்குநர் சிவானந்தவல்லி, இணை இயக்குநர் சகாய ஸ்டீபன் ராஜ், அலுவலக கண்கா ணிப்பாளர் ஆரோக்கியராஜ், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் திலீப்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பரமக்குடியில் அரசினர் மாணவிகள் விடுதி புதிய கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
- பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் அடிக்கல் நாட்டினார்.
பரமக்குடி
பரமக்குடி பொன்னையாபுரத்தில் தாட்கோ மூலம் ரூ. 2.78 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 850 சதுர மீட்டர் பரப்பளவில் கல்லூரி மாணவிகள் விடுதி புதிதாக கட்டப்பட உள்ளது. இதற்கு பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பரமக்குடி நகர்மன்ற தலை வர் சேது.கருணாநிதி, மதுரை கோட்ட தாட்கோ செயற்பொறியாளர் பச்சவ டிவு, உதவி பொறியாளர் சிதம்பரம் தானு, நகர்மன்ற உறுப்பினர் மாரியம்மாள், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சம்பத், நகர மாணவரணி செயலாளர் மகேந்திரன், வார்டு செயலாளர் அருண்குமார் மற்றும் பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர் சந்திரசேகர், வழக்கறிஞர் கிருஷ்ண மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரத்தில் அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு நடத்தினார்.
- பொதுப் பணித்துறையின் மூலம் அவ்வப்போது கண் காணித்து தேவையான பணிகளை விரைந்து மேற் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண் டார். இந்த ஆய்வின்போது கலெக்டர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொடர் மழையின் காரணமாக தேங்கி உள்ள மழைநீரை உடனடியாக அப்புறப் படுத்தும் பணிகளை மேற் கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டி டங்களை பார்வையிட்டது டன், மருத்துவ பயன் பாட்டிற்கு உள்ள குடிநீர் இணைப்புகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தின் செயல்பாடு போன்றவற்றை பார்வை யிட்டத்துடன், பொதுப்பணித்துறையின் மூலம் அவ்வப்போது கண் காணித்து தேவையான பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியின் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் செந்தில்குமார், கண்காணிப்பு மருத்துவ அலுவலர்கள் மலர்வண்ணன், சிவகுமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- ராமநாதபுரம் அருகே இரவு நேரங்களில் சில கும்பல் வாகன ஓட்டிகளை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது.
- போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள பனைக்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் பிரதான சாலையாக நதிப் பாலம்-பனைக்குளம் சாலை இருந்து வருகிறது.
இந்த நிலையில் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகனங்களை வழிப்பறி கொள்ளையர்கள் மறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளை தாக்கி பொருட்களை கொள்ளை யடித்துச் செல்லும் சம்பவம் அடிக்கடி நடப்பதாக பொது மக்கள் புகார் தெரி விக்கின்றனர்.
கடந்த காலங்களில் இந்த சாலையில் கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், பயணிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. போலீசாரிடம் புகார் அளித்தும் தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் நதிப்பாலம்-பனைக்குளம் சாலையில் புறக்காவல் நிலையம் அமைத்து தர வேண்டும் என அந்தப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரு கின்றனர்.
மேலும் இந்த சாலையில் இரவு நேரங்களில் போலீ சார் ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர். போலீசார் தொடர்ந்து ரோந்து சென்றால் மட்டுமே வழிப்பறி சம்பவங்களை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பனைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:-
பனைக்குளம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் ராமநாத புரம் நகர் பகுதியில் வேலை பார்த்து வருகின்றனர். இந்ந நிலையில் வேலைக்குச் செல்பவர்கள் இரவு நேரத்தில் ஊர் திரும்ப வேண்டியுள்ளது. அப்படி வரும் தொழிலாளர்கள், பயணிகளை குறி வைத்து இருசக்கர வாகனங்கள், கார்களை வழிமறித்து வாகன ஓட்டிகள், பயணிகளை தாக்கி வழிப்பறிகளில் ஈடுபடுகின்றனர்.
இது தொடர்பாக ஏராளமான புகார்கள் தேவிபட்டினம் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. இருப்பினும் அந்த குற்றவாளிகள் யார்? என கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது.
இந்த நிலையில் புறக்காவல் நிலையம் அமைத்து தொடர் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட வேண்டும். அப்போது தான் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மண்டபத்தில் தி.மு.க. வார்டு செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பாடுபட அறிவுரை வழங்கப்பட்டது.
மண்டபம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., வழிகாட்டுதலின் பேரில் நகர் தி.மு.க. சார்பில் வருகின்ற 2024 நாடாளு மன்ற தேர்தல் தொடர்பான வார்டு செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு அவைத்தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். பேரூராட்சி கவுன்சிலர் சாதிக் பாட்ஷா வரவேற்றார். கவுன்சிலர்கள் முகமது மீரா சாகிப், வாசிம் அக்ரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மண்டபம் பேரூர் கழக செயலாளர் அப்துல் ரகு மான் மரைக்காயர் கூட்டத் தில் பேசுகையில், ராமநாத புரம் மாவட்டத்தில் வரு கின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கு அனைத்து வார்டு செயலாளர்களும் பாடுபட வேண்டும் என்று பேசினார்.மாவட்ட துணை அமைப் பாளர் கே.ஜி.சுகுமார், முன் னாள் பொருளாளர் குலாம், மாவட்ட பிரதிநிதி பகுருதீன், ஐ.டி. விங்க் இளையராஜா, வெள்ளைச்சாமி, பேபி, வார்டு செயலாளர்கள் தில்லை நிஷாந்த், கஜினி, ரவி, களஞ்சியம், கருப்பசாமி உட்பட பலர் பங்கேற்றனர். நிர்வாகி அயுப்கான் நன்றி கூறினார்.
- ராமநாதபுரத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது.
- சிறந்த கூட்டுறவு நகர வங்கியாக அபிராமம் கூட்டுறவு நகர வங்கியும் தேர்வு செய்யப்பட்டது.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்ட அளவில் சிறந்த விற்பனை சங்கமாக கமுதி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனையாளர் கடன் சங்கமும், சிறந்த கூட்டுறவு நகர வங்கியாக அபிராமம் கூட்டுறவு நகர வங்கியும் தேர்வு செய்யப்பட்டது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்ற 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட அளவில் சிறந்த விற்பனை சங்கமாக கமுதி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனையாளர் கடன் சங்கம் தேர்வு செய்யப்பட்டது. இச்சங்கத்தின் மேலாண்மை இயக்குனர் வேல்முருகன், மேளாளர் கண்ணன், பொது மேலாளர் போஸ் உள்ளிட்டோரிடம் கூட்டுறவு சங்கங்கத்தின் மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார், இணைப்பதிவாளர் மனோகரன் ஆகியோர் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். அதேபோல் சிறந்த நகர வங்கியாக அபிராமம் கூட்டுறவு நகர வங்கி தேர்வு செய்யப்பட்டது. இதற்கான கேடையத்தை அச்சங்கத்தின் கூட்டுறவு சார்பதிவாளர் வேல்முருகன் மற்றும் செயலாளர் முகமது யூசுப் பெற்றுக்கொண்டனர்.
- முதுகுளத்தூர் அருகே கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
- ஊராட்சி மன்றத்தலைவர் சீதா நாகராஜன் தலைமை தாங்கினார்.
பசும்பொன்
முதுகுளத்தூர் அருகே ஒருவானேந்தல் கிராமத்தில் கால்நடை சுகாதார மருத்துவ முகாம் நடைபெற்றறது. சிக்கல் கால்நடை மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சீதா நாகராஜன் தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவர் அரவிந்த் (சிக்கல்), அரவிந்தன் (சாயல்குடி), கால்நடை ஆய்வாளர்கள் ரெஜினாராணி, உஷா, கால்நடை உதவியாளர் பாலதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு குடல் புழு நீக்கம், சினை பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகளை செய்தனர்.
- உச்சிப்புளி அருகே ஆழ்கடல் மீன்பிடி தொழில்நுட்பம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
- முகாமை கலெக்டர் விஷ்ணுசந்திரன் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே அரியமான் கிராமத்தில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயல லிதா மீன்வளப் பல்கலைக்க ழகத்தில் மீன்வளத்தொழில் காப்பகம், தொழில்சார் பயிற்சி இயக்குனரகம் மற்றும் ராமநாதபுரம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து ஆழ்கடல் மீன்பிடித் தொழில்நுட்பம் குறித்த ஒரு வாரகால உள்வளாக பயிற்சியை தொடங்கியது.
அதற்கான தொடக்க விழா நேற்று அரியமான் கிராமத்தில் நடந்தது. விழா விற்கு மீன்வளத் தொழில் காப்பக இயக்குநர் முனை வர் நீதிச்செல்வன், தலைமை தாங்கினார். உத விப் பேராசிரியர் கலைய ரசன் வரவேற்றார். ராமநா தபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி முகாமை துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசு கையில், மீனவர்கள் படகு ஓட்டுநர் உரிமம் பெற வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். ராமேசுவரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெயிலானி ஆழ்கடல் மீன்பிடிப்பு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாக கூறினார்.
பயிற்சியில் ராமேசுவரம் பகுதியை சார்ந்த 20 மீனவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு திறன் மேம்பாட் டுக் கழகம், உதவி இயக்குநர் குமரவேல், உதவி இயக்குநர் கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கேப் டன் சகாயரெக்ஸ் இயக்கு னரக ஊழியர்களுடன் இணைந்து விழா ஏற் பாட்டை செய்தார். மாணவி கிருத்திகா நிகழ்ச்சியை தெகுத்து வழங்கினார். தானி யங்கி பொறியாளர் சிவ சுடலைமணி நன்றி கூறினார்.






