என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • கமுதி அருகே கொலை செய்ய பதுங்கியிருந்த 7 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
    • இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டை மேடு மின்சார அலுவலகம் பகுதியில் கமுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த 7 பேர் கொண்ட கும்பல் போலீசாரை கண்டதும் தப்ப முயன்றது. சுதாரித்து கொண்ட போலீசார் 7 பேரையும் சுற்றி வளைத்தனர்.

    அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவர்களது காரை சோதனை செய்த போது 5 கத்திகள், வாள், மிளகாய் ெபாடி ஆகியவை இருந்தது. இதையடுத்து போலீசார் 7 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் மதுரையை சேர்ந்த பாண்டியராஜன் (33), சரவணகுமார் என்ற தக்கலை சரவணன்(24), வல்லரசு (22), காளீசுவரன் (33), சிவசங்கர் என்ற சிவகுமார் (22), உசைன் (24) என தெரிய வந்தது.

    இவர்கள் மண்டல மாணிக்கம் மறக்குளத்தை சேர்ந்த பாலகுமார் என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்ய வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 7 பேரையும் கைது செய்தனர்.

    இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராமநாதபுரத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • அவரது படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    ராமநாதபுரம்

    மறைந்த அ.தி.மு.க, பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் ராமநாதபுரத்தில் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஏ. முனியசாமி ஆலோ சனையின் பேரில், நகர் செயலாளர் பொறியாளர் பால்பாண்டியன் ஏற்பா ட்டில் அரண்மனை அருகே ஜெயலலிதா படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரத்தினம், மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் சேது பாலசிங்கம், ஸ்டாலின் ஜெயச்சந்திரன், சரவணகுமார், ராமநாதபுரம் நகர் துணைச் செயலாளர் ஆரிப் ராஜா, முன்னாள் நகர் மன்ற தலைவர் ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் பாரதி நகரில் ராமநாதபுரம் (தெற்கு) ஒன்றியம், ராமநாதபுரம் நகர் (கிழக்கு) அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான தர்மர் தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இதில் மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ராஜேந்திரன், ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்து முருகன், ராமநாதபுரம் நகர் செயலாளர் (கிழக்கு) பாலசுப்பிரமணியன், மாவட்ட இணை செய லாளர் சித்ரா, மாவட்ட துணை செயலாளர் கற்பகம், தொகுதி செயலாளர் பரமக்குடி நவநாதன், முதுகுளத்தூர் மூக்கையா, திருவாடானை ராமகிருஷ்ணன், ராமநாத

    பு ரம் முத்துப்பாண்டி, ஒன்றிய செயலாளர்கள் உடையத்தேவன், சர வணன், நந்திவர்மன், கோட்டைச்சாமி, ரஜினிகாந்த், கரிகாலன், செந்தில் குமார், சண்முக பாண்டியன், கே.பாண்டி சரவணன், சுரேஷ், சிவக்குமார் சீனிமாரி, அழகர்சாமி மற்றும் பலர் பங்ேகற்றனர்.

    • ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரம் பழுது ஏற்பட்டுள்ளது.
    • இதனால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையான பின் நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளது. இருப்பினும் முறையான சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.

    இங்குள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரம் வழியாக மூளை, தண்டுவடம், நரம்பு, எலும்புகளில் ஏற்பட்டுள்ள நோய்களின் தன்மை, மூளையில் கட்டி, மூட்டு வலி, மாரடைப்பு, விபத்தினால் தலையின் உட்புறம் ஏற்படும் காயங்களை துல்லியமாக காட்டவும், கண்டறிய முடியாத நோய்களுக்கான காரணங்களை அறியவும் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பெரிதும் உதவுகிறது.

    இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி தொழில் நுட்ப காரணங்களால் பழுதாகியது. இதனை சரி செய்ய சென்னையில் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் வந்து ஆய்வு செய்தனர். பழுது சரி செய்யப்படாததால் தற்போது அவசர கால சிகிச்சைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    தற்போது நோயாளிகள் வெளியே தனியார் ஸ்கேன் சென்டருக்கு அனுப்பப்படுகின்றனர். முதல்வரின் காப்பீட்டு திட்டம் இருந்தாலும் பணம் கொடுத்து எடுப்ப வர்களுக்கு மட்டுமே அங்கு முன்னுரிமை தரப்படுகிறது. இதனால் உரிய நேரத்தில் சோதனை மேற்கொண்டு சிகிச்சை பெற்றால் தான் உயிரைக் காத்திட முடியும் என்பதால் எங்கு செல்வது என தெரியாமல் தவிக்கின்றனர்.

    எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வேண்டிய அவசர கேஸ்களை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கோ அல்லது மதுரை ராஜாஜி மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கோ அனுப்ப வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் கால தாமதம் நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தாகிவிடும் நிலை உள்ளது.

    எந்திரங்களில் தொழில் நுட்ப கோளாறுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாத துதான். ஆனால் மக்களின் உயிர் பிரச்சினையில் முன்னுரிமை கொடுத்து போர்க்கால அடிப்படையில் சரிசெய்வது அவசியம். தற்போது எம்.ஆர்.ஐ., ஸ்கேன் சரியாக 15 நாட்களுக்கு மேல் ஆகும் என கூறப்பட்டது.

    ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் டாக்டர். செந்தில்குமார் கூறுகையில், இந்த ஸ்கேன் எந்திரம் ஜெர்மன் நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரி க்கப்பட்ட அதிநவீன எம்.ஆர்.ஐ., ஸ்கேன். பெங்களூருவில் இருந்தும் இதற்கான வல்லுநர்கள் வந்து சரி செய்யும் பணி நடக்க உள்ளது. 3 நாட்களுக்குள் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சரி செய்யப்படும், என்றார்.

    • வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு செய்தனர்.
    • 1,500-க்கும் மேற்பட்ட பருவகால தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

    தமிழக அரசின் நேரடி நிர்வாகம் மூலம் வாலி நோக்கத்தில் 1974-ம் ஆண்டு தமிழ்நாடு உப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது. வணிக ரீதியாக 1978-ம் ஆண்டு முதல் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சுமார் 5,236 ஏக்கர் நிலப்பரப்பளவில் செயல்படுகின்றன.

    1,500-க்கும் மேற்பட்ட பருவகால தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் முதல்வர் உத்தரவுக்கிணங்க சட்ட மன்றத்தில் அறிவித்த படி அயோடின் கலந்த கல் உப்பு மற்றும் சுத்திக ரிக்கப்பட்ட அயோடின் கலந்த தூள் உப்பு ஆகியவற்றை நெய்தல் உப்பு என்ற வணிகப் பெயரில் வெளிச்சந்தையில் உற்பத்தி செய்திட ஏதுவாக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

    இதுவரை 25 டன் நெய்தல் உப்பு விற்பனை செய்யப்பட்டுள்ளது மேலும் அயோடின் செரியூட்டப்பட்ட உப்பு மற்றும் இருவித செரியூட்டப்பட்ட உப்பினை பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இப்பகுதியில் வேலை வாய்ப்பு அதிகரிக்க தேவையான உட் கட்ட மைப்புகளை மேம்படுத்த மாவட்ட கலெக்டர் மூலம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் இப்பகுதியில் பொதுமக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஆய்வின்போது உப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜாமணி, மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி, மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், தமிழ்நாடு அரசு நிறுவன தனி அலுவலர் தில்லி குமார், திட்ட மேலாளர் விஜயன், துணை மேலாளர்கள் ராமகிருஷ்ணன், வெங்கடேசன், முத்து செல்வன், மேலக்கிடாரம் ஒன்றிய கவுன்சிலர் பார்வதி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஜெயபாலன், ஆப்பனூர் ஆறுமுகவேல், குலாம் முகைதீன் அமைச்சரின் நேர்முக உதவியாளர் கண்ணன், முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலக அலுவலர்கள் சத்தியேந்திரன், டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • பூவளத்தூரில் அரசு சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
    • கால்நடை வளர்பவர்களுக்கு கால்நடை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.

    பரமக்குடி

    பரமக்குடி அருகே பூவளத்தூர் கிராமத்தில் அரசு சார்பில் கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய குழு துணைத்தலைவர் பூமிநாதன் முன்னிலை வகித்தார்.

    முகாமினை போகலூர் ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகரன் தொடங்கி வைத்தார். கால்நடை மருத்துவர்கள் நந்தினி, ரஜினி ஆகியோர் குடற்புழு நீக்கம், மலடு நீக்க சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சைகளை அளித்தனர்.

    இந்த முகாமில் சிறந்த கால்நடை பராமரிப்பாளர் மற்றும் கன்றுகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி வழங்கினார். மேலும், ஊட்டச்சத்து குறைபாடுடைய கால்நடை களுக்கு தாது உப்பு கலவைகளும், ஊறுகாய் புற்களும் வழங்கப்பட்டது.

    கால்நடை வளர்பவர்களுக்கு கால்நடை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.

    முகாமில் வழக்கறிஞர் பரமசிவம், கால்நடை ஆய்வாளர் சுப்புகாளிமுத்து, ஊராட்சி செயலர் பயனா ளிகளும்,பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    • பரமக்குடியில் சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா நடந்தது.
    • இதனை முருகேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    பரமக்குடி

    ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டார வள மையம் சார்பாக வட்டார அளவிலான கலைத்திருவிழா சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமையில், நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி முன்னிலையில், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தொடங்கி வைத்தார். இந்த கலைத் திருவிழாவில் மாணவ, மாணவிகள் அழிந்து வரும் கலை வடிவங்களை மீட்டெடுக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில், பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர் முருகம்மாள், வட்டார கல்வி அலுவலர்கள் ரவிக்குமார், சுதாமதி, சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜன், வட்டார வளமைய ஒருங்கிணைப்பா ளர்கள் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • பரமக்குடி வைகை ஆற்றில் மணல் கொள்ளை நடந்து வருகிறது.
    • இதனை கண்டித்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர்.

    பரமக்குடி

    மதுரைக்கு அடுத்த படியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறும். பரமக்குடி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் 2 தினங்களுக்கு முன்பு ஜே.சி.பி. மூலம் லாரிகளில் மணல் திருடியுள்ளனர்.

    கிராமப்புறங்களில் நடந்த மணல் திருட்டு தற்போது நகர்புறங்களிலும் தொடங்கிவிட்டது. இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக கூறி மறத்தமிழர் சேனை நிறுவனர் பிரபாகர் மற்றும் பா.ஜ.க.வினர் மணல் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஓட்டப்பா லத்தில் இருந்து தாலுகா அலுவலகம் வரை கோசமிட்டபடி ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

    பின்னர் தாசில்தார் பார்த்தசாரதி, போலீசார் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது கூடிய விரைவில் மணல் திருடியவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    • மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
    • கூட்டரங்கில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் பொதுமக்களிடம் இருந்து 250 கோரிக்கை மனுக்கள் பெற்றார். பிற்படு த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் விடுதிகளில் சிறந்த 3 விடுதிகளுக்கு கேடயமும், விடுதி களை நல்ல முறையில் நிர்வகிக்கும் காப்பாளருக்கு பரிசுத்தொ கையையும், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அண்ணா, மகாத்மா காந்தி ஆகியோரது பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.

    சென்னையில் நடந்த அரசு விழாவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இணைப்பில்லம் -கமுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வைரவன்கோவில் - ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காந்திநகர்- மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவை களை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த கண் பரிசோதனை முகாமை கலெக்டர் தொடங்கி வைத்து கண் பரிசோதனை செய்து கொண்டார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சாயல்குடியில் தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன்- தங்கம் தென்னரசுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
    • தி.மு.க. கிழக்கு மேற்கு ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், தங்கம் தென்னரசு ஆகியோருக்கு சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன், சாயல்குடி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன்ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல், மாநில இலக்கிய அணி செயலாளர் பெருநாழி போஸ், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் இன்பா ரகு, சாயல்குடி நீர்ப்பாசன சங்கத் தலைவர் ராஜாராம், ஒன்றிய கவுன்சிலர் பிச்சை, ஊராட்சி மன்ற தலைவர்கள் இதம்பாடல் மங்கள சாமி, காணிக்கூர் தென்னரசி, செல்லபாண்டியன், ஏ. புனவாசல் ராஜேந்திரன், செஞ்சடைநாதபுரம் லிங்கராஜ், டி. கரிசல்குளம் அப்பனசாமி, எஸ். வாகைக்குளம் ஜெயலட்சுமி, வடமலை மூக்கையூர் தொம்மை, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் எஸ்.வாகைகுளம் பால கிருஷ்ணன், டி.கிருஷ்ணாபுரம் இளங்கோவன், வாலிநோக்கம் வகிதாசகர், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அமீர்ஹம்சா, தி.மு.க. மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தமிழ் செழியன், தி.மு.க. முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள் சாயல்குடி ராஜேந்திரன், நரிப்பையூர் ராஜபாண்டியன், நரிப்பையூர் கோகுலம் மொபைல்ஸ் மருதுபாண்டியன், தி.மு.க. கிளைச் செயலாளர் குருவாடி சேதுராமன், மேலக் கிடாரம் குமாரராஜா, காலாகுளம் முருகேசன், ஆர்.சி.புரம் பிரான்சிஸ், பிரதிநிதி பழனிச்சாமி. ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் நாகரத்தினம், இளைஞரணி துணை அமைப்பாளர் நந்தகுமார், பிரமுகர் காலாகுளம் சேகர் உள்ளிட்ட தி.மு.க. கிழக்கு மேற்கு ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • அபிராமம் பகுதியில் காட்டு கருவேல மரங்களை அகற்றிவிட்டு மரங்கள் வளர்க்க அபிராமம் பகுதி சமுக ஆர்வலர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.
    • ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சி, வானம் பார்த்த பூமி, காட்டு கருவேல மரங்கள் நிறைந்த மாவட்டம் என்ற நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் அபிராமம் பகுதியில் காட்டு கருவேல மரங்களை அகற்றிவிட்டு மரங்கள் வளர்க்க அபிராமம் பகுதி சமுக ஆர்வலர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமையான சூழலை உருவாக்க கலெக்டர் ஜானிடாம் வர்கீசை தலைவராக கொண்டு மாவட்ட வன அலுவலர் பகான் ஜக்தீஸ் சுதாகர் தலைமையில் பசுமை அமைப்ப்பு அமைக்ககப்பட்டுள்ளது.

    இதில் கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை, அனைத்து கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

    இந்த அமைப்பு மூலம் 2023-ல் காட்டு கருவேல மரங்களை அகற்றிவிட்டு மரங்களை வளர்த்து ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கிராமப்புறங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள காட்டு கருவேல மரங்களை அகற்றிவிட்டு புங்கன், பூவரசு. புளி மற்றும் மாதுளை, சீதா நெல்லி, வேப்பம் மரம் ஆலமரம், அரசமரம் உள்ளிட்ட மரங்களை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து துறை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூக அமைப்புகளும் செயல்பட அழைப்பு விடப்பட்டுள்ளது.

    இதையே அழைப்பாக ஏற்று அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சமூகப்பணி செய்துவரும் அபிராமம் பகுதி சமூக சேவை அமைப்பு மற்றும் இளைஞர்கள் தங்கள் பகுதியில் முனைப்பு டன் செயல்பட்டு காட்டு கருவேல மரங்களை அகற்றிவிட்டு மரங்களை நட்டு அபிராமம் பகுதியை பசுமை பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • அரசு பஸ்-சரக்கு வேன் மோதியதில் 5 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
    • சிலர் ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கீழசெல்வனூரில் இருந்து இன்று காலை விவசாய கூலி வேலைக்காக ஆட்களை ஏற்றி கொண்டு சரக்கு வேன் சாயல்குடிக்கு புறப்பட்டது.

    அதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் நின்று கொண்டே பயணம் செய்தனர். கிழக்கு கடற்கரை சாலை மலட்டாறு அருகே வந்து கொண்டிருந்த போது சாயல்குடியில் இருந்து ராமநாதபுரம் சென்று கொண்டிருந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக சரக்கு வேன் மோதி பயங்கரமாக உரசியது.

    இந்த விபத்தில் சரக்கு வேனில் நின்று பயணம் செய்த கீழசெல்வனூரை சேர்ந்த முருகேசன் மனைவி பூமா (45), சோமு மனைவி ஞானசுந்தரி, ராஜலிங்கம் மனைவி முனியம்மாள், சண்முகம் மனைவி லட்சுமி, நாராயணன் மனைவி ஆபிதா ஆகிய 5 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இதில் அவர்களுக்கு கைகளில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. சிலர் ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து சாயல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சல்மோன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • தொழு உரத்தை சூப்பர் பாஸ்பேட் கலந்து விதைக்க வேண்டும் என ேவளாண் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
    • முதுகுளத்தூர் தாலுகாவில் வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை உதவி இயக்குநர் பாஸ்கரமணியன் ஆய்வு செய்தார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் தாலுகாவில் வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை உதவி இயக்குநர் பாஸ்கரமணியன் ஆய்வு செய்தார்.

    கலைஞர் திட்டத்தில் இந்தாண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள முதுகுளத்தூர் அருகே வளநாடு கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள 60ம் குறுவை சாகுபடி பயிர்களை பார்வையிட்டார்.

    பின்னர் வயல்வரப்புகளில் விதைப்பதற்காக துவரை விதைகளை விநியோகம் செய்தார். வயல் வரப்புகளில் பயறு வகைகள் பயிரிடு வதால் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுவதுடன், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றார்.

    அட்மா திட்டத்தில் தொழு உரம் தயாரிக்கப்படுவதை பார்வையிட்ட உதவி இயக்குநர் தொழு உரத்தை அப்படியே விதைக்காமல் சூப்பர் பாஸ்பேட் கலந்து விதைக்க வேண்டும். அதனால் மண் வளம் காக்கப்படும். வேர்கள் செழித்து வளரும் என்றார்.

    பின்னர் வளநாடு கிராமத்தில் பிரதம மந்திரி யின் நிதி திட்டத்தில் நடை பெற்று வரும் கே.ஒய்.சி. பணிகளை ஆய்வு செய்தார். பயனாளிகள் தங்கள் கைபேசியுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை பார்வையிட்டார்.

    விவசாயிகள் கே.ஒய்.சி. செய்தால் மட்டுமே அதன் பயன்கள் தங்குதடையின்றி கிடைக்கும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது முதுகுளத்தூர்வேளாண்மை உதவி இயக்குநர் கேசவ ராமன், உதவி வேளாண்மை அலுவலர் தனதுரை, உதவி வேளாண்மை அலுவலர் முத்துராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×