என் மலர்
உள்ளூர் செய்திகள்

பரமக்குடியில் கலைத்திருவிழா
- பரமக்குடியில் சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா நடந்தது.
- இதனை முருகேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
பரமக்குடி
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டார வள மையம் சார்பாக வட்டார அளவிலான கலைத்திருவிழா சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமையில், நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி முன்னிலையில், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தொடங்கி வைத்தார். இந்த கலைத் திருவிழாவில் மாணவ, மாணவிகள் அழிந்து வரும் கலை வடிவங்களை மீட்டெடுக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில், பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர் முருகம்மாள், வட்டார கல்வி அலுவலர்கள் ரவிக்குமார், சுதாமதி, சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜன், வட்டார வளமைய ஒருங்கிணைப்பா ளர்கள் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






