என் மலர்
உள்ளூர் செய்திகள்

கால்நடை மருத்துவ முகாம்
- பூவளத்தூரில் அரசு சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
- கால்நடை வளர்பவர்களுக்கு கால்நடை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.
பரமக்குடி
பரமக்குடி அருகே பூவளத்தூர் கிராமத்தில் அரசு சார்பில் கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய குழு துணைத்தலைவர் பூமிநாதன் முன்னிலை வகித்தார்.
முகாமினை போகலூர் ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகரன் தொடங்கி வைத்தார். கால்நடை மருத்துவர்கள் நந்தினி, ரஜினி ஆகியோர் குடற்புழு நீக்கம், மலடு நீக்க சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சைகளை அளித்தனர்.
இந்த முகாமில் சிறந்த கால்நடை பராமரிப்பாளர் மற்றும் கன்றுகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி வழங்கினார். மேலும், ஊட்டச்சத்து குறைபாடுடைய கால்நடை களுக்கு தாது உப்பு கலவைகளும், ஊறுகாய் புற்களும் வழங்கப்பட்டது.
கால்நடை வளர்பவர்களுக்கு கால்நடை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.
முகாமில் வழக்கறிஞர் பரமசிவம், கால்நடை ஆய்வாளர் சுப்புகாளிமுத்து, ஊராட்சி செயலர் பயனா ளிகளும்,பொதுமக்களும் கலந்து கொண்டனர்.






