என் மலர்
ராமநாதபுரம்
- ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 112 போக்சோ வழக்குகள் பதிவு போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
- பொதுமக்கள் 83000 31100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவ ட்டத்தில் கடந்த 2021-ம் வருடம் 51 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளது. 2022-ம் ஆண்டு 33 கொலை வழக்குகள் பதிவானது. இது கடந்த ஆண்டை விட 35 சதவீதம் குறைவானதாகும். சொத்து வழக்குகளை பொறுத்த மட்டில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு சொத்து வழக்குகளின் கண்டுபிடிப்பு 55 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கொடுங்குற்ற வழக்கு களில் 2021-ம் ஆண்டு 69 வழக்குகளும், 2022-ம் ஆண்டு 56 வழக்குகளும் பதிவாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 13 வழக்குகள் குறைவானதாகும். கொலை, கொலை முயற்சி, வன்முறை மற்றும் காயம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் 2021-ம் ஆண்டு 907 வழக்குகளும், 2022-ம் ஆண்டு 840 வழக்குகளும் பதிவாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 7 சதவீதம் குறைவாகும். 2022-ம் ஆண்டு 112 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலியல் குற்றங்கள் தொடர்பாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் ஏற்பட்ட 1,199 வாகன விபத்துக்களில் 360 பேர் உயிரிழந்துள்ளனர். 1286 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட 10 சதவீதம் வாகன விபத்துகள் அதிகரித்துள்ளது. விதி மீறிலில் ஈடுபட்ட 3 லட்சத்து 96 ஆயிரத்து 782 இரண்டு மற்றும் 4 சக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக தீவிர சோதனை மேற்கொண்டதில், புகையிலை பொருட்களை மொத்தமாகவும், சில்லரை யாகவும் விற்பனை செய்த 602 பேர் மீது 575 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் ரூ.34 லட்சத்து 8 ஆயிரத்து 856 மதிப்புள்ள 3ஆயிரத்து 698 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4,451 பேர் மீது 4,402 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 11284 லிட்டர் மதுபானம் மற்றும் பனங்கள் 3,442 லிட்டர் கைப்பற்றப்பட்டது.
கஞ்சா விற்ற 192 பேர் மீது 94 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் ரூ.29 லட்சத்து 27 ஆயிரத்து 80 மதிப்புள்ள 266 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 105 பேரின் வங்கி கணக்குகள் மற்றும் ஒரு நபரின் சொத்துக்கள் முடக்கப்பட்டன.
சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட 85 பேர் மீது 121 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 143 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நடப்பாண்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை சம்பந்தமாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் தொடர்புடைய 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
சூதாட்ட குற்ற சம்பவங்கள் தொடர்பாக இந்த ஆண்டில் மொத்தம் 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 275 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்தவருடம் 1.1.2022-ம் தேதி முதல் இந்நாள் வரை சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபட்ட 7 பேர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேர், பாலினகுற்ற செயல்களில் ஈடுபட்ட 6 பேர், சொத்து குற்றசெயல்களில் ஈடுபட்ட 3 பேர், தேசவிரோத குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 2 பேர் என மொத்தம் 24 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சைபர் கிரைம் காவல்நிலையத்தில் நடப்பாண்டில் 711 புகார் மனுக்கள் நேரடியாகவும், இணைய தளம் வழியாகவும் பெறப்பட்டு விசாரணைக்குபின் 74 சைபர் குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டு 11 எதிரிகள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளின் வங்கி கணக்குகளில் இருந்த ரூ.68லட்சத்து 38 ஆயிரத்து 980 முடக்கம் செய்யப்பட்டது மட்டுமின்றி இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.13 லட்சத்து84 ஆயிரத்து 25 திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.செல்போன்கள் காணாமல் போனதாக பெறப்பட்ட 853 புகார்களில் 552 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு புகார்தாரர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மற்றும் பதுக்கிவைப்பவர்கள், சில்லறை மதுபானம் விற்பனை செய்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால், பொதுமக்கள் 83000 31100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராமநாதசாமி கோவிலில் முழு நேர அன்னதான திட்டம் தொடங்கப்பட்டது.
- விழாவை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ராமேசுவரம்
ராமேசுவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாதசாமி கோவிலில் இன்று முதல் முழு நேர அன்னதானத் திட்டம் தொடங்கியது.
இதற்கான தொடக்க விழா கோவிலின் தெற்கு நந்தவன கலை அரங்கில் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து கோவிலின் முழுநேர அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
இதில் ராமேசுவரம் தாசில்தார் உமா மகேஸ்வரி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனஜெயன், ராமேசுவரம் கோவில் கூடுதல் ஆணையர் மாரியப்பன், சிவகங்கை மண்டல ஆணையர் பழனிக்குமார், ராமேசுவரம் நகர மன்ற தலைவர் நாசர்கான், நகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் ராமேசுவரம் நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க. கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயற்குழு கூட்டம் நடந்தது.
- கூட்ட ஏற்பாடுகளை செய்தனர். ஜீவா நன்றி கூறினார்.
ராமநாதபுரம்
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் ராமநாதபுரம் மாவட்ட கிளை செ யற்குழு கூட்டம் சேர்மன் சுந்தரம் தலைமையில் நடந்தது. புரவலர்கள் ராமநாதன், உலகராஜ், துணை சேர்மன் ஜெயக்குமார், ராமேசுவரம் கிளை சேர்மன் பாலசுப்ரமணியன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஷாலினி பில்லி கிரஹாம், செய்யது முகமது ஹசன், கோபால், ரினி, பவதாரணி, கார்த்திக் முன்னிலை வகித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட கல்லூரிகளில் யூத் ரெட் கிராஸ் செயல்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பாளர் வள்ளி விநாயகம், மாவட்ட கன்வீனர்கள் அலெக்ஸ், பாலமுருகன், முதலுதவி பயிற்சிகள்-பேரிடர் கால பயிற்சிகள் குறித்து சொக்கநாதன், ஒரு லட்சம் மரக்கன்றுகள் வளர்த்து கலெக்டரிடம் ஒப்படைத்தல் குறித்து பசுமை ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் மலைக்கண்ணன், மாவட்ட செயலர் ரமேஷ் ஆகியோர் பேசினார்.
வரவு செலவு கணக்குகளை மாவட்ட பொருளாளர் குணசேகரன் சமர்ப்பித்தார். புதிய உறுப்பினர் சேர்ப்பு குறித்து பேசப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு முதலுதவி, பேரிடர் காலங்களில் ஏற்படும் சூழ்நிலைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்ட ஆலோசகர் காளீஸ்வரன் உள்ளிட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள், புரவலர்கள் ஆலோசனைகளை வழங்கினர். திரவிய சிங்கம், தமிழரசன், ஜெயக்குமார், முருகேசன் ஆகியோர் கூட்ட ஏற்பாடுகளை செய்தனர். ஜீவா நன்றி கூறினார்.
- டாக்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ராமநாதபுரம் கலெக்டர் கூறி உள்ளார்.
- வட்டார மருத்துவ அலுவலர் சுரேந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் திடீர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மருத்துவமனையில் உள்ள பதிவேடுகளை பார்வையிட்டார். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை குறித்து வட்டார மருத்துவ அலுவலரிடம் கேட்டறிந்தார்.
உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை மையம் ஆகியவற்றை பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். மருத்துவமனையில் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய உபகரணங்கள் பொது மக்களின் சேவைக்காக தயார் நிலையில் இருக்க வேண்டும்.
24 மணி நேரமும் பொதுமக்களுக்கு சேவை வழங்க டாக்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
மருத்துவமனையில் பாம்பு கடி மற்றும் அவசர கால சிகிச்சைக்கான மருந்துகளின் இருப்பு குறித்தும், விபத்து மற்றும் அவசர கால பிரிவையும் பார்வையிட்டார். வெளி நோயாளிகள், உள்நோயாளிகள் பதிவேடு, கர்ப்பிணி பெண்கள் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வட்டார மருத்துவ அலுவலர் சுரேந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
- மண்டபம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.5 லட்சம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இதுகுறித்த புகாரின் பேரில் மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் வெளிப்பட்டணம் பகுதியை சோ்ந்தவர் புவனேஸ்வரா் (வயது 39). மண்டபம் அருகே சமத்துவபுரம் பகுதியில் உள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பாா்த்து வருகிறாா்.
இந்த நிலையில் புவனேஸ்வரா் அங்கு பெட்ரோல் விற்பனையான ரூ.4.89 லட்சத்தை எடுத்துக் கொண்டு ராமநாதபுரத்தில் உள்ள வங்கியில் செலுத்த மண்டபம் அருகே வளையா்வாடி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாா்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த அடை யாளம் தெரியாத 2 நபா்கள் அவரிடமிருந்த பணப் பையை பறிக்க முயன்றனா். புவனேஸ்வரா் சப்தம் போட்டதையடுத்து அங்கிருந்தவா்கள் ஓடி வந்தனா். இதையடுத்து அந்த நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழிப்பறியில் ஈடுபட்ட அந்த பகுதியை சோ்ந்த சஞ்சய் (23), விக்ரம் (23) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா்.
- அபிராமம் பகுதியில் மழை இல்லாததால் எள் பயிர் வாடும் நிலை உள்ளது.
- இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள நீர்தாண்ட அச்சங்குளம், உடையநாதபுரம், நகரத்தார்குறிச்சி, நந்திசேரி, காடனேரி உட்பட பல்வேறு கிராமங்களில் சிறுதானிய பயிர்களான கம்பு, சோளம், குதிரை வாளி , எள் போன்ற பயிர்களை விவசாயம் செய்துவந்தனர் சிறுதானிய பயிர்களுக்கு தண்ணீர் குறைவாக தேவைப்படுவதால் ஏராளமான விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.
அபிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மழை காலங்களில் தண்ணீர் சேமிக்க பண்ணை குட்டை வெட்டததால் போதிய பருவமழையின்றி சிறுதானிய பயிர்களை கூட காப்பாற்ற முடியத நிலை உள்ளது. இதனால் எள் போன்ற பயிர்களுக்கு கூட மழையை நம்ப வேண்டிய நிலை உள்ளது. அபிராமம் பகுதியில் மகசூல் தரவேண்டிய நிலையில் எள் பயிர் வாடும் நிலை உள்ளது.
இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். போதிய பருவமழை இல்லததால் நெல் பயிர் கருகி வரும் நிலையில், சிறுதானிய பயிர்களும் மழையில்லததால் கருகும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
- வருமான வரி விகிதாசாரத்தை மாற்ற வேண்டும் என தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
- சின்னஞ்சிறு சேவைகளுக்கு கூட விலக்கு அளிக்கப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்கத்தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜி.எஸ்.டி. என்ற சரக்கு மற்றும் சேவை வரி அமல் படுத்தப்பட்டது முதல் அநேகமாக எல்லாவித பொருட்கள் மீதும் அதிகபட்ச விகிதாசாரத்தில் வரி விதிக்கப்பட்டு பணக்காரர்கள் முதல் பாமரர்கள் வரை சுமை ஆகிவிட்டது. சின்னஞ்சிறு சேவைகளுக்கு கூட விலக்கு அளிக்கப்படவில்லை.
செலவினங்கள் மீது விதிக்கப்படும் வரியே சேவை வரி என்ற பெயரில் வசூலிக்கப்படுகிறது. வருமான வரி, வருமானம் அதிகமுடையோர்க்கு மட்டுமே விதிக்கப்படும் நிலையில் சேவை வரி என்ற செலவின வரி அனைத்து தரப்பினரிடமும் பாகுபாடின்றி வசூலிக்கப்படுகிறது.
வருமானத்துக்கும் வரி, அதேநேரம் செலவினத்துக்கும் வரி என்ற கொள்கை நியாயமற்றது. எனவே, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இதனை கவனத்தில் கொண்டு வருகிற மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்களை மாற்றியமைக்க முன்வர வேண்டும். இதன் மூலம் வருமான வரி செலுத்துவோர் வரிச்சுமையில் இருந்து விடுபட வேண்டும். வருமான வரி வரம்பை ரூ.5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். 80 ஆண்டு நிறைவடைந்த மிக மூத்த குடிமக்களுக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்க வேண்டும். வரிகள் சுமையானது என்ற மக்களின் எண்ணத்தை போக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கீழக்கரையில் பட்டமளிப்பு விழா நடந்தது.
- கீழக்கரை சுன்னத்துவல் ஜமாத் அறக்கட்டளை நிறுவனர் தைக்கா அப்துல் ஓபுர் நன்றி கூறினார்.
கீழக்கரை
உலகக் கல்வியுடன் திருக்குரானை மனப்பாடம் செய்து முடித்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா கீழக்கரை சதக்கத்துல்லா அப்பா வளாகத்தில் நடந்தது. அதாயி கல்வி குழுமத்தின் சார்பில் சுப்ரீம் நிறுவனர் முஹம்மது நிசார் பாஜில் ஜமாலி, சென்னை மற்றும் கீழக்கரை அதாயி பெண்கள் ஹிப்ளு பள்ளி தலைவர் ஹபிபுல்லாகான், கீழக்கரை அதாயி இஸ்லாமிக் பள்ளி தலைவர் ஜஹுபர் கமால், கீழக்கரை சுன்னத்துல் ஜமாத் பவுண்டேஷன் ஒபூர் ஆகியோர் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துர் ரஹ்மான் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். துபாய் ஈமான் அமைப்பின் தலைவர்-தொழிலதிபர் ஹபிபுல்லா கான் காணொலி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார். இதில் குரானை மனப்பாடம் செய்த 25 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
கீழக்கரை சுன்னத்துவல் ஜமாத் அறக்கட்டளை நிறுவனர் தைக்கா அப்துல் ஓபுர் நன்றி கூறினார். விழாவில் கீழக்கரை பல்வேறு ஜமாத், சங்க நிர்வாகிகள், பிரமுகர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர். துபாய் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹமீது யாசின், கீழக்கரை சுன்னத்துவல் ஜமாத் அறக்கட்டளை நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.
- 60 பயனாளிகளுக்கு ரூ.6.57 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பபன் வழங்கினார்.
- அரசு வழங்கும் திட்டங்களை அவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.
நவாஸ்கனி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 82 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்று மற்றும் நினைவுப் பரிசு, 60 பயனாளிகளுக்கு ரூ. 6.57 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மாற்றுத்திறனாளிகள் என பெயர் வைத்து தனியாக அரசுத் துறை உருவாக்கினார். நம்மில் ஒருவர்களான மாற்றுத்திறனாளிகள் மிகவும் திறமை மிக்கவர்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்துறை உள்ளிட்ட துறைகளோடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை கூடுதல் கவனம் செலுத்தி அவர்களது நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார்.
மாற்று த்திறனாளிகளுக்கு அரசு அலுவலகங்களில் ஆவின் பாலகம் அமைக்க தேவையான வாடகைத்தொகை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தெருவோர தள்ளுவண்டி கடை நடத்துவதற்கான சான்றிதழ்களை நகர விற்பனைக்குழுவின் விதிமுறைகளுக்கிணங்க முன்னுரிமைவழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதல்-அமைச்சர் தாயுள்ளத்தோடு ஒரு மாற்றுத்திறனாளியும் மனவருத்தம் அடைந்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் கருணை உள்ளத்தோடு அவர்களது நலன்களை காக்க பாடுபட்டு வருகிறார்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் விளையா ட்டிலும் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விளையாட்டுத் துறையில் எண்ணற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்திறமை உண்டு. எனவே அரசு வழங்கும் திட்டங்களை அவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயணசர்மா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல், முடநீக்கு வல்லுனர் ஜெய்சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- இர்பான் மருத்துவமனை இயக்குநர் எஸ்.சாதிக் அலி இல்ல திருமண விழா நடந்தது.
- பொறியாளர் இர்பான் அலி, ஜாபிர் அலி, முகமது ஜபான் அலி உள்பட உறவினர்கள், நண்பர்கள் செய்திருந்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை கிராமத்தை சேர்ந்த ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன்னாள் நிலைய அதிகாரியும், முன்னாள் அரசு மருத்துவமனை (காச நோய் பிரிவு) துணை இயக்குனரும், புதுவலசை அரபி ஒலியுல்லா பள்ளிகளின் தாளாளரும் பாரதி நகர் இர்பான் மருத்துவமனையின் இயக்குனருமான மருத்துவர் எஸ்.சாதிக் அலி-கன்சுல் மகரிபா ஆகியோரது மகன் டாக்டர் பர்ஹான் அலி மணமகனுக்கும், நெல்லையை சேர்ந்த முகமது ஜலீல்-சுமையா பானு ஆகியோர் மகள் மருத்துவர் ஆமினா பேகத்திற்கும் நேற்று ராமநாதபுரம் அருகே உள்ள ஏ1 மகாலில் திருமணம் நடைபெற்றது.
புதுவலசை முஸ்லிம் தர்ம பரிபாலன சபை செயலாளர் முகமது நிஜாமுதீன், தலைமையில் தலைவர் ஹமிதுல் ஆஸ்கீன், துணைத் தலைவர் முகமது களஞ்சியம், துணை செயலா ளர் செய்யது அபுதாஹிர், பொருளாளர் முகமது இப்ராஹிம், முஸ்லிம் முன்னேற்ற சங்க தலைவர் சலீம், செயலாளர் ஜாகிர் முன்னிலையில் புதுவலசை தலைமை பேஸ் இமாம் அகமது திருமணத்தை நடத்தி வைத்து நிக்காஹ் ஓதி சிறப்பு துவா ஓதினார்.
இதில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, அழகன்குளம் முஸ்லிம் ஜமாத் தலைவர் பக்ருல்அமீன், ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த அனைத்து சமுதாய நிர்வாகி கள், முக்கிய பிரமுகர்கள், டாக்டர்கள், பொறி யாளர்கள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் உள்பட ஏராளமானோர் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமணத்திற்கான ஏற்பாடுகளை மணமக்கள் வீட்டார் சார்பில் பொறி யாளர் இர்பான் அலி, ஜாபிர் அலி, முகமது ஜபான் அலி உள்பட உறவினர்கள், நண்பர்கள் செய்திருந்தனர்.
- ராமநாதபுரத்தில் பத்திரப்பதிவு மண்டல அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.
- ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, காரைக்குடி பத்திரப்பதிவு அலுவலகங்களின் பணிகள் இந்த மண்டல அலுவலகத்தின் மூலமாக செயல்பட தொடங்கும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் பத்திரப்ப திவுத்துறை அலுவலகத்தில் ராமநாதபுரம் மண்டல அலுவலகம், மதுரையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
அதனைத்தொடர்ந்து கலெக்டர் கூறுகையில், மதுரை மண்டல அலுவலகத்தில் செயல்பட்டு வந்த ராமநாதபுரம் பத்திரப்பதிவு மண்டல அலுவலகம் தனியாக பிரித்து ராமநாதபுரத்தில் பத்திரப்பதிவு மண்டல அலுவலகம் செயல்பட தொடங்கியுள்ளது.
இந்த மண்டல அலுவலகத்தில் இருந்து ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, காரைக்குடி பத்திரப்பதிவு அலுவலகங்களின் பணிகள் இந்த மண்டல அலுவலகத்தின் மூலமாக செயல்பட தொடங்கும்.
இதற்கு முன்னர் மதுரை மண்டல அலுவலகத்தில் இந்த மாவட்டங்களுக்கான பணிகள் நடந்து வந்தன. பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு ராமநாதபுரம் மண்டல பத்திரப்பதிவு அலுவலகமாக பிரிக்கப்பட்டு செயல்பட தொடங்கி உள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர்கள் ரத்தினவேல், ரமேஷ், ராமநாதபுரம் நாகராட்சி தலைவர் கார்மேகம், நாகராட்சி துணைத்தலைவர் பிரவீன் தங்கம், பத்திரப்பதிவு அலுவலக கண்காணிப்பு அலுவலர்கள் ஸ்ரீனிவாசன், முருகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- உப்பூர் அனல் மின் திட்டத்திற்கு நிலம் அளித்த பட்டாதாரர்கள் இழப்பீட்டு தொகை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- இந்த அறிவிப்பு கண்ட 15 தினங்களுக்குள் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து இழப்பீட்டுத் தொகையினைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் உள்வட்டம் உப்பூர் அனல் மின் திட்டம் நில எடுப்பு தனி வட்டாட்சியர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வட்டம், சோளந்தூர் உள்வட்டத்தில் அமைந்துள்ள வளமாவூர், திருப்பாலைக்குடி, உப்பூர் ஆகிய வருவாய் கிராமங்களில் உப்பூர் அனல் மின்நிலையம் அமைக்க நில எடுப்பு செய்யப்பட்டு இழப்பீட்டுத் தொகை வழங்க ப்பட்டது.
பட்டா தாரர்களுக்கு 3 முறை முறையான அழை ப்பாணை அனுப்பியும், கிராமங்களில் முகாம்கள் நடத்தியும் 110 பட்டா தாரர்கள் ஆஜராகி உரிய ஆவணங்கள் செலுத்தி இழப்பீட்டுத் தொகை பெற முன்வர வில்லை.
வளமாவூர் கிராமத்தில் 42 பட்டாதா ரர்களுக்கு ரூ.1,97,03,163 இழப்பீட்டு த்தொகையும், திருப்பா லைக்குடி கிராமத்தில் 7 பட்டாதா ரர்களுக்கு, ரூ.10,59,678 இழப்பீ ட்டுத்தொ கையும், உப்பூர் கிராமத்தில் 61 பட்டா தாரர்களுக்கு, ரூ.2,00,30,127 இழப்பீட்டு த்தொகையும் தரப்பட வேண்டியு ள்ளது. மேற்படி பட்டாதாரர்களோ, அல்லது அவர்களின் வாரிசு தாரர்களோ இந்த அறிவிப்பு கண்ட 15 தினங்களுக்குள் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து இழப்பீட்டுத் தொகையினைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
தவறும் பட்சத்தில் உரிய நீதிமன்றத்தில் சம்மந்த ப்பட்ட பட்டாதாரர்களது இழப்பீட்டுத்தொகை வைப்பீடு செய்யப்படும் என்ற விபரம் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






