என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பரிசு வழங்கினார். அருகில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், நவாஸ்கனி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன் உள்ளனர்.

    60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

    • 60 பயனாளிகளுக்கு ரூ.6.57 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பபன் வழங்கினார்.
    • அரசு வழங்கும் திட்டங்களை அவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.

    நவாஸ்கனி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 82 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்று மற்றும் நினைவுப் பரிசு, 60 பயனாளிகளுக்கு ரூ. 6.57 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மாற்றுத்திறனாளிகள் என பெயர் வைத்து தனியாக அரசுத் துறை உருவாக்கினார். நம்மில் ஒருவர்களான மாற்றுத்திறனாளிகள் மிகவும் திறமை மிக்கவர்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்துறை உள்ளிட்ட துறைகளோடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை கூடுதல் கவனம் செலுத்தி அவர்களது நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார்.

    மாற்று த்திறனாளிகளுக்கு அரசு அலுவலகங்களில் ஆவின் பாலகம் அமைக்க தேவையான வாடகைத்தொகை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தெருவோர தள்ளுவண்டி கடை நடத்துவதற்கான சான்றிதழ்களை நகர விற்பனைக்குழுவின் விதிமுறைகளுக்கிணங்க முன்னுரிமைவழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    முதல்-அமைச்சர் தாயுள்ளத்தோடு ஒரு மாற்றுத்திறனாளியும் மனவருத்தம் அடைந்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் கருணை உள்ளத்தோடு அவர்களது நலன்களை காக்க பாடுபட்டு வருகிறார்.

    மாற்றுத்திறனாளி மாணவர்கள் விளையா ட்டிலும் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விளையாட்டுத் துறையில் எண்ணற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்திறமை உண்டு. எனவே அரசு வழங்கும் திட்டங்களை அவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயணசர்மா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல், முடநீக்கு வல்லுனர் ஜெய்சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×