என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • நெற்பயிர்கள் கருகிய விளைநிலங்கள் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக மாறிவிட்டன.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்ட த்தின் ஒரு பகுதி வைகை ஆற்றை நம்பியும், மற்றொரு பகுதி வானம் பார்த்த பூமியாகவும் உள்ளது. வைகை ஆற்றில் அதிகளவில் நாணல்கள், கருவேல மரங்கள் இருப்பதாலும், கால்வாய்கள் தூர்வாரப்படாததாலும் கண்மாய்களுக்கு முறையாக தண்ணீர் வந்து சேரவில்லை.

    இதனால் வைகை ஆற்றை நம்பியுள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தின் பாண்டிகண்மாய், மஞ்சூர், வடநாடு, கருங்குளம் உள்ளிட்ட பகுதிகள் வானம்பார்த்த பூமியாக உள்ளன. இங்கு விதை தூவுதல் முறையில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதால் தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி வருகிறது. வரத்து கால்வாய் தூர்வாரப்படாததால் பாண்டிக்கண்மாய், கிராம கண்மாய்க்கு கடந்த 7 வருடங்களாக தண்ணீர் செல்லவில்லை. விலை நிலங்கள் பாளம், பாளமாக வெடித்து வறண்டு காணப்படுகிறது.

    நெற்பயிர்கள் கருகிய விளைநிலங்கள் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக மாறிவிட்டன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து தற்போது கருகிய நெற்பயிர்களை கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

    இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீரின்றி கருகிய விளைநிலங்கள் குறித்து வருவாய்த்துறை, புள்ளியல் துறை உடனடியாக ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அதேபோல் இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    • கமுதி அரசு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
    • தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் வரவேற்றார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரசு மருத்துவமனை வளாகத்தில் யோகம் பொது சுகாதார மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் 1,610 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

    ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்தமிழ்ச்செல்விபோஸ் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

    மருத்துவமனை தலைமை மருத்துவர் விஜயா, தொண்டு நிறுவன இயக்குநர் தமயந்தி முன்னிலை வகித்தனர். தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் வரவேற்றார்.

    இதில் வேம்பு உள்பட பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டன. தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த யோகேஷ்மணிராஜ், ஷியாம் பரணிதரன், வனச்சரக அதிகாரி பால்பாண்டியன் மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.2,883 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டத்துக்கு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நடந்தது.
    • அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1000 வழங்க உத்தர விட்டுள்ளார்.

    கீழக்கரை

    கீழக்கரை நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில், துணைத்தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான், நகராட்சி கமிஷனர் செல்வராஜ் முன்னிலையில் நடந்தது.

    கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீருக்காக ரூ. 2,883 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தினை செயல்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதேபோல் அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1000 வழங்க உத்தர விட்டுள்ளார். இதற்கு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பின்னர் கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:- தலைவர் செஹானாஸ் ஆபிதா:- நகராட்சி பகுதியில் நிலவும் நிறை, குறைகளை நேரடியாக நகராட்சி அலுவலகத்திற்கு வந்து தெரிவிக்க வேண்டும். இந்த வழிமுறையை கடைபிடிக்காமல் வலைத்த ளங்களில் நகராட்சி தலைவர் மற்றும் நகராட்சி கமிஷனர், அலுவலர்கள் மீது தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது. உடனடியாக தனிப்பட்ட பேச்சை நிறுத்த வேண்டும்.

    கவுன்சிலர் சேக் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் முகமது ஹாஜா சுகைபு:- கீழக்கரை பகுதியில் போக்குவரத்து நெரிசல் உள்ளதால் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வெளியேறுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதன் காரணமாக அரசு மருத்து வமனையில் புதிய பாதை ஏற்படுத்த மருத்துவ நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

    1- வது வார்டு பாதுஷா: கீழக்கரை நகராட்சியாக தரம் உயர்த்திய பிறகும் கீழக்கரை கோரிக்கைகளை இதுவரையிலும் நிறை வேற்றப்படாததால் வருகின்ற நகர் சபா கூட்டத்திற்கு கலந்து கொள்ள போவதில்லை என்று கூறினார்.

    இதேபோல் கவுன்சி லர்கள் முகம்மது காசிம், பவித்ரா, சப்ராஸ் நவாஸ், நசுருதீன் உள்ளிட்டோர் சாக்கடை வசதி, அடிப்படை வசதிகள், வரிவசூல் குறித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    கூட்டத்தில் நகராட்சி முன்னாள் வாகன ஓட்டுநர் அய்யப்பனுக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் நகராட்சி பொறியாளர் அருள், துப்புரவு ஆய்வாளர் பரக்கத்துல்லா, நகராட்சி மேற்பார்வையாளர் சாம்பசிவம், மேலாளர் தமிழ்ச்செல்வன், இளநில உதவியாளர் உதயகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம் செய்தனர்.
    • 3-ம் பிரகாரத்தில் உள்ள சபாபதி சன்னதிக்கு மாணிக்கவாசகர் சென்றடைந்தார்.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து 3 மணி முதல் ஸ்படிக லிங்க பூஜை நடந்தது. பின்னர் ராமநாதசுவாமி சன்னதியில் இருந்து மலர் அலங்காரத்துடன் மாணிக்கவாசகர் புறப்பாடானார். அப்போது திரளான பக்தர்கள் வழிநெடுகிலும் சாமி தரிசனம் செய்தனர். 3-ம் பிரகாரத்தில் உள்ள சபாபதி சன்னதிக்கு மாணிக்கவாசகர் சென்ற டைந்தார்.

    அதனைத்தொடர்ந்து அங்குள்ள நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற து. காலை 4.15 மணி முதல் 5.15 மணிக்குள் ஆருத்ர தரிசன பூஜைகள் நடந்தன. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் முன்னோடியாக திகழ வேண்டும் என அரசு சிறப்பு செயலர் அறிவுறுத்தினார்.
    • அனைத்து பள்ளிகளிலும் கழிவறைகளை தூய்மையாக வைத்துகொள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முன்னேற விளையும் மாவட்ட திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அரசு சிறப்பு செயலர் ஹர் சகாய் மீனா தலைமையில் நடந்தது. இதில் அவர் பேசியதாவது:-

    குடி தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தண்ணீரின் தரம் குறித்து நாள்தோறும் பரிசோதனை செய்து விநியோகம் செய்ய வேண்டும். கால்நடை மருத்துவமனைகளை மேம்படுத்த மற்றும் தரம் உயர்த்துவதற்கான கோரிக்கைகளை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு சந்தைப்படுத்துதல் முறையை பற்றிய கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தேவையான விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கி அனைத்து அரசு திட்டங்களையும் பெறும் வகையில் அலுவலர்கள் ஈடுபாட்டுடன் பணி செய்ய வேண்டும்.

    அங்கன்வாடி மையங்கள் குழந்தைகளை கவரும் வகையில் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு சோப்பு பயன்படுத்தி கை கழுவும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.

    அனைத்து பள்ளிகளிலும் கழிவறைகளை தூய்மையாக வைத்துகொள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும்.

    மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை குறிப்பிட்ட இடைவெளியில் தூய்மை செய்ய வேண்டும். அடல் டிங்கர் ஆய்வகத்தில் மாண வர்களை அழைத்துச்சென்று உரிய முறையில் செய்முறை விளக்கம் காண்பிக்க வேண்டும்.இடைநிற்றலை தடுப்பதற்கு பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்களிடம் கல்வியோடு விளையாட்டின் முக்கியத்துவத்தை அறிவுறுத்த வேண்டும்.

    உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள் அரசு புறம்போக்கு நிலங்க ளில் மரம் வளர்க்க வேண்டும். தொலைநோக்கு சிந்தனையுடன் முன்னேற விளையும் திட்டங்களை தயார் செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் ராமநாதபுரம் மாவட்டம் திட்டங்களை செயல் படுத்துவதில் முன்னுதாரணமாகவும், முன்னோடியாகவும் திகழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது.
    • நூற்றுக்கணக்கான கலைநய படைப்புகள் கண்காட்சியை பார்வையிட வந்த பெற் றோர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது.

    கீழக்கரை

    கீழக்கரை இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளியில் மாணவ பிரம்மாக்களின் கலைத்திறனை வெளிச் சத்திற்கு கொண்டு வரும் வகையில் ஆண்டு தோறும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ மாணவிகளின் கைவினை பொருட்களின் கண்காட்சி நடைபெற்று வருவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக் கான கண்காட்சியில் மாணவ, மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் சளைத்த வர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஆர்வத்துடன் களம் இறங்கி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியை மிஞ்சும் வகை யில் மாணவர்கள் நூற்றுக் கணக்கான படைப்பு களை தயார் செய்து காட்சிப் படுத்தி இருந்தனர்.

    பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம், இஸ்லாமியா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், உயர் நிலைப்பள்ளி தலைமை யாசிரியர் முகமது முஸ்தபா ஆகியோர் கண்காட்சி யினை பார்வையிட்டு மாணவர் களின் தயாரிப்பு குறித்து கேட்டறிந்து பாராட்டினர். துணி, அட்டை, பேப்பர் களால் தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கலைநய படைப்புகள் கண்காட்சியை பார்வையிட வந்த பெற் றோர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது.

    • தொண்டி அருகே சிதிலமடைந்து கிடக்கும் சோழர்கால பாசியம்மன் கோவிலை புனரமைத்து பாதுகாக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • அவ்வாறான ஒரு இயற்கைத் துறைமுகமாக தொண்டி அருகில் உள்ள பாசிப்பட்டினம் கி.பி.875 முதல் கி.பி.1090 வரையிலான காலத்தில் இருந்துள்ளது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் பாசிப்பட்டினம் கிராமம் உள்ளது. இங்கு வெற்றிச் சின்னமாக சோழர்களால் கட்டப்பட்ட 850 ஆண்டுகள் பழமையான பாசியம்மன் கோவில் சிதிலமடைந்து உள்ளது.

    இந்த கோவிலை புனர மைத்து பாதுகாக்க வேண்டும் என்று ராம நாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுபற்றி தொல்லியல் தலைவர் ராஜகுரு கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் மிக நீண்ட கடற்கரை கொண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில், ஓடைகள், ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களில் உள்ள உப்பங்கழிகள் மூலம் பல இயற்கைத் துறைமுகங்கள் உருவாகி உள்ளன. அவ்வாறான ஒரு இயற்கைத் துறைமுகமாக தொண்டி அருகில் உள்ள பாசிப்பட்டினம் கி.பி.875 முதல் கி.பி.1090 வரையிலான காலத்தில் இருந்துள்ளது.

    இந்த ஊர் பாசியாற்றின் கரையில் உள்ளதால் இந்த பெயரை பெற்றுள்ளது. இதன் கடற்கரை அருகில் பிற்கால சோழர்களால் கட்டப்பட்ட பாசியம்மன் கோவில் உள்ளது. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முன் மண்டபம், பலிபீடம் என்ற அமைப்பில் உள்ள இந்த கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கிலும் ஒரு வாசல் உள்ளது.

    மதுரையை ஆண்டு கொண்டிருந்த பராக்கிரம பாண்டியனுக்கும், திருநெல்வேலியை ஆண்டு கொண்டிருந்த குலசேகரப் பாண்டியனுக்கும் மதுரையை ஆட்சி செய்வதில் நடந்த போரின்போது, கி.பி.1168ல் பராக்கிரமபாண்டியன் மகன் வீரபாண்டியனுக்கு ஆதரவாக வந்த இலங்கை பராக்கிரமபாகுவின் படையும், குலசேகரப் பாண்டி யனுக்கு ஆதரவாக வந்த 2-ம் ராஜாதிராஜ சோழன் படையும் தொண்டி பாசி பட்டினத்தில் போரிட்டதாக கல்வெட்டு தெரிவிக்கிறது. இந்த போரில் சோழர் தோற்றனர். பின்பு நடந்த போர்களில் சிங்களப்படையை சோழர் வென்றனர்.

    சோழநாட்டின் எல்லையான சுந்தர பாண்டியன்பட்டினம் முதல் தேவிபட்டினம் வரையிலான பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் முதலாம் ராஜராஜசோழன் காலம் முதல் சோழர்களின் ஆதிக்கம் இருந்துள்ளது. இந்த பகுதிகளில் சோழநாட்டு வீரர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிங்களப்ப டையிடம் தோற்ற பாசிப் பட்டினத்தில், தங்கள் வெற்றியின் அடையாளமாக எட்டுக்கைகளுடன் அமர்ந்த நிலையில் பாசியம்மனுக்கு கோவிலை கி.பி.1168க்குப் பின் சோழர்கள் எழுப்பியுள்ளனர்.

    850 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலின் மேற்பகுதியில் மரங்கள் வளர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இதை புனரமைத்து பாதுகாக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விவசாய பொருட்களை சந்தைப்படுத்த விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பேசினார்.
    • குறிப்பாக மிளகாய் ஏற்றுமதியில் முதன்மை மாவட்டமாக இருந்து வருகிறது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தோட்டக்கலை மற்றும் பணப்பயிர்கள் துறையின் மூலம் மிளகாய் ஏற்றுமதி குறித்த கருத்தரங்கம் நடந்தது. அதனை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கிஸ் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வரு கிறது. குறிப்பாக மிளகாய் ஏற்றுமதியில் முதன்மை மாவட்டமாக இருந்து வருகிறது. பொதுவாக விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு விவசாயம் செய்து வருவதுடன் பல்வேறு தொழில்நுட்பத்துடன் செயல்பட்டு சிறந்த முறையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதே வேளையில் உற்பத்தி பொருட்களை சந்தைபடுத்துதலில் ஆர்வம் காட்டவேண்டும். எந்த அளவுக்கு பொருட்களை உற்பத்தி செய்கிறோமோ அந்த அளவுக்கு பொருட்களை சந்தைப்படுத்துவதில் ஆர்வம் காட்டவேண்டும்.

    அப்தபோதுதான் சரியான லாபம் கிடைப்ப துடன் வரும் காலங்களில் விவசாய பணிகளை அதிக அளவு மேற்கொள்ளவும் உள்பத்தியை அதிகரிக்கவும் முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் நாகராஜன், உதவி இயக்குநர்கள் ரமேஷ், சிவகுமார். பிரியங்கா, ஜெகதீசன்.ரவிகுமார்,க முதி ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்வி போஸ். விவசாய சங்க தலைவர்கள் முத்துராமலிங்கம், அருணா சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளை ஒன்று திரட்டி விரைவில் போராட்டம் நடத்தப்படும்.
    • அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து முழுமையாக கணக்கிட வேண்டும்.

    பரமக்குடி

    பரமக்குடியில் அ.தி.மு.க. எம்.பி. தர்மர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் விவசாயத்தை நம்பியுள்ள மாவட்டம் ஆகும். குறிப்பாக வானம் பார்த்த பூமி தான். இந்த மாவட்டத்தை பொறுத்தவரை மழை பெய்தால் விவசாயம் நன்றாக இருக்கும். மழை இல்லாவிட்டால் விவசாயம் பொய்த்துவிடும். இது தொடர்ந்து இருந்து வருகிறது.

    தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவ மழையை நம்பி 3 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் விதைப்புக்கு பின்பு பருவ மழை சரியாக பெய்யாததால் முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, சாயல்குடி, பரமக்குடி , நயினார்கோவில், போகலூர், திருவாடானை, ஆர்.எஸ்.மங்களம் உள்பட மாவட்டம் முழுவதும் 2 லட்சம் ஏக்கர் நெல் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு நாசமாகி விட்டது.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடன்களை வாங்கியும், வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்தும் விவசாயம் செய்த விவசாயிகளுக்கு இந்த இழப்பு பேரிழப்பாக உள்ளது. மேலும் வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் முறையாக கண்மாய்களுக்கு சென்றடையவில்லை.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1792 கண்மாய்களில் 200 கண்மாய்களுக்கு கூட தண்ணீர் செல்லாத நிலை தான் உள்ளது. குறிப்பாக ரெகுநாத காவேரியில் 71 கண்மாய்களும், மலட்டாறு பகுதியில் 54 கண்மாய்களும், நாராயண காவேரியில் 36 கண்மாய்களும் உள்ளது. ஆனால் இதில் ஒரு கண்மாய்க்கு கூட வைகை தண்ணீர் செல்லவில்லை.

    இதனால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே நெல் விவசாயம் செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.26 ஆயிரம் பயிர் இன்சூரன்ஸ் தொகையும், தமிழக அரசு சார்பில் ரூ 30 ஆயிரம் நிவாரணத் தொகையும் வழங்க வேண்டும்.

    அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து முழுமையாக கணக்கிட வேண்டும். பெயரளவில் மட்டும் பார்வையிட்டு கணக்கிடக் கூடாது. பாதிக்கப் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காவிட்டால் விவசாயிகளை ஒன்று திரட்டி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு வேலை வழங்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது.
    • மாற்றுத்திறனாளி கிரிக்கெட் இந்திய அணி கேப்டன் வினோத்பாபு பேட்டியளித்தார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கீழச்செல்வனூர் கிரா மத்தை சேர்ந்தவர் வினோத்பாபு (வயது34). இவரது தலைமையிலான மாற்றுத்திறனாளி இந்திய கிரிக்கெட் அணி கடந்த மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற உலக கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி கோப்பையை வென்று சாதனை படைத்தது.

    ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதுகளை வினோத்பாபு பெற்று சாதனை படைத்தார். தமிழகம் திரும்பிய கேப்டன் வினோத்பாபு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இந்த நிலையில் சொந்த ஊர் வந்த வினோத்பாபு நிருபர்களுக்கு பேட்டியளி த்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 5 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு மாற்றுத்திறனாளி இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டேன். அப்போது பயண செலவுக்கு கூட பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டேன். இதுபற்றி அறிந்த பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் உடனடியாக நிதி உதவி செய்தார்.

    அதன் பின்னர் பாகிஸ்தா னில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தது. உலக கோப்பையுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன்.

    அப்போது 2018-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற போது மு.க. ஸ்டாலின் எனக்கு அரசு வேலை வழங்கப்படும் என உறுதி அளித்தார். 2018-ல் சந்தித்து பேசிய நிகழ்வினை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலி னிடம், மு.க.ஸ்டாலின் ஞாபகப்படுத்தினார்.

    இதனையடுத்து 2 வாரத்தில் தங்களுக்கு அரசு வேலை வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து லண்டனில் நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளேன்.

    கீழச்செல்வனூர் கிரா மத்தில் நான் பயிற்சி மேற்கொள்ள உரிய மைதானம், உபகரணங்கள் இல்லை. எனவே பயிற்சி மேற்கொள்வதற்காக தினமும் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக மைதானத்திற்கு சென்று வருகிறேன். தற்போது வீட்டில் போதுமான இடவசதி இல்லாமல் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. ஆகவே சொந்த கிராமத்தில் பயிற்சி மேற்கொள்ள மைதானத்தை அமைத்து உபகரணங்கள் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செய்யது அம்மாள் கல்லூரியில் பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி நடந்தது.
    • இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் சித்தி சமீம் பாத்திமா செய்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய அளவிலான பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் அறிவியல் கண்காட்சி கல்லூரி உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. கல்லூரி தாளாளர் டாக்டர். சின்னதுரை அப்துல்லா தலைமை வகித்து கண்காட்சியை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் பெரியசாமி வரவேற்று பேசினார்.

    இதில் கல்லூரி அறக்கட்டளையைச் சேர்ந்த பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அவர்களின் அறிவியல் படைப்புகளை கண்காட்சியில் இடம்பெறச் செய்தனர். 30க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வு படைப்புகள் இதில் இடம் பெற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் சித்தி சமீம் பாத்திமா செய்தார்.

    • ரூ.25 லட்சம் மதிப்பில் சமுதாய கூடத்திற்கான பூமிபூஜை நடந்தது.
    • அதற்கு அவர் வெற்றி பெற்றதும் கண்டிப்பாக இந்தப் பகுதியில் சமுதாயக்கூடம் ஏற்படுத்தி தருவேன் என்று வாக்குறுதி அளித்தார்.

    கீழக்கரை

    கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட முத்துச்சாமிபுரத் தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஏழை, எளிய மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சமுதாயக்கூடம் இல்லாத நிலையில் பெரும் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் வாக்கு சேகரிக்க சென்ற தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்திடம் இந்தப்பகுதி மக்கள் சமுதாயக் கூடம் கட்டித் தருமாறு கோரிக்கை விடுத்த னர்.அதற்கு அவர் வெற்றி பெற்றதும் கண்டிப்பாக இந்தப் பகுதியில் சமுதாயக்கூடம் ஏற்படுத்தி தருவேன் என்று வாக்குறுதி அளித்தார்.

    அதன்படி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டுவ தற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ராமநாத புரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில், நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, துணைத் தலைவர் ஹமீது சுல்த்தான், நகராட்சி கமிஷனர் செல்வராஜ் முன்னிலையில் பூமி பூஜை நடந்தது.

    இதில் கீழக்கரை நகர் தி.மு.க. செயலாளர் பஷீர் அஹமது, மாணவர் அணி நகர் அமைப்பாளர் இப்திகார் ஹசன், நகராட்சி பொறியாளர் அருள், மேற்பார்வையாளர் சாம்ப சிவம், நகர் மன்ற கவுன் சிலர்கள் முகமது ஹாஜா சுகைபு, நசுருதீன், மீரான் அலி, பயாஸ், காயத்ரி உள்பட கவுன்சிலர்கள், முக்கிய பிரமுகர்கள், வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×