ராமநாதசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம்

ராமநாதசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம் செய்தனர். 3-ம் பிரகாரத்தில் உள்ள சபாபதி சன்னதிக்கு மாணிக்கவாசகர் சென்றடைந்தார்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு மாணிக்கவாசகர் புறப்பாடு நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து நடராஜருக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. 
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு மாணிக்கவாசகர் புறப்பாடு நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து நடராஜருக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. 
Published on

ராமேசுவரம்

ராமேசுவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து 3 மணி முதல் ஸ்படிக லிங்க பூஜை நடந்தது. பின்னர் ராமநாதசுவாமி சன்னதியில் இருந்து மலர் அலங்காரத்துடன் மாணிக்கவாசகர் புறப்பாடானார். அப்போது திரளான பக்தர்கள் வழிநெடுகிலும் சாமி தரிசனம் செய்தனர். 3-ம் பிரகாரத்தில் உள்ள சபாபதி சன்னதிக்கு மாணிக்கவாசகர் சென்ற டைந்தார்.

அதனைத்தொடர்ந்து அங்குள்ள நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற து. காலை 4.15 மணி முதல் 5.15 மணிக்குள் ஆருத்ர தரிசன பூஜைகள் நடந்தன. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com