என் மலர்
ராமநாதபுரம்
- மாணவர்களுக்கான தனித்திறன் போட்டி இஸ்லாமியா பள்ளியில் நடக்கிறது.
- போட்டியில் கலந்து கொள்பவர்களின் பெயர்களை நாளை (11-ந் தேதி)-க்கு முன்னர் 04567-241565, 244588 மற்றும் மின்னஞ்சல்: islamiahmatric@gmail.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
கீழக்கரை
கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம் கூறியதாவது:-
கீழக்கரை ரோட்டரி சங்கம், இந்தியன் ரெட்கி ராஸ் சொசைட்டி ராமநாத புரம் கிளை மற்றும் கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் நடத்தும் சமத்துவ பொங்கல் திருவிழா இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் வருகிற 13-ந்தேதி மாலை 3 மணியளவில் நடைபெறுகிறது.
முன்னதாக கீழக்கரை யில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு தனித்திறன் போட்டிகள் 13-ந்தேதி நடைபெறும். 5,6,7-வது வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு ஓவியம் வரைதல் போட்டி (தலைப்பு பொங்கல்), 8,9.10-வது வகுப்பு மாணவிகளுக்கு பானை அலங்காரம், 8,9.10 வகுப்பு மாணவர்களுக்கு விவசாயம் காப்போம் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெறுகிறது. ஒரு பள்ளிக்கு 2 மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
பெற்றோர்களுக்கான வினாடி-வினா போட்டியும் நடைபெறும். பெயர்களை நாளை (11-ந் தேதி)-க்கு முன்னர் 04567-241565, 244588 மற்றும் மின்னஞ்சல்: islamiahmatric@gmail.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இலவச சட்ட உதவி முகாம் நடைபெற்றது.
- பொதுமக்களின் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன.
முதுகுளத்தூர்
முக்குளத்தூர் தாலுகா வெங்கலகுறிச்சி கிராமத்தில் இலவச சட்ட உதவி முகாம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி டி.ராஜகுமார் தலைமை வகித்தார். வட்டாட்சியர் சிவகுமார் முன்னிலை வகித்தார்.வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.டி.செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜசேகர், ஆனையாளர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புக் கண்ணன் (கி.ஊ), ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி ராஜசேகர், வக்கீல் சங்க செயலாளர் சிவராமகிருஷ்ணன், வக்கீல் சந்திரேசேகர், கிராம நிர்வாக அலுவலர் செண்பகவள்ளி, ஊராட்சி செயலர் பொன்மணி உள்பட வெங்கலகுறிச்சி, தொட்டி வலசை, கருங்கலக்குறிச்சி, திருவாக்கி, கிருஷ்ணாபுரம், கீழப்பனையடியேற்தல் ஆகிய கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். முகாமில் நீதிபதி டி.ராஜ்குமார் பேசும்போது, பொதுமக்கள் தங்கள் குறைகளை தீர்க்க இலவச சட்ட உதவி முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
பொதுமக்களின் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன.
- கடவுள் சிலைகளை காட்சி பொருளாக கையாளக் கூடாது என முன்னாள் போலீஸ் அதிகாரி பொன் மாணிக்கவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- கோவில்களில் நடக்கும் திருட்டுக்களை அரசுகள் மறைக்கின்றன.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் வெளிப்பட்டினம் லட்சுமிபுரத்தில் உள்ள தாயுமானவர் தபோவனத்தில் உலக சிவனடியார்கள் தெருக்கூத்து அறக்கட்டளை சார்பில் திருமுறை பண்ணிசை பெருவிழா நடந்தது.
இதில் ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவில்களில் சிலைகள் வைப்பதற்கு உயர்தர பாதுகாப்பு அறை கட்ட வேண்டும் என்று 2017-ம் ஆண்டு ஜூலை 21-ந் தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டும் இதுவரை அதனை அரசு செய்யவில்லை. சென்னை வண்டலூர் பசுபதி ஈஸ்வரர் கோவிலில் மட்டும் கட்டப்பட்டது. அதுவும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
தமிழகத்தின் பல்வேறு கோவில்களுக்கு சென்று வந்துள்ளோம். இதில் நாகை, திருவாரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்களில் சாமி செப்பு திருமேனிகள் பாதுகாப்பாக இல்லை. சாமி சிலைகள் பாதுகாப்பாக இல்லாதது வேதனை அளிக்கிறது. கோவில்களில் நடக்கும் திருட்டுக்களை அரசுகள் மறைக்கின்றன.
கோவில்களின் பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ள சிறப்பு படையினரால் எந்தவித பயனும் இல்லை. கோவில் பாதுகாப்பு பணியில் ஓய்வு பெற்ற அலுவலர்களை நியமிப்பது என்பது பயனற்றது. இதுவரை கோவில் சிலை பாதுகாப்பு தனிப்படையினர் எந்தவித கோவில் கொள்ளையையும் தடுத்து நிறுத்தியதாக தகவல் இல்லை. தூங்கி எழுந்து செல்ல அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் கோவில் நிதி கொடுத்து வீணடிக்கப்படுகிறது.
அந்த பணியில் உடல்தகுதி மிக்க இளைஞர்களை நியமித்து கோவில் சிலைகள் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். மூலவருக்கான பிரதிநிதி போன்றவர் தான் உற்சவர். திருவிழா நாட்களில் மட்டும் அவற்றை எடுத்து தருவதும் அல்லது அதனை கேட்டு பெறுவதும் சரியல்ல. நாள்தோறும் கோவில்களுக்கு வரும் பக்தர்கள் உற்சவரையும் தரிசித்துச் செல்ல வழிவகை செய்ய வேண்டும். அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் காட்சி பொருளைப் போல் கடவுள் சிலைகளை கையாளக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாநில கால்பந்து போட்டி நடந்தது.
- 4-க்கு 3 என்ற கோல் கணக்கில் திருச்சி யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை பயணத்தை முன்னிட்டு மாநில அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.
இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் செங்கை.எஸ்.விக்னேசுவரன் ஏற்பாட்டில் ராஜா பள்ளி மைதானத்தில் இந்த போட்டி நடந்தது. இதில்பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 22 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
திருச்சி அணியும், சென்னை அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. பரபரப்பாக நடந்த இறுதி ஆட்டத்தில் பெனால்டி கிக்கில் 4-க்கு 3 என்ற கோல் கணக்கில் திருச்சி யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.
இதன் பரிசளிப்பு விழாவில் கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர். செல்லக்குமார், ராமநாதபுரம் ராஜா நாகேந்திர சேதுபதி ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினர். மாநில ஆராய்ச்சி குழு தலைவர் மாணிக்கவாசகம், மாவட்ட பொறுப்பு குழு தலைவர் மலேசியா பாண்டியன், மாவட்ட பொறுப்பாளர்கள், நகர் மன்ற உறுப்பினர் ராஜாராம் பாண்டியன், ரமேஷ்பாபு, தெய்வேந்திரன், கோட்டை முத்து, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் வேலுச்சாமி, சோ.பா. ரங்கநாதன், ஆனந்தகுமார், ஜோதி பாலன், துல்கிப், கிருஷ்ணராஜ், வட்டார தலைவர்கள் சேதுபாண்டியன், காருகுடி சேகர், செல்லச்சாமி, அன்வர், அல்அமின், ஒன்றிய கவுன்சிலர் திருமுருகன், கபிர், வாணி செய்யது இப்ராகிம் ஆகியோர் கலந்து கொண்டனர். நகர் தலைவர் கோபி நன்றி கூறினார்.
முன்னதாக மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா படத்திற்கு டாக்டர். செல்லக்குமார் எம்.பி. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
- பெரிய கண்மாய்க்கு வைகை ஆற்று தண்ணீர் வந்தடைந்ததை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.
- கடந்த 3-ந்தேதி கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் வானம் பார்த்த பகுதி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் போதிய பருவமழை இல்லாததால் நெல், மிளகாய், பருத்தி பயிர்கள் கருகி விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
இந்த நிலையில் குடிநீர் தேவைக்காகவும், நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்கவும் விரகனூர் அணையில் இருந்து கடந்த 3-ந்தேதி கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 5 நாட்களுக்கு பிறகு நேற்று அதிகாலை அபிராமம் பெரிய கண்மாயை வைகை ஆற்று தண்ணீர் வந்தடைந்தது.
இதையடுத்து விவசாய சங்க மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், சமூக ஆர்வலர் அருணாசலம் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் தண்ணீரை மலர்தூவி வரவேற்றனர். இதுகுறித்து விவசாய சங்க செயலாளர் முத்துராமலிங்கம் கூறியதாவது:-
அபிராமம் பகுதி வானம் பார்த்த பூமி ஆதலால் விவசாயம் பாதிப்படைந்து நெற் பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் விவசாயிகள் வைகை ஆறு மூலம் கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்க கோரி தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறையினருக்கும் மனு ெகாடுத்தும், பல கட்ட போராட்டங்களையும் நடத்தினோம்.
அப்போதே தண்ணீர் திறந்து இருந்தால் நெல் விவசாயம் பாதிப்படைந்து இருக்காது. தற்போது எங்களது கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனால் அபிராமம் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
நெல் விவசாயம் பாதிக்கப்பட்டாலும் குடிநீர் தேவைக்காகவும், நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும் என்றார்.
- சாமி சிலைகள் பாதுகாப்பாக இல்லாதது வேதனை அளிக்கிறது.
- கோவில் பாதுகாப்பு பணியில் ஓய்வு பெற்ற அலுவலர்களை நியமிப்பது என்பது பயனற்றது.
ராமநாதபுரம் :
ராமநாதபுரத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தின் பல்வேறு கோவில்களுக்கு சென்று வந்துள்ளோம். இதில் நாகை, திருவாரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்களில் சாமி செப்பு திருமேனிகள் பாதுகாப்பாக இல்லை.
சாமி சிலைகள் பாதுகாப்பாக இல்லாதது வேதனை அளிக்கிறது. இதற்காக கோவில்களில் சிலைகள் வைப்பதற்கு உயர்தர பாதுகாப்பு அறை கட்ட வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டும் இதுவரை அதனை அரசு செய்யவில்லை.
கோவில்களின் பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ள சிறப்பு படையினரால் எந்தவித பயனும் இல்லை. கோவில் பாதுகாப்பு பணியில் ஓய்வு பெற்ற அலுவலர்களை நியமிப்பது என்பது பயனற்றது. இதுவரை கோவில் சிலை பாதுகாப்பு தனிப்படையினர் எந்தவித கோவில் கொள்ளையையும் தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் இல்லை.
எனவே அந்த படையில் உடல்தகுதி மிக்க இளைஞர்களை நியமித்து கோவில் சிலைகள் பாதுகாப்பினை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
- அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழக்கரை
கீழக்கரை நகராட்சி சார்பில் மக்கள் குறைதீர்க் கும் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர்.
கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் பாசித் இல்யாஸ் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதா வது:-
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 6 இடங்களில் மினி ஹைமாஸ் விளக்குகள் சில நாட்களுக்கு முன்பு பொருத்தப்பட்டது. அதில் 3 இடங்களில் விளக்கு எரிய வில்லை. கடற்கரை கழிவு கள் கடலில் கலப்பதால் பகுதியில் ரூ.5.50 லட்சம் மதிப்பில் கழிவுநீர் குழாய்கள் போடப்பட்டும் முறையாக பணி மேற்கொள்ள பபடாமல் உள்ளது.
இனி வரும் காலங்களில் இது போன்று கண்துடைப்பு பணி நடக்காமல் சேர்மன், நகராட்சி கமிஷனர், பொறி யாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
- மழை பெய்யாததால் பனங்கிழங்கு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
- ஒரு கட்டு ரூ.100-க்கு விற்பனையானது தற்போது ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, திருப்புல்லாணி, ரகுநாதபுரம், உச்சிப்புளி, மண்டபம், தங்கச்சிமடம், வெள்ளையன்வலசை, சிட்டாங்காடு, மொட்டையன்வலசை, களிமண்குண்டு, குத்துக்கல் வலசை, தினைக்குளம், வைர வன்கோவில், அழகன்குளம், பனைக்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமாக பனை மரங்கள் உள்ளன.
இங்குள்ள தென்னந் தோப்புகள் மற்றும் வீட்டின் கொல்லை புறங்களில் புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் விவசாயிகள் பனங்கொட்டைகளை நடவு செய்தனர். தற்போது அறுவடை பணிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டில் மழை இல்லாததால் பனங்கிழங்கு முழுமையான வளர்ச்சி பெறவில்லை.
இதனால் கிழங்கு பருமன் குறைந்து விளைச்சல் இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம், அரண்மனை, சாலைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் பனங்கிழங்குகளை பெண்கள் கட்டுகளாக கட்டி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். 25 கிழங்குகள் உள்ள கட்டு ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து பனங்கிழங்கு விற்பனை செய்யும் பெண் கூறுகையில், இந்த ஆண்டு பனங்கிழங்கு விளைச்சல் குறைவாக உள்ளது. இதனால் தாமதமாக விற்பனைக்கு வந்துள்ளது.
விளைச்சல் குறைவு காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலை அதிகமாகி விட்டது. பொங்கல் பண்டிகை என்பதாலும் உடலுக்கு நன்மை தரக்கூடியது என்பதாலும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். தொடக்கத்தில் ஒரு கட்டு ரூ.100-க்கு விற்பனையானது தற்போது ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை நெருங்கி விட்டதால் கிழங்கின் விலை மேலும் குறைவதற்கான வாய்ப்பில்லை என்றார்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து திரளான பெண் பக்தர்கள் மேல்மருவத்தூர் கோவிலுக்கு இருமுடி கட்டி பயணம் செய்கின்றனர்.
- மார்கழி மாத முழுவதும் சிறப்பு வழிபாடு செய்து இருமுடி கட்டி திரளான ஆண், பெண் பக்தர்கள் மேல்மருவத்தூர் சென்று வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.ஆர்.சேதுபதி நகர் வழிபாட்டு மன்றம் உள்பட 108 மன்றங்கள் உள்ளன. அந்தந்த பகுதிகளில் உள்ள பெண்கள் சக்தி மாலை அணிந்து, விரதம் இருந்து இருமுடி கட்டி நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று வருகின்றனர்.
மாவட்ட ஆன்மீக நிர்வாக குழு தலைவர் பொன்ராஜ் தலைமையில் தணிக்கை குழு பொறுப்பாளர் நாகசேகரன், மாவட்ட வேள்விக் குழு தலைவி சாந்தி தனபால் முன்னிலையில், வட்ட, மன்றத் தலைவிகள் ஏற்பாட்டில் மாலை அணிந்து வருகின்றனர்.
ஆர்.ஆர்.சேதுபதி நகர் மன்ற தலைவி நித்திய கல்யாணி மாரிமுத்து தலைமையில் மார்கழி மாத முழுவதும் சிறப்பு வழிபாடு செய்து இருமுடி கட்டி திரளான ஆண், பெண் பக்தர்கள் மேல்மருவத்தூர் சென்று வருகின்றனர்.
ராமநாதபுரம் மன்ற ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. இதில் இரு முடி கட்டி பெண்கள் அதிகளவில் சென்று வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஒரு லட்சம் பேர் இருமுடி செலுத்தினர். இந்த ஆண்டு இதுவரை 40 ஆயிரம் பேர் இருமுடி கட்டி பயணம் செய்துள்ளனர். பக்தர்கள் சென்று வர சிறப்பு பஸ் வசதி வழங்கிய கோட்ட மேலாளர், காரைக்குடி பொது மேலாளர், ராமநாதபுரம் புறநகர் பிரிவு மேலாளர் பாலமுருகன் மற்றும் தென்னக ரெயில்வே அதிகாரிகள் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.
- ராணுவ வீரர் ஓட்டி சென்ற கார் மோதி முதியவர் பலியானார்.
- இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் பரமக்குடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தினைக்குளத்தை சேர்ந்தவர் போஸ் (வயது 43). இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
போஸ் தற்போது விடு முறையில் சொந்த ஊர் வந்துள்ளார். அவர் தனது காரை மதுரை - பரமக்குடி 4 வழிச்சாலையில் ஓட்டி சென்றார். வேந்தோணி விலக்கு என்ற இடத்தில் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது எதிர் திசையில் நின்று கொண்டிருந்த 2 கார்கள் மீது மோதியது.
மேலும் மேலும் அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீதும் கார் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த பொழி கால் கிராமத்தை சேர்ந்த முத்துவேல் (65) என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபாக இறந்தார்.
இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் பரமக்குடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளருக்கு சர்வதேச அளவிலான சிறந்த கல்வியாளர் விருது வழங்கப்பட்டது.
- 100-க்கும் அதிக மானோர் பொன்னாடை அணிவித்து மென்மேலும் பல்வேறு சாதனை விருதுகளை பெற வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் சிறப்பான கல்வி, விளையாட்டுகளில் மாணவர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
இந்தப் பள்ளியின் தாளாளராக இருந்து வரும் வழக்கறிஞர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம் கடின உழைப்பு, இளம் மனங்களின் அறிவின் எல்லைகளை விரிவுபடுத்த உதவியது, கற்றல் முறைகளைப் புதுமைப்படுத்த கையாண்ட உத்தி, கல்வித் துறையில் புதிய மைல் கற்களை அடைய உதவிய புத்திசாலித்தனம் மற்றும் அறிவாற்றலுக்காக சர்வதேச அளவிலான சிறந்த கல்வியாளர் விருது வழங்கப்பட்டது. கடந்த மாதம் 30-ந் தேதி டெல்லி சர்வதேச கல்வி விருதுகள் வழங்கும் மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட்டது.
விருது பெற்று சொந்த ஊர் திரும்பிய பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராகிமிற்கு நகர்மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான், கீழக்கரை முன்னாள் நகர்மன்ற தலைவரும், கீழக்கரை தி.மு.க. செயலாள ருமான பஷீர் அகமது, தி.மு.க.மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார் ஹூசைன், தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் கிருஷ்ண மூர்த்தி, கீழக்கரை அ.தி.மு.க. அவைத்தலைவர் சரவண பாலாஜி, கவுன்சிலர்கள் முகம்மது காசிம் மரைக்காயர், எஸ்.கே.வி.சுகைபு, நசிருதீன், மீரான் அலி, இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முகமது முஸ்தபா, துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தன லட்சுமி, நிர்வாக அலுவலர் மலைச்சாமி மற்றும் ஆசிரி யர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், கல்வியா ளர்கள், சமூக நல அமைப்பி னர் உள்பட 100-க்கும் அதிக மானோர் பொன்னாடை அணிவித்து மென்மேலும் பல்வேறு சாதனை விருதுகளை பெற வாழ்த்துக்கள் தெரிவித்த னர்.
- ராமநாதபுரம் செய்யது அம்மாள் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி போட்டி நடந்தது.
- மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறையைச் சேர்ந்த ஒருங்கி ணைப்பாளர் சித்தி சமீம் பாத்திமா நன்றி கூறினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம்செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய அளவி லான அறிவியல் கண்காட்சி நிறைவு விழா தாளாளர் டாக்டர் சின்னத்திரை அப்துல்லா தலைமையில் நடந்தது.
இதில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு அறிவியல் படைப்புகளை கண்காட்சியில் இடம் பெறச் செய்தனர். முதல்வர் பெரியசாமி வரவேற்றார்.
ராமநாதபுரம் ஜெயம் சாப்ட்டுவேர் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சங்கர் கலந்து கொண்டு பேசினர். இதில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான போட்டியில் நேசனல் அகாடமி மாண்டிசோரி பள்ளியை சேர்ந்த மாணவி பூர்விகா, கீர்த்திகா மற்றும் அஸ்மியா பேகம் முதல் பரிசையும், செய்யது அம்மாள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த அசோகமித்ரன், ஆனந்தலட்சுமி 2-வது பரிசையும், மதுரை தனியார் பள்ளியை சேர்ந்த கிஸ்வர் ஜகான் 3-வது பரிசையும் பெற்றனர்.
பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பிற்கான போட்டி யில் கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஹிதாயத்துல்லா முதல் பரிசையும், ராமநாதபுரம் செய்யது அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நிலோபர் நிசா 2-வது பரிசையும், செய்யது அம்மாள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சேர்ந்த அகில் பாகீம், சுபாஷ், முகமத்துல் பாஸி, நேஷனல் அகாடமி மாண்டிசோரி பள்ளி மாணவர் நந்து மகேந்திரன், சிவகங்கை மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சுந்தர வரதன் ஆகியோர் 3-வது பரிசையும் பெற்றனர். நடுவர்களாக வானதி அமலன், நாசர் ஆகியோர் பணியாற்றினர். மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறையைச் சேர்ந்த ஒருங்கி ணைப்பாளர் சித்தி சமீம் பாத்திமா நன்றி கூறினார்.






