என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில் சிக்கிய கார் சேதமாகி இருப்பதை காணலாம்.
ராணுவ வீரர் ஓட்டி சென்ற கார் மோதி முதியவர் பலி
- ராணுவ வீரர் ஓட்டி சென்ற கார் மோதி முதியவர் பலியானார்.
- இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் பரமக்குடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தினைக்குளத்தை சேர்ந்தவர் போஸ் (வயது 43). இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
போஸ் தற்போது விடு முறையில் சொந்த ஊர் வந்துள்ளார். அவர் தனது காரை மதுரை - பரமக்குடி 4 வழிச்சாலையில் ஓட்டி சென்றார். வேந்தோணி விலக்கு என்ற இடத்தில் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது எதிர் திசையில் நின்று கொண்டிருந்த 2 கார்கள் மீது மோதியது.
மேலும் மேலும் அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீதும் கார் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த பொழி கால் கிராமத்தை சேர்ந்த முத்துவேல் (65) என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபாக இறந்தார்.
இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் பரமக்குடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






