என் மலர்
ராமநாதபுரம்
- கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
- 150 மாடு, கன்றுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் தாலுகாகீரனூர் கிராமத்தில் கால்நடைத்துறை மூலம் மாடுகள், கன்றுகளுக்கு கால்கானை, வாய்க்கானை எனப்படும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. கீரனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிமுனியசாமி தலைமை தாங்கினார்.
கால்நடை மருத்துவர் சுந்தரமூர்த்தி, கால்நடை ஆய்வாளர்கள் வீரன், சமாதான ஜெபமாலை மேரி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் செந்தில்வேல் ஆகியோர் கீரனூர் ஊராட்சிக்கு உட்பட்ட வைத்தியனேந்தல், மேலப்பனைக்குளம், கீழப்பனைக்குளம் கிராமங்களில் 150 மாடு, கன்றுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
- திட்டப் பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
- மாதவி ராஜசேகர், யூனியன் ஆணையாளர் ராஜகோபாலன் ஆகியோர் உடனிருந்தனர்.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தர்மேந்திரா பிரதாப் யாதவ் ஆய்வு செய்தார். கமுதி அருகே உள்ள டி.புனவாசல் கிராமத்தில் அங்கன்வாடி மையம், வல்லந்தை ஊராட்சியில் பஞ்சாப் மாநில விவசாயி மன்மோகன் சிங்கின் விவசாயத் தோட்டம், கண்மாயில் குடிநீர் சுத்திகரிப்பு பணி, அபிராமம் பேரூராட்சியில் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டிட பணிகள், பேரையூர் சுகாதார ஆரம்ப நிலைய கட்டிடப்பணிகள், புல்வாய்க்குளம் ஊராட்சியில் நடைபெறும் சமுதாயக் கூட கட்டிடப் பணி, பேரையூர் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். மருத்துவம், ஊரக வளர்ச்சி, கூட்டுறவுத்துறை, தோட்டக்கலை, வேளாண் துறை உள்பட பல்வேறு துறைகளின் கீழ் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை பார்வையிட்டார். பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார்(வளர்ச்சி), உதவி ஆட்சியர் நாராயணன் சர்மா (பயிற்சி) மாவட்ட குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் விசுவாபதி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், ஊராட்சித் தலைவர்கள் அழகர்சாமி, தேவதி, மாதவி ராஜசேகர், யூனியன் ஆணையாளர் ராஜகோபாலன் ஆகியோர் உடனிருந்தனர்.
- சிறுவனின் இருதய சிகிச்சைக்கு தி.மு.க. நிதியுதவி வழங்கியது.
- சண்முகவேல், விவசாய அணி செந்தூர்பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழி-சண்முகாபுரம் பகுதியில் ஏழை குடும்பத்தை சேர்ந்த ரஞ்சித்- சரண்யா தம்பதியரின் 4 வயது மகன் கஜனுக்கு இருதய ரத்தக்குழாயில் பிரச்சினை உள்ளது.
இந்த சிகிச்சைக்கு ரூ.10 லட்சம் வரை செலவாகும் என்பதால் பெற்றோர் மனவேதனையில் இருந்து வந்தனர். தனது அறுவை சிகிச்சைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவி செய்ய வேண்டும் என்று சிறுவன் கஜன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதை அறிந்த ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் சார்பில் சிறுவனின் பெற்றோரிடம், மருத்துவ செலவிற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
தி.மு.க. தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட பெருநாழி - சண்முகாபுரத்தில் உள்ள சிறுவனின் பெற்றோரிடம், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன் நிதியுதவியை வழங்கினார். அப்போது ஒன்றிய துணைச் செயலாளர்கள் உதயகுமார், ஆதிமுத்து, கிளைச் செயலாளர் மன்சூர்அலிகான், பிரதிநிதி சண்முகவேல், விவசாய அணி செந்தூர்பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
- பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
- 50 மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டார வள மையத்தில் ஒருங்கி ணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மாற்றுத்திறன் மாணவ-மாணவிகள் உள்ளடக்கிய கல்வியின் கீழ் பள்ளி ஆயத்த பயிற்சி மையம், தொடக்க நிலை ஆயத்த பயிற்சி மையம், வீட்டு வழிக் கல்வி பயிலும் ஆதார வள மையங்களில் சேர்க்கை செய்யப்பட்டு உள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சிக் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது.
இதில் சுமார் 50 மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- வீச்சரிவாளுடன் வந்து பைக் திருடிய வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- தலைமறைவான அவர்களை தேடி வருகிறார்கள்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள தினையத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்தி. இவரது மகன் ரமேஷ்.
இவர் வழக்கம் போல் தனது இரு சக்கர வாகனத்தை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்கச் சென்றுவிட்டார். காலை எழுத்து பார்த்தபோது பைக் காணவில்லை.
பக்கத்து வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு காமிராவை ரமேஷ் ஆய்வு செய்தபோது 2 வாலிபர்கள் வீச்சரிவாளு டன் நள்ளிரவில் பைக்கை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து தொண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த வாலிபர்கள் திருட்டை தடுக்கச் சென்றால் வீச்சரி வாளால் கொலை செய்ய வும் தயங்க மாட்டார்கள் என்ற நிலை உள்ளதாக இந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த திருடர்கள் யார்? வேறு திருட்டு அல்லது கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளவர்களா? என தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறை வான அவர்களை தேடி வருகிறார்கள்.
- கமுதியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்க இளைஞா் திறன் திருவிழா நடந்தது.
- ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் நடந்தது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக ஊரக பகுதியில் வசிக்கும் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞா்கள் மற்றும் இளம் பெண்களுக்கு திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் இளைஞா் திறன் திருவிழா முகாம் வட்டார இயக்க மேலாண்மை அலுவகத்தில் நடைபெற்றது.
அரசு அங்கீகாரம் பெற்ற 20-க்கும் மேற்பட்ட திறன் பயிற்சி வழங்கும் நிறுவ னங்கள் கலந்து கொண்டு தாங்கள் வழங்கும் பயிற்சிகள் குறித்து விளக்கம் அளித்து இளைஞா்களை பயிற்சிக்கு தோ்வு செய்தனா்.
கமுதி வட்டாரத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளை சார்ந்த 700-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். கமுதி ஊராட்சி ஒன்றிய தலைவா் தமிழ்செல்வி போஸ் மற்றும் திட்ட இயக்குநா் அபிதா ஹனீப் ஆகியோர் தலைமையில் இந்த இளைஞா் திறன் திருவிழா நடைபெற்றது.
இந்த முகாமில் மகளிா் திட்ட அலுவலா்கள் கிருஷ்ணகுமார் (நிதி உள்ளக்கம்), உதவிதிட்ட இயக்குநா் சரவணபாண்டி யன் (திறன்), உதவி திட்ட அலுவலா் கிருஷ்ணன் (என். யு.எல்.எம்.) கலந்து கொண்டனா்.
விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வட்டார இயக்க மேலாளா் மயில்ராஜ் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளா்கள் திரவியம், சேதுபதி பில்லத்தியான், மாரிமுத்து சாந்தி ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர்.
- துறைமுக கடலோர பகுதிகளில் இருந்து அந்த படகுகளை அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டனர்.
- போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் துறைமுக பகுதியில் கடந்த சில வாரங்களாக விதிகளுக்கு முரணாக அதிக நீளமும், அகலமும் கொண்ட 24 பைபர் படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டன. இதற்கு அந்தப்பகுதியை சேர்ந்த மற்ற மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் சம்பந்தந்பட்ட 24 பைபர் படகுகளின் உரிமையாளர்களை அழைத்து இந்தப்பகுதியில் மீன்பிடிக்க அனுமதியில்லை. உடனே படகுகளை எடுத்துச்செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் அவர்கள் படகுகளை எடுத்துச்செல்லாமல் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து 24 படகுகளுக்கும் அதிகாரிகள் தலா ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, துறைமுக கடலோர பகுதிகளில் இருந்து அந்த படகுகளை அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டனர்.
இதனை கண்டித்தும், அபராதத்தை ரத்து செய்து மீன்பிடிக்க அனுமதி வழங்க கோரியும் 24 படகு உரிமையாளர்களும், அதில் மீன்பிடிக்கும் 50-க்கும் மேற்பட்ட மீனவர்களும் ராமேசுவரம் துறைமுக அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
- சாயல்குடி அருகே இடி தாக்கி 8 ஆடுகள் பலியாயின.
- கிராம நிர்வாக அதிகாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
சாயல்குடி
தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கிராமத்தை சேர்ந்தவர் தேவசகாயம் (வயது 56). இவர் தற்போது ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கடுகுசந்தை சத்திரம் கிராமத்தில் பனை தொழில் செய்து வருகிறார். மேலும் வெள்ளாடுகளையும் வளர்த்து வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல் வெள்ளாடுகளை கொட்டகையில் அடைத்து வைத்தார். இதற்கிடையில் இன்று அதிகாலை 2 மணியளவில் சாயல்குடி சுற்றுவட்டார பகுதியில் இடி-மின்னலுடன் சாரல் மழை பெய்தது. கடுகுசந்தை சத்திரம் கிராமத்தில் இடி தாக்கியதில், கொட்டகையில் இருந்த 8 வெள்ளாடுகள் பரிதாபமாக இறந்தது.
இன்று காலை தேவசகாயம் வீட்டில் இருந்து வெளியே வந்தபோது 8 ஆடுகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அதிகாரி ஜெயக்கொடி மற்றும் சாயல்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
- ஏர்வாடியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.
- தூய்மைப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம், ஏர்வாடி ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்றத்தலைவர் செய்யது அப்பாஸ் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் உடையார் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் செல்வத்துரை அனைவரையும் வரவேற்றார். கடலாடி ஊராட்சி ஒன்றியம் சார்பில் பற்றாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் கலந்து கொண்டார். ஏர்வாடி ஊரக வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி கிராம ஊராட்சி திட்டம் உறுதி செய்யபட்டன. உலக தண்ணீர் தின சிறப்பு தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஊராட்சித்தலைவர் செய்யது அப்பாஸ் பேசும்போது, பொதுமக்கள் குப்பைகளை குப்பைத்தொட்டியில் போட வேண்டும், ஏர்வாடியை தூய்மை நகரமாக மாற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,நெகிழி பயன்படுத்தாமல் மஞ்சள் பை உபயோகப்படுத்த வேண்டும், தூய்மைப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
- செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) லாந்தை செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் நடக்கிறது.
அமைச்சர் ராஜ கண்ணப்பன் தலைமையில் நடக்கும் வேலை வாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு முன்னணி தனியார் நிறுவ னங்கள் கலந்துகொண்டு வேலை நாடுநர்களை தேர்வு செய்ய இருக்கின்றன.
ராமநாதபுரம் மாவட்ட த்தை சேர்ந்த வேலை வாய்ப்பற்ற 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களும், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகளும், முதுகலை, இளங்கலை பட்டதாரி ஆசிரியர்கள், செவிலியர் மற்றும் லேப் டெக்னீசியன் கல்வித்தகுதியுடைய அனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.
இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது ramnademployment2020@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, தொடர்பு கொள்ளலாம்.
இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி யமர்த்தம் செய்யப்படும் நபர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எக்கா ரணத்தைக் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே வேலை நாடுநர்கள் தங்களது முழு பயோ டேட்டா, அனைத்து அசல் கல்விச்சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் இத்தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடை யலாம்.
மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
- இலங்கை கடற்படையின் தொடர் அச்சுறுத்தல் காரணமாக இன்று காலை 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேசுவரம் துறைமுகத்துக்கு திரும்பினர்.
- ஒவ்வொரு முறையும் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி விரட்டியடிப்பது நடந்து வருகிறது.
ராமேசுவரம்:
ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு புறப்பட்டனர். இவர்களில் ஒரு தரப்பினர் இன்று அதிகாலை இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது வழக்கம்போல் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் பகுதியான இங்கு மீன்பிடிக்க அனுமதி இல்லை. எனவே இங்கிருந்து புறப்பட்டு செல்லுங்கள் என எச்சரித்தனர். சில வீரர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி தாக்கி விரட்டியடித்ததாக தெரிகிறது. தொடர்ந்து இந்த பகுதியில் மீன் பிடித்தால் விசைப்படகுகளுடன் சிறைபிடிக்கப்படுவீர்கள் என இலங்கை கடற்படை எச்சரித்தது.
இதனால் பீதி அடைந்த மீனவர்கள் மீன்பிடிப்பதை பாதியிலேயே அவசர அவசரமாக கரைக்கு புறப்பட்டனர். இவ்வாறு அவசர கதியில் திரும்பும்போது மீனவர்களின் படகுகள் ஒன்றொடு ஒன்று மோதி சேதமடைந்தன.
இலங்கை கடற்படையின் தொடர் அச்சுறுத்தல் காரணமாக இன்று காலை 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேசுவரம் துறைமுகத்துக்கு திரும்பினர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒவ்வொரு முறையும் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி விரட்டியடிப்பது நடந்து வருகிறது. இதன் காரணமாக எங்களுக்கு ஒவ்வொரு படகுகளுக்கும் ரூ.1 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது.
இந்த போக்கு நீடித்தால் ராமேசுவரத்தில் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- பரமக்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 5 பேரையும் கைது செய்தனர்.
- போலீஸ் காவல் முடிந்த பின் 5 பேரும் நாளை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய 9-ம் வகுப்பு மாணவியை 3-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சிகாமணி (வயது 44), மறத்தமிழர் சேனை அமைப்பின் நிறுவனர் புதுமலர் பிரபாகரன் (42), ஜவுளிக்கடை உரிமையாளர் ராஜா முகமது (34) ஆகியோர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் இருந்தது. இதற்கு அதே பகுதியைச் சேர்ந்த கயல்விழி (45), உமா (34) ஆகிய 2 பேர் உடந்தையாக இருந்துள்ளனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இந்த சம்பவம் தொடர்பாக பரமக்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 5 பேரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டார். அதன்படி சிவகங்கை சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் கீதா இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்திய நிலையில் சிறையில் உள்ள 5 பேரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கோபிநாத், 5 பேரையும் நேற்று முதல் நாளை (17-ந் தேதி) வரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
கோர்ட்டு அனுமதி அளித்த உடன் அதன் தீர்ப்பு நகலை பெற்றுக்கொண்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிகாமணி உள்ளிட்ட 3 பேர் அடைக்கப்பட்ட ராமநாதபுரம் சிறைக்கு சென்று அவர்களை காவல் எடுத்தனர். இதேபோல் பரமக்குடி மகளிர் சிறையில் உள்ள 2 பெண்களும் காவலில் எடுக்கப்பட்டனர்.
5 பேரும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து மாணவியை கூட்டு பலாத்காரம் செய்தது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சில முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது. அதன் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போலீஸ் காவல் முடிந்த பின் 5 பேரும் நாளை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.






