என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • ரூ.75 லட்சம் மதிப்பில் புதிய நகர்புற நலவாழ்வு மையத்தை கலெக்டர் பார்வையிட்டார்.
    • கலெக்டர் விஷ்ணு சந்திரன் குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதை பார்வையிட்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகராட்சிக் குட்பட்ட லேதம்ஸ் பங்களா, பரமக்குடி சந்தை கடை தெரு, மஞ்சள்பட்டினம் ஆகிய 3 இடங்களில் தலா ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய அரசு நகர்ப்புற சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் கட்டப்பட்டுள் ளன. இதனை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    தொடர்ந்து நலவாழ்வு மையத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிகிச்சை அளிப்பதை பார்வை யிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு நலவாழ்வு மையத்திலும் தலா, ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் மருத்துவமனை பணியாளர் என பணிபுரிவார்கள். மேலும் இங்கு காலை 8 மணி முதல் 12 மணி வரை மற்றும் 4 மணி முதல் இரவு 8 மணி வரை ஆகிய நேரங்களில் 12 வகையான மருத்துவ சேவைகள், 14 வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும். மேலும் இலவசமாக மருந்துகள் வழங்கப்படும். நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் தேவையான மருத்துவ சிகிச்சைகள் பெற்று பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த திறப்பு விழாவில் முருகேசன் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள்அர்ஜூன் குமார் (ராமநாதபுரம்), இந்திரா (பரமக்குடி), ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் கார்மேகம், ராமநாதபுரம் நகர் மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம், நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன், நகர்மன்ற உறுப்பி னர் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நில அளவையர் பற்றாக்குறையால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
    • பல்வேறு பணிகளுக்கான பணியிடம் காலியாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் நில அளவையர் பற்றாக்குறை உள்ளது. இதனால் பொதுமக்கள் அளிக்கும் நில உட்பிரிவு மனுக்கள் கிடப்பில் வைக்கப்படுகிறது. தற்போது பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் நடவடிக்கை எடுக்கப்படாமல் குவிந்துள்ளது.

    அரசின் விதிமுறைப்படி நில உட்பிரிவு மனு அளித்த குறிப்பிட்ட நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவை துறையினரின் கடமை. ஆனால் ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் 2 மாதத்திற்கு மேலாகியும் 200க்கும் மேற்பட்ட உட்பிரிவு மனுக்களுக்கு தீர்வு காணப்படாமல் கிடப்பில் உள்ளன.

    மனு அளித்தவர்கள் நில அளவை பிரிவு அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று அலைகின்றனர். நில அளவிற்கு முறைப்படி பணம் செலுத்தி பதிவு செய்து ஏராளமான விவசாயிகள் தங்கள் மனு மீது எப்போது அளவை உட்பிரிவு செய்யப்படும் என தெரியாமல் அடிக்கடி அலுவலகத்திற்கு வந்து காத்திருந்து செல்கின்றனர். இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.

    இது குறித்து, அதிகாரிகளிடம் கேட்ட போது, நில அளவையர் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் மனுக்கள் மீது குறிப்பிட்ட நாட்களுக்குள் நில அளவை உட்பிரிவு செய்து தர முடியாத நிலை உள்ளதாகவும், பல்வேறு பணிகளுக்கான பணியிடம் காலியாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.

    • கழிவுநீர்-குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
    • குழந்தைகள் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    கீழக்கரை

    மக்கள் நல பாது காப்புக்கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் முதல்- அமைச்சர், தமிழக நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் நிலவும் மெத்தனப் போக்கால் தொடர்ந்து இப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்ற னர். கீழக்கரை நகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதியில் சாக்கடைகள் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் ஓடுவதும், பல்வேறு இடங்கள் குப்பைகள் நிறைந்து இருப்பதும் அன்றாடம் காணப்படும் நிகழ்வாக இருக்கிறது. இதனால் கொசு உறுபத்தியாகி பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    கீழக்கரை நகராட்சி பகுதியில் 100-க்கும் அதிகமான நாய்கள் வெறி பிடித்த நிலையில் நகரை சர்வ சாதாரணமாக சுற்றி வலம் வருகின்றது. நாய் கடியால் ஏராளமான பொதுமக்கள் கீழக்கரை அரசு மருத்துவமனையில் உள், வெளி நோயாளியாக தினந்தோறும் சிகிச்சை பெற வருகின்றார்கள். இன்று வரை இந்த நாய்களை அப்புறப்படுத்த கீழக்கரை நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தின் நகர் சார்ந்த பணிகள் திட்டமிடல் இல்லாத காரணத்தால் நகராட்சி நிதி வீணடிக் கப்பட்டு வருகிறது. கீழக்கரை நகராட்சி அதிகாரி கள் தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடை பிடித்து வருகின்றனர்.இதனால் பொதுமக்கள் அதிருப்தியுடன் இருக்கி றார்கள்.

    கீழக்கரை நகராட்சி நிர்வாகம் மீது தனி கவனம் செலுத்தி தனி அதிகாரிகளை நியமனம் செய்து கண்காணிக்க பொதுமக்கள் சார்பாகவும், எங்கள் கழகம் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • புவிசார் குறியீடு கிடைத்ததால் ராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டு மிளகாய் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
    • ஏற்றுமதியாளர்களிடையே ராமநாதபுரம் குண்டு மிளகாய் தனி கவனம் பெற்றுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயம் கைவிட்டாலும் விவசாயிகளுக்கு கைகொடுக்கும் ஒரே பணப்பயிர் மிளகாய் தான். குறிப்பாக மாவட்டத்தில் மட்டும் விளையும் குண்டு மிளகாய்க்கு அதன் தரம், காரம், சுவை என அனைத்திற்கும் தனி மவுசு உண்டு.

    தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் வெளிநாடுகளிலும் குண்டு மிளகாய் என்று அழைக்கப் படும் முண்டுவுக்கு தனி கிராக்கி எப்போதும் உண்டு. ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 ஆயிரம் எக்டருக்கு மேல் குண்டு மிளகாய் பயிரிடப்படுகிறது.இந்த மிளகாய் மூலம் மிளகாய் தூள், மிளகாய் ஊறுகாய், மிளகாய் பேஸ்ட் போன்றவை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோ னேசியா, இலங்கை, நேபா ளம், மெக்சிகோ, மலேசியா, வங்கதேசம், ஐக்கிய அரபு நாடுகள் போன்றவற்றிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் விளையும் இந்த குண்டு மிளகாய்க்கு சமீபத்தில் புவிசார் குறியீடு கிடைத் துள்ளது. இதன்காரணமாக மாவட்ட குண்டு மிளகாய்க்கு அதிகளவிலான ஏற்றுமதி வாய்ப்பு உருவாகி உள்ளது. இங்கிருந்து ஏற்கனவே வெளிநாடுகளுக்கு குண்டு மிளகாய் ஏற்றுமதி செய்யப் பட்டு வந்த நிலையில் புவிசார் குறியீடு கிடைத்துள் ளதால் உலக அரங்கில் ஏற்றுமதி யாளர்களிடையே ராமநாதபுரம் குண்டு மிளகாய் தனி கவனம் பெற்றுள்ளது.

    இதனை பயன்படுத்தி மாவட்டத்தை சேர்ந்த மிளகாய் வியாபாரிகள் குண்டு மிளகாய் ஏற்றுமதி தொழிலில் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர். மிளகாய் ஏற்றுமதியாளர்கள் குண்டு மிளகாய்களில் உள்ள காம்புகளை அகற்றி தரமிக்க வகையில் அட்டைப் பெட்டி களில் அடைத்து வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். புவிசார் குறியீடு பெற்றுள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்ட குண்டு மிளகாய்க்கு மேலும் மவுசு அதிகரித்துள்ளது,

    • பள்ளி கல்வித்துறையில் மீண்டும் இயக்குநர் பணியிடம் ஏற்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
    • ஆண்டு முழுவதும் குறைகளும் குழப்பங்களும் உண்டானது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது:-

    கடந்த ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் காலம் காலமாக இருந்து வந்த இயக்குநர் பணியிடத்தை ரத்து செய்துவிட்டு ஆணையர் பணியிடத்தை ஏற்படுத்தி னார்கள். இதற்கு அப்போதே ஆசிரியர் சங்கங்களும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இயக்குநர்பணியிடம் இருந்த வரை பள்ளிக் கல்வித்துறையில் அனைத்து செயல்பாடுகளும் சீராக சென்றது, எந்த வித குழப்பமோ, குறைபாடுகளோ ஏற்பட்டதில்லை. ஆனால், ஆணையர் பணியிடம் ஏற்படுத்தப்பட்ட பிறகு பள்ளிக்கல்வித்துறையில் ஆண்டு முழுவதும் குறைகளும் குழப்பங்களும் உண்டானது.

    இதனை கருத்தில் கொண்டே ஆணையர் பணியிடத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் இயக்குநர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பாகவும் முதல்-அமைச்சர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஆகி யோரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்து முறையிடப்பட்டது.

    இந்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு மீண்டும் இயக்குநர் பணியிடத்தை ஏற்படுத்தி ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

    மாநிலத்தலைவர் தியாக ராஜன் அவர்களின் கோரிக்கையை ஏற்று இயக்குநர் பணியிடத்தை மீண்டும் ஏற்படுத்தி உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்-அமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பாகவும், ஜாக்டோ-ஜியோ சார்பாக வும் நன்றியை தெரிவித்துத் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பரமக்குடியில் கருணாநிதி பிறந்தநாள் விழா நடந்தது.
    • மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



    போகலூர் ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமையில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    பரமக்குடி

    பரமக்குடியில் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதன்படி பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் தலைமை யில் அவரது அலுவ லகத்தில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, நகர் செயலாளர் வடக்கு ஜீவரத்தினம், உதயநிதி ஸ்டாலின் மன்ற நிர்வாகி துரைமுருகன், நகர்மன்ற உறுப்பினர்கள் பிரபா சாலமன், ராதா பூசத்துரை உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டஜனர்.

    போகலூர்

    மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. அறிவு றுத்தலின்படி போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமையில் குமுக்கோட்டை கிராமத்தில் கருணாநிதி பிறந்தாநள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    மேலும் பொட்டிதட்டி கிராமத்தில் போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்யா தலைமையில் பொட்டி தட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் முன்னிலையில் பஸ் நிலையம் அருகில் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    மஞ்சூர் கிராமத்தில் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் தங்கராஜ் தலைமையிலும் கருணாநிதி படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. அரியக்குடி புத்தூர், தெய்வேந்திரநல்லூர், திருவாடி, கருத்தனேந்தல், மஞ்சக்கொல்லை, பாண்டிகண்மாய் உள்ளிட்ட மேற்கு ஒன்றிய ஊராட்சிகளில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய பெருந்தலைவர் அப்பாஸ் கனி, பொங்கலூர் ஒன்றிய குழு துணை தலைவர் பூமிநாதன், தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் தங்கராஜ், மாவட்ட பிரதிநிதி கார்த்திக் பாண்டியன் உள்ளிட்ட கிளை கழக செயலாளர், மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    • கீழக்கரை தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது.
    • 9 கிராமங்களில் 8-ந் தேதி ஜமாபந்தி நடைபெற உள்ளது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று (6-ந்தேதி) தொடங்கி வருகிற 16-ந்தேதி வரை (சனி, ஞாயிறு, திங்கள், விடுமுறை நாட்கள் தவிர) ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, கீழக்கரை, ராமேசுவரம், ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் தாலுகா வாரியாக நடைபெற உள்ளது. மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் சிவசுப்ரமணியன் தலைமையில் உத்திரகோசமங்கை உள் வட்டம் எக்ககுடி, பனை குளம், மாலங்குடி, மல்லல், ஆலங்குளம், நல்லிருக்கை, உத்திரகோசமங்கை ஆகிய 7 கிராமங்களில் இன்று ஜமாபந்தி நடந்தது.

    பனையடியேந்தல், வேளானூர், மாணிக்கநேரி, புல்லந்தை, மாயாகுளம், கீழக்கரை, காஞ்சிரங்குடி, குள பதம், இதம்பாடல், ஏர்வாடி ஆகிய 9 கிராமங்களில் நாளை (7-ந் தேதி) நடைபெற உள்ளது. திருப்புல்லாணி, பள்ளமோர்குளம், களரி 1, 2, வெள்ளாமறிச்சுகட்டி, குதக்கோட்டை, களிமண்குண்டு, வண்ணாங்குண்டு, பெரியபட்டினம், ரெகுநாதபுரம் ஆகிய 9 கிராமங்களில் (8-ந் தேதி ) ஜமாபந்தி நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரம் கோர்ட்டு வளாகத்தில் நிரந்தரமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • அனைவரையும் சோதனை செய்த பிறகே போலீசார் அனுமதித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாஜிஸ்தி ரேட்டு கோர்ட்டில் கடந்த 3-ந் தேதி அசோக் குமார் என்ற ரவுடி வழக்கு ஒன்றில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்ட போது மாஜிஸ்திரேட்டு இருக்கை முன்பு அவரை கொக்கிகுமார் என்ற மற்றொரு ரவுடி சரமாரியாக வெட்டி விட்டு தப்பினான்.

    மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு ரவுடி கொக்கிகுமாரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். கோர்ட்டு அறையில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

    போலீஸ் கண்காணிப்பு சரியாக இல்லாததே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டினர். இதை தொடர்ந்து ராமநாதபுரம் கோர்ட்டு வளாகத்தில் நேற்று முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் தலைமை யில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோர்ட்டின் இரண்டு பக்க நுழைவு வாயில்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கோர்ட்டுக்கு வரும் வக்கீல்கள், வழக்கு தொடர்பாக வருபவர்கள் என அனைவரையும் சோதனை செய்த பிறகே போலீசார் அனுமதித்தனர்.

    மேலும் மெட்டல் டிடெக்டர் மூலம் ஆயு தங்கள் உள்ளிட்டவைகள் கொண்டு செல்லப்படு கிறதா? எனவும் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். இந்த போலீஸ் கண்காணிப்பு நிரந்தரமாக மேற்கொள்ளப் படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    இந்நிலையில் கோர்ட்டில் புகுந்து வாலிபரை வெட்டிய ரவுடி கொக்கி குமாருக்கு ஆதர வாக யாரும் ஆஜராக மாட்டோம் என்று ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் வழக்கறிஞர் சங்க தலைவர் சேக் இப்ராகீம், செயலாளர் கருணாகரன், பொருளாளர் பாபு ஆகியோர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் அமைந்துள்ள நீதித்துறை நடுவர் எண்.2 நீதிமன்றத்தில், ஒரு குற்ற வழக்கில் ஆஜராக வந்த அசோக்குமார் என்பவரை, ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடையைச் சேர்ந்த ரவுடி கொக்கி குமார், நீதிமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து வாளால் வெட்டியுள்ளார். பின்னர் சர்வ சாதாரணமாக நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்து சென்று தப்பித்து ள்ளார். அவருடைய இந்த மனிதாபிமானமற்ற குற்றச்செயலை ராமநாதபுரம் வழக்கறிஞர் சங்கம் மிகவும் கடுமையாக ஆட்சேபனை செய்கிறது. இக்குற்ற வழக்கு சம்பந்தமாக அவருக்கு ஆதரவாக ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜர் ஆவதில்லை என ஏக மனதாக முடிவு செய்யப்பட்டு தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 5 கிேலா கடத்தல் தங்கக்கட்டிகள் பறிமுதல் சம்பவத்தில் தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ராமநாதபுரம்

    இலங்கையில் இருந்து கடல் வழியாக ராமேசுவரம், தனுஷ்கோடிக்கு தங்கக்கட்டி கள் கடத்தி வரும் சம்பவம் அண்மை காலமாக அதிகரித் துள்ளன. கடந்த சில நாட்க ளுக்கு முன்பு இலங்கையில் இருந்து ராமநாதபுரத்திற்கு படகுகளில் கடத்தி வரப்பட்ட 33 கிலோ தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் இலங்கை யில் இருந்து கடல் வழியாக தங்கக்கட்டிகள் படகு மூலம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப் படையில் மண்டபம் அருகே நல்ல தண்ணீர் தீவு கடல் பகுதியில் அதிகாரிகள், கடலோர காவல் படையினர் தீவிர ரோந்த மேற்கொண்ட னர். அப்ேபாது அந்த வழியாக பதிவு எண் இல்லாத படகு வந்தது. அதிகாரிகளை பார்த்ததும் படகில் இருந்தவர்கள் வேறு பகுதிக்கு திருப்பி வேகமாக சென்றார்கள்.

    உடனே சுதாரித்து கொண்ட கடலோர காவல் படையினர் அவர்களை விரட்டினர். நொச்சியூரணி புதுமடம் கடற்கரையில் படகை நிறுத்தி விட்டு அதில் இருந்த 3 பேரும் தப்பினர். அங்கு வந்த அதிகாரிகள் அந்த படகை சோதனை செய்த போது அதில் 5 கிலோ தங்கக்கட்டி கள் இருந்தது. அதனை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    படகில் பதிவு எண் இல்லாததால் தப்பியோடிய வர்கள் யார் என்பதை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்ைல. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடிக்க மண்டபம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகி றார்கள். கடத்தல் காரர்கள் சிக்கிய பின்புதான் முழு விவரம் தெரியவரும்.

    • வாழை இலை விலை அதிகரிப்பால் ஓட்டல்களில் பார்சல், சாப்பிட மெழுகு பேப்பர் இலை பயன்பாடு அதிகரித்துள்ளது.
    • பேப்பர் இலை தட்டை பயன்படுத்துகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள் குறைந்த அளவே சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் காய்கறிகள், பழங்கள், அதிக அளவில் வெளி மாவட்டங்களில் இருந்தே கொண்டு வரப்படுகிறது.

    தற்போது ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள கோவில்களில் வைகாசி திருவிழா, சுபமுகூர்த்த தினங்களால் வாழை இலை யின் தேவை அதிகரித்து உள்ளது. இதனால் வெளியூர்க ளில் இருந்து வரத்து குறைந்துள்ளது. கடந்த மாதம் ரூ.800 வரை விற்ற ஒரு கட்டு வாழை இலை (180 முதல் 200 எண்ணிக்கை) தற்போது ரூ.900 முதல் ரூ.1000 வரை விற்கப்படு கிறது. இதனால் ஓட்டல்களில் சாப்பிடவும், பார்சல் வழங்க வும் பேப்பர் இலை தட்டை பயன்படுத்துகின்றனர்.

    விலை உயர்வால் ஓட்டல்களில் மொத்தமாக இலை வாங்குவது குறைந்து உள்ளது. மேலும் காற்று காரணமாக இலைகள் கிழிந்தும் வருகிறது. இத னால் வாழை இலை தட்டுப்பாடு ஏற்பட்டு பேப்பர் இலை தட்டு பயன்பாடு அதிகரித்து உள்ளது.

    • பொதுமக்களின் மனுக்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் அதிகம் வரப் பெற்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் அதிகம் வரப் பெற்றது. பொது மக்களிட மிருந்து வரப்பெற்ற 265 மனுக்களை உரிய முறையில் பரிசீலனை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உரிய தீர்வு கிடைத்திடவும், மனுக்களின் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்து மனுதாரருக்கு தக வல் தெரிவித்திட வேண்டும் எனவும், பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென வும் மாவட்ட கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, தனித்துணைஆட்சியர் (சமூகபாதுகாப்புதிட்டம்) மாரிச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமேசுவரத்திற்கு இயக்கப்படும் ரெயில் பெட்டிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
    • பாடாவதியான ரெயில் பெட்டி களை மாற்ற ரெயில்வே பொது மேலாளர் நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் ராமேசுவரம், ஏர்வாடி, திருப்புல்லாணி, உத்தரகோச மங்கை, உப்பூர் உள்ளிட்ட இடங்களில் ஆன்மிக தலங்கள் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்க ணக்கானோர் வேண்டுதலுக் காக வருகின்றனர். இது தவிர ஏராளமான வெளி நாட்டினர் ராமேசுவரத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இங்கு வருபவர்களில் பெரும்பாலானோர் ரெயில் பயணத்தை விரும்பி தேர்வு செய்கின்றனர். ராமேசுவரம், ராமநாதபுரம் ரெயில் நிலை யம் வழியாக சென்னை, கோவை, திருப்பதி, போன்ற நகரங்களுக்கு முன்பதிவு செய்து பயணம் மேற் கொண்டு வருகின்றனர்.

    ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்லும் ரெயில் பெட்டிகளில் முன்பதிவு பெட்டிகள் எஸ்-1 முதல் எஸ் 13 வரை இணைக்கப் பட்டு டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. ராமேசு வரம் மற்றும் சென்னையில் இருந்து இயக்கப்படும் ரெயில்களில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகள், இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மிக மோசமான நிலையில் உள்ளது. கிழிந்த இருக்கையில் தையல் போடப்பட்டு உள்ளது. தரை தளம், கழிப்பறைகள் படுமோசமாக உள்ளது. மூன்று அடுக்கு ஏ.சி. பெட்டியில் கதவுகளில் உள்ள இடைவெளியில் குளிர் காற்று வெளியே செல்வதால் பெட்டிக்குள் வெப்பகாற்று ஏற்படுகிறது.

    இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:-

    ராமநாதபுரம் ெரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான வசதியில்லை. வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குளிர் சாதன ெரயில் பெட்டிக்குள் சென்றால் அனல் காற்று தான் வீசுகிறது. தரை தளம் படு மோசமாக உள்ளது. முன்பதிவு செய்து செல்வதை விட ஜெனரல் பெட்டியில் பயணிக்கலாம் என்ற நிலை உள்ளது.

    கழிப்பறையில் சோப், பேப்பர் போன்றவைகளை காண முடியவில்லை. ராமேசுவரம் வரும் யாத்ரீகர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கருத்தில் கொண்டு பாடா வதியான ெரயில் பெட்டி களை மாற்ற ரெயில்வே பொது மேலாளர் நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×