search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி கல்வித்துறையில் மீண்டும் இயக்குநர் பணியிடம்
    X

    முருகேசன்

    பள்ளி கல்வித்துறையில் மீண்டும் இயக்குநர் பணியிடம்

    • பள்ளி கல்வித்துறையில் மீண்டும் இயக்குநர் பணியிடம் ஏற்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
    • ஆண்டு முழுவதும் குறைகளும் குழப்பங்களும் உண்டானது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது:-

    கடந்த ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் காலம் காலமாக இருந்து வந்த இயக்குநர் பணியிடத்தை ரத்து செய்துவிட்டு ஆணையர் பணியிடத்தை ஏற்படுத்தி னார்கள். இதற்கு அப்போதே ஆசிரியர் சங்கங்களும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இயக்குநர்பணியிடம் இருந்த வரை பள்ளிக் கல்வித்துறையில் அனைத்து செயல்பாடுகளும் சீராக சென்றது, எந்த வித குழப்பமோ, குறைபாடுகளோ ஏற்பட்டதில்லை. ஆனால், ஆணையர் பணியிடம் ஏற்படுத்தப்பட்ட பிறகு பள்ளிக்கல்வித்துறையில் ஆண்டு முழுவதும் குறைகளும் குழப்பங்களும் உண்டானது.

    இதனை கருத்தில் கொண்டே ஆணையர் பணியிடத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் இயக்குநர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பாகவும் முதல்-அமைச்சர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஆகி யோரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்து முறையிடப்பட்டது.

    இந்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு மீண்டும் இயக்குநர் பணியிடத்தை ஏற்படுத்தி ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

    மாநிலத்தலைவர் தியாக ராஜன் அவர்களின் கோரிக்கையை ஏற்று இயக்குநர் பணியிடத்தை மீண்டும் ஏற்படுத்தி உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்-அமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பாகவும், ஜாக்டோ-ஜியோ சார்பாக வும் நன்றியை தெரிவித்துத் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×