என் மலர்
ராமநாதபுரம்
- ராமநாதபுரத்தில் பழங்குடியினர் சான்று சிறப்பு முகாம் நடந்தது.
- சான்றிதழ் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பரமக்குடி
பரமக்குடி அருகே வைகை நகர், லீலாவதி நகர், வேந்தோணி உள்ளிட்ட பகுதிகளில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவை இல் லாததால் ஜாதி சான்றிதழ் பெறுவதில் மிகவும் சிரமம் பெற்றனர்.
இதனை அடுத்து நரிக் குறவர் இன மக்கள் பழங் குடியினர் என சாதி சான்றி தழ் பெறுவதற்கு ஆவணங் களை மாற்றுவதற்கான சிறப்பு முகாம் பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. தாசில்தார் ரவி தலைமை வகித்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த மக்கள் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக் காளர் அட்டை உள்ளிட்டவற் றில் மாற்றம் செய்வதற்காக தங்களது ஆவணங்களை சமர்ப்பித்தனர். இவர் களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் கிடைப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சிறப்பு முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் சம்பத், மண்டல தாசில்தார் அமர்நாத் மற்றும் கிராம நிர் வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பொதுமக்கள் இடைத்தரகர்களை தவிர்க்க வேண்டும் என கீழக்கரை வட்டாட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளாார்.
- முறையான ஆவணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கீழக்கரை
கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப் பித்துள்ள அனைத்து பொது மக்களுக்கும் எவ்வித தாமத மும் இன்றி உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் சான்றிதழ்களை வழங்கி வருகிறார். இதுகுறித்து வட்டாட்சியர் பழனிக்குமார் தெரிவிக்கையில் :-
இ சேவை மையத்தில் சான்றிதழ் விண்ணப்பிக்கும் பொதுமக்கள் முறையாக ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் இ சேவை மையத்தில் ஆவணங்களை முறையாக இணையதளங்களில் பதிவு செய்யாததால் எங்களால் தகுந்த ஆவணம் இல்லாமல் சான்றிதழ் வழங்கப்பட முடியவில்லை. இதன் மூலம் பொது மக்களுக்கு மிகுந்த தாமதம் ஏற்படுகிறது என் பதை தெரிவித்துக் கொள் கிறோம்.
மேலும் இ சேவை மையத்தில் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அனைத்து ஆவணங்களும் முறையாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஒரு முறை ஆராய வேண்டும். முறையான ஆவணங்கள் கீழே கொடுக் கப்பட்டுள்ளது. அதை தெரிந்து கொண்டு அதன் அடிப்படையில் இ- சேவை மையத்தில் ஆவணத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இ சேவை மையத்தில் முறையாக பதிவு செய்யப் பட்ட விண்ணப்பதாரர் களுக்கு சான்றிதழ், பட்டா மாறுதல் போன்றவை 15 நாட்களிலும், முதியோர் உதவித்தொகை சான்றிதழ் பட்டா உட்பிரிவு இனத்திற்கு 30 நாட்களிலும் சான்றிதழ் வழங்கப்படும். பொதுமக்கள் இடைத்தரகர்களை தவிர்த்து, அரசு அலுவலர் களை நேரில் சந்தித்து பயன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஏதேனும் இடையூறு கள் இருந்தால் நேரடியாகவோ மொபைல் மூலமாகவோ விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று கீழக்கரை வட்டாட்சியர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.
- பன்னோக்கு மருத்துவ முகாம்களில் உயர்தர பரிசோதனை வழங்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
- பரிசோதனை இலவசமாக வழங்கப்படுகிறது.
கீழக்கரை
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள டி.மாரியூர் கிராமத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்து வத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசிய தாவது:-
இந்த முகாமில் 32 சிறப்பு மருத்துவர்கள், 167 செவிலியர்கள் மற்றும் களப்பணியாளர்கள் பணி மேற்கொண்டுள்ளனர். தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்கு இணையாக பன்னோக்கு உயர்தர மருத்துவ பரிசோ தனை இலவசமாக வழங்கப் படுகிறது.
கிராமங்களில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம். தேவைப்படும் நபர்களுக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் உயர்தர சிகிச்சை வழங்கப்படும். அதுமட்டுமின்றி காப்பீடு அட்டை பெறாதவர்கள் ஆதார் அட்டையை கொண்டு வந்து இந்த முகாமில் காப்பீடு அட்டை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் கர்ப்பிணிகள், பள்ளி மாணவர்கள் உள்பட 20 பயனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்களும், மக்களை தேடி மருத்துவத்திட்டத்தில் 30 பயனாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் கொண்ட தொகுப்புகளையும் அமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல்சு, காதாரப்பணிகள் துணை இயக்குநர் இந்திரா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) அபிதா ஹனிப், காசநோய் பிரிவு துணை இயக்குநர் சிவானந்தவல்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கீழக்கரை பள்ளியில் இஹ்ராம் தின நிகழ்ச்சி நடந்தது.
- மாணவ-மாணவிகள் விளக்கி கூறினர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள அல்பையினா மெட்ரிகுலேஷன் பள்ளியின் இஸ்லாமிய கல்வித்துறை சார்பாக இஹ்ராம் தின நிகழ்ச்சி நடந்தது.
இதில் இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்றான ஹஜ் பயணம் செய்வது பற்றி விழிப்புணர்வு மற்றும் வழிமுறைகளை மாணவ-மாணவிகள் விளக்கி கூறினர்.
இதில் ஹஜ் பயணம் செல்லும்போது எங்கு செல்வார்கள்? என்னென்ன முறையில் பயன்படுத்துவார்கள்? என்பது போன்ற பல்வேறு வழிமுறைகள் குறித்து மாணவ-மாணவிகள் நடித்துக்காட்டினர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அல்பையினா மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
- இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- அக்கம் பக்கத்தில் உள்ளவா்கள், சுந்தருக்கு தகவல் தெரிவித்தனா்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் வெள்ளமாசி வலசை கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தா்(வயது32). இவரது வீட்டு முன் 2இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதிகாலையில் திடீரென இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவா்கள், சுந்தருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து வீட்டிலிருந்த சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை அவா் ஆய்வு செய்த போது, மூகமுடி அணிந்து வந்த மா்ம நபா் தீ வைத்து விட்டுச் சென்றது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, உச்சிப்புளி போலீஸ் நிலையத்தில் புகாா் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், நாகாச்சி கிராமத்தை சோ்ந்த ஹரீஸ் (25) வாகனங்களுக்கு தீ வைத்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
- மாநில ஹஜ் கமிட்டி உறுப்பினராக ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர் நியமனம் செய்யப்பட்டார்.
- அரசு நிறைவேற்றி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கீழக்கரை
ராமநாதபுரம் நகராட்சி 31-வது வார்டு கவுன்சிலர் எம்.முகம்மது ஜஹாங்கீர். முதுகலை பட்டதாரியான இவர் தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். இந்த நிலையில் தமிழக அரசின் மாநில ஹஜ் கமிட்டி உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து கவுன்சிலர் முகம்மது ஜஹாங்கீர் கூறிய தாவது:-
தமிழக அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மாநில ஹஜ் கமிட்டி உறுப்பி னராக என்னை நியமனம் செய்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக் கும், நான் சார்ந்துள்ள தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி தொடர்பு டைய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், இதற்காக பரிந்துரைத்த ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ.வுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
மாநில ஹஜ் கமிட்டி உறுப்பினராக பதவி ஏற்றவு டன் மாநில அளவில் ஹஜ் பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்துதர பாடு படுவேன். இந்தியாவில் முன்மாதிரியான திராவிட மாடல் அரசை நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின், சிறுபான்மையினரின் நலனை பேண அவரது உரிமைகளை காக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்.
ஹஜ் பயணிகள் சிரமம் இல்லாமல் பயணத்தை மேற்கொள்ள சலுகைகளை செய்து வருகிறார். மத்திய அரசு ஹஜ் மானியத்தை ரத்து செய்தாலும் நமது தமிழக அரசு மானியத்தை வழங்கி வருகிறது. இதனால் பல ஏழை முஸ்லிம்களின் ஹஜ் பயண கனவை தி.மு.க. அரசு நிறைவேற்றி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது
சிறுபான்மையினர் நலனுக்காக இன்னும் பல திட்டங்களை கொண்டுவர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை களை எடுத்து வருகிறார். அனைத்து தரப்பினரும் முன்னேற்றம் அடையும் வகையில் மதசார்பற்ற சமூக நல்லிணக்கமான சமத்துவ ஆட்சியை அவர் தந்து கொண்டிருக்கிறார். அதேபோல் என்னை கவுன்சிலராக தேர்ந்தெடுத்த 31-வது வார்டு மக்களின் கோரிக்ககைளையும் முழு வதுமாக நிறைவேற்ற நகர் மன்ற தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், ஆணையாளர் மற்றும் நகராட்சி பணியா ளர்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன்.
குறுகிய காலத்திற்குள் ரேசன் கடை, குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதிகளை மேம்படுத்தி உள்ளேன். விரைவில் அனைத்து கோரிக்கைகளையும் நிறை வேற்ற நகர்மன்றத்தில் வலியுறுத்தி வருகிறேன். எனது மக்கள் பணிகளுக்கு உறுதுணையாக இருந்து வரும் என வார்டை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளை ஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சக்கரக்கோட்டை கண்மாய் தண்ணீர் இல்லாமல் வறண்ட பூமியாக மாறுகிறது.
- நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ.கோரிக்கை விடுத்துள்ளது.
கீழக்கரை
தண்ணீர் இல்லாமல் வறண்ட பூமியாக மாறிக்கொண்டிருக்கும் பறவைகள் சரணாலயமான சக்கரக்கோட்டை கண்மாயை சீரமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராமநாத புரம் கிழக்கு மாவட்ட தலைவர் பெரிய பட்டினம் ரியாஸ்கான் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைகளின் சரணாலயமாக திகழும் சக்கரைக்கோட்டை கண்மாயில் தண்ணீர் முழுவதும் வற்றிவிட்டது.
பறவைகள் தண்ணீரின்றி வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்லும் நிலை உருவாகி இருக்கிறது. மேலும் அந்த கண்மாயை சுற்றியுள்ள பகுதிகளிலும் வறட்சி ஏற்படும் நிலை உள்ளது. குறிப்பாக ராமநாதபுரம் நகரிலும் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இந்த நிலை தொடரும் பட்சத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் நீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்கு ஆளாக நேரிடும். இந்த கண்மாயில் முறையாக தூர்வாரும் பணி கடந்த வருடங்களில் நடைபெ றாததே இதற்கு காரணம்.
தற்போது தண்ணீர் முழுவதும் வற்றிவிட்ட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கண்மாயை ஆக்கிரமித்து இருக்கும் கருவேல மரங்களை அப்புறப்படுத்தி, பருவமழை தொடங்குவதற்கு முன்பே கண்மாயை ஆழப்படுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் உடனே செய்ய வேண்டும்.
- தொண்டி அரசுப்பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவேண்டும்.
- மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ரம்யா தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர்கள் சமீமா பீவி, மஹ்ஜபின் சல்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர் தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் வரவேற்றார்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசுகையில், கடந்த 4ஆண்டுகளாக இப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. எண்ணும், எழுத்தும், இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் உள்ள நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவ-மாணவிகளின் கல்வித்தரம் குறைய வாய்ப்பு உள்ளது.
இந்த பற்றாக்குறையை எப்போது நிவர்த்தி செய்யப்படும்? என ேகள்வி எழுப்பினர். அப்போது தலைமை ஆசிரியை, இதுகுறித்து கல்வி அதிகாரி களிடம் தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும், அவர்கள் பற்றாக்குறையை சரி செய்வார்கள் என்றும் கூறினார்.
அப்போது உறுப்பினர்கள், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இதே பதில்தான் கூறப்படு வதாகவும், உடனடியாக ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யாவிட்டால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிப்போம் என்றும் கூறினர்.
ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிரப்ப வேண்டும், இடியும் நிலையில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்து, புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஆசிரியைகள் புஷ்பா, இஸ்மத் ராணி உட்பட இல்லம் தேடி கல்வி ஆசிரியைகள் கலந்து கொண்டனர். ஆசிரியை சுபஸ்ரீ நன்றி கூறினார்.
- எஸ்.டி.பி.ஐ. கட்சி 15-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது.
- நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
ராமநாதபுரம்
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 15-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் ராமநாதபுரம் நகர் சார்பாக 9 இடங்களிலும், கீழக்கரை நகரில் 7 இடங்களிலும், பெரிய பட்டினம் நகரில் 3 இடங்களிலும், திருப்புல்லாணி நகரில் ஒரு இடத்திலும் மொத்தம் 20 இடங்களில் கொடியேற்றி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
கீழக்கரை நகரில் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, ராமநாதபுரம் நகரில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜமிளுன் நிஷா, பெரிய பட்டணம் நகரில் மாவட்ட தலைவர் ரியாஸ்கான், பெரியபட்டினம் ஊராட்சி பஞ்சாயத்து துணைத் தலைவர் பெரோஸ் கான், பொறியாளர் அணி ஷேக் ஜலால் ஆகியோர் கொடி யேற்றினர்.
மாவட்ட அலுவலகத்தில் மாவட்டபொது செயலாளர் அப்து்ல் ஜமீல், திருப்புல் லாணி நகரில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ் குமார், ராமநாதபுரம் நகரில் மாவட்ட செயலாளர் நஜிமுதீன், மாவட்டத் துணைத் தலைவர் தொகுதி துணைத் தலைவர் மூர்த்தி, தொகுதி செயலாளர் அக்பர் அலி, தொண்டரணி மாவட்ட தலைவர் ஜகுபர் சாதிக் கொடியேற்றி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து கீழக்கரை நகரில் அரசு மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகளுக்கு பழங்கள் வழங்கப்பட்டது. பின்பு தெருமுனை கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல் பேசினார். நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
- பயனானிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வழங்கினார்.
- போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் அதிகாரி கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் சட்ட மன்ற பேரவையின் உறுதி மொழி குழு ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி னார். இதில் ஆய்வுக்குழு தலைவர் வேல்முருகன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் குழு தலைவர் வேல்முருகன் பேசியதா வது:-ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒதுக்கப்படும் நிதி உரிய காலத்திற்குள் பணிகளை மேற்கொள்ளும் பொழுது அந்த நிதியின் மூலம் பணிகளை முடித்து விடலாம். காலதாமதம் ஏற்பட்டால் பொருள்களின் விலை மாற்றம் ஏற்படும். அதனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து அந்தப் பணியை முழுமையாக முடிப்பது என்பது கஷ்டமாகும். அதனால் கூடுதல் செலவினம் ஏற்படும். இது அரசுக்கு ஒருவகையில் இழப்பு ஏற்படும். இதை தவிர்த்து உரிய உறுதிமொழிகளை உரிய காலத்தில் செய்து அரசுக்கு எந்த வகையிலும் இழப்பீடு வராத வகையில் பார்த்து கொள்வதே இக்குழுவின் பணியாக உள்ளது.
அரசின் ஒவ்வொரு துறைகளில் இருந்தும் மேற்கொள்ள வேண்டிய பணிகளை திட்டமிட்டப்படி உரிய காலத்திற்குள் முடித்து பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைந்து அரசுக்கு நற்பெயரை பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து 35 பயனாளிகளுக்கு ரூ.3.84 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன்,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் அதிகாரி கள் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.
- பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்.
ராமநாதபுரம்
ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத் திற்கு கடந்த 13-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப் பட்டிருந்தது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் இன்று (24-ந்தேதி) வேலை நாள் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்தி ருந்தார். அதன்படி இன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வேலை நாளாகும்.
இந்தநிலையில் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு மண்டபம், திருப்புல்லாணி, ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடனை, நயினார்கோயில், போகலூர், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் மற்றும் கடலாடி ஆகிய11 ஒன்றியங்களில் சி.ஆர்.சி பயிற்சி வகுப்புகள் இன்று நடைபெறுகிறது.
இதனால் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக தெரிவிக்கப் படுகிறது. மேலும் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை வழக்கம் போல் வகுப்புகள் நடக்கும் என தெரிவிக்கப் பட்டது. அதன்படி பள்ளிகள் இன்று செயல்பட்டன.
- நள்ளிரவு-அதிகாலை நேரத்தில் வினியோகிக்கப்படும் குடிநீர் வீணாகிறது.
- சுழற்சி முறையில் குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீருக்காக உள்ளாட்சிகள் லட்சக் கணக்கான ரூபாயை ஒவ்வொரு மாதமும் குடிநீர் வாரியத்திற்கு செலுத்து கிறது.
குடிநீர் எந்த நாளில் எந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட பகுதிக்கு வரும் என மக்களுக்கு தெரிவதில்லை. நள்ளிரவு, அதிகாலை என விநியோகம் செய்வதால் பலரும் குடிநீரை பிடிக்க முடியாமல் போகிறது. இது போன்ற முறையற்ற சப்ளையால் குழாய்களில் நல்லி இல்லாமல் குடிநீரானது வீணாகி சாக்கடையில் ஓடுகிறது.
பல பகுதிகளில் இது போன்று நடப்பது தொடர்கிறது. உள்ளாட்சிகள் குடிநீர் வரும் நாள், நேரம், எந்த பகுதியில் விநியோகம் என்பதை கூறுவதில்லை. நினைத்த நேரத்தில் குடிநீரை திறந்து விடுவதாலும் குடிநீர் வீணாகிறது.
இதை தவிர்க்க குடிநீர் வரும் நாள், நேரத்தை அறிவிக்க உள்ளாட்சிகள் முன் வரவேண்டும். இதை முறையாக கடைப்பி டித்தாலே குடிநீர் வீணா வதை தடுக்க முடியும்.குடிநீர் பற்றாக்குறைக்கும் தீர்வு கிடைக்கும்.
உள்ளாட்சி கள் அட்ட வணைப்படி சுழற்சி முறையில் குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும். பகல் பொழுதில் காலை, மாலை நேரத்தில் விநியோகம் செய்தால் அனைவருக்கும் பயனுள்ள தாக இருக்கும். இதை முறைப்படுத்த உள்ளாட்சி அமைப்பு களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்க வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.






