search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நள்ளிரவு-அதிகாலை நேரத்தில்  வினியோகிக்கப்படும் குடிநீர்
    X

    நள்ளிரவு-அதிகாலை நேரத்தில் வினியோகிக்கப்படும் குடிநீர்

    • நள்ளிரவு-அதிகாலை நேரத்தில் வினியோகிக்கப்படும் குடிநீர் வீணாகிறது.
    • சுழற்சி முறையில் குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீருக்காக உள்ளாட்சிகள் லட்சக் கணக்கான ரூபாயை ஒவ்வொரு மாதமும் குடிநீர் வாரியத்திற்கு செலுத்து கிறது.

    குடிநீர் எந்த நாளில் எந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட பகுதிக்கு வரும் என மக்களுக்கு தெரிவதில்லை. நள்ளிரவு, அதிகாலை என விநியோகம் செய்வதால் பலரும் குடிநீரை பிடிக்க முடியாமல் போகிறது. இது போன்ற முறையற்ற சப்ளையால் குழாய்களில் நல்லி இல்லாமல் குடிநீரானது வீணாகி சாக்கடையில் ஓடுகிறது.

    பல பகுதிகளில் இது போன்று நடப்பது தொடர்கிறது. உள்ளாட்சிகள் குடிநீர் வரும் நாள், நேரம், எந்த பகுதியில் விநியோகம் என்பதை கூறுவதில்லை. நினைத்த நேரத்தில் குடிநீரை திறந்து விடுவதாலும் குடிநீர் வீணாகிறது.

    இதை தவிர்க்க குடிநீர் வரும் நாள், நேரத்தை அறிவிக்க உள்ளாட்சிகள் முன் வரவேண்டும். இதை முறையாக கடைப்பி டித்தாலே குடிநீர் வீணா வதை தடுக்க முடியும்.குடிநீர் பற்றாக்குறைக்கும் தீர்வு கிடைக்கும்.

    உள்ளாட்சி கள் அட்ட வணைப்படி சுழற்சி முறையில் குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும். பகல் பொழுதில் காலை, மாலை நேரத்தில் விநியோகம் செய்தால் அனைவருக்கும் பயனுள்ள தாக இருக்கும். இதை முறைப்படுத்த உள்ளாட்சி அமைப்பு களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்க வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×