search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
    X

    மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தபோது எடுத்தபடம்.

    ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

    • தொண்டி அரசுப்பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவேண்டும்.
    • மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ரம்யா தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர்கள் சமீமா பீவி, மஹ்ஜபின் சல்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர் தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் வரவேற்றார்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசுகையில், கடந்த 4ஆண்டுகளாக இப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. எண்ணும், எழுத்தும், இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் உள்ள நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவ-மாணவிகளின் கல்வித்தரம் குறைய வாய்ப்பு உள்ளது.

    இந்த பற்றாக்குறையை எப்போது நிவர்த்தி செய்யப்படும்? என ேகள்வி எழுப்பினர். அப்போது தலைமை ஆசிரியை, இதுகுறித்து கல்வி அதிகாரி களிடம் தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும், அவர்கள் பற்றாக்குறையை சரி செய்வார்கள் என்றும் கூறினார்.

    அப்போது உறுப்பினர்கள், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இதே பதில்தான் கூறப்படு வதாகவும், உடனடியாக ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யாவிட்டால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிப்போம் என்றும் கூறினர்.

    ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிரப்ப வேண்டும், இடியும் நிலையில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்து, புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் ஆசிரியைகள் புஷ்பா, இஸ்மத் ராணி உட்பட இல்லம் தேடி கல்வி ஆசிரியைகள் கலந்து கொண்டனர். ஆசிரியை சுபஸ்ரீ நன்றி கூறினார்.

    Next Story
    ×