என் மலர்
ராமநாதபுரம்
- சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் பம்பசெட் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது.
- கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் பொறி யியல் துறை அலுவல கங்களை அணுகலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-
தமிழ்நாடு அரசால் வேளாண்மைப் பொறியியல்துறை மூலம், நடப்பு ஆண்டில் நிலத்தடிநீர் பாசனத்துக்கு உதவும் வகையில் சிறு, குறு விவசாயி களுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்க ளுக்குப் பதிலாக புதிய மின்மோட்டார் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசால் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் நடப்பு ஆண்டில் விவசாயி களுக்கு பழைய திறனற்ற மின் மோட்டாருக்குப் பதில் புதிய மின்மோட்டார் பம்பசெட் வழங்குவதற்கு 150 பேருக்கு தலா ரூ.15,000 வீதம் ரூ.22.50 லட்சத்திற்கு மானியம் வழங்கிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்க பின்னேற்பு மானியமாக ரூ.15000 அல்லது மொத்த விலையில் 50 சதவீதம் மானியம் இதில் எது குறைவோ அது வழங்கப்படும்.
இந்த திட்டம் நுண்ணீர் பாசன இணையதளம் வாயி லாக செயல்படுத்தப்படு கிறது. இத்திட்டத்தினை பயன்படுத்திட விரும்பும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்ட கிராமங்க ளில் உள்ள வேளாண் பெருமக்கள் https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயனடைந்திட கேட்டுக் கொள்ளப்படு கிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் பொறி யியல் துறை அலுவல கங்களை அணுகலாம்.
ராமநாதபுரம், திருப்புல்லானி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை வட்டார விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வளா கத்தில் கருவூலக கட்டிட முதல் தளத்தில் அமைந் துள்ள உதவி செயற்பொறி யாளர் அலுவலகத்தையும், பரமக்குடி, நயினார்கோயில், முதுகு ளத்தூர், போகலூர், கமுதி மற்றும் கடலாடி வட்டார விவசாயிகள் பரமக்குடி, சவுகத்அலி தெருவிலுள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகம் அல்லது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக கட்டிடம் 2-வது தளத்தில் அமைந்துள்ள செயற்பொறி யாளர் அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மீனவர்கள் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்தனர்.
- கடந்த 4 நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட ராமேசுவரம் துறைமுகம் இன்று வழக்கமான பரபரப்பை எட்டியது.
ராமேசுவரம்:
தமிழகத்தில் தென் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றின் வேக மாறுபாடு காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசியது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனால் கடந்த 4-ந் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்தனர்.
இந்த நிலையில் ராமேசுவரத்தில் நேற்று இரவு முதல் காற்று குறைந்து கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல முடிவு செய்தனர். மீன்வளத்துறையும் அதற்கு அனுமதி அளித்தது. அதன்படி இன்று அதிகாலை 4 மணி அளவில் ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 500 விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
கடந்த 4 நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட ராமேசுவரம் துறைமுகம் இன்று வழக்கமான பரபரப்பை எட்டியது. தென்கரை கடலில் காற்றின் வேகம் குறையாதால் பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தனுஷ்கோடியிலும் இயல்புநிலை திரும்பியதால் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
- சுங்கசாவடியில் கட்டண தகராறு செய்து வருகிறார்.
- டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை அடுத்த ஆக்கிடாவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன்(42). இவர் டிராவல்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு சத்திரக்குடி டோல்கேட் பகுதிக்கு காரில் வந்தார்.
அப்போது கட்டணம் செலுத்துவதில் பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் பாண்டியராஜன் கட்டணம் செலுத்தி உள்ளார். ஆனால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் பாண்டிய ராஜனிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாகவும், காரை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சத்திரக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- தலைதூக்கும் கந்துவட்டி கும்பலால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்படைகின்றனர்.
- அடாவடி வட்டி தொழில் செய்யும் கந்துவட்ட கும்பலிடம் இருந்து பொது மக்களை காப்பாற்ற வேண்டும் என் றார்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் கிராமங்கள் அதி–கம் நிறைந்த பகுதி என்பதா–லும், விவசாயிகள் அதிக–மாக வாழ்ந்துவருவதாலும் அவர்களின் குடும்ப வறு–மையை பயன்படுத்தி தனியார் நிதி நிறுவனங்கள், தனிநபர்கள் ஏராளமா–னோர் கடன் கொடுத்து வருகிறார்கள்.
பெண்களிடம் அதிலும் குறிப்பாக கிராமப்புற பெண்களிடம் பணத்தை கொடுத்து அதை தினந்தோ–றும், வாரம்தோறும், மாதந் தோறும் என அடவடியாக வசூல் செய்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி விவசாயி–கள், மீனவர்கள், பனை தொழிலாளர்கள் என அவர்களின் ஏழ்மை நிலையை தங்களுக்கு சாதக–மாக்கிக் கொண்டு ஒரு கும்பல் வசூலில் ஈடுபட்டுள் ளது.
கடன் கொடுக்கும் போது அரவணைப்பாக பேசும் இந்த கந்துவட்டி கும்பல் காலப்போக்கில் தங்களது மற்றொரு முகத்தை காட்டு–கிறது. தின வட்டி, வார வட்டி, மாத வட்டி என பட்டியலிட்டு பல்வேறு வழிமுறைகளில் ஏழை, எளி–யோரை மேலும் கடனாளி–யாக்கி வீதியில் நிற்க செய்து விடுகிறார்கள்.
வாங்கிய பணத்தை விட பல மடங்கு திருப்பிச் செலுத்தும் நிலைக்கு தள் ளப்பட்டுள்ள இந்த கிராம–வாசிகள் பலர் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் நிலம் உள்ளிட்ட சொத்துக்களை இழக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. அதேபோல் குடும்பம், குழந் தைகள் உள்ளிட்டோ–ரின் நலன் கருதியும், கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு அடிபணிந்தும் யாரும் போலீசில் புகார் அளிப்ப–தில்லை.
இந்த நிலை தொடராமல் இருக்க கந்துவட்டி கும்பலி–டம் இருந்து பொதுமக்களை காப்பாற்றும் வகையில் மாவட்ட காவல்துறையும், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும் கந்துவட்டி கும்பலை கண்டறிந்தும், கண்காணித்தும் அவர்களி–டம் உரிய விசாரணை செய்து கடுமையான நடவ–டிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.இதுபற்றி அந்த பகுதி–யைச் சேர்ந்த சமுக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ராமநா–தபுரம் மிகவும் பின்தங்கிய பகுதியாக இருப்பதால் மக்களின் வறுமையை பயன் படுத்தி வட்டி தொழில் செய்யும் கும்பல் கிராமப்புற பெண்களை குறி வைத்து வட்டிக்கு பணம் கொடுக்கி–றார்கள். அவ்வாறு வாங்கிய பணத்தை கட்ட முடியாத நபர்களின் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு கந்து–வட்டி கும்பல் அபகரித்து விடுகிறது. போலீசில் புகார் கொடுக்க முடியாதபடி கந்துவட்டி கும்பலால் மிரட்டப்படுகின்றனர். கந்துவட்டி கும்பலால் நிறைய பொதுமக்கள் பாதிக் கப்படுகின்றனர். இருந்த–போதிலும் போதிய ஆதா–ரங்கள் இல்லததால் நடவ–டிக்கை எடுக்க முடிய–வில்லை என்று கூறுகிறார் கள்.
பொதுமக்களின் நிலையை கருத்தில் கொண்டு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அடாவடி வட்டி தொழில் செய்யும் கந்துவட்ட கும்பலிடம் இருந்து பொது மக்களை காப்பாற்ற வேண்டும் என்றார்.
- குழந்தைகள் வைப்பு தொகை குறித்த சிறப்பு முகாம் நடந்தது.
- மேற்கண்ட தகவலை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்து தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடமிருந்து வைப்புத் தொகை ரசீது பெற்ற குழந்தைகளில் வயது 18-ஐ கடந்தும், முதிர்வுத் தொகை வழங்கப்படாமல் உள்ள பெண் குழந்தை களிடம் கருத்துரு பெற்று சென்னை, தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திற்கு அனுப்பிட மாதந்தோறும் 2-வது செவ்வாய்கிழமை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்படி 11-ந்தேதி காலை 10 மணியளவில் ராமநாத புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெறும்.
முகாமிற்கு வருபவர்கள் குழந்தைகளின் பிறப்பு சான்று நகல்கள், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச் சான்றிதழ், ரேஷன் கார்டு நகல், குழந்தைகளின் தாயாருடன் இணைத்துள்ள வங்கி கணக்கு புத்தகம், குழந்தைகளுக்கும் தாயாருக்கும் ஆதார்கார்டு நகல், வைப்புத்தொகை ரசீது நகல், தாய் மற்றும் குழந்தையின் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறா்ரகள்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
- நீதிமன்ற வளாகத்தில் ரத்ததான முகாம் நடந்தது.
- மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர் கருணாகரன் நன்றி கூறினார்.
கீழக்கரை
ராமநாதபுரம் தாய் பாசம் அறக்கட்டளை, கல்வித்தந்தை மருத்துவர் இ.எம்.அப்துல்லா நினைவு குருதிக்கொடை பாசறை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் வழக்கறிஞர்கள் சங்கம், மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து ரத்தான முகாம் மற்றும் தன்னார்வலர்கள், சமூக செயற்பாட்டா ளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நீதிபதி விஜயா தலைமை வகித்தார். மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஷேக் இபுராஹிம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நீதிபதி நிரந்தர மக்கள் நீதிமன்றம் பரணிதரன், மாவட்ட அமர்வு நீதிபதி விரைவு மகளிர் நீதிமன்றம் கோபிநாத், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி மனோஜ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை தாய்பாசம் அறக்கட்டளையின் நிறுவனர் பாதுஷா நூருல் சமது ஒருங்கிணைத்தார். மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர் கருணாகரன் நன்றி கூறினார்.
- ராமநாதபுரத்தில் தொல்பொருட்கள் கண்காட்சி நடந்தது.
- இந்த கண்காட்சியில் பழைய, புதிய, நுண் கற்காலக் கருவிகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், எழுத்தாணிகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் வட்டாரத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றம் துவக்க விழா மற்றும் தொல்பொருட்கள் கண்காட்சி பாண்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நயினார்கோயில் வட்டாரக் கல்வி அலுவலர் மு.வாசுகி தலைமையில் நடந்தது.
மற்றொரு வட்டாரக் கல்வி அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். பாண்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உமாதேவி அனைவரையும் வரவேற்றார்.
இதில் தொன்மை பாதுகாப்பு மன்றம் மூலம் மாணவர்கள் தங்கள் பகுதியில் அழியும் நிலையில் உள்ள தொல்லியல் தடயங்களைக் கண்டறிந்து பாதுகாக்க உதவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் மாவட்ட தொன்மைப்0 பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பா ளரும் தொல்லியல் ஆய்வாளரு மான ராஜகுரு கலந்து கொண்டு பேசினார். தேர்த்தங்கால் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நாகலெட்சுமி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியை பார்வை யிட்டு ஆய்வு செய்த ராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் அனைத்துப் பள்ளி களிலும் இம்மன்றத்தை தொடர்ந்து செயல் படுத்திடவேண்டும் என ஆசிரியர்களைக் கேட்டுக் கொண்டார்.
பின்னர் நடந்த தொல்பொருட்கள் கண்காட்சியில் பழைய, புதிய, நுண் கற்காலக் கருவிகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், ரோமானிய, சீன நாட்டுப் பானை ஓடுகள், இரும்புத் தாதுக்கள், இரும்புக்கழிவுகள், வட்டச் சில்லுகள், கூரை ஓடுகள், மான் கொம்புகள், பானைக் குறியீடுகள், புதைபடி மங்கள், கல்வெட்டுகளின் மைப்படிகள், ஓலைச் சுவடிகள், எழுத்தாணிகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. நயினார்கோயில் வட்டார தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் பொறுப்பாசி ரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்து கொண்டனர்.
- ராமேசுவரம் துறைமுகம், பாம்பனில் 5 ஆயிரம் படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.
- கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் கடந்த 4 நாட்களில் ரூ.7 கோடி அளவில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்:
தமிழகத்தில் தென் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த 3 நாட்களாக உள்மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் காரணமாக ராமேசுவரம், மண்டபம், பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.
இதனால் ராமேசுவரம் துறைமுகம், பாம்பனில் 5 ஆயிரம் படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. 4-ம் நாளான இன்றும் ராமேசுவரத்தில் சூறாவளி காற்று வீசி வருகிறது.
கடலில் 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை காற்று வீசி வருவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. தனுஷ்கோடி, மண்டபம், பாம்பன் போன்ற பகுதிகளில் ராட்சத அலைகள் எழும்பின. இதன் காரணமாக இன்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
4-வது நாளாக தொடரும் இந்த தடையால் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கினர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் கடந்த 4 நாட்களில் ரூ.7 கோடி அளவில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடியிலும் வழக்கத்தை விட கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் சில நேரங்களில் கடல் உள் வாங்கியதால் படகுகள் தரைதட்டி நின்றது.
- அனைவருக்கும் நெய்சோறு பிரசாதம் வழங்கப்பட்டது.
- 17-ந்தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் புகழ்பெற்ற மகான் செய்யதலி ஒலியுல்லா தர்கா உள்ளது. இந்த தர்காவின் 122-வது ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. அதிகாலையில் ஜலால் ஜமால் பள்ளிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டை ஊர்வலமாக எடுத்து வந்து தர்காவை 3 முறை வலம் வந்த பின்னர் மகான் செய்யதலி ஒலியுல்லா சமாதியில் சந்தனம் பூசப்பட்டது.
அதனைத்தொடர்ந்து உலக நன்மைக்காக பிராத்தனை செய்யப்பட்டது. நேற்று காலை மவுலீது ஓதப்பட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் நெய்சோறு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று பகலிலும் சந்தனக்கூடு விழா நடைபெற்றது. மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற இந்த சந்தனக்கூடு திருவிழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான அனைத்து மதத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.
வரும் 17-ந்தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் ஹாஜா நஜ்புதீன், துணை தலைவர்கள் சிராஜுதீன், சாகுல் ஹமீது, இக்மத், செயலாளர் ஹபீபு, துணை செயலாளர்கள் சாகுல்ஹமீது, சீனிமுஸ்தபா, பசீர், களஞ்சியம், பொருளாளர் சகுபர்சாதிக், சீனிசேகு, விழா அமைப்பாளர் அப்துல் மஜீத், ஜாகிர் உசேன், முகமது உசேன், ஆலோசனை குழு உறுப்பினர்கள் சிங்கம் பசீர், அஸ்கர்அலி, அப்துர்ரகீம், பயாஸ்கான், சீனிபீர், பாலு, சொக்கலிங்கம், ரவி, சேகர், பஞ்சமுத்து, பஞ்சவர்ணம், காயாம்பு, கார்த்திகை செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.
- இது வழக்கமாக ஆண்டுதோறும் நடைபெறுவதுதான்
- பக்தர்கள் பரவசத்துடன் பார்த்து தரிசனம் செய்து சென்றனர்.
ராமநாதபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தேவிபட்டினம் கடல் பகுதி. இ்ந்த பகுதியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் நவபாஷாண நவக்கிரக கோவில் உள்ளது. ராமபிரானால் பூஜை செய்யப்பட்ட கடலில் அமைந்துள்ள இந்த நவக்கிரக கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பரிகார பூஜை செய்வதற்காக வந்து செல்கின்றனர். இந்த நவக்கிரக கற்களை பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக கடலுக்குள் பாலம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேவிபட்டினம் பகுதியில் நேற்று வழக்கத்திற்கு மாறாக கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் ஏராளமான பைபர், பாய்மர படகுகள் கடற்கரை மணலில் தரைத்தட்டி நின்றன. நவக்கிரக கோவில் அமைந்துள்ள பகுதியிலும் பல அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்பட்டதால் கடல் நீரில் மூழ்கிய நிலையில் இருக்கும் நவக்கிரக கற்கள் காலை முதல் மதியம் 1 மணி வரை தெளிவாக வெளியே தெரிந்தன. இதனை பக்தர்கள் பரவசத்துடன் பார்த்து தரிசனம் செய்து சென்றனர்.
இதுபற்றி தேவிபட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கூறும்போது, ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கியதும் குறிப்பாக ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் வீசும் காற்று காரணமாக கடல்நீர் பகல் முழுவதும் உள்வாங்கி காணப்படும். மீண்டும் மதியத்திற்கு பிறகு சகஜநிலைக்கு திரும்பி விடும். இது வழக்கமாக ஆண்டுதோறும் நடைபெறுவதுதான். இதனால் அச்சப்பட தேவையில்லை என்றனர்.
நேற்று பகல் வரையிலும் தெளிவாக வெளியே தெரிந்த நிலையில் இருந்த நவக்கிரக கற்களும் மதியத்திற்கு பிறகு கடல் நீர் ஏறி சகஜ நிலைக்கு திரும்பியது. இதனால் மீண்டும் கடல் நீரில் பாதி அளவுக்கு மேல் மூழ்கிய நிலையில் நவக்கிரக கற்கள் காணப்பட்டது. இதேபோல் ராமேசுவரம் சங்குமால் கடற்கரை, அக்னிதீர்த்த கடற்கரை, துறைமுக கடற்கரை மற்றும் பாம்பன் கடற்கரை பகுதியில் நேற்று காலை நேரத்தில் கடல்நீர் உள்வாங்கி காணப்பட்டது. பகல் 12 மணிக்கு பிறகு மீண்டும் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது.
- விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும்.
- ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு செயலாளர் செந்தில்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்க ளின் கூட்டமைப்பு செய லாளரும், வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்றத்தலைவ ருமான செந்தில்குமார் கூறிய தாவது:-
வெங்கலகுறிச்சி, கருங்காலக்குறிச்சி, தொட்டியவலசை, திரு வாக்கி, கீழப்பனையடி யேந்தல், கிருஷ்ணாபுரம் ஆகிய 6 கிராமங்களை உள்ளடக்கியது வெங்கல குறிச்சி ஊராட்சி. 6 வார்டு பகுதிகளை கொண்டுள்ளது.
இந்த ஊராட்சியில் மொத்தம் 2000 குடும்பங்கள் உள்ளன. வெங்கலகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராம பகுதிகளில் குடிதண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே பொதுமக்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெங்கலகுறிச்சி, கருங்காலகுறிச்சி கிராமங்க ளுக்கு போதுமான சாலை வசதி இல்லாமல் மழை காலங்களில் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த 2 கிராமங்களுக்கும் சாலை வசதி செய்து தர வேண்டும்.
கருங்காலக்குறிச்சியில் தடுப்பு சுவர், வெங்கலகுறிச்சி கிராமத்தில் உள்ள ஊரணியில் படித்துறை, அரசு உயர்நிலை பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம், உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்கலகுறிச்சி, கிருஷ்ணாபுரம், தொட்டிய வலசை, கருங்காலக்குறிச்சி பகுதியில் புதிதாக ஆழ் குழாய் கிணறு அமைக்க வேண்டும்.
எங்கள் ஊராட்சியில் மக்கள் தொகை அதிகமாக உள்ளதால், அவசர காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவ வசதி இல்லாததால் சிகிச்சைக்காக 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
எனவே அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைத்து 24 மணி நேரம் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊராட்சிக்கு போதுமான நிதி இல்லாததால் அடிப் படை வசதி செய்ய முடியாமல் உள்ளது. எனவே கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். வெங்கலக்குறிச்சி கிராமத்தில் ரேசன் கடை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால் அரசு கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழபனையடியேந்தல், வெங்கலகுறிச்சி கிராமங்களுக்கு புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைக்க வேண்டும். கீழபனையடியேந்தல் கிராமத்துக்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு உள்ள நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும்.
ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மின் கம்பங்கள், மின் வயர்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதை அகற்றி புதிய மின் கம்பங்களை அமைக்க வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து அனைத்து விவசாயிக ளுக்கும் பயிர் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டை உடனடி யாக வழங்க வேண்டும்.
கடந்த ஆண்டு பருவமழை பெய்யாததால் நெற்பயிர் சாகுபடி மகசூல் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை நம்பி கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கிய தால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்வது டன் பாதிக்கப்பட்ட விவசா யிகளுக்கு வறட்சி நிவா ரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆழ்கடல் மீன்களின் குகை கண்காட்சிைய காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. திறந்து வைக்கிறார்.
- இதற்கான ஏற்பாடுகளை பொருட்காட்சி அமைப்பா ளர்கள் பாபு உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மிகப்பிரமாண்டமான ஆழ்கடல் மீன்களின் குகை கண்காட்சி மற்றும் வீட்டு உபயோக பொருட்காட்சி நாளை (7-ந்தேதி) தொடங்கு கிறது.
இக்கண்காட்சியினை ராமநாதபுரம் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. திறந்து வைக்கிறார். பொழுது போக்கு பூங்கா, ஷாப்பிங் திருவிழா, நுகர்வோர் ஸ்டால், உணவு திருவிழா உள்ளிட்ட ஏராளமான அரங்குகளுடன் பெரிய வர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் கண்டு களிக்கும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த பொருட்காட்சி தினமும் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.இப்பொருட்காட்சி திறப்பு விழா ராமநாதபுரம் நகர சபை தலைவர் ஆர்.கே. கார்மேகம், துணைத் தலை வர் டி.ஆர்.பிரவீன் தங்கம், ராஜா நாகேந்திர சேதுபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை பொருட்காட்சி அமைப்பா ளர்கள் பாபு உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.






