என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டண தகராறு"

    • சுங்கசாவடியில் கட்டண தகராறு செய்து வருகிறார்.
    • டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை அடுத்த ஆக்கிடாவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன்(42). இவர் டிராவல்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு சத்திரக்குடி டோல்கேட் பகுதிக்கு காரில் வந்தார்.

    அப்போது கட்டணம் செலுத்துவதில் பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் பாண்டியராஜன் கட்டணம் செலுத்தி உள்ளார். ஆனால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் பாண்டிய ராஜனிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாகவும், காரை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சத்திரக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×