என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகள் வைப்பு தொகை குறித்த சிறப்பு முகாம்
    X

    குழந்தைகள் வைப்பு தொகை குறித்த சிறப்பு முகாம்

    • குழந்தைகள் வைப்பு தொகை குறித்த சிறப்பு முகாம் நடந்தது.
    • மேற்கண்ட தகவலை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்து தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடமிருந்து வைப்புத் தொகை ரசீது பெற்ற குழந்தைகளில் வயது 18-ஐ கடந்தும், முதிர்வுத் தொகை வழங்கப்படாமல் உள்ள பெண் குழந்தை களிடம் கருத்துரு பெற்று சென்னை, தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திற்கு அனுப்பிட மாதந்தோறும் 2-வது செவ்வாய்கிழமை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்படி 11-ந்தேதி காலை 10 மணியளவில் ராமநாத புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெறும்.

    முகாமிற்கு வருபவர்கள் குழந்தைகளின் பிறப்பு சான்று நகல்கள், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச் சான்றிதழ், ரேஷன் கார்டு நகல், குழந்தைகளின் தாயாருடன் இணைத்துள்ள வங்கி கணக்கு புத்தகம், குழந்தைகளுக்கும் தாயாருக்கும் ஆதார்கார்டு நகல், வைப்புத்தொகை ரசீது நகல், தாய் மற்றும் குழந்தையின் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறா்ரகள்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×