என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா வானதிராயன்பட்டி ஊராட்சியை சேர்ந்த செவனம்பட்டி, நடுப்பட்டி, நரியக்கோண்பட்டி ஆகிய கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு செவனம்பட்டியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வருடங்களாக நடுப்பட்டி மற்றும் நரியகோண்பட்டி ஆகிய ஊர்களுக்கு போதிய அளவு குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் நெடுந்தூரம் சென்று குடிநீர் எடுத்து வந்து பயன் படுத்தி வருகின்றனர். இது குறித்து ஊராட்சி செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த நடுப்பட்டி மற்றும் நரியக்கோண்பட்டி ஊர்பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் விராலிமலை செக்போஸ்ட்டில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    போக்குவரத்து பாதிப்பு

    இதுகுறித்து தகவல் அறிந்து விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    குடும்ப பிரச்சினை காரணமாக புதுப்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை திருவள்ளுவர் நகர் 3-ம் வீதியை சேர்ந்தவர் அழகர்சாமி என்ற அப்துல்ஹாதி (வயது 33). இவருக்கும் சிவபுரம் இந்திராநகர் பகுதியை சேர்ந்த சேக்முகமது மகள் மும்தாஜ் (21) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மும்தாஜுக்கும், அப்துல்ஹாதிக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மும்தாஜ் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் இது குறித்து புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கணேஷ்நகர் போலீசார் மும்தாஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து மும்தாஜின் தந்தை சேக்முகமது கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மும்தாஜ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில் மும்தாஜ் தற்கொலை செய்து கொண்டதால், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரும் (பொறுப்பு) விசாரணை நடத்தி வருகிறார். 
    காசநோயை கண்டறியும் நடமாடும் மருத்துவ ஆய்வகத்தை புதுக்கோட்டையில் சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார் தொடங்கி வைத்தார்.
    புதுக்கோட்டை:

    மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் தோறும் நேரடியாக சென்று காசநோயை கண்டறியும் வகையில் நடமாடும் மருத்துவ ஆய்வகத்தின் தொடக்க நிகழ்ச்சி நேற்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார் கலந்து கொண்டு நடமாடும் மருத்துவ ஆய்வகத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, காசநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முற்றிலுமாக ஒழித்திடும் வகையில்் காசநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் இலவச பரிசோதனை மற்றும் சிசிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் 2025-க்குள் காசநோய் இல்லாத நிலையை ஏற்படுத்தும் வகையில் கிராமங்கள் தோறும் சென்று காசநோயை பரிசோதிக்கும் CBNAAT என்ற புதிய வகை பரிசோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த காசநோயை பரிசோதிக்கும் நடமாடும் மருத்துவ ஆய்வகத்தில் உள்ள CBNAAT முறையின் மூலம் சளி பரிசோதனை மேற்கொண்டு 2 மணி நேரத்தில் காசநோயை இருப்பதை கண்டறிந்து உறுதிபடுத்தலாம். மேலும் மருந்துக்கு கட்டுப்படாத காசநோய், சந்தேகமான காசநோய் பாதிப்பு, எச்.ஐ.வி. தொற்று மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு காசநோய் இருப்பதையும் இதன் மூலம் கண்டறியலாம்.

    மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருத்தி அமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் காசநோயை கண்டறியும் நடமாடும் ஆய்வகத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் நேரடியாக சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இருமல் மற்றும் காய்ச்சல், எடை குறைதல், சர்க்கரை வியாதி உள்ளவர்கள், எச்.ஐ.வி-தொற்று உள்ளவர்கள் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களும் இதன் மூலம் தங்களது இருப்பிடங்களிலேயே காசநோய் பரிசோதனை மேற்கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சந்திர சேகர், துணை இயக்குனர் (காசநோய்) பெரியசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் பரணிதரன், கலைவாணி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    கடலில் சூறாவளி காற்று வீசுவதால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் தங்களது படகுகளை துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல், மணமேல்குடி  உள்ளிட்ட ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன.
    இங்கிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தினமும் கடலுக்கு மீன் பிடிக்க சென்று  வருகிறார்கள். மேலும் பாய்மர படகு, பைபர் படகு, கட்டு மரங்களிலும் மீனவர்கள் கடலுக்கு செல்கிறார்கள். 

    தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள சூறாவளி காற்று காரணமாக 50 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்  எனக் கூறி ஒட்டுமொத்த தமிழக மீனவர்களையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி டோக்கன் வழங்கவில்லை. இதனால் வழக்கம்போல் கடலுக்கு செல்ல வேண்டிய புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்படாததால் இன்று  மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.தொடர்ந்து கடல் கொந்தளிப்பாக காணப்பட்டு வருகிறது. 

    இதனால் மீனவர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை இழந்துள்ளனர். கடலுக்கு செல்லாததால் மீனவர்கள் தங்களது படகுகளை துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதிகளில் காற்று பலமாக வீசுவதால் கடல் அலைகள் ஆர்ப்பரித்த வண்ணம் உள்ளன. அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்து வருகிறது.
    பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையால் கோட்டைப்பட்டினம் தொழிலதிபரை கடத்திய கும்பலை 4 மணி நேரத்தில் மீட்ட போலீசார் 6 பேரை கைது செய்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் சத்திரம் தெருவைச் சேர்ந்தவர் சர்க்கரை ஜமால் என்கிற ஜமால் முகமது (வயது 50). இவர் புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை பகுதியில் இரால், மீன் போன்றவற்றை வாங்கி, பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.

    தினமும் அதிகாலை பள்ளி வாசலுக்கு சென்று தொழுகை நடத்தும் பழக்கம் உள்ள ஜமால்முகமது வழக்கம்போல நேற்று காலை 4.45 மணிக்கு கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள தவ்ஹீத் பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதற்காக தனது மகன் முகமது யாசர் என்பவருடன் நடந்து சென்றார். அவர் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் சென்றபோது, அங்கு நின்றிருந்த காரில் இருந்து திடீரென்று இறங்கிய 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி ஜமால்முகமதுவை காரில் ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தனர்.

    தன் கண் முன்னே கத்தி முனையில் தந்தை கடத்தப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த யாசர்அராபத், அது குறித்து கோட்டைப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின்பேரில் மாவட்ட கூடுதல் கண்கானிப்பாளர் இளங்கோவன், அறந்தாங்கி டி.எஸ்.பி. தட்சிணாமூர்த்தி, ஆலங்குடி டி.எஸ்.பி. அப்துல் முத்தலிப் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். பல்வேறு இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, தொழிலதிபர் ஜமால் முகமதுவை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் காலை 9 மணியளவில் வடகாடு காவல் சரகம் கருக்காக்குறிச்சி பகுதியில், போலீசார் சோதனை நடத்தியபோது, ஜமால் முகமதுவை கடத்தி வந்தவர்கள் தாங்கள் வந்த கார்களை நிறுத்தி விட்டு கரும்பு காட்டுக்குள் ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் போலீசார் அவர்களை சுற்றி வளைத்ததுடன் தொழிலதிபர் ஜமால்முகமதுவை மீட்டனர்.

    மேலும் அவரை கடத்தியதாக ஜெகதாபட்டினம் கோடகுடி முத்துக்குமார் (39), மதுரை கூடல்நகர் கோபி (23) கருக்காகுறிச்சியைச் சேர்ந்த முத்துவேல் (40), மணி வாசகம் (34), மதுரை இளமனூர் ஹரிகரன் (19), மனக்காடு அய்யப்பன் (51) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடத்தப்பட்ட ஜமால் முகமதுவும், முத்துக்குமாரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கடல் தொழிலை பார்ட்டனராக செய்து வந்தனர்.இந்த நிலையில் ஜெகதாபட்டினத்தில் உள்ள ஒரு தியேட்டரை இருவரும் பார்ட்டனராக வாங்கியுள்ளனர். தியேட்டரை வாங்கும் போது, முத்துக்குமார் அதை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொண்டார்.

    ஆனால் இந்த இடத்தின் மூலப்பத்திரம் ஜமால் முகமதுவிடம் இருந்தது. இதைத் தொடர்ந்து இந்த இடம் வாங்கியதில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் கடல் தொழிலை தனித்தனியாக செய்யத் தொடங்கினர்

    இந்த நிலையில் முத்துக்குமார் ஜெகதாபட்டினம் தியேட்டர் உள்ள இடத்தை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்வதற்காக ஜமால்முகமதுவிடம், மூலப்பத்திரத்தை கேட்டுள்ளார். அதற்கு ஜமால்முகமது மறுத்துள்ளார். மேலும் அந்த இடத்தை இருவரும் சேர்ந்து தான் வாங்கினோம், விற்கும் பணத்தை பாதியை தந்தால், மூலப்பத்திரம் தருவதாக கூறியுள்ளார். அதற்கு முத்துக்குமார் பணம் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் விரோதம் இருந்துள்ளது.

    இந்நிலையில் ஜமால் முகமதுவிடம் உள்ள மூலப்பத்திரத்தை பெறுவதற்காக அவரது முன்னாள் பார்ட்னர் முத்துக்குமார், கூலிப்படையினரை வைத்து ஜமால் முகமதுவை கடத்தியது தெரியவந்துள்ளது.

    தொழிலதிபர் ஜமால்முகமது கடத்தப்பட்ட 4 மணி நேரத்தில் அவரை பத்திரமாக மீட்ட போலீசாரை மாவட்ட எஸ்.பி. செல்வராஜ் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர். #tamilnews
    அறந்தாங்கி அருகே இன்று காலை மகனுடன் தொழுகைக்கு சென்ற தொழிலதிபரை 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கோட்டைப்பட்டினம் சத்திரம் தெருவை சேர்ந்தவர் சர்க்கரை ஜமால் என்ற ஜமால் முகமது (வயது 50).

    கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்களிடம் மீன்களை வாங்கி அதனை பதப்படுத்தி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இதற்காக அவர் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தமும் செய்திருந்தார்.
    தினமும் அதிகாலையில் எழும் ஜமால் முகமது சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொண்டுவிட்டு தொழுகைக்கு செல்வது வழக்கம். அதேபோல் இன்று அதிகாலை எழுந்த அவர் தனது மகன் யாசர் அராபத் (25)துடன் 4.45 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தவ்ஹீத் பள்ளி வாசலுக்கு தொழுகை நடத்த நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு திடீரென டவேரா கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜமால் முகமதுவை குண்டுகட்டாக தூக்கி காரில் போட்டது. இதனை தடுத்த அவரது மகன் யாசர் அராபத்தை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கீழே தள்ளி விட்டு அங்கிருந்து சென்றனர்.

    அதிகாலை நேரமாக இருந்ததால் செய்வதறியாது தவித்த யாசர் அராபத் ஊருக்குள் சென்று  தனது உறவினர்களிடம் தெவித்தார்.  அவர்கள்  சம்பவம் நடந்த இடத்திற்கு திரண்டு வந்தனர். காரில் கடத்தி சென்றவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? என்ற விபரம் தெரியாமல் அவர்கள் பதட்டம் அடைந்தனர்.

    பின்னர் நடந்த சம்பவம் குறித்து யாசர் அராபத் கோட்டைப்பட்டினம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்த ஜமால் முகமதுவுக்கு ஏராளமான தொழில் போட்டிகள் இருந்துள்ளது. கோடிக்கணக்கில் பணம் புரளும் தொழிலுக்கு போட்டியாக இருந்தவர்கள் ஜமால் முகமதுவை கடத்தி சென்றார்களா? அல்லது அவரிடம் பணம் பறிக்கும் நோக்கில் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் கடத்தி சென்றார்களா? என்பது  உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சமீப காலமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கடலோர பகுதிகள் வழியாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் தொடர்புடைய நபர்கள் கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அடிப்படையிலும் போலீசார் முதல் கட்டவிசாரணையை தொடங்கி உள்ளனர்.
    புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே மீன்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்த தொழிலதிபர் இன்று அதிகாலை தொழுகைக்கு சென்றபோது 4 பேர் கடத்தி சென்றனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கோட்டைப்பட்டினம் சத்திரம் தெருவை சேர்ந்தவர் சர்க்கரை ஜமால் என்ற ஜமால் முகமது (வயது 50).

    கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்களிடம் மீன்களை வாங்கி அதனை பதப்படுத்தி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இதற்காக அவர் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தமும் செய்திருந்தார்.

    தினமும் அதிகாலையில் எழும் ஜமால் முகமது சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொண்டுவிட்டு தொழுகைக்கு செல்வது வழக்கம். அதேபோல் இன்று அதிகாலை எழுந்த அவர் தனது மகன் யாசர் அராபத் (25)துடன் 4.45 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு தொழுகை நடத்த நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு திடீரென டவேரா கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜமால் முகமதுவை குண்டுகட்டாக தூக்கி காரில் போட்டது. இதனை தடுத்த அவரது மகன் யாசர் அராபத்தை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றனர்.

    அதிகாலை நேரமாக இருந்ததால் செய்வதறியாது தவித்த யாசர் அராபத் ஊருக்குள் சென்று தனது உறவினர்களிடம் தெவித்தார். அவர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு திரண்டு வந்தனர். காரில் கடத்தி சென்றவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? என்ற விபரம் தெரியாமல் அவர்கள் பதட்டம் அடைந்தனர்.

    பின்னர் நடந்த சம்பவம் குறித்து யாசர் அராபத் கோட்டைப்பட்டினம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்த ஜமால் முகமதுவுக்கு ஏராளமான தொழில் போட்டிகள் இருந்துள்ளது. கோடிக் கணக்கில் பணம் புரளும் தொழிலுக்கு போட்டியாக இருந்தவர்கள் ஜமால் முகமதுவை கடத்தி சென்றார்களா? அல்லது அவரிடம் பணம் பறிக்கும் நோக்கில் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் கடத்தி சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சமீப காலமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கடலோர பகுதிகள் வழியாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் தொடர்புடைய நபர்கள் கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அடிப்படையிலும் போலீசார் முதல்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.
    விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்..
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள வாடியான்களம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதி பொதுமக்களுக்கு ஆழ்துளை கிணறு மூலம் நீர்தேக்கத் தொட்டியில் குடிநீரை சேமித்து வைத்து வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 6 மாதங்களாக போதிய அளவு குடிநீர் வினியோகம் வழங்கப்படவில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் நெடுந்தூரம் சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். இதுகுறித்து ஊராட்சி செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், எந்தவித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த வாடியான்களம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அமர்ந்து குடிநீர் கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த துணை ஆணையர் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
    புதுக்கோட்டையில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் பெண் பலியானார். பெண் பார்க்க சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அசோக்நகரை சேர்ந்தவர் மீனாட்சி (வயது 74). இவரது உறவினர்கள் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ளனர். இந் நிலையில் மீனாட்சி அவர்களை பார்க்க செஞ்சிக்கு சென்றார். பின்னர் உறவினர்கள் ஜெயந்தி (60), ஜெயலட்சுமி,  நிசாந்தன் (1) சாரதா உள்பட 5 பேருடன் ஒரு வாடகை காரில் திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக புதுக்கோட்டைக்கு சென்றனர். காரை செல்வம் என்பவர் ஓட்டினார்.

    கார் இன்று அதிகாலை திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை சிப்காட் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவர் தூங்கியதாக கூறப்படுகிறது. இதனால் டிரைவரின் கட்டுபாட்டை இழந்த கார் தாறுமாறாக  ஓடி சாலையில் ஒரத்தில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் மீனாட்சி சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த ஜெயந்தி, ஜெயலட்சுமி, நிசாந்தன், சாரதா, கார் டிரைவர் செல்வம் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த மீனாட்சி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    புதுக்கோட்டையில் இருந்து பழனிக்கு புதிய பேருந்தை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதிய பேருந்துகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, கொடியசைத்து பஸ்களை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து  முன்னிலை வகித்தார். 

    புதிய பேருந்துகளை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகத்திற்கு பல்வேறு புதிய பேருந்துகளை வழங்கியுள்ளார். அதனடிப்படையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை மாவட்ட த்திற்கு வழங்கப்பட்ட புதிய பேருந்துகள்  தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

    ஒரு புதிய பேருந்து புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து காலை 4.30 மணிக்கு புறப்பட்டு இலுப்பூர், விராலிமலை, மணப்பாறை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக பழனியை சென்றடையும். மீண்டும் அப்பேருந்து புதுக்கோட்டைவந்தடைந்து மாலை 4 மணிக்கு புதுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு மேற்கண்ட வழித் தடங்கள் வழியாக மீண்டும் பழனியை சென்றடையும். மேலும் மற்றொரு புதிய பேருந்து அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு ஆவுடையார்கோயில், மீமிசல், தொண்டி, தூத்துக்குடி வழியாக திருச்செந்தூரை சென்றடையும். மீண்டும் திருச்செந்தூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மேற்கண்ட வழித்தடங்கள் வழியாக மீண்டும் அறந்தாங்கியை வந்தடையும்.

    இதன்மூலம் பயணிகள் சொகுசாகவும் மற்றும் பாதுகாப்பான பயணத்தையும் மேற்கொள்ள முடியும். எனவே பயணிகள் அனைவரும் தமிழக அரசின் இத்தகைய திட்டங்களை உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், பொது மேலாளர் ஆறுமுகம், நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன், துணை மேலாளர் (வணிகம்)  முத்துக்கருப்பையா, மத்திய தொலைத்தொடர்பு ஆலோசனைக்குழு உறுப்பினர் பாஸ்கர், அரசு அலு வலர்கள் மற்றும் பயணிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    புதுக்கோட்டையில் குடும்ப தகராறில் தொழிலதிபர் தற்கொலை செய்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
    திருவரங்குளம்:

    புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள தோப்புக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 54). இவர் புதுக்கோட்டையில் பெயிண்ட் கடை வைத்து நடத்தி வந்தார்.

    இந்தநிலையில் குடும்ப தகராறு காரணமாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனிடையே நேற்று கணேசன் அவரது மகளுக்கு போன் செய்தார். அப்போது தான் புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் நிற்பதாகவும், எலி மருந்தை சாப்பிட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மகள் மற்றும் உறவினர்கள் புதுக்கோட்டைக்கு விரைந்து சென்று, கணேசனை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கணேசன் இறந்தார். அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    குடும்ப தகராறில் கணேசன் தற்கொலை செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வல்லத்திராக் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா வருகையால் தமிழகத்தில் எந்த அரசியல் மாற்றமும் ஏற்படாது என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட லோக்ஆயுக்தா சட்டத்தில் எதிர் கட்சிகள் கூறும் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. ஊழல் நிறைந்த துறைகளாக இருக்கும் வேலைவாய்ப்பு ஒப்பந்தம் உள்ளிட்டவைகள் இந்த சட்டத்திற்கு பொருந்தாது என்று கூறி இருப்பதன் மூலம் உள்நோக்கத்தோடு சட்டத்தை அரசு நிறைவேற்றி உள்ளது. இதனால் எந்த மாற்றமும் ஏற்படபோவது கிடையாது.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பளித்த ஒரு நீதிபதிக்கு மிரட்டல் வந்து உள்ளது ஆபத்தானது. இது அந்த நீதிபதிக்கு அளிக்க கூடிய மிரட்டல் அல்ல, வழக்கை விசாரணை செய்து வரும் 3-வது நீதிபதிக்கு அளிக்கப்பட்ட மிரட்டல். பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா வருகையால் தமிழகத்திற்கு எந்த அரசியல் மாற்றமும் ஏற்படபோவது கிடையாது. தமிழகத்தில் திராவிட இயக்கமும், பொதுவுடமை இயக்கமும் இருக்கும் வரை பா.ஜ.க.வின் கனவு பலிக்காது. ஊழல் குறித்து அமித்ஷா கூறியுள்ளார். அந்த கருத்தை கூற அவருக்கு தார்மீக உரிமை உள்ளதா என்பதை பா.ஜ.க. விளக்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டால் என்ன தவறு என்று நீதிமன்றம் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது.

    விடுதலைப்புலிகள் குறித்து இலங்கை பெண் மந்திரி கூறியிருக்கும் கருத்து வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் தீவிரவாதிகள் உள்ளனர் என்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கும் குற்றச்சாட்டிற்கு, முதல்-அமைச்சர் பதில் அளிக்காமல் இருப்பதன் மூலம் மத்திய மந்திரி கூறும் கருத்து உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

    தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வில் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களின் வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டு இருந்ததால் கிராமப்புற மாணவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகினர். இந்நிலையில் மதுரை உயர் நீதிமன்றம் தவறான 49 கேள்விகளுக்கும் கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க உத்தரவிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. இதனை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் மேல் முறையீடு செய்யாமல் நடைமுறைப் படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×