search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pudukkottai fisherman"

    எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள், ஏம்பவயல்  நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று அவர்கள் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு, சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர்.

    மேலும் மீனவர்களின் படகுகளில் ஏறிய கடற்படை வீரர்கள் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி, மீனவர்களை தாக்கியதாகவும்  தெரிகிறது. இதனால் உயிருக்கு பயந்து மீனவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். ஆனாலும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 27 மீனவர்களை சிறை பிடித்தனர். அவர்களது 4 நாட்டுப்படகுகளையும் பறிமுதல்  செய்தனர்.

    சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை படகுகளுடன் இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இன்று காலை  ஊர்க்காவல் துறை நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டை   மீனவர்களின் பெயர்  விவரம் வருமாறு:-

    வேலாயுதம், பாலா, செங்கமுத்து, விக்கி, முத்துக்காளி,  ராஜு, பாலா, கிருஷ்ணன், லோகமுத்து, முத்துமாரி, அபுதாகீர், ராக்கு, பவித்ரன், குமரன், சந்தனமாரி, பஞ்ச நாதன், ராஜாராம், காளிதாஸ், கருப்பையா, ராமு, கணே சன், நந்தகுமார், ரமேஷ், பரமசிவம், செந்தூர் பாண்டியன் உள்பட 27 பேர்.

    சிறைபிடிக்கப்பட்ட  மீனவர்கள் மீது இலங்கை அரசின் புதிய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளதாக தெரிகிறது. இந்த சட்டத்தின் மூலம் மீனவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதிக்க வழிவகை உள்ளது குறிப்பிடத்தக்கது. மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதை அறிந்த அவர்களது குடும்பத்தினர் மற்றும் புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 
    கடலில் சூறாவளி காற்று வீசுவதால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் தங்களது படகுகளை துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல், மணமேல்குடி  உள்ளிட்ட ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன.
    இங்கிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தினமும் கடலுக்கு மீன் பிடிக்க சென்று  வருகிறார்கள். மேலும் பாய்மர படகு, பைபர் படகு, கட்டு மரங்களிலும் மீனவர்கள் கடலுக்கு செல்கிறார்கள். 

    தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள சூறாவளி காற்று காரணமாக 50 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்  எனக் கூறி ஒட்டுமொத்த தமிழக மீனவர்களையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி டோக்கன் வழங்கவில்லை. இதனால் வழக்கம்போல் கடலுக்கு செல்ல வேண்டிய புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்படாததால் இன்று  மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.தொடர்ந்து கடல் கொந்தளிப்பாக காணப்பட்டு வருகிறது. 

    இதனால் மீனவர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை இழந்துள்ளனர். கடலுக்கு செல்லாததால் மீனவர்கள் தங்களது படகுகளை துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதிகளில் காற்று பலமாக வீசுவதால் கடல் அலைகள் ஆர்ப்பரித்த வண்ணம் உள்ளன. அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்து வருகிறது.
    ×