என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை சிறையில் கைது ஒருவருர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாகவும் சிறையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் ஏராளமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்குள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிகளில், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட சிறுவர்களும் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் சிறையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் இருப்பதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. சமீபத்தில் கைதி ஒருவரும் தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவங்களை தொடர்ந்து இன்று புதுக்கோட்டை டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் சிறையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கைதிகள் அறை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் கைதிகள் யாரேனும் போதை பொருட்கள் மற்றும் செல்போன் பயன்படுத்துகிறார்களா? எனவும் அதிரடியாக ஆய்வு செய்யப்பட்டது. #tamilnews
    புதுக்கோட்டை அருகே நேற்று இரவு மர்ம கும்பல் ஆடுகளை திருடி தலைகளை துண்டாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வேம்பன்பட்டியை சேர்ந்தவர் இளங்கோ , விவசாயி. இவர் 15 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்றிரவு அவர் வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் ஆடுகளை அடைத்து வைத்திருந்தார்.

    இந்தநிலையில் இன்று காலை பார்த்த போது ஆடுகளை காணவில்லை. இதையடுத்து இளங்கோ தேடி சென்ற போது, அப்பகுதியில் உள்ள ஒரு இடத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. மேலும்2 ஆடுகள் தலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தன. இது குறித்து இளங்கோ, கந்தர்வக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    நேற்றிரவு இளங்கோ வீட்டிற்கு வந்த மர்மநபர்கள், ஆடுகளை திருடி , மறைவான பகுதிக்கு சென்றதும் ஆடுகளை வெட்டிக்கொன்று  கறிகளை எடுத்து செல்ல திட்டமிட்டிருக்கலாம். பொதுமக்கள் நடமாடுவதை அறிந்து அதனை கைவிட்டு விட்டு சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அல்லது ஏதாவது பிரச்சினை காரணமாக இளங்கோவின் எதிராளிகள் இந்த செயலில்  ஈடுபட்டனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம்  கந்தர்வக்கோட்டை அருகே பெருங்களூரில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 17) பிளஸ்-2 படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த கோபால் மகன் ராஜா (16)  பிளஸ்-1 படித்து வருகிறார். 

    இந்த நிலையில் நேற்று மாலை இருவரும் பள்ளி விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. 

    இதில் ஆத்திரமடைந்த ராஜா, தனது நண்பர் செல்வமணி என்பவரை அழைத்து வந்து கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக  தாக்கினார். இந்த தாக்குதலில் கிருஷ்ணமூர்த்தியின் கண்ணில் பலத்த காயம் ரத்தம் கொட்டியது. இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து ஆதனக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜாவை கைது செய்தனர். தப்பியோடிய செல்வமணியை தேடி வருகின்றனர்.
    ஆவுடையார் கோவில் அருகே புண்ணியவயல் கிராமத்தில் செல்விநாயகர், மஞ்சனத்தி அய்யனார்கோவில் சந்தனக்காப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடந்தது.
    அறந்தாங்கி:

    ஆவுடையார் கோவில் அருகே புண்ணியவயல் கிராமத்தில் செல்விநாயகர், மஞ்சனத்தி அய்யனார்கோவில் சந்தனக்காப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடந்தது. பெரிய மாட்டில் முதல்பரிசை ஆவுடையார்கோவில் எம்.ஆர்.பி. அன்பு அம்பலம் மாடும், இரண்டாம்பரிசை தினையாகுடி ஆர்.கே.சிவா மாடும், மூன்றாம்பரிசை உடப்பன்பட்டி பூமிமாடும் தட்டிச்சென்றன. 

    நடுமாட்டில் முதல்பரிசை புண்ணியவயல் மண்தின்னிகாளி மாடும், இரண்டாம் பரிசை செல்வ னேந்தல் சுந்தர்ராஜன்சேர்வை மாடும், மூன்றாம்பரிசை பொன் பேத்தி மருதுபாண்டிய  வெள்ளாளத் தேவர் மாடும்தட்டிச் சென்றன, கரிச்சான் மாட்டில் 38 வண்டிகள் சேர்ந்ததால் ஒரு செட்டில் விடமுடியாது  என்பதால் அதை இரண்டு செட்டாக விடப்பட்டது . அதில் முதல்செட்டில் முதல்பரிசை பொய்யாதநல்லூர் அப்பாஸ்ராவுத்தர் மாடும், இரண்டாம் பரிசை கடம்பங்குடி காமாட்சி அம்மன் மாடும்,  மூன்றாம் பரிசை பொன் பேத்தி மருதுபாண்டிய வெள்ளாளத்தேவர் மாடும் தட்டிச்சென்றன. 

    இரண்டாவது செட்டில் முதல் பரிசை வெள்ளூர் அய்யப்பன் மாடும், இரண்டாம் பரிசை கருப்பூர் வீரையா சேர்வை மாடும், மூன்றாம் பரிசை கல்லாபேட்டை மண்டையம்மன் மாடும் தட்டிச் சென்றன. விழா ஏற்பாடுகளை புண்ணிய வயல் கிராமத்தார்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆவுடையார்கோவில் போலீசார் செய்திருந்தனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடிகளை கொட்டித்தரும் ஆடி மாத மொய் விருந்து திருவிழா தொடங்கியது. #Moivirunthu

    புதுக்கோட்டை:

    கால ஓட்டத்தின் நடை முறை, வாழ்வியல் முறைகள் மாறினாலும் சில கலாச்சாரங்கள் இன்னும் பல கிராமங்களில் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது.

    அப்படித்தான் புதுக்கோட்டை தஞ்சை மாவட்ட கிராமங்களில் தொன்று தொட்டு நடந்துவரும் மொய் விருந்து விழாக்களும். ஆடி மாதத்தில் அப்பகுதி கிராமங்களில் நடைபெரும் மொய் விருந்து விழாக்களால் ஒரு புறம் கோடிக்கணக்கில் வர்த்தகமும், மறுபுறம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.

    ஆரம்ப காலகட்டத்தில் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வாக தொடங்கப்பட்ட இந்த மொய் விருந்து விழாக்கள் காலமாற்றத்தால் தற்போது வர்த்தக ரீதியான வாழ்வாதாரமாக மாறிப்போயுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம மற்றும் தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியை சுற்றிய கிராமங்களில் திரும்பிய பக்கமெல்லாம் திகைக்க வைக்கும் மொய் விருந்து பிளக்ஸ் பேனர்களும், வீடு தோறும் குவிந்து கிடக்கும் மொய் விருந்து அழைப்பிதழ்களும் நம்மை வரவேற்கின்றன.

    தொடக்கத்தில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியை சுற்றி கிராமங்களில் தொடங்கியது தான் இந்த மொய்விருந்து கலாச்சாரம். வாழ்வில் பின்தங்கியுள்ள ஒரு குடும்பத்தின்வறுமையை போக்க உறவினர்கள் ஒன்றிணைந்த தங்களால் இயன்ற தொகையை மொய் விருந்து என்ற விழாவின் மூலம் ஒரு வருக்குகொடுப்பார்கள்.

    அந்த தொகையின் மூலம் விவசாயம் அல்லது தொழில் செய்து ஏழ்மை நிலையில் உள்ள நபர் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதே இந்த விழாவின் முக்கிய நோக்கம்.அதன் பிந்தைய காலகட்டத்தில் படிப்படியாக பெரும்பாலானோர் மொய் விருந்து விழாக்களை நடத்த தொடங்கினர்.

     


    மொய் எழுதியதற்கு சான்றாக வழங்கப்பட்ட ரசீதுடன் பங்கேற்ற நபர்.

     

    அதன் தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் தொடங்கி மொய் விருந்து விழாக்கள் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம், கீரமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், ஆலங்குடி வரை பரவத்தொடங்கியது.

    இந்த ஆண்டு ஆடி 1-ந்தேதி முதல் அப்பகுதி கிராமங்களில் மொய் விருந்து விழாக்கள் களை கட்ட தொடங்கியுள்ளது. 8 பேர் முதல் 32 பேர் வரையில் பொது பந்தல் அல்லது மண்டபங்களிலோ கூட்டு சேர்ந்தோ விழாவை நடத்துவார்கள். தங்கள் தகுதிக்கேற்ப ரூ.2 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையில் மொய்த் தொகையாக பெறுவார்கள். அதனை விவசாயம் அல்லது தொழிலில் முதலீடு செய்து அதில் வரும் வருமானத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் தங்களுக்கு மொய் செய்தவர்களுக்கு திருப்பி செலுத்துவார்கள்.

    கடந்த ஆண்டு ரூ.400 கோடி வரையில் இந்த மொய் விருந்து விழாவால் பணப் பரிமாற்றம் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு ரூ.500 கோடியை தாண்டி பரிமாற்றம் நடைபெறும் என்று விழா ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

    இந்த விழாக்கள் மூலம் வட்டியில்லாத கடன் கிடைப்பதோடு திருப்பி செலுத்துவதும் எளிது என்பதாலே அப்பகுதி கிராம மக்கள் மொய் விருந்து விழாக்களை 5 ஆண்டிற்கு ஒரு முறை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

    மொய் செய்ய வருபவர்களை விழாதாரர்கள் மாலை அணிவித்து வரவேற்பதோடு அவர்களுக்கு ஆட்டு கிடாய் விருந்து உபசரிப்பு தாராளமாக நடைபெறும். ஒவ்வொரு கிராமத்திலும் பலர் கூட்டு சேர்ந்து ஒரே விழாவாக நடத்துவதால் உணவு செலவும் குறைவு.

    விழாதாரர்களுக்கு ஒரு புறம் வருவாய் இருக்க, இந்த விழாக்கள் மூலம் ஆயிரக்கணக்காணோர் வேலை வாய்ப்பையும் பெறுகிறார்கள். அப்பகுதியில் உள்ள படித்த வேலையில்லா இளைஞர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆடி மாதத்தில் மொய் எழுதும் பணியில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

     


    கம்ப்யூட்டர் மூலம் மொய் செய்தவர்களுக்கு ரசீது வழங்க பணியமர்த்தப்பட்ட வங்கி மற்றும் தனியார் ஊழியர்கள்.

     

    அதே போல் சமையல் தொழிலாளிகள், பந்தல் அமைப்பவர்கள், பத்திரிக்கை விநியோகம் செய்பவர்கள், உணவு பரிமாறுபவர்கள் என்று பல தரப்பினருக்கு வேலை வாய்ப்பாக அமைகிறது. அதேபோல் மளிகைக் கடை வைத்திருப்பவர்கள், ஆடு வியாபாரிகள், இலை வியாபாரிகள், பத்திரிக்கை மற்றும் ப்ளக்ஸ் பிரிண்டிங் தொழில் செய்பவர்களுக்கும் இந்த மாதம்முழுவதும் நல்ல வருவாய் கிடைப்பதோடு பலகோடி ரூபாய் அளவில் வர்த்தகமும் நடைபெறுகிறது.

    மொய் விருந்தில் பணம் எண்ணும் எந்திரம் பயன்படுத்துவது, வங்கி அலுவலர்களை வரவழைத்து பணியை மேற்கொள்வது போன்ற நடைமுறைகள் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு முதன் முறையாக புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகேயுள்ள பெரியாளூரில் நேற்று நடந்த மொய் விருந்து நிகழ்ச்சியில் கம்ப்யூட்டர் மூலம் மொய் விபரங்கள் பதிவு செய்யப்பட்டன.

    மொய் செய்தவர்களுக்கு விழா நடத்துபவர்கள் சார்பில் ரசீது வழங்கப்படுவதோடு, அவர்களின் செல்போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ்.சும் அனுப்பப்பட்டது. தொழில் நுட்ப வளர்ச்சி மொய் விருந்து வரை கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்த மொய் விருந்து விழாக்களை நடத்துவதில் பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் பெற்ற பணத்தை முறையான வகையில் பயன் படுத்தினால் வாழ்வில் முன்னேறலாம் என்பதே அப்பகுதி மக்களின் ஒட்டு மொத்த கருத்தாக உள்ளது.

    ஆடிமாதத்தில் மட்டுமே விழா நடத்த வேண்டும், ஒருவர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மொய் விருந்து விழா நடத்த வேண்டும், தான் பெற்ற மொய் பணத்தை அடுத்த 5 ஆண்டுகளில் முறையாக திருப்பி செய்த பின்னரே அடுத்த முறை விழா வைக்க வேண்டுமென இந்த மொய் விருந்து விழாக்களுக்கும் பல கட்டுபாடுகள் விதிக்கப்பட் டுள்ளன.

    ஆனாலும் காலங்களை கடந்தும் அப்பகுதி கிராமங்களில் இந்த கலாச்சார விழா தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. மக்களை பாதிக்காத வரையில் எந்த ஒரு கலாச்சார விழாக்களும் வரவேற்க கூடியதுதான். #Moivirunthu

    புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #studentclash

    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே பெருங்களூரில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 17) பிளஸ்-2 படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த கோபால் மகன் ராஜா (16) பிளஸ்-1 படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை இருவரும் பள்ளி விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

    இதில் ஆத்திரமடைந்த ராஜா, தனது நண்பர் செல்வ மணி என்பவரை அழைத்து வந்து கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக தாக்கினார். இந்த தாக்குதலில் கிருஷ்ண மூர்த்தியின் கண்ணில் பலத்த காயம் ரத்தம் கொட்டியது. ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து ஆதனக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து , ராஜாவை கைது செய்தனர். தப்பியோடிய செல்வமணியை தேடி வருகின்றனர். #studentclash

    விடாமுயற்சியுடன் திட்டமிட்டு படித்தால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறலாம் என்று கலெக்டர் கணேஷ் கூறினார்.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் உள்ள படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பல்வேறு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணிக்கு செல்லும் வகையில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கான பயிற்சி வகுப்பு  நடைபெற்றது.

    இந்த பயிற்சி வகுப்பை கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்து, தேர்வர்களுக்கு விலையில்லா பாடக்குறிப்பேடுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த பயிற்சி வகுப்புகள் அலுவலக வேலை நாட்களில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இந்த பயிற்சி வகுப்புகளில் ஏற்கனவே போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள், அனுபவமிக்க பயிற்சியாளர்களை கொண்டு தேர்வர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைத்து தேர்வர்களுக்கும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

    எனவே இந்த பயிற்சி வகுப்புகளை அனைவரும் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விடாமுயற்சியுடன் திட்டமிட்டு படித்தால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறலாம். இந்த பயிற்சி வகுப்பு மூலம் தேர்வர்கள் முறையாக பயிற்சி பெற்று போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணிக்கு செல்லலாம். 

    இவ்வாறு அவர் பேசினார்.
    புதுக்கோட்டை அருகே நேற்று இரவு வி.ஏ.ஓ. அலுவலகம் மற்றும் அரசு பள்ளியில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல்  அருகே வீரப்பட்டியில் உள்ள அரசு கட்டிடத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , அங்கன் வாடி மையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு பணி முடிந்ததும்  ஊழியர்கள் அலுவலகம், பள்ளி, அங்கன்வாடி மையத்தை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை  ஊழியர்கள் சென்று பார்த்த போது, வி.ஏ.ஓ. அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. 

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள்  உள்ளே சென்று பார்த்த போது பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் அதே கட்டிடத்தில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்திலும் பொருட்கள் சிதறி கிடந்தது.ரூ.3 லட்சம் மதிப்புள்ள தளவாட பொருட்களும் கொள்ளை போயிருந்தது. 

    நேற்றிரவு மர்மநபர்கள் வி.ஏ.ஓ. அலுவலகம், பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்திற்குள் புகுந்து தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்ததும் அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை  தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்ற கார் மீது அரசு பஸ் மோதியது. இதில் காயம் இன்றி கவர்னர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
    அன்னவாசல்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் திருச்சி வந்தார். வரவேற்பு முடிந்த பின்னர் கார் மூலம் புதுக்கோட்டைக்கு சென்ற கவர்னர், அங்கு புதிய பஸ் நிலையம் அருகில் தூய்மை பணிகளை ஆய்வு செய்ததோடு, அங்கு கிடந்த குப்பைகளையும் அகற்றினார். அதன் பின்னர் ரோஜா இல்லத்தில் ஓய்வு எடுத்த கவர்னர் பொதுமக்களிடம் குறைகள் கேட்டு மனுக்களை வாங்கினார். தொடர்ந்து வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    புதுக்கோட்டை மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாலை 4 மணி அளவில் அங்கிருந்து திருச்சிக்கு புறப்பட்டார். அவரது காருக்கு முன்னாலும், பின்னாலும் போலீஸ் வாகனங்கள் புடைசூழ கவர்னரின் ‘கான்வாய்’ திருச்சி நோக்கி வந்து கொண்டு இருந்தது.

    இந்நிலையில் திருக்கோகர்ணம் அருகே முத்துடையான்பட்டி என்ற இடத்தில் வந்தபோது, திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற ஒரு அரசு பஸ் திடீரென கவர்னர் அமர்ந்து இருந்த காரின் வலதுபக்க கதவில் லேசாக மோதியது. இதில் அந்த பகுதி முழுவதும் சேதம் அடைந்தது. ஆனால் கவர்னருக்கோ, காரை ஓட்டிய டிரைவருக்கோ காயம் எதுவும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

    உடனடியாக கவர்னரின் கார் அந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டது. கான்வாயில் வந்த வேறு காரில் கவர்னரை ஏற்றி, பாதுகாப்பு அதிகாரிகள் அவரை திருச்சிக்கு அனுப்பி வைத்தனர். கவர்னரின் கார் மீது மோதிய அரசு பஸ்சை உடனடியாக போலீசார் ஓரம் கட்டினார்கள். அதன் டிரைவர் மற்றும் கண்டக்டரை பிடித்து விசாரித்தனர்.

    இதில் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் சிவகங்கை மாவட்டம் ஒக்கூரை சேர்ந்த விஜயசுந்தரம் (வயது 47) என தெரியவந்தது. அவரை போலீசார் திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். அந்த பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, வேறு பஸ் மூலம் புதுக்கோட்டை பஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    புதுக்கோட்டையில் இன்று கவர்னரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கறுப்பு கொடி போராட்டம் நடத்திய தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். #DMK #GovernorBanwarilalPurohit

    புதுக்கோட்டை:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து, தூய்மை இந்தியா- வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

    அவரது ஆய்வுக்கு தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக கவர்னர் பங்கேற்க செல்லும் மாவட்டங்களில் தி.மு.க.வினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கவர்னருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சமீபத்தில் கவர்னர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டது. இதனால் கவர்னர் அடக்கு முறையை கையாள்வதாகவும், மாநில சுயாட்சிக்கு எதிராக செயல்படுவதாகவும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்தன.

    இந்தநிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று புதுக்கோட்டையில் தூய்மை மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும் என புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.வினர் அறிவித்திருந்தனர்.

     


    தடையை மீறி போராட்டம் நடத்தினால் கவர்னர் மாளிகை அனுப்பியுள்ள சுற்றறிக்கையின்படி, கவர்னரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஐ.பி.சி. 124-ன் கீழ் கைது செய்யப்படுவதோடு, அதன் மூலம் 7ஆண்டுகள் சிறை தண்டனைக்குள்ளாகும் நிலை ஏற்படும் என திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதா லட்சுமி தி.மு.க.வினருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    இருப்பினும் தடையை மீறி கவர்னருக்கு எதிராக புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி எதிரே கறுப்பு கொடி காட்டி போராட்டம் நடத்துவோம் என தி.மு.க.வி னர் தெரிவித்திருந்தனர்.

    இதையடுத்து அப்பகுதியை சுற்றிலும் 10 அடி உயரத்திற்கு போலீசார் தடுப்புகளை அமைத்தனர். மேலும் அங்கு தீவிர பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். இந்தநிலையில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் கவர்னர், தூய்மை பணிகளை ஆய்வு செய்து முடித்ததும் மற்ற பணிகளை ஆய்வு செய்வதற்காக அங்கிருந்து புறப்பட தயாராக இருந்தார்.

    இதற்கிடையே அங்கு திரண்டிருந்த தி.மு.க.வினர் கவர்னருக்கு எதிராக கறுப்பு கொடிகளை காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை மீறி சாலைக்கு வர முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    கவர்னர் வருகை, தி.மு.க. வினர் கறுப்பு கொடி போராட்டத்தையொட்டி திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ தலைமையில், 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

    இதையடுத்து கவர்னர் ஆய்வு பணிக்கு வருவதற்கு முன்பே போராட்டத்தில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரகுபதி, பெரியண்ணன் அரசு, மெய்யநாதன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் உள்பட 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்குள்ள ஒரு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே கவர்னர் வருகைக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க.வினர் 100-க் கும் மேற்பட்ட காவி நிறத்தில் பலூன்களை வானில் பறக்க விட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பலூன்களை பறிமுதல் செய்ததோடு பா.ஜ.க.வினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவங்களால் புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது. #DMK #GovernorBanwarilalPurohit

    ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற மாணவர், ஆசிரியர்கள் குரல் கேட்டு உயிர் பிழைத்த மாணவர் நிகழ்வு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மின்னாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண் பாண்டியன் (வயது 17). கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 17-ந் தேதி மாலை, நண்பர்களுடன் பானிபூரி சாப்பிட்டார்.

    அப்போது, மூச்சடைத்து மயங்கி விழுந்த அருண் பாண்டியன், அதே ஊரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். நாடித்துடிப்பு மிகக்குறைவாக இருந்ததால், டாக்டர்கள் அறிவுறுத்தல்படி, தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இதற்கிடையே, தகவல் அறிந்த அருண் பாண்டியனின் பள்ளி ஆசிரியர்கள் மணிகண்டன், சோமசுந்தரம் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அருண் பாண்டியனை கண்டு கலங்கிய இருவரும், அவரது காது அருகே சென்று “தம்பி விழித்து பார்யா... யார் வந்திருக்கிறது என்று” என அடுத்தடுத்து பேச்சு கொடுத்தனர்.

    இதனால் அதுவரை அசைவற்று கிடந்த அருண் பாண்டியன் கண்கள் லேசாக உருள தொடங்கியது. ஆசிரியர்கள் பேசப்பேச அவர் கண் விழித்தார். கை, கால்களை அசைத்தார். அடுத்த 7 நிமிடங்களில் சுயநினைவு திரும்பி, “சார் நீங்க எப்ப வந்தீங்க” என்று கேட்டார். ஆசிரியர்களின் பெயரையும் சரியாக கூறினார். அதைப் பார்த்த டாக்டர்களும், செவிலியர்களும் 10 சதவீதம் கூட உணர்வு இல்லாமல் இருந்த அருண் பாண்டியன் உயிர் பிழைத்ததை நினைத்து ஆனந்தம் அடைந்தனர். 
    கீரமங்கலம் பகுதியில் வரத்து அதிகரிப்பால் எலுமிச்சை பழங்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
    கீரமங்கலம்:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், செரியலூர். குளமங்கலம், பனங்குளம், பாண்டிக்குடி, நெய்வத்தளி, சேந்தன்குடி, நகரம் கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு, மேற்பனைக்காடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் தென்னந்தோப்புகளுக்குள்ளும், தனியாகவும் எலுமிச்சை சாகுபடி செய்து வருகின்றனர். கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, புளிச்சங்காடு கைகாட்டி, பனங்குளம், குளமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள கமிஷன் கடைகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் 10 டன் வரை எலுமிச்சை பழங்கள் விற்பனைக்காக வருகிறது.

    ஆனால் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கட்டுபடியான விலை கிடைக்கவில்லை. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.12-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ. 5-க்கும் குறைவாக வாங்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வியாபாரிகளும் மொத்தமாக வாங்கி வெளியூர்களுக்கு அனுப்பும் போது ரூ.10-க்கும் குறைவாகவே விற்கப்படுவதால் அவர்களுக்கும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- கடந்த சில ஆண்டுகளாக மே, ஜூன், ஜூலை மாதங்களில் ஒரு கிலோ எலுமிச்சை பழங்கள் ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை ஆனது. அதனால் விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதிகபட்ச விலை ரூ.20-க்கு விற்பனை ஆனது. ஆனால் தற்போது கிலோ ரூ. 10, ரூ.12 என்று விற்கப்பட்டு வந்த எலுமிச்சை பழங்கள் தற்போது கிலோ ரூ. 5-க்கு விற்பனை ஆகிறது. அதனால் விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை இல்லாமல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. உற்பத்தி செலவுக்கு கூட பழங்களின் விற்பனை இல்லை என்பதால் ஒவ்வொரு நாளும் இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது.

    கீரமங்கலம் சுற்றியுள்ள சுமார் 50 கிராமங்களில் காய்கறிகள், பழங்கள், மலர்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது. ஆனால் அவற்றை பாதுகாப்பாக வைக்க குளிர்பதன கிடங்கு இல்லாததால் கட்டுபடியான விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் நட்டத்தில் விற்கும் நிலை உள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும் குளிர்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுப்பதாக வேட்பாளர்கள் சொல்லிவிட்டு சென்றுவிடுகின்றனர். அதன் பிறகு நடவடிக்கை எடுப்பதில்லை. குளிர்பதன கிடங்கு இருந்தால் விலை குறையும் காலங்களில் மலர்கள், காய், கனிகளை வைத்திருந்து விலை உயரும் போது விற்பனை செய்ய முடியும்.

    அதேபோல எலுமிச்சை ஜூஸ் என்று ரசாயனம் கலந்த பானங்களை விற்கும் கடைகாரர்கள் நேரடியாக எலுமிச்சை பழங்களை கொள்முதல் செய்து தரமான ஜூஸ்களை விற்பனை செய்தால் மக்களுக்கும் பாதிப்பு இல்லை. விவசாயிகளுக்கும் எலுமிச்சை பழங்களின் விலை உயர வாய்ப்புகள் உள்ளது.“

    இவ்வாறு விவசாயிகள் கூறினர். 
    ×