search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pudukkottai jail"

    புதுக்கோட்டை சிறையில் இன்று 50க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #PudukkottaiJail
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட சிறை மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் உள்ளனர். இந்தநிலையில் சிறையில் சட்டவிரோதமாக போதை பொருட்கள், செல்போன் மற்றும் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் புதுக்கோட்டை டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் மாவட்ட கிளை மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

    புதுக்கோட்டை மாவட்ட சிறையில் உள்ள 50க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகளிடமும், சீர்திருத்த பள்ளியில் உள்ள 25க்கும் மேற்பட்ட தண்டனை மட்டும் விசாரணைக்கு உட்பட்ட கைதிகளிடமும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    கைதிகளின் ஒவ்வொரு அறையாக சென்று செல்போன் , போதைப் பொருள் ,ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா? என்று அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கைதிகளின் அறைக்குள் இருந்து கட்டுக்கட்டாக பீடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. செல்போன், போதை பொருட்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட எந்தவித பொருளும் சிக்கவில்லை. இருப்பினும் அவ்வப்போது சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். புதுக்கோட்டை சிறையில் போலீசார் இன்று நடத்திய திடீர் சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.

    புதுக்கோட்டை சிறையில் கைது ஒருவருர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாகவும் சிறையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் ஏராளமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்குள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிகளில், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட சிறுவர்களும் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் சிறையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் இருப்பதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. சமீபத்தில் கைதி ஒருவரும் தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவங்களை தொடர்ந்து இன்று புதுக்கோட்டை டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் சிறையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கைதிகள் அறை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் கைதிகள் யாரேனும் போதை பொருட்கள் மற்றும் செல்போன் பயன்படுத்துகிறார்களா? எனவும் அதிரடியாக ஆய்வு செய்யப்பட்டது. #tamilnews
    ×