என் மலர்
நீங்கள் தேடியது "Pudukottai student clash"
கந்தர்வக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே பெருங்களூரில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 17) பிளஸ்-2 படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த கோபால் மகன் ராஜா (16) பிளஸ்-1 படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை இருவரும் பள்ளி விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த ராஜா, தனது நண்பர் செல்வ மணி என்பவரை அழைத்து வந்து கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக தாக்கினார். இந்த தாக்குதலில் கிருஷ்ண மூர்த்தியின் கண்ணில் பலத்த காயம் ரத்தம் கொட்டியது. ஏற்பட்டது.
இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஆதனக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து , ராஜாவை கைது செய்தனர். தப்பியோடிய செல்வமணியை தேடி வருகின்றனர். #studentclash






