என் மலர்
புதுக்கோட்டை
நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் ஒரு வெட்டுக்கிளியை பார்த்து விவசாயிகள் அச்சப்பட்டனர். இதையறிந்த கீரமங்கலம் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் ஆய்வு செய்தார்.
கீரமங்கலம்:
வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்து சில மணி நேரங்களில் வயல்களில் உள்ள பயிர்களை நாசம் செய்தன. இந்நிலையில் நேற்று நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் ஒரு வெட்டுக்கிளியை பார்த்து விவசாயிகள் அச்சப்பட்டனர்.
இதையறிந்த கீரமங்கலம் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் பெரியசாமி உள்ளிட்ட அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அந்த பகுதியில் ஒரு வெட்டுக்கிளி மட்டுமே காணப்பட்டது. வேறு வெட்டுக்கிளிகள் காணப்படவில்லை. இதையடுத்து அதிகாரிகள் விவசாயிகளிடம், கீரமங்கலம் பகுதியில் வழக்கமாக காணப்படுகிற வெட்டுக்கிளி தான் நெடுவாசலில் காணப்பட்டது. இதனால் எந்த பாதிப்பும் வராது, என்றனர்.
புதுக்கோட்டையில் புதிய வகை பேரீச்சம் பழத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் சிவப்பு நிற பேரீச்சம் பழம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பழைய பஸ் நிலையம், பிருந்தாவன் முக்கம், கலெக்டர் அலுவலக ரவுண்டானா உள்பட பல இடங்களில் பேரீச்சம் பழ விற்பனை நடைபெறுகிறது. இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், சாதாரணமாக கடைகளில் கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் தான் பேரீச்சம் பழம் பார்த்திருக்கிறோம். அது பதப்படுத்தப்பட்ட பேரீச்சம் பழம் ஆகும். ஆனால் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் உள்ள பேரீச்சம் பழம் பதப்படுத்தப்படாதது ஆகும். இந்த பேரீச்சையில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை அதிகம் இருக்கின்றன. எனவே இது எலும்புகளுக்கு உறுதி ஏற்படுத்தும்.
இந்த சிவப்பு பேரீச்சை பெங்களூருவில் இருந்து வாங்கி வரப்பட்டு, இங்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பழம் ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது, என்றார். வித்தியாசமாக இருப்பதை பார்த்து இந்த பழத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
ரேஷன் கடையில் ரூ.11 ஆயிரம் பொருட்கள் கையாடல் செய்த விற்பனையாளர் தலைமறைவானார்.
திருவரங்குளம்:
புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டி ரேஷன் கடையில் குடிமைப்பொருள் வழங்கல் அலுவலர் பிரவீனா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த கடையில் இருப்பு இருந்த பொருட்களுக்கு உரிய கணக்கில் முறைகேடு இருந்ததை கண்டுபிடித்தார். மேலும் கொரோனா நிவா ரணமாக பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட ரேஷன் பொருட்கள் கையாடல் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதற்கிடையில் அந்த கடையின் விற்பனையாளரான பாலு கடந்த சில நாட்களுக்கு முன்பு பணிக்கு வராமல் சென்றது தெரியவந்தது.
ரேஷன் கடையில் ஆய்வு செய்ததில் அரிசி, பாமாயில், கோதுமை, சர்க்கரை, பருப்பு ஆகியவை மொத்தம் ரூ.11 ஆயிரத்து 25 மதிப்பில் இருப்பு குறைபாடு கண்டறியப் பட்டன.
இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் படி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் குடிமைப் பொருள் வழங்கல் அலுவலர் புகார் மனு அளித்துள்ளார். மேலும் துறைரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பட்டு உள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கலீப்நகரில் ஏற்கனவே கொரோனா பாதித்தவரின் குடும்பத்தில் 55 வயதுடைய பெண், 29 வயதுடைய பெண், 9 வயது, 6 வயது சிறுவர்கள் ஆகி யோருக்கு நேற்று தொற்று உறுதியானது. இதேபோல அதே பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண், 10 வயதான அவரது மகன் ஆகி யோருக்கு தொற்று ஏற்பட்டது. மேலும் விராலிமலையை சேர்ந்த 32 வயது பெண், விராலூரை சேர்ந்த 23 வயது இளம்பெண், மாத்தூரை சேர்ந்த 55 வயது ஆண், 50 வயதான அவரது மனைவி, அறந்தாங்கி அழியாநிலையை சேர்ந்த 23 வயது வாலிபர், வல்லத்திராகோட்டையில் 30 வயது வாலிபர், ஆவுடையார் கோவிலில் 44 வயதான ஆண் ஒருவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி யானது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக உள்ளதாக கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட பட்டியலில் கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையில் அரிமளம் ஒன்றியம் கடியாபட்டி, ராயவரம், அரிமளம், ஏம்பல், சமுத்திரபட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்னை மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த 44 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் யாருக்கும் தொற்று இல்லை. கடியாபட்டியில் கொரோனா பாதித்த பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கும், அரிமளம் ஒன்றியத்திற்கு சென்னையில் இருந்து வந்த 43 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையில் எகிப்து நாட்டில் இருந்து வந்த ஆலங்குடி பாச்சி கோட்டையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஆலங்குடியில் மாணவியர் விடுதியில் தங்க வைத்திருந்தனர். அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதேபோல சம்பட்டி விடுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கும், தவளை பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டையில் மாரடைப்பால் இறந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள கோல்டன் நகரை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் கடந்த 21-ந் தேதி அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவரது சளி மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மாரடைப்பால் அவர் இறந்தார். அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதையடுத்து அவரது உடலை நகராட்சி நிர்வாகத்தினர் தகுந்த பாதுகாப்போடு அடக்கம் செய்தனர். மேலும் அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கொரோனா தொற்று உறுதியின் காரணமாக அவரது குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு சளி, ரத்தம் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலியாகி இருந்தார். கொரோனா பாதித்த 54 வயதுடைய நபர் ராணியார் அரசு மருத்துவமனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கோல்டன் நகர் முதியவர் கொரோனா பாதிப்பால் இறக்கவில்லை எனவும், மாரடைப்பால் இறந்ததாகவும் மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவித்தனர். கொரோனா பாதித்தவர்களின் பட்டியல் நேற்று வெளியானதில் திருமயத்தை சேர்ந்த 63 வயதுடைய முதியவர் ஒருவருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. மேலும் 2 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.

ஆந்திராவில் இருந்து புதுக்கோட்டைக்கு காரில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தி வரப்பட்டது எப்படி? என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை:
திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு காரில் நேற்று முன்தினம் ஹெராயின் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை திலகர் திடல் அருகே சந்தேகப்படும் படி நின்ற ஒரு காரின் அருகே நின்றவரை இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன் தலைமையிலான போலீசார் பிடித்து விசாரித்தபோது, காரில் கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து காரில் இருந்து 19 பண்டல் கஞ்சாவையும், அவரிடம் இருந்து ரூ.90 ஆயிரத்தையும் கைப்பற்றி, சிவகங்கை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் இன்ஸ்பெக்டர் ஹேமலதா விசாரணை நடத்திய போது, அவர் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை சேர்ந்த காஜா மைதீனின் மகன் நைனா முகமது (வயது 23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, கஞ்சாவையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைதானவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீசார் கூறுகையில், “கைதான நபர் டிரைவர் வேலை மட்டும் செய்து வருகிறார். கஞ்சாவை வாங்கி ஒரு இடத்தில் கொண்டு சேர்ப்பது மட்டும் தான் அவரது வேலை. அவருக்கு குறிப்பிட்ட அளவு தொகையை மட்டும் கொடுக்க கஞ்சா கடத்தல் கும்பல் சம்மதித்துள்ளது. அதன்படி ஆந்திராவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி கொண்டு காரில் நைனா முகமது கடந்த 2 நாட்களுக்கு முன்பு புறப்பட்டுள்ளார். சென்னை, திருச்சி வழியாக புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை பகுதிக்கு சென்று அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தி கொண்டு செல்வதுதான் அவர்களது திட்டம்.
திருச்சியை தாண்டி கார் வந்தபோது எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை புதுக்கோட்டை போலீசாருக்கு தெரிவித்தோம். இந்த வழக்கில் மேலும் 4 பேருக்கு தொடர்பு உள்ளது. அவர்களை பிடிக்க அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். போலீசார் வாகன சோதனையின் போது சந்தேகப்படும்படி மேலும் ஒருவரை பிடித்திருந்தனர். அவருக்கும், இந்த வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை. அவர் கர்ப்பிணி மனைவியை ஆஸ்பத்திரியில் விடுவதற்கு வந்தது தெரியவந்தது. அவர் கைது செய்யப்படவில்லை” என்றனர்.
விசாரணையில் தெரியவந்த தகவலை, கைதான நைனா முகமது வாக்குமூலமாக கொடுத்துள்ளதாக போலீசார் கூறினர். அட்டைப்பெட்டிகளின் மேல் பகுதியில் பெயிண்ட் நிறுவனத்தின் பெயர், உணவு பொருட்களின் பெயர் கொண்டதாக இருந்தது. அதன் உள்ளே கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து நூதன முறையில் எடுத்து வந்துள்ளார். ஊரடங்கு காலத்தில் தீவிர வாகன சோதனை உள்ள நிலையில் ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சா கடத்தி வந்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் எடை மொத்தம் 144 கிலோ எனவும், அதன் மதிப்பு ரூ.1 கோடியே 4 லட்சத்து 40 ஆயிரம் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் கைதானவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

ஆவூர் அருகே நண்பர்களுடன் கிணற்றில் குதித்து குளித்த கல்லூரி மாணவர் கழுத்தில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.
ஆவூர்:
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, கீழபச்சகுடி கிராமத்தை சேர்ந்தவர் சாலமன். விவசாயி. இவருடைய மகன் சாரோன் (வயது 19). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் தற்போது கொரோனா பரவலை தடுக்க கல்லூரி மூடப்பட்டு உள்ளதால் வீட்டில் இருந்து வந்த சாரோன், பக்கத்து கிராமமான மதயானைபட்டியில் உள்ள ஒரு கிணற்றில் தனது நண்பர்களுடன் அவ்வப்போது வந்து குளித்துவிட்டு செல்வது வழக்கம்.
அதேபோல் நேற்று மதியம் தனது நண்பர்களுடன் அந்த கிணற்றுக்கு சாரோன் குளிக்க சென்றார். சுமார் 40 அடிக்கு கீழே தண்ணீர் உள்ள அந்த கிணற்றில் முதலில் சாரோன் குதித்துள்ளார். பின்னர் அவரது நண்பர்கள் ஒவ்வொருவராக குதித்தபோது, எதிர்பாராதவிதமாக ஒருவர் சாரோனின் கழுத்தில் குதித்ததாக கூறப்படுகிறது. இதனால் கழுத்தில் அடிபட்டு மயங்கிய அவர் தண்ணீரில் மூழ்கினார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், கிணற்றில் இருந்து மேலே வந்து அருகில் இருந்தவர்களிடம் இது குறித்து தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி சாரோனை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் சாரோன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே 88 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 64,603 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 35,339 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 833-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 44,205 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே 88 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

கறம்பக்குடி அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி:
கறம்பக்குடி அருகே உள்ள துவார் கெண்டையன்பட்டி பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் மனநலம் பாதித்த நிலையில் சுற்றித்திரிந்தார். நேற்று காலை புளியமரம் பஸ் நிறுத்தம் அருகே அவர் நடந்து சென்றபோது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து மழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிமாவட்டங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கலெக்டர் உமாமகேஸ்வரி கூறினார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கி பேசினார். கூட்டத்திற்கு பின் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-
வெளிமாவட்டங்களில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருபவர்களை 13 இடங்களில் சோதனை சாவடிகளில் அமைத்து, சோதனை மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை 8,800 பேருக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தொற்று உறுதியானவர்கள் ராணியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொற்று இல்லாதவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 86 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 38 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக 1,200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 34 வெண்டிலேட்டர்களும் தயாராக உள்ளது. மாவட்டத்தில் கடைகள் திறப்பு நேரத்தில் சங்கத்தினர் முடிவு செய்து அறிவிப்பதில் மக்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. எனவே கடை திறப்பு நேரத்தில் மாற்றம் செய்தால் மாவட்ட நிர்வாகத்திற்கு வணிகர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். அரசின் விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும். இ-பாஸ் இல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.
வெளியூர், வெளிமாவட்டத்தில் இருந்து மாவட்டத்திற்குள் வருபவர்களை கண்காணிக்க கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தை தொடர்ந்து, இ-பாஸ் பிரிவில் அனுமதி அளிக்கப்படும் நபர்களின் ஆவணங்கள் முறையாக உள்ளதா? என்பதை கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணியன் மற்றும் வர்த்தக சங்க தலைவர்கள் சாகுல் ஹமீது, சீனு சின்னப்பா, நகைக்கடைகள் சங்க தலைவர் வி.இ.எஸ். வெங்கடாச்சலம், நிர்வாகி நடராஜன் உள்பட வணிகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 19 கஞ்சா பண்டல்கள், ரூ.90 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்து, சிக்கிய ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
திருச்சியில் இருந்து ஒரு காரில் ஹெராயின் கடத்திச்செல்லப்படுவதாகவும், அந்த காரின் பதிவெண் மற்றும் மாடல் குறித்தும் புதுக்கோட்டை போலீசாருக்கு நேற்று மதியம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட எல்லையான மாத்தூர் பகுதியில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் புதுக்கோட்டை நகர உட்கோட்ட பகுதியில் டவுன், கணேஷ்நகர் மற்றும் திருக்கோகர்ணம் போலீசார், அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் புதுக்கோட்டை டவுன் பகுதியில் திலகர் திடல் அருகே ஒரு மண்டபத்தின் முன்பு மரத்தடியில் சந்தேகப்படும்படி ஒரு கார் நின்றது. அந்த காரின் பதிவெண் பலகை சற்று தொங்கியபடி காணப்பட்டது. அதன் அருகே சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதை கவனித்த போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த நபரை பிடித்து, காரை சோதனையிட்டனர். அப்போது அந்த காரில் ‘சீல்’ வைக்கப்பட்ட பண்டல்கள் இருந்தன. இது பற்றி அந்த நபரிடம், போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், காரில் கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மேலும் அவரிடம் கத்தை, கத்தையாக பணம் இருந்தது. இதையடுத்து காரில் இருந்த கஞ்சா பண்டல்களையும், அவரிடம் இருந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்து, திருச்சி போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்து, வரவழைத்தனர். அவர்களிடம் பிடிபட்ட கார், கஞ்சா பண்டல்கள், பணம் மற்றும் அந்த நபரை ஒப்படைத்தனர். அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பண்டல்கள் மொத்தம் 19 எண்ணிக்கையில் இருந்ததாகவும், அந்த நபரிடம் இருந்து மொத்தம் ரூ.90 ஆயிரம் கைப்பற்றப்பட்டதாகவும், ஒரு பண்டலில் சுமார் 10 கிலோ முதல் 15 கிலோ வரை கஞ்சா இருப்பது விசாரணையில் தெரியவந்ததாகவும், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் புதுக்கோட்டை போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே மேலும் 2 கார்களில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாகவும், அந்த கார்களை பிடிக்கும்படியும் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார், புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த கார்களை பிடிக்கும் பணியில் நேற்று இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரிடம் சிக்கிய நபர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா குறித்து போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரிடம் கேட்டபோது, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக மட்டும் தெரிவித்தனர்.

சென்னையில் இருந்து வந்ததாக கூறியதால் ஏற்பட்ட தகராறில் வீட்டை சேதப்படுத்திய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.
அரிமளம்:
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் ஏம்பல் அருகே உள்ள தொன்னங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா(வயது 37). இவர் பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு அவர் வந்தார்.
இந்நிலையில் அவர் சென்னையில் இருந்து வந்ததாக தொன்னங்குடி கிராமத்தை சேர்ந்த துரைமாணிக்கம் என்பவர் வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கருப்பையா, துரைமாணிக்கத்திடம், ஏன் வீண் வதந்தி பரப்புகிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த துரைமாணிக்கத்தின் மைத்துனர் முத்துக்குமார், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து வந்து கருப்பையா வீட்டை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இதில் கருப்பையா வீடு முற்றிலும் சேதம் அடைந்தது.
இச்சம்பவம் தொடர்பாக கருப்பையாவின் மனைவி ரோகிணி கொடுத்த புகாரின்பேரில் ஏம்பல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்(29), பாண்டிதுரை(47), ராமநாதன்(40), மற்றொரு ராமநாதன்(35), ஜீவா(32) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய துரைமாணிக்கம், முத்துகுமார், குணசேகரன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.