என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
வெளிமாவட்டங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வருபவர்கள் மீது வழக்குப்பதிவு- கலெக்டர் பேட்டி
வெளிமாவட்டங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கலெக்டர் உமாமகேஸ்வரி கூறினார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கி பேசினார். கூட்டத்திற்கு பின் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-
வெளிமாவட்டங்களில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருபவர்களை 13 இடங்களில் சோதனை சாவடிகளில் அமைத்து, சோதனை மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை 8,800 பேருக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தொற்று உறுதியானவர்கள் ராணியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொற்று இல்லாதவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 86 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 38 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக 1,200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 34 வெண்டிலேட்டர்களும் தயாராக உள்ளது. மாவட்டத்தில் கடைகள் திறப்பு நேரத்தில் சங்கத்தினர் முடிவு செய்து அறிவிப்பதில் மக்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. எனவே கடை திறப்பு நேரத்தில் மாற்றம் செய்தால் மாவட்ட நிர்வாகத்திற்கு வணிகர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். அரசின் விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும். இ-பாஸ் இல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.
வெளியூர், வெளிமாவட்டத்தில் இருந்து மாவட்டத்திற்குள் வருபவர்களை கண்காணிக்க கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தை தொடர்ந்து, இ-பாஸ் பிரிவில் அனுமதி அளிக்கப்படும் நபர்களின் ஆவணங்கள் முறையாக உள்ளதா? என்பதை கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணியன் மற்றும் வர்த்தக சங்க தலைவர்கள் சாகுல் ஹமீது, சீனு சின்னப்பா, நகைக்கடைகள் சங்க தலைவர் வி.இ.எஸ். வெங்கடாச்சலம், நிர்வாகி நடராஜன் உள்பட வணிகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Next Story