என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில் மாயமான 7 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

    நேற்று வீட்டில் இருந்து காணாமல் போன சிறுமியின் உடல்  இன்று அருகில் உள்ள  வறண்டு போன ஊரணியில் இருந்து சடலமாக  கண்டெடுக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி 29 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்ந்துள்ளது.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே 174 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 29 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 203 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 55 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். 
    புதுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவில் தரமில்லை என்று கலெக்டருக்கு புகார் வந்ததால் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைக்கான வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோயாளிகளை குணப்படுத்துவதில் உணவும் ஒரு சிகிச்சை முறையாகவே உள்ளது. இதற்காக பிரத்யேகமாக அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய வகையில் உணவுகளோடு, பாரம்பரிய முறையிலான இயற்கை வகையான உணவுகளும் அளிக்கப்படுகின்றன. சைவம் மற்றும் அசைவம் என 2 வகையிலும் உணவுகள் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.

    இந்த நிலையில் ராணியார் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமில்லை என்று கலெக்டருக்கு புகார் வந்தது. இதையடுத்து கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவின் பேரில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி தலைமையில் தாசில்தார் முருகப்பன் மற்றும் அதிகாரிகள் நேற்று மதியம் ராணியார் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொரோனா நோயாளிகளுக்கு வினியோகிக்கப்பட்ட ஓட்டலில் இருந்து கொண்டு வரப்பட்ட முட்டையுடன் கூடிய புதினா சாதத்தை அதிகாரிகள் எடுத்து சாப்பிட்டு பார்த்தனர்.

    இந்த ஆய்வு குறித்து அதிகாரிகள் கூறுகையில், “கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் சில ஒப்பந்த அடிப்படையில் ஓட்டல்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. உணவின் தரத்தை ஆய்வு மேற்கொண்ட போது அதில் குறை எதுவும் இல்லை. உணவு தரமாகத்தான் உள்ளது. இது குறித்து கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது” என்றனர். கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமில்லை என புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    கொரோனா ஊரடங்கால் மண்பாண்ட வியாபாரம் முடங்கியதால் தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.
    ஆதனக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பெரம்பூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண் பாண்டம் செய்யும் தொழிலை குலத்தொழிலாக செய்து வருகின்றனர். இவர்கள் குளத்தில் இருந்து ரூ.3 ஆயிரம் செலவில் லாரியில் மண் கொண்டு வந்து, அவற்றை மண்பாண்டம் செய்வதற்கு ஏற்றவாறு கொண்டு வந்து, சிறிய மின் மோட்டார் மூலம் செய்யப்பட்டுள்ள திருவையில் வைத்து அவர்களுக்கு தேவைப்படும் வடிவங்களுக்கு ஏற்றவாறு மண்பாண்டங்கள் செய்கின்றனர்.

    இதில் அகல்விளக்கு, சட்டிகள், 5 முக விளக்குகள், கோபுர விளக்குகள், டம்ளர், ஜாடி, கலையம், உண்டியல், பணியாரசட்டி, பல்வேறு வடிவங்களில் குழம்பு சட்டிகள், மூடிகள் சிறிய மண் குடம் முதல் 20 லிட்டர் பிடிக்கும் அளவிற்கான பானை வரை அனைத்து வகையான மண்பாண்டங்களை செய்து விற்பனை செய்து வருகின்றனர். இப்பகுதிக்கு காரைக்குடி, அறந்தாங்கி, திருச்சி, கும்பகோணம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து, முன்பணம் கொடுத்து மண்பாண்டங்கள் செய்யச்சொல்லி வாங்கிச் செல்வதுண்டு. பெரம்பூர் வீரமாகாளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் பல்வேறு வகையான மண்பாண்டங்களை வாங்கி செல்வார்கள். சமீபகாலமாக பொதுமக்களிடம் மண்பாண்டங்களின் பயன்பாடு அதிகரித்த நிலையில் மண்பாண்டங்கள் செய்யும் தொழில் மூலம் அவர்களுக்கு அதிக வருவாய் கிடைத்து வந்தது.

    இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு பாதிப்பால் மண்பாண்ட வியாபாரம் முடங்கிப்போனது. முன்பு ஒரு குடும்பத்திற்கு மாதத்திற்கு ரூ.30 ஆயிரம் வரை வருமானம் கிடைத்த இத்தொழிலில் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் வராத நிலையில், மண்பாண்ட தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். இந்த 50 குடும்பங்களுக்கும், தமிழக அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கிய ரூ.2 ஆயிரம், மண்பாண்ட தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக இருந்தும் கூட கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறினர்.

    மேலும் தண்ணீர் பற்றாக்குறையால் இந்த தொழிலை தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மின்மோட்டாருடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைத்து, அதன் மூலம் தண்ணீர் எடுத்து மண்பாண்ட தொழிலை செய்வதற்கு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடனுதவி அளிக்க மாவட்ட நிர்வாகம் வங்கிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். மேலும் தொழிலாளர் நலவாரியத்தில் இருந்து ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கொரோனா ஊரடங்கால் மண்பாண்ட வியாபாரம் முடங்கியதால் தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.
    ஆதனக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பெரம்பூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண்பாண்டம் செய்யும் தொழிலை குலத்தொழிலாக செய்து வருகின்றனர். இவர்கள் குளத்தில் இருந்து ரூ.3 ஆயிரம் செலவில் லாரியில் மண் கொண்டு வந்து, அவற்றை மண்பாண்டம் செய்வதற்கு ஏற்றவாறு கொண்டு வந்து, சிறிய மின் மோட்டார் மூலம் செய்யப்பட்டுள்ள திருவையில் வைத்து அவர்களுக்கு தேவைப்படும் வடிவங்களுக்கு ஏற்றவாறு மண்பாண்டங்கள் செய்கின்றனர்.

    இதில் அகல்விளக்கு, சட்டிகள், 5 முக விளக்குகள், கோபுர விளக்குகள், டம்ளர், ஜாடி, கலையம், உண்டியல், பணியாரசட்டி, பல்வேறு வடிவங்களில் குழம்பு சட்டிகள், மூடிகள் சிறிய மண் குடம் முதல் 20 லிட்டர் பிடிக்கும் அளவிற்கான பானை வரை அனைத்து வகையான மண்பாண்டங்களை செய்து விற்பனை செய்து வருகின்றனர். இப்பகுதிக்கு காரைக்குடி, அறந்தாங்கி, திருச்சி, கும்பகோணம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து, முன்பணம் கொடுத்து மண்பாண்டங்கள் செய்யச்சொல்லி வாங்கிச் செல்வதுண்டு. பெரம்பூர் வீரமாகாளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் பல்வேறு வகையான மண்பாண்டங்களை வாங்கி செல்வார்கள். சமீபகாலமாக பொதுமக்களிடம் மண்பாண்டங்களின் பயன்பாடு அதிகரித்த நிலையில் மண்பாண்டங்கள் செய்யும் தொழில் மூலம் அவர்களுக்கு அதிக வருவாய் கிடைத்து வந்தது.

    இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு பாதிப்பால் மண்பாண்ட வியாபாரம் முடங்கிப்போனது. முன்பு ஒரு குடும்பத்திற்கு மாதத்திற்கு ரூ.30 ஆயிரம் வரை வருமானம் கிடைத்த இத்தொழிலில் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் வராத நிலையில், மண்பாண்ட தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். இந்த 50 குடும்பங்களுக்கும், தமிழக அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கிய ரூ.2 ஆயிரம், மண்பாண்ட தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக இருந்தும் கூட கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறினர்.

    மேலும் தண்ணீர் பற்றாக்குறையால் இந்த தொழிலை தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மின்மோட்டாருடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைத்து, அதன் மூலம் தண்ணீர் எடுத்து மண்பாண்ட தொழிலை செய்வதற்கு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடனுதவி அளிக்க மாவட்ட நிர்வாகம் வங்கிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். மேலும் தொழிலாளர் நலவாரியத்தில் இருந்து ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஆலங்குடி அருகே முயல் வேட்டையாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா பள்ளத்துவிடுதி கிராமத்தில் வனப்பகுதியில் சிலர் முயல் வேட்டையில் ஈடுபடுவதாக ஆலங்குடி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் பள்ளத்திவிடுதி வனப்பகுதிக்கு சென்றனர். அங்கு 6 பேர் கும்பல் முயல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அந்த கும்பலை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள் கொத்தமங்கலம் சிதம்பர விடுதி பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் வீரமணி (வயது 27), பரமேஸ்வரன் (18), திருமுருகன் (19), உத்தம நாதன் (36), புகழேந்தி (24) உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த முயல் பிடிக்கும் வலை, சக்திவாய்ந்த பேட்டரிலைட் ஆகியவற்றை கைப்பற்றி திருவரங்குளம் வனச்சரகர் சபீர் அகமதுவிடம் ஆலங்குடி போலீசார் ஒப்படைத்தனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் மது பழக்கத்தை கண்டித்தும் திருந்தாததால் மகனை அடித்துக்கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் மேல்நிலைவயல் இந்திரா காலனியை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (வயது 54). இவருடைய மனைவி இந்திராகாந்தி. இவர்களுக்கு உதயகுமார் (28), அருண்குமார் (26) என 2 மகன்கள். இதில் மூத்த மகன் உதயகுமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். அருண்குமார் தாய், தந்தையுடன் வசித்து வந்தார். டிரைவரான இவர், கிடைக்கும் பணத்தில் மதுகுடித்து விட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் அருண்குமாரை அவரது தந்தை கண்டித்தார். மது பழக்கத்தை கைவிடாததால் மகனுக்கும், தந்தைக்கும், தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர்.

    பகலில் இருவரையும் அக்கம், பக்கத்தினர் பார்த்து உள்ளனர். மாலைநேரம் ஆனதால் பசியால் வீட்டில் இருந்த மாடுகள் சத்தம்போட்டன. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் வீட்டு கதவை தட்டி உள்ளனர். ஆனால் கதவு திறக்கவில்லை. கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது பாலச்சந்திரன் தூக்கில் தொங்கியபடியும், அருண்குமார் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சம்பவத்தன்று தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மகன் அருண்குமாரை கட்டையால் அடித்து கொன்று விட்டு, செய்வதறியாமல் பாலச்சந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீரமங்கலம் பகுதியில் மிக குறைந்த விலைக்கு காய்கறிகள் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    கீரமங்கலம்:

    கீரமங்கலம், கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு, அணவயல், புள்ளான்விடுதி, நெடுவாசல், குளமங்கலம், பனங்குளம், நெய்வத்தளி, மேற்பனைக்காடு, செரியலூர் உள்ளிட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராமங்களில் காய், கனி, கிழங்கு, மலர்கள் என அனைத்து விவசாயமும் செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது கத்தரிக்காய், வெண்டைக்காய், பைத்தங்காய், புடலை உள்ளிட்ட காய்கறிகள் உற்பத்தி அதிகமாக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகள் மட்டுமின்றி மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி போன்ற பகுதிகளுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த நிலையில் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு உள்ளிட்ட பல பகுதிகளில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக மதியம் 2 மணியுடன் அனைத்து கடைகளும் மூடப்பட்டு வருகிறது. மேலும் தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு வாகனங்கள் செல்வதும் தடுக்கப்படுகிறது. இது போன்ற காரணங்களால், கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ காய்கறிகளை ரூ.15 முதல் ரூ.20 வரை விவசாயிகளிடம் கொள்முதல் செய்த வியாபாரிகள் தற்போது ரூ.5-க்கு கொள்முதல் செய்கின்றனர். பல கமிஷன் கடைகளில் காய்கறிகள் வேண்டாம் என்று திருப்பி அனுப்பும் நிலையும் உள்ளது. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
    போலீஸ் நிலையம் முன் தீக்குளித்த பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்.என்.புரம் காந்தி நகரை சேர்ந்தவர் பாண்டி என்ற ராஜேந்திரன். இவர் திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். இவரது மனைவி செல்வி(வயது 40). இவர்களுக்கு திவாகர் என்ற மகனும், ஜோதிகா, ராதிகா என்ற மகள்களும் உள்ளனர்.

    கடந்த ஆண்டு ஒரு திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவராக அறந்தாங்கியை சேர்ந்த விஜய் என்பவரை அறந்தாங்கி போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், திருட்டு நகைகளை செல்வியிடம் கொடுத்து விற்பனை செய்ய சொன்னதாக போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் எல்.என்.புரத்திற்கு சென்று செல்வியிடம், விஜய் கொடுத்த திருட்டு நகைகள் அனைத்தையும் கொடுக்குமாறு கேட்டுள்ளனர். இதையடுத்து அவர் நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் போலீசார், செல்வியிடம் மேலும் திருட்டு நகை இருந்தால், அதையும் கொடுக்க வேண்டும் என்றும், மறுநாள் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வரவேண்டும் என்றும் கூறி விட்டு சென்றுள்ளனர். விசாரணைக்கு வருமாறு போலீசார் கூறுகிறார்களே என்று செல்வி அச்சமடைந்ததாக தெரிகிறது. இதையடுத்து கடந்த 7-ந் தேதி காலை அறந்தாங்கி போலீஸ் நிலையத்தின் முன் வந்த செல்வி, தான் கொண்டு வந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டு போலீஸ் நிலையத்துக்குள் ஓட முயன்றார். அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தி, உடலில் எரிந்த தீயை அணைத்து சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இலுப்பூர் பகுதியை சேர்ந்த சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தில் காதலனை கைது செய்தனர்.
    அன்னவாசல்:

    இலுப்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை எரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் முரளிசங்கர் இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் காதல் தோல்வி காரணமாக அவர் தற்கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அவரது வீட்டில் இருந்து கடிதம் மற்றும் புகைப்படங்கள், செல்போனில் வாட்ஸ்-அப் உரையாடல் உள்ளிட்ட ஆதாரங்கள் கிடைத்தன. இதன் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த தங்கத்தின் மகனான கார்த்திகேயன், அவரது அண்ணன் விக்னேஷ், தாய் செல்வி ஆகிய 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அந்த மாணவியை கார்த்திகேயன் திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலித்து வந்ததும், இவர்களது காதலுக்கு கார்த்திகேயனின் அண்ணன், தாய் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரியவந்தது. இதையடுத்து கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது அண்ணன் மற்றும் தாயை தேடி வருகின்றனர்.
    புதுக்கோட்டையில் கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). ஆட்டோ டிரைவரான இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவர் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் நேற்று முன்தினம் இரவு ஆட்டோவை நிறுத்தியிருந்தார். இந்த நிலையில் அந்த ஆட்டோ நிறுத்தம் அருகே உள்ள ஒரு ஜூஸ் கடை முன்பு சுப்பிரமணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நேற்று காலை தகவல் அறிந்த டவுன் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஆட்டோ டிரைவர் சுப்பிரமணிக்கு கடன் தொல்லை அதிகம் இருந்ததும், தற்போது போதுமான வருமானம் இல்லாததால் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்ததும் தெரியவந்தது. இதனால் அவர் தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே சக ஆட்டோ டிரைவர்கள் டவுன் போலீஸ் நிலையம் முன்பு நேற்று காலை திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
    திருமயம் கிளைச்சிறையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கைதிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு, அவர்களுக்கு முக கவசம் அணிவதற்கும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்திடவும் அறிவுரை வழங்கப்பட்டது.
    திருமயம்:

    திருமயம் கிளைச்சிறையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கைதிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு, அவர்களுக்கு முககவசம் அணிவதற்கும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்திடவும் அறிவுரை வழங்கப்பட்டது.

    மேலும் சீன ராணுவ தாக்குதலில் உயிரிழந்த 20 இந்திய ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் திருமயம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ரமேஷ், சித்த மருத்துவ அலுவலர் பிரியதர்ஷினி, திருமயம் கிளைச்சிறை கண்காணிப்பாளர் பழனிவேலு மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    ×