என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    தறிகெட்டு ஓடிய டிரெய்லர் லாரி வீட்டிற்குள் புகுந்ததில் டிரைவர் பலியானார். மேலும் குழந்தைகள் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.
    திருப்பத்தூர்:

    கிருஷ்ணகிரியில் இருந்து வேலூர் நோக்கி டிரெய்லர் லாரி சென்றது. வேலூர் விருதம்பட்டை சேர்ந்த துரைராஜ் (வயது 60) என்பவர் டிரெய்லர் லாரியை ஓட்டினார். அவருடன் வேலூரை சேர்ந்த மற்றொரு டிரைவர் வெங்கடேசன் (45) உடன் சென்றார்.

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள சின்னகொம்மேஸ்வரம் பகுதி அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய டிரெய்லர் லாரி சாலையோரம் இருந்த வீட்டிற்குள் புகுந்தது.

    இந்தவிபத்தில் டிரைவர் துரைராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் டிரைவர் வெங்கடேசன், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அஸ்மிதா (13), யுகேஷ் (12), சஞ்சய் (6) உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் லாரியின் முன்பக்கத்தில் சிக்கியிருந்த லாரி டிரைவரின் உடலை நீண்ட நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
    புதுக்கோட்டை இலுப்பூர் பகுதியில் கார் ஓட்டுநரை தாக்கியதாக காவலர் ஸ்டாலின் விஜயகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை இலுப்பூர் பகுதியில் ஓட்டுநர் சதீஷ் காரை பின்னால் இயக்கியபோது காவலரின் இருசக்கர வாகனத்தில் மோதியது.

    இருசக்கர வாகனத்தில் கார் மோதியதை அடுத்து ஓட்டுநர் சதீஷை காவலர் தாக்கியதாக தெரிகிறது.

    இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து, காவலர் ஸ்டாலின் விஜயகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
    தொடர் விடுமுறையால் கறம்பக்குடி பகுதி கல்லூரி மாணவர்கள் விவசாய பணிகளில் ஆர்வம் காட்டுகின்றனர்.
    கறம்பக்குடி:

    கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அவை மீண்டும் எப்போது செயல்படும் என்பது தெரியாத நிலை உள்ளது. கல்லூரிகளில் இந்த ஆண்டிற்கான பருவதேர்வுகள் நடைபெறாத நிலையில், பல்கலைக்கழகங்கள் என்ன முடிவு எடுக்கப்போகின்றன என்று மாணவர்கள் குழப்பத்துடன் காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில் தொடர் விடுமுறையால் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வீட்டில் இருக்கும் கல்லூரி மாணவர்கள், விவசாய பணிகளில் ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர். சமீப காலமாக விவசாயம் குறித்தும், தமிழர்களின் பாரம்பரியம், கலாசார பெருமைகள் குறித்தும் சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் அதிகமாக விவாதிக்கப்படுகிறது. இது இளைய தலைமுறையினரிடம் விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.

    இதன் காரணமாக கறம்பக்குடி பகுதியில் விவசாய பணிகளில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். உழவு, நாற்று பறிப்பது, பூச்சி மருந்து தெளிப்பது, வரப்புகளை சீரமைப்பது என பல்வேறு பணிகளை மாணவர்கள் ஆர்வத்துடன் செய்து வருகின்றனர்.

    இதற்காக சமூக வலைத்தளங்களில் குழு உருவாக்கி, அவர்கள் அன்றாடம் செய்த விவசாய பணிகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த பதிவுகள் விவசாய குடும்பத்தை சாராத மாணவர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து கறம்பக்குடியில் வயலில் பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் ஒருவர் கூறுகையில், ‘நான் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. இயற்பியல் 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். கொரோனா ஊரடங்கால் இறுதி பருவ தேர்வு நடைபெறாமலேயே கல்லூரி மூடப்பட்டுவிட்டது. விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்றபோதும் முன்பெல்லாம் விவசாய வேலைகளில் ஈடுபட பெற்றோர்கள் அனுமதித்தது இல்லை. எங்கள் கஷ்டம் எங்களோடு போகட்டும், நீ நன்கு படித்து வேலைக்கு செல் என்று வலியுறுத்தி வந்தனர். ஆனால் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தில் நமது பங்களிப்பு இருக்க வேண்டும் என்றே நான் நினைத்தேன். இதனால் கடந்த 3 மாதமாக தினமும் விவசாய வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன். எனது ஆர்வத்திற்கு பெற்றோரும் உதவி செய்து வருகின்றனர். கறம்பக்குடி பகுதியில் ஏராளமான கல்லூரி மாணவர்கள், விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர், என்று கூறினார்.

    ஊரடங்கு காலத்தில் பொழுதை வீணாக்காமல் நாட்டின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் பணியில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். இது குறித்து கல்லூரி மாணவரின் தந்தை கூறுகையில், எங்கள் தலைமுறையோடு விவசாயம் நின்றுவிடும் என்று நினைத்தோம். ஆனால் எங்கள் பிள்ளைகள் காட்டும் ஆர்வம் எந்த நிலையிலும் விவசாயத்தை கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையை தந்துள்ளது, என்றனர்.
    ஆவூர் அருகே விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆவூர்:

    ஆவூர் அருகே உள்ள அருவங்கால்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் சரவணன் (வயது 29). இவர் நேற்று முன்தினம் இரவு ஆலங்குளத்தில் இருந்து நாலுரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். நாலுரோடு அருகே சென்றபோது எதிரே இலுப்பூர் தாலுகா பெரியகுரும்பப்பட்டியை சேர்ந்த ராசு மகன் கணேசன்(33) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது சரவணன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 2 பேரும் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அவர்களுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்னமராவதி அருகே ஆடு மேய்த்த சிறுமி கிணற்றில் தவறி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் கொப்பனாப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் கிராம உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் காயத்ரி (வயது 11). இவள் செவ்வூரில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு வடித்து வந்தாள். தற்போது கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை.

    இதனால் வீட்டில் இருந்த காயத்ரி, நேற்று தனது பாட்டியுடன் சென்று அருகில் உள்ள ஊரணி பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தாள். அப்போது தாகம் எடுத்ததால் காயத்ரி, அவளது தோழியுடன் அங்குள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்து குடிக்க சென்றாள். படிகளில் இறங்குவதற்காக கிணற்று தடுப்புச்சுவரில் ஏறியபோது நிலை தடுமாறி கிணற்றுக்குள் காயத்ரி விழுந்து தண்ணீரில் மூழ்கினாள். இதனால் அவளுடைய தோழி கூச்சலிட்டாள். இதையடுத்து அங்கு அப்பகுதியினர் திரண்டனர். மேலும் இது பற்றி பொன்னமராவதி தீயணைப்புத்துறை, போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் அங்கு வந்த நிலைய அலுவலர் (பொறுப்பு) யோகநாதன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், 10 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் இறங்கி தேடி தண்ணீருக்குள் இருந்து சிறுமியை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அங்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் மேரி, காயத்ரிக்கு முதலுதவி அளித்தார். பின்னர் கொப்பனாப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட காயத்ரிக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அங்கு சிகிச்சை பலனின்றி அவள் பரிதாபமாக இறந்தாள். இந்த சம்பவம் குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 287-ஆக உயர்ந்துள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று வரை 252 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 79 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 169 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 287-ஆக உயர்ந்துள்ளது. 
    கறம்பக்குடி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பரவலை தடுக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பரவலை தடுக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கறம்பக்குடி தாசில்தார் சேக் அப்துல்லா, பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் ஆகியோர் சுகாதார பணியாளர்களுடன் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் போன்றவை வீடு, வீடாக வழங்கப்பட்டு வருகிறது. முககவசம் இல்லாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, முககவசம் வழங்கப்படுகிறது. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கறம்பக்குடி பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்ட தொழில் அதிபர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய உறவினர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள வெள்ளாளவிடுதியை சேர்ந்தவர் தவமணி(வயது 50). இவருக்கு திருமணமாகி சந்திரா என்ற மனைவியும், ரோகினி, வினோதினி என்ற 2 மகள்களும், முருகேசன் என்ற மகனும் உள்ளனர்.

    தொழில் அதிபரான தவமணி, சென்னை மற்றும் தமிழக பகுதிகளில் உள்ள நகை கடைகள், பெரிய ஜவுளி நிறுவனங்களுக்கு உள் அலங்கார வேலைகளை ஒப்பந்த முறையில் செய்து வந்தார். இவருக்கு சென்னை, திருச்சி, கறம்பக்குடி ஆகிய ஊர்களில் சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்புகளும், வெள்ளாளவிடுதியில் விவசாய நிலங்களும் உள்ளன.

    இந்நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி இரவு தவமணி, வெள்ளாளவிடுதியில் உள்ள தனது விவசாய நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். ஆனால் மறுநாள் காலை வரை அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சந்திரா, விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தார்.

    அப்போது அங்கு தவமணியின் இருசக்கர வாகனம் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அந்த பகுதி முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரா பல இடங்களில் தேடியும் தவமணி கிடைக்கவில்லை. இதையடுத்து அவர், கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் தவமணியை காணவில்லை என்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவர் கடத்தப்பட்டது தெரியவந்தது.

    மேலும், தவமணியின் மனைவி சந்திராவுக்கு மர்ம நபர்கள் போன் செய்து, தவமணியை தாங்கள் கடத்தி வைத்திருப்பதாகவும், அவரை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.2 கோடி தர வேண்டும் என்றும், கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் உத்தரவின்பேரில், துணை சூப்பிரண்டு கோபால்சந்திரன் தலைமையில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தவமணியை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளாளவிடுதியை சேர்ந்த தவமணியின் உறவினர் அழகர் மகன் கமல் உள்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில், பணத்திற்காக தவமணியை கடத்தியதாகவும், ஆனால் எதிர்பார்த்தபடி பணம் கிடைக்காததால், சுமார் 12 நாட்களுக்கு முன்பு அவரை கொலை செய்து கல்லணை தோகூர் பகுதியில் உள்ள ஆற்றில் உடலை வீசியதும், தெரியவந்தது. இதையடுத்து கமல் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தவமணியின் உடல் வீசப்பட்ட ஆற்றுப்பகுதியில், உடலை தேடும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். கந்தர்வகோட்டை அருகே கடத்தப்பட்ட தொழில் அதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுக்கோட்டை கந்தர்வகோட்டை அருகே கடத்தப்பட்ட தொழிலதிபர் தவமணி கொலை செய்யப்பட்டுள்ளார்.
    புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்வகோட்டை வெள்ளாளவிடுதியை சேர்ந்தவர் தவமணி. இவர், சென்னையில் உள்ள பிரபல ஜவுளி மற்றும் நகைக்கடைகளுக்கு தச்சுவேலை செய்துவந்தார்.

    கடந்த ஜூன் 18-ம் தேதி தோட்டத்திற்கு சென்ற இவரை, மிளகாய் பொடிதூவி மர்ம கும்பல் கடத்தி சென்றது. அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில், அவர் கொலை செய்யப்பட்டு, கல்லணை அருகே தோகூரில் காவிரியாற்றில் வீசப்பட்டது தெரியவந்துள்ளது. சடலத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
    அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரிமளம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை நேற்றுமுன்தினம் இரவில் இருந்து காணவில்லை. இதுதொடர்பாக ஏம்பல் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்பேரில், சிறுமியை போலீசார் தேடிவந்தனர்.

    அந்த சிறுமி ஏம்பல் கிளவி தம்மம் குளத்திற்கு தண்ணீர் செல்லும் வரத்து வாரியில் நேற்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது. இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என பதிவிட்டுள்ளார்.
    புதுக்கோட்டையில் 7 வயது சிறுமியை கொடூரமான முறையில் கொலை செய்தது தொடர்பாக குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த 30-ந் தேதி இரவு முதல் காணவில்லை கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏம்பல் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்பேரில், சிறுமியை போலீசார் தேடி வந்தனர்.

    இந்தநிலையில் அந்த சிறுமி ஏம்பல் கிளவி தம்மம் குளத்திற்கு தண்ணீர் செல்லும் வரத்து வாரியில் நேற்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த ஏம்பல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமாரும் வந்து விசாரணை நடத்தினார். பின்னர், அந்த சிறுமியின் உடல், பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து மோப்ப நாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி ஒரு வீட்டுக்குள் படுத்து கொண்டது. இதனால், அந்த சிறுமியை அந்த வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கொடூரமாக கொலை செய்து இங்கு உடலை வீசி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் போலீசாரிடம் கூறுகையில், சிறுமியை ஒரு வாலிபர் கறம்பவயல் காளிகோவில் பக்கம் அழைத்து சென்றதாக தெரிவித்தனர். அதன்பேரில், அந்த வாலிபர் மற்றும் இன்னொரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தினர். 

    இதில் ஏம்பல் கிராமத்தை சேர்ந்த பூக்கடை வியாபாரியான ராஜாவை போலீசார் கைது செய்தனர்.
    ஆவூர் அருகே பொதுப்பாதையை ஆக்கிரமிப்பு தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஆவூர்:

    ஆவூர் அருகே உள்ள வடக்கு சோழியக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 45). இவரது வீட்டின் அருகே குடியிருப்பவர் ராசு(50). இவர்களது வீட்டின் நடுவே பொதுப்பாதை செல்கிறது. இந்த பாதையை இருவரும் தனக்கு மட்டும்தான் சொந்தமானது என்று கூறி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதேபோல் நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது பால்ராஜூக்கு ஆதரவாக அதே ஊரை சேர்ந்த முருகனும்(48), ராசுவிற்கு ஆதரவாக அதே ஊரை சேர்ந்த சரவணன்(35), சங்கிலி(37) ஆகியோரும் சேர்ந்து ஒருவரையொருவர் கட்டை போன்றவற்றால் தாக்கிக்கொண்டனர்.

    இதில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இருதரப்பினரும் மாத்தூர் போலீஸ் நிலையத்தில் தனித்தனியே அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜ், செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பொதுப்பாதையை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதோடு தகராறில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட இருதரப்பையும் சேர்ந்த பால்ராஜ், முருகன், ராசு, சரவணன், சங்கிலி ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நேற்று கீரனூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
    ×