என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் முககவசம் அணியாத 9,360 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முககவசம் அணிவது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முககவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.100 அபராதமாக வசூலிக்கப்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்ட 6 குழுவினர், முககவசம் அணியாமல் நடந்து சென்றவர்கள், இருசக்கர வாகனத்தில் சென்றவர்களுக்கு அபராதம் விதித்தனர். அதன்படி கடந்த திங்கட்கிழமையில் இருந்து இதுவரை 9,360 பேரிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.

அன்னவாசல் அருகே குளிக்கச்சென்ற தந்தையும், மகனும் மலையடி குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
அன்னவாசல்:
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது(வயது 40). இவர் அன்னவாசலில் சம்சா கடை நடத்தி வந்தார். இவரது மகன் முகமதுசாலிக்(9). இவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று மாலை சாகுல்ஹமீது, முகமதுசாலிக்குடன் சித்தன்னவாசல் அருகே உள்ள பணங்குடி மலையடியில் உள்ள குளத்துக்கு குளிக்க சென்றனர்.அங்கு அவர்கள் துணிகளை துவைத்து கரையில் வைத்துவிட்டு, மலையடி குளத்தில் குளிக்க இறங்கினர். அப்போது அவர்கள் தண்ணீரில் மூழ்கினர். இந்நிலையில் வெகுநேரம் ஆகியும் அவர்கள் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் பணங்குடி மலையடி குளத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு துணிகள், வாளி, செருப்பு உள்ளிட்டவை மட்டுமே இருந்தன. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் மலையடியை சுற்றி பார்த்தும், அவர்கள் கிடைக்கவில்லை.
பின்னர் சாகுல்ஹமீதின் உடல் மட்டும் தண்ணீரில் மிதந்தது. இதைக்கண்ட உறவினர்கள் அன்னவாசல் போலீசாருக்கும், சிப்காட் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதில் குளிக்க சென்ற சாகுல்ஹமீதும், முகமது சாலிக்கும் குளத்தில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரில் இறங்கி சாகுல்ஹமீதின் உடலை மீட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு அன்னவாசல் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் முகமது சாலிக்கின் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இன்று(வெள்ளிக்கிழமை) காலை மீண்டும் மீட்பு பணியில் ஈடுபட உள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். குளத்தில் மூழ்கி தந்தை-மகன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த மலையடி குளத்தில் பலர் இறந்துள்ளதால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக கம்பி வேலி அமைத்து மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 40 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 535-ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று வரை 495 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 206 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 281 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 40 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 535-ஆக உயர்ந்துள்ளது.

புதுக்கோட்டையில் கொரோனா தொற்றுக்கு 2 பேர் பலியாகினர்.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதன் பாதிப்பு குறைவாக இருந்தது. 2, 3 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு இருந்து வந்தநிலையில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 முதல் 50 ஆக அதிகரித்து உள்ளது. அதன்பிறகு வெளிநாட்டினர், வெளிமாநிலத்தினர் மற்றும் சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 418 ஆக இருந்தது.
இந்தநிலையில், மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு மற்றும் நேற்று காலை என 2 பேர் கொரோனாவிற்கு அடுத்தடுத்து பலியாகினர். புதுக்கோட்டை போஸ் நகர் பகுதியை சேர்ந்த 65 வயது பெண் மற்றும் அடப்பன்வயல் பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர் ஆகியோர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில், கொரோனாவால் 2 பேர் உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கறம்பக்குடி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற வளர்ப்பு நாயும் பரிதாபமாக உயிரிழந்தது.
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 47). விவசாயியான இவர் நேற்று காலை மழையூர் பெரமையா சுவாமி கோவில் அருகே உள்ள அவரது தோட்டத்திற்கு சென்றார். அவருடன் வளர்ப்பு நாயும் உடன் சென்றது. தோட்டத்திற்கு அருகே சென்றபோது அங்கே மழையினால் அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் கருப்பையா மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அப்போது அவருடன் வந்த வளர்ப்பு நாய், அவரது வேட்டியை பிடித்து இழுத்து காப்பாற்ற முயன்றது. ஆனால் மின்சாரம் தாக்கி நாயும் உயிர் இழந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மழையூர் போலீசார், கருப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல, உயிரிழந்த நாயின் உடல் மழையூர் கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து மழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி பலியான விவசாயி கருப்பையாவின் மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். தற்போது கருப்பையா இறந்த நிலையில் அவரது மகன், மகள் பெற்றோர் இன்றி தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். இச்சம்பவம் மழையூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 41 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 448-ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று வரை 449 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 186 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 256 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 41 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 490-ஆக உயர்ந்துள்ளது.

உழவர் சந்தையில் கூட்டத்தை குறைப்பதற்காக உழவர் சந்தை அருகில் உள்ள சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டு, காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகரில் உழவர் சந்தை, பெருமாள் கோவில் மார்க்கெட், சாந்தாரம்மன் கோவில் மார்க்கெட், அனுமார்கோவில் மார்க்கெட் போன்றவை முக்கியமான காய்கறி விற்பனை செய்யும் இடங்களாகும். இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை தொடர்ந்து பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது காய்கறி வாங்க வரும் மக்களின் கூட்டத்தை குறைப்பதற்காக புதிய பஸ் நிலையத்தில் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டதையடுத்து, மீண்டும் காய்கறி மார்க்கெட்டுகள் ஏற்கனவே செயல்பட்ட இடத்திற்கு மாற்றப்பட்டன. தற்போது புதுக்கோட்டையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் உழவர் சந்தையில் கூட்டத்தை குறைப்பதற்காக உழவர் சந்தை அருகில் உள்ள சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டு, காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் புதிய பஸ் நிலையத்திற்கு காய்கறி மார்க்கெட்டை கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஜீவா.சுப்பிரமணியன் கூறுகையில், புதுக்கோட்டை உழவர் சந்தையில் மொத்தம் 100 கடைகள் உள்ளன. இங்கு கூட்டம் அதிகமாக கூடுவதால், அங்கிருந்து 40 கடைகள் உழவர் சந்தை அருகில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது. வருகிற 15-ந் தேதி வரை மட்டுமே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டால் காய்கறி கடைகளை மீண்டும் மாற்றுவதில் சிரமம் ஏற்படும் என்பதால், பஸ் நிலையத்திற்கு காய்கறி மார்க்கெட்டை மாற்றவில்லை. மேலும் மற்ற பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தால், அங்குள்ள கடைகளும் வேறு இடத்திற்கு மாற்றப்படும், என்றார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 448-ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று வரை 418 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 165 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 247 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 448-ஆக உயர்ந்துள்ளது.

பொன்னமராவதி ஒன்றியம் மேலைச்சிவபுரி ஊராட்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
பொன்னமராவதி:
பொன்னமராவதி ஒன்றியம் மேலைச்சிவபுரி ஊராட்சியில் பொன்னமராவதி ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கொரோனாவில் இருந்து விடுபடவும் கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நேற்று தொடங்கியது. முகாமிற்கு ராயல் லயன்ஸ் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் ரத்தினம், பொருளாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கபசுர குடிநீர் வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது. முகாமானது தொடர்ந்து இன்றும்(செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) நடக்கிறது.

தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் கேட்பதாக புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசின் மறு உத்தரவு வரும் வரை அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் பள்ளிக் கட்டணம் கேட்கக்கூடாது என புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
ஆனால் அதையும் மீறி சில தனியார் கல்வி நிறுவனங்கள், பெற்றோர்களை கல்விக் கட்டணம் கட்டச்சொல்லி வற்புறுத்துவதாக புகார் எழுந்தது.
எனவே கல்விக் கட்டணம் கேட்பதை தடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக, மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது தலைமையில் புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. குழந்தைகள் சேமித்த உண்டியல் பணத்தை வைத்து தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நிதி வழங்கி, பெற்றோர்களை தொந்தரவு செய்யக்கூடாது என மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவை பரிசீலனை செய்த முதன்மைக் கல்வி அலுவலர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
இது தொடர்பாக மனுதாரர் நியாஸ் அகமதுவுக்கு முதன்மைக்கல்வி அலுவலர் பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில், ‘கல்வி கட்டண தொகையை செலுத்தக் கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கட்டாயப்படுத்திடக் கூடாது எனவும், கல்வி கட்டண தொகை கோருவதாக ஏதேனும் புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று முதன்மைக் கல்வி அலுவலர் குறிப்பிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மின் கட்டணத்தை அரசு ஏற்க கோரி விளக்கு, விசிறியுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர், மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது தலைமையில் அரிக்கென் விளக்கு, விசிறியுடன் வந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், கடந்த மார்ச் மாதம் முதல் மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கால் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்து நிற்கின்றனர். அரசின் உத்தரவை ஏற்று பொதுமக்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொண்டனர். இந்த சூழ்நிலையில் வீட்டில் இருக்கும்போது மின்சாரத்தின் தேவை அதிகரிக்கவே செய்யும். மின்சார கட்டணத்தின் கணக்கெடுப்பை உரிய நேரத்தில் எடுக்காதது மின் வாரியத்தின் அலட்சியமே.
இந்நிலையில் உணவு மற்றும் அத்தியாவசிய தேவைக்கு சிரமப்படும் வேளையில் மின்சார கட்டணத்தை இரட்டிப்பாக கேட்பது அரசின் அறிவிப்பை ஏற்று நடந்த மக்களின் குரல்வளையை நெறிப்பது போல் உள்ளது. எனவே இதனை கவனத்தில் கொண்டு மின்சார கட்டணத்தை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும்படி பரிந்துரை செய்ய வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

புதுக்கோட்டை அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை சிப்காட் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 24). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்ற லாரி மீது இவரது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சந்திரசேகர் இறந்தார். இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.