search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தந்தை மகன் பலி"

    • நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் தேடியபோது புழல் ஏரிக்கரையில் மணிகண்டன், விஷ்ணுவின் ஆடைகள் இருந்தது.
    • இருவரும் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கினர். நீச்சல் தெரியாததால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை.

    செங்குன்றம்:

    செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சி சோலையம்மன்நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது40). அதே பகுதியில் பேன்சி கடை நடத்தி வந்தார். இவரது மகன் விஷ்ணு(10) அருகில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை தந்தை-மகன் இருவரும் பம்மது குளம் பகுதியில் புழல் எரிக்கரையில் குளிக்க சென்றனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற விஷ்ணு தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் மகனை காப்பாற்ற முயன்றார். இதில் இருவரும் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கினர். நீச்சல் தெரியாததால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை.

    இதற்கிடையே நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் தேடியபோது புழல் ஏரிக்கரையில் மணிகண்டன், விஷ்ணுவின் ஆடைகள் இருந்தது.

    இதைத்தொடர்ந்து செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் இரவு வரை அவர்களை புழல் ஏரியில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை 2-வது நாளாக தேடும் பணி நடைபெற்றது. அப்போது புழல் ஏரியில் அவர்கள் குளித்த இடம் அருகே மணிகண்டன், விஷ்ணுவின் உடல்கள் மீட்கப்பட்டது. இதனை பார்த்த அவர்களது உறவினர்கள் கதறி துடித்தனர். செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். புழல் ஏரியில் மூழ்கி தந்தை-மகன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பலத்த மழை காரணமாக கம்பியில் மின்சாரம் பாய்ந்திருந்தது.
    • பெரியம்மா கம்பியை தொட்டார். அப்போது மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.

    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிறுபாக்கம் புதுகாலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயி. அவரது மனைவி பெரியம்மா. இவர் நேற்று இரவு துணிதுவைத்துவிட்டு அதனை காய வைப்பதற்காக வீட்டின் வெளிபுறம் உள்ள கம்பியில் தொங்கவிட்டார்.

    அப்போது பலத்த மழை காரணமாக அந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்திருந்தது. இதனை கவனிக்காமல் பெரியம்மா கம்பியை தொட்டார். அப்போது மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார். இவரது அலறல் சத்தம்கேட்டு கணவர் ஆறுமுகம் ஓடிவந்தார். அவர் தனது மனைவியை காப்பாற்ற முயன்றபோது அவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    இதனை அறிந்த வீட்டில் இருந்த ஆறுமுகத்தின் மகன் மணிகண்டன் (வயது 32). ஓடிவந்து தனது பெற்றோரை காப்பாற்ற முயன்றார். அப்போது மணிகண்டனும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனை அறிந்த கிராம மக்கள் அங்கு வந்தனர். 3 பேரும் மயங்கி கிடப்பதை பார்த்து 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மணிகண்டன், ஆறுமுகம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பெரியம்மாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே வீட்டில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • அன்பரசன் தனது வயலில் நேரடி நெல் விதைப்பு செய்திருந்தார்.
    • கொட்டிய மழையையும் பொருட்படுத்தாமல் தங்கள் வயலில் உள்ள பயிரை காப்பாற்றுவதற்காக தண்ணீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்

    திருவாரூர்:

    காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய கனமழை பெய்தது.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள தளிக்கோட்டையை சேர்ந்தவர் அன்பரசன்(வயது 55) விவசாயியான இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது. அன்பரசன் தனது வயலில் நேரடி நெல் விதைப்பு செய்திருந்தார்.

    நேற்று முன்தினம் நள்ளிரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் நேரடி நெல் விதைப்பு செய்திருந்த தனது வயலில் தேங்கிய தண்ணீரை வடிய வைப்பதற்காக அன்பரசன் தனது மகன் அருள்முருகனை(வயது 25) அழைத்துக்கொண்டு நள்ளிரவு 2 மணியளவில் வயலுக்கு சென்றார்.

    அங்கு சென்ற அவர்கள், கொட்டிய மழையையும் பொருட்படுத்தாமல் தங்கள் வயலில் உள்ள பயிரை காப்பாற்றுவதற்காக தண்ணீரை வடியவைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக அருள்முருகன் மீது மின்னல் தாக்கியது. அந்த நேரத்தில் அருள்முருகனின் அருகில் அவரது தந்தை அன்பரசன் நின்று கொண்டு இருந்ததால் அவர் மீதும் மின்னல் தாக்கியது. இதில் தந்தை-மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    உயிரிழந்த அருள் முருகனுக்கும், மன்னார்குடி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 26 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    மின்னல் தாக்கி தந்தை-மகன் பலியான சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

    • லாரி முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றது.
    • எதிரே தந்தை-மகன் வந்த கார் மீது லாரி பயங்கரமாக மோதியது.

    சூலூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சின்னாகவுண்டன் பாளையத்தைச் சேர்ந்தவர் பண்ணாரி (வயது 55). இவரது மகன் கோபால் (28).

    இவர்கள் 2 பேரும் இன்று காலை உடுமலை நோக்கி ஒரு காரில் சென்று கொண்டு இருந்தனர். கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்னாப்புதூர் என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தது.

    அந்த சமயம் எதிரே கோழி ஏற்றும் லாரி ஒன்று வந்தது. அந்த லாரி முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றது. அப்போது எதிரே தந்தை-மகன் வந்த கார் மீது லாரி பயங்கரமாக மோதியது.

    இதில் காரின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்து பண்ணாரி, அவரது மகன் கோபால் ஆகியோர் உடல் நசுங்கினர். பலத்த காயம் அடைந்த அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

    கார் மீது மோதிய லாரியின் டிரைவரும் காயம் அடைந்தார். அவரது பெயர் அருண்பிரசாத் (28), சூலூர் ஐஸ்வர்யா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உடுமலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து குறித்து சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இரும்பு குண்டு ஒன்றை தந்தை- மகன் உடைத்த போது அது பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.
    • இதில் பசல் ஹக், ஷகதுல் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    திருவனந்தபுரம்:

    வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளிகள் பலர் கேரளாவில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள்.

    அசாம் மாநிலத்தில் இருந்து தொழிலாளிகள் பசல் ஹக், அவரது மகன் ஷகதுல் ஆகியோர் கண்ணூர் பகுதியில் தங்கி இருந்து குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இதில் கிடைக்கும் இரும்பு பொருட்கள் போன்றவற்றை வீட்டில் வைத்து பிரித்து விற்பனை செய்வது வழக்கம்.

    இதுபோல நேற்று சேகரித்த குப்பைகளை பசல் ஹக், ஷகதுல் இருவரும் வீட்டில் வைத்து பிரித்து கொண்டிருந்தனர்.

    இரும்பு குண்டு ஒன்றை அவர்கள் உடைத்த போது அது பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பசல் ஹக், ஷகதுல் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அங்கு பசல் ஹக் உடல் சிதறி இறந்து கிடந்தார். அவரது மகன் ஷகதுல் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். அவரை உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் இன்றி ஷகதுல்லும் இறந்தார். இது பற்றி கண்ணூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தந்தை-மகன் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பசல் ஹக், ஷகதுல் சேகரித்து வந்த குப்பையில் வெடிகுண்டு இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த குண்டு எங்கிருந்து கிடைத்தது, எப்படி இவர்களிடம் வந்தது என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ×