சுல்தான்பேட்டை அருகே கார் மீது லாரி மோதல்- தந்தை, மகன் பலி

லாரி முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றது. எதிரே தந்தை-மகன் வந்த கார் மீது லாரி பயங்கரமாக மோதியது.
சுல்தான்பேட்டை அருகே கார் மீது லாரி மோதல்- தந்தை, மகன் பலி
Published on

சூலூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சின்னாகவுண்டன் பாளையத்தைச் சேர்ந்தவர் பண்ணாரி (வயது 55). இவரது மகன் கோபால் (28).

இவர்கள் 2 பேரும் இன்று காலை உடுமலை நோக்கி ஒரு காரில் சென்று கொண்டு இருந்தனர். கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்னாப்புதூர் என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தது.

அந்த சமயம் எதிரே கோழி ஏற்றும் லாரி ஒன்று வந்தது. அந்த லாரி முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றது. அப்போது எதிரே தந்தை-மகன் வந்த கார் மீது லாரி பயங்கரமாக மோதியது.

இதில் காரின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்து பண்ணாரி, அவரது மகன் கோபால் ஆகியோர் உடல் நசுங்கினர். பலத்த காயம் அடைந்த அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

கார் மீது மோதிய லாரியின் டிரைவரும் காயம் அடைந்தார். அவரது பெயர் அருண்பிரசாத் (28), சூலூர் ஐஸ்வர்யா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உடுமலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து குறித்து சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com