search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த  தமிழக வாழ்வுரிமை கட்சியினர்
    X
    கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த தமிழக வாழ்வுரிமை கட்சியினர்

    மின் கட்டணத்தை அரசு ஏற்க கோரி விளக்கு, விசிறியுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு

    புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மின் கட்டணத்தை அரசு ஏற்க கோரி விளக்கு, விசிறியுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர், மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது தலைமையில் அரிக்கென் விளக்கு, விசிறியுடன் வந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், கடந்த மார்ச் மாதம் முதல் மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கால் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்து நிற்கின்றனர். அரசின் உத்தரவை ஏற்று பொதுமக்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொண்டனர். இந்த சூழ்நிலையில் வீட்டில் இருக்கும்போது மின்சாரத்தின் தேவை அதிகரிக்கவே செய்யும். மின்சார கட்டணத்தின் கணக்கெடுப்பை உரிய நேரத்தில் எடுக்காதது மின் வாரியத்தின் அலட்சியமே.

    இந்நிலையில் உணவு மற்றும் அத்தியாவசிய தேவைக்கு சிரமப்படும் வேளையில் மின்சார கட்டணத்தை இரட்டிப்பாக கேட்பது அரசின் அறிவிப்பை ஏற்று நடந்த மக்களின் குரல்வளையை நெறிப்பது போல் உள்ளது. எனவே இதனை கவனத்தில் கொண்டு மின்சார கட்டணத்தை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும்படி பரிந்துரை செய்ய வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.
    Next Story
    ×